Page 83 of 185 FirstFirst ... 3373818283848593133183 ... LastLast
Results 821 to 830 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #821
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வரலாற்று சுவடுகள்.

    தினத்தந்தி

    அன்புடன்
    நெய்வேலி வாசுதேவன்
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #822
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasu Sir,

    Kalakkal Sir. By preserving this golden details on UP makes every
    NT fans happy. Keep it up sir.

  4. #823
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,
    உத்தம புத்திரன் திரைக்காவியத்தினைப் பற்றிய விரிவான தகவல் பகிர்வுப் பதிவுகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்து விட்டது, வரலாற்றுச் சுவடுகளின் நிழற்படம். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #824
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    46. Pathi Bhakthi பதி பக்தி

    வெளியான நாள் 14.03.1958

    தயாரிப்பு – புத்தா பிக்சர்ஸ்

    நடிகர்கள்
    ஜெமினி கணேசன், டி.எஸ்.பாலையா, வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, சந்தானம், கிருஷ்ணன், ராமராவ், கரிக்கோல் ராஜு, பாலகிருஷ்ணன், சாவித்திரி, எம்.என்.ராஜம், கே.மாலதி, விஜயகுமாரி, சி.கே.சரஸ்வதி, எம்.எஸ்.சரோஜா, அங்கமுத்து மற்றும்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    கதை, வசனம் – எம்.எஸ்.சோலைமலை, உதவி – பாசுமணி, இறைமுடிமணி

    பாடல்கள் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

    பின்னணி பாடியவர்கள் – சௌந்திர்ராஜன், ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம், பி.ஜி.கிருஷ்ணவேணி- ஜிக்கி, சுசீலா.

    ஆர்க்கெஸ்ட்ரா – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி பார்ட்டி

    நடன ஆசிரியர்கள் – கே.என்.தண்டாயுதபாணி, கோபாலகிருஷ்ணன்

    மேக்கப் – தனக்கோடி, நாகேஸ்வர்ராவ், ராமச்சந்திரன், நவநீதம்

    உடை அலங்காரம்- ஏ.ராமசாமி

    ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்

    பாட்டு ரிக்கார்டிங், ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி

    ஒலிப்பதிவு – எம்.லோகநாதன் – நியூடன், எம்.எஸ்.நாகேஸ்வர ராவ் –கோல்டன்

    ஆர்ட் – கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ்

    ஸ்டில்ஸ் – ஆர்.திருமலை

    எடிட்டிங் – ஏ.பீம்சிங், உதவி – ஏ.பால் துரைசிங், ஆர்.திருமலை, ஆர். சடகோபன், என்.துரைசாமி

    ப்ராஸ்ஸிங் – சர்தூல் சிங் சேத்தி, அஸோஸியேட் – பி.வி.நாயகம்

    விளம்பரம் – பக்தா, மோஹன் ஆர்ட்ஸ்
    மேற்பார்வை – ஏ.ராமனாதன்

    மேனேஜர் – டி.எஸ்.ஆதிநாராயணன்
    நிர்வாகம் – ஜி.என்.வேலுமணி

    ஸ்டூடியோ – கோல்டன், நியூட்டன்

    ஆர்சிஏ சவுண்டு சிஸ்டத்தில் ரிக்கார்டிங் செய்யப் பட்டது

    உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஆர்.சடகோபன், ஜி.எஸ்.மகாலிங்கம்

    சங்கீதம் – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி, உதவி – ஜி.கே.வெங்கடேஷ்

    திரைக்கதை, டைரக்ஷன்- ஏ.பீம்சிங்

    பதிபக்தி விளம்பர நிழற்படங்கள் .

    நன்றி – வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #825
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதைச் சுருக்கம்

    பாண்டியன் – சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பட்டாளத்துச் சிப்பாய் நான். எனக்கு ஒரு தமக்கை. அவளுக்கு அல்லி என்று ஒரு அழகு மங்கை. கடனால் ஏலம் போக இருந்த என் தமக்கையின் வீட்டை மீட்க சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு விடுமுறை கேட்டு புறப்பட்டேன். ஆனால் விடுமுறை ரத்தானது. அதனால் பெட்டியை மூர்த்தி என்ற நண்பனிடம் ஒப்படைத்தேன். துரோகி பெட்டியைக் கொடுக்கவில்லை. அதனால் என் அக்கா மாண்டு போனாள். அல்லி அனாதையாக எங்கோ சென்று விட்டாள்.

    மூர்த்தி – பாண்டியன் கொடுத்த விலாச்ச் சீட்டைத் தவற விட்ட நான் வேதனை வெள்ளத்திலே மூழ்கித் துடித்தேன். பெட்டியை உரியவர்களிடம் ஒப்படைக்க அலைந்தேன். அந்த நேரத்தில் அல்லியை சந்தித்து வாழ்வு கொடுத்தேன்.

    அல்லி – ஆறு மாத சேவைக்கு பட்டாளம் சென்றவர் இறந்து விட்டதாக செய்தி கிடைத்த்து. நான் விதவையானேன். அதே நேரத்தில் என்னை ஆதரித்த பாண்டியன் தான் என் தாய் மாமன் என்று தெரிந்த்து. பெட்டியைக் கொடுக்காத மூர்த்தியை பழிவாங்கப் போகிறாராம். என்னை என் கணவனிடம் சேர்க்கப் போகிறாராம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #826
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பதிபக்தி சிறப்பு செய்திகள்

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பீம்சிங், ஜி.என்.வேலுமணி ஆகியோரின் முயற்சியில் உருவான புத்தா பிக்சர்ஸின் முதல் தயாரிப்பு.
    நடிகர் திலகத்தின் படத்தில் முழுப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய படம்.
    சென்னை கெல்லீஸ் உமா திரையரங்கில் 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம்

    சென்னையில் வெளியான திரையரங்குகள் – கெயிட்டி., பிரபாத், உமா

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

    சென்னை கெயிட்டி – 100 நாட்கள்
    திருச்சி ஜூபிடர் – 100 நாட்கள்
    கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
    மதுரை கல்பனா – 102 நாட்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #827
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்

    1. வீடு நோக்கி ஓடி வந்த – டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர்
    2. அம்பிகையே முத்து மாரியம்மா – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழு
    3. இரை போடும் மனிதருக்கே – பி.சுசீலா
    4. கொசரி கொசரி நாதோ – சந்திரபாபு
    5. ராக் ராக் ராக் – சந்திரபாபு, வி.என்.சுந்தரம்
    6. வீடு நோக்கி ஓடி வந்த – டி.எம்.சௌந்தர்ராஜன்
    7. திண்ணைப் பேச்சு வீர்ரிடம் – டி.எம்.சௌந்தர்ராஜன், சந்திரபாபு குழு
    8. சின்னஞ்சிறு கண்மலர் – பி.சுசீலா
    9. கொக்கரக்கொக்கரக்கோ சேவலே – டி.எம்.சௌந்தர்ராஜன், ஜிக்கி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #828
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு உதவியாக நெடுந்தகட்டின் முகப்பு

    இது இல்லாமல் ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் குறுந்தகடு மற்றும் நெடுந்தகடு வெளியிட்டுள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #829
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காட்சியைப் பற்றி விவாதிக்கிறார்களோ நடிகர் திலகமும் இயக்குநரும்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #830
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பதி பக்தி திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் உணர்ச்சி மிகு காட்சிகளிலிருந்து சில நிழற்படங்கள்

    பட்டாளச் சிப்பாயாக

    நண்பருடன் உரையாடும் காட்சி

    பேசும் விழிகள்

    ஒய்யாரமாக நித்திரை - ரிக்ஷாவில்

    இந்த ஸ்டைல் யாருக்கு வரும்

    இறைவனிடம் கையேந்துங்கள்

    பெட்டி கிடைத்த மகிழ்ச்சி

    பாருங்களேன் .... என்ன கேஷுவல் லுக்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •