Page 79 of 185 FirstFirst ... 2969777879808189129179 ... LastLast
Results 781 to 790 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #781
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    http://www.bbthots.com/reviews/rewind/uputhiran.html
    - இந்த இணைய தளத்தில் திரு பாலாஜி பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதியதிலிருந்து...

    There is not a single wrong step in Sivaji's performance. Inspite of no visual differences, the distinction between the two characters is beautifully brought out with just body language and style of talking. Vikraman is easily the more interesting of the two and offers more scope for acting. Sivaji very obviously enjoys himself immensely in the role. He is charming and his scenes with Nambiar, where he takes his advice on all matters(with a beautifully delivered "Mama") are very enjoyable. No wonder he manages to earn our sympathy when pleading with Parthiban to not make him wear the iron mask, inspite of being wicked.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #782
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விக்கிபீடியாவில் உத்தம புத்திரன் திரைப்படத்தைப் பற்றி

    Wikipedia link:
    http://en.wikipedia.org/wiki/Uthama_...281958_film%29
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #783
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு ரண்டார் கய் அவர்கள் ஹிந்து பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைக்கான இணைப்பு

    BLAST FROM THE PAST:
    http://www.thehindu.com/arts/cinema/...cle4276441.ece
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #784
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் அப்படித் தப்பித் தவறி யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டும் அல்லது ஒரு சம்பிரதாயத்திற்காகவும் இப் படத்தின் டிவிடியின் முகப்பு

    DVD COVER
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #785
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உத்தம புத்திரன் திரைப்படப் பாடல் காட்சிகளுக்கான இணைப்புகள்

    Yaaradi Nee mohini


    kathiruppan kamala kannan


    pulli vekkiran


    anbe amudhe


    mullai malar mele


    mannulagellam


    unazhagai


    muthe pavalame


    konndaattam
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #786
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த உன்னதத் திரைக்காவியத்தைப் பற்றி நம்முடைய நண்பர்கள் அனைவரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திரையரங்க நிகழ்வுகள், எப்போது முதன் முதலில் இப்படத்தைப் பார்த்தீர்கள், எந்த அம்சம் தங்களை மிகவும் கவர்ந்தது, போன்றவற்றை எழுதினால் பல புதிய தகவல்களைப் பெறலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #787
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் அம்மா ஒரு பயங்கர நடிகர்திலகம் ரசிகை. என் அப்பா,தாத்தா ,பாட்டி, சகோதர சகோதரிகள், மனைவி அனைவருமே நடிகர்திலகம் ரசிகர்களே. என் நண்பர்களும்.

    நான் சிவாஜி ரசிகன் வெளியிட்ட சிவாஜி மலர் ,முதல் 132 படங்கள் (என்று நினைவு) still மற்றும் அவருடைய சுருக்கமான comment உடன். 45th படத்தைப் பற்றி ,"நான் முதன் முதல் ரெட்டை வேடம் தாங்கி நடித்த படம் ஆனால் என்னால் இப்போதும் அப்படி நடிக்க முடியுமா" என்று comment பண்ணியிருந்தார் NT.

    அதை 1972 இல் (4 ரூபாயோ, 6 ரூபாயோ ஞாபகம்) வாங்கி பார்த்து விட்டு ,அம்மாவிடம் இதை பற்றி கேட்ட போது , அம்மாவும் சுருக்கமாக "சிவாஜியின் best .இதை பார்க்கா விட்டால், நீ ரசிகனே கிடையாது" என்றார். அதிர்ஷ்ட வசமாக, நெய்வேலி அமராவதியில், 1972 இல், ஒரு வார திரையீடு. முதல் முறை, இரண்டாம் முறை என்று ஓடிய ஏழு நாட்கள், ஏழே முறை பார்த்தேன். அம்மாவிடம், டெய்லி ஒரு மணிநேரம் இதை பற்றியே. நண்பர்களிடம் பார்க்கும் போதெல்லாம். கிட்டத்தட்ட, 30 நண்பர்களை பார்க்க வைத்து, நடிப்பின் நுண்ணியங்களை பற்றி lecture .(பக்கிரி,குணா, ராஜா குணசிங் ,ஜெயகரன்,ராமசந்திரன்,. ராயப்பன்,ராமகிருஷ்ணன்,மீனாட்சி சுந்தரம்)அப்போதே நான் நல்ல(?) விமரிசகன்.கவிஞன். சிறு கதையாசிரியன், நாடகம் நடத்துபவன். இன்று வரை நான் எத்தனை முறை இப்படத்தை பார்த்திருப்பேன் என்ற கணக்கு என்னை படைத்த கடவுளுக்கோ,எனக்குள் கலையை வாழ வைத்த கடவுளுக்கோ(NT ),எனக்கோ தெரியாது.(நூறுக்கும் மேல்)புதிய பறவை,கர்ணன்,தெய்வமகன் இவற்றுடன்.

    ஒரு சோகம். அந்த சிவாஜி ரசிகன் புத்தகத்தை ஒரு நண்பர் திருடி சென்று விட்டார். அந்த நண்பர் எங்கிருந்தாலும் வாழ்க.என் வயிற்றெரிச்சல் துணை நிற்க கடவதாக.



    உத்தம புத்திரன்-1958

    எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

    இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

    முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

    இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

    நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

    கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

    கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

    உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

    குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

    இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

    விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

    இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

    கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

    இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

    குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

    அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

    ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

    ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

    பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

    சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

    இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
    Last edited by Gopal.s; 12th July 2014 at 12:36 PM.

  9. #788
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like



    நடிகர் திலகமே தெய்வம்

  10. #789
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #790
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •