Page 77 of 185 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #761
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாக்கியவதி – திரைப்படத்தைப் பற்றிய சிறப்புச் செய்திகள்
    இயக்குநர் மேதை எல்.வி.பிரசாத்-நடிகர் திலகம் கூட்டணியின் மற்றும் ஒரு வெற்றிப் படம். எந்த விதமான நடிப்பிலும் தலைசிறந்தவர் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.

    சென்னை நகரில் வெளியான திரையரங்குகள் – கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
    சேலம் ஓரியண்டல் – 106 நாட்கள்

    பாக்யவதி திரைப்படத்தைப் பற்றி நமது NOV அவர்கள் எழுதியுள்ள திறனாய்வுக் கட்டுரைக்கான இணைப்பு

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post254610


    இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு உதவும் பொருட்டு, நெடுந்தகட்டின் முகப்புகள்



    Last edited by RAGHAVENDRA; 30th April 2013 at 07:55 AM. Reason: NOV அவர்களின் ஆய்வுக்கட்டுரைக்கான
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #762
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்

    1. எல்லோரும் உன்னை நல்லவரென்றே - ஆர். பாலசரஸ்வதி
    2. பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் – எஸ்.சி. கிருஷ்ணன்
    3. வெண்ணிலாவின் ஒளி தனிலே – ஏ.எம்.ராஜா, டி.வி.ரத்னம், எஸ்.சி.கிருஷ்ணன்
    4. வழியேது நல் வாழ்வேது – சி.,எஸ்.ஜெயராமன்
    5. கண்ணாலே வெட்டாதே – எஸ்.சி.கிருஷ்ணன், டி.வி.ரத்னம்
    6. பருவம் மலர்ந்து அசைந்து ஆடும் – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
    7. ஆசைக் கிளியே அழகு சிலையே – பி.லீலா
    8. தினசரி என் வாழ்வில் திருநாளே – ஆர். பாலசரஸ்வதி தேவி

    பாக்கியவதி காணொளிகள்

    முகப்பிசை



    எல்லோரும் உன்னை



    வெண்ணிலவின் ஒளி தன்னிலே



    பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்




    வழியேது நல்வாழ்வேது



    ஆசைக் கிளியே




    கண்ணாலே வெட்டாதே



    பருவம் மலர்ந்து



    தினசரி என் வாழ்வில்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #763
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Movie:- Bagyavathi



    Cast:-'Nadigar thilagam 'Sivaji Ganesan, Padthmini, K.A.Thangavelu, Ragini, K.Sarangapani And Many Other’s…

    Music:-Thakshinamoorthy

    Produced:-A.C.Pillai

    Directed:-L.V.Pirasath

    பாக்கியவதி. (27.12.1957)

    நடிக, நடிகைகள்:-"நடிகர்திலகம்" சிவாஜிகணேசன், "நாட்டியப்பேரொளி" பத்மினி, "டணால்" கே.ஏ.தங்கவேலு, கே.சாரங்கபாணி, பி.டி.சம்பந்தம், "மாஸ்டர்" கோபால், ராகினி, எம்.என்.ராஜம், லட்சுமி பிரபா, கே.என்,கமலம், கே.அரங்கநாயகி, சீதாலக்ஷ்மி மற்றும் பலர்.

    இசையமைப்பு:-எஸ்.தக்ஷிணாமூர்த்தி அவர்கள்.

    பாடல்கள்:-"கவிஞர்" ஏ.மருதகாசி & சுப்பு ஆறுமுகம் ஆகியோர்.

    கதை+வசனம்:- ஆர். வெங்கடாச்சலம்

    தயாரிப்பு:-ஏ.சி.பிள்ளை அவர்கள்.

    இயக்கம்:-எல்.வி.பிரசாத் அவர்கள்.




    Last edited by vasudevan31355; 27th April 2013 at 01:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #764
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாக்கியவதி'

    முற்றிலும் கெட்டவனாகவும், திருடனாகவும் வாழும் ஒருவன் தன் மனையாளின் அன்பினால் திருந்தி நல்வழிப்பட்டு, தன் கெட்ட சகாக்களையும் திருத்துவதே பாக்கியவதியின் கதையாகும்.

    திருடனாகவும், பின் திருந்தி வாழும் நல்லவனாகவும் இருவேறு குணாதிசயங்களை பிரதிபலிக்க நடிகர் திலகத்தை விட்டால் யார்?

    திருடப் போகுமுன் அரிப்பெடுக்கும் கையை தேய்த்துக் கொண்டே திருடுவது, எம்.என்.ராஜத்துடன் ஆடிப்பாடி உல்லாசமாக இருப்பது, பத்மினியின் அன்பில் சிக்குண்டு திணறுவது, பின் மனைவியின் விடா முயற்சியால் திருந்துவது, திருந்தி வேலை கிடைக்காமல் மனம் நொந்து பின் மீண்டும் திருடுவது, தான் யாரென்று உணராத மகனிடம் மலையளவு பாசம் வைப்பது, இறுதியில் எதிரிகளிடம் மாட்டி சவால்களை வென்று அனைத்து ரௌடிகளையும் நல்வழிப்படுத்தி வில்லனை வெல்வது என்று படம் முழுக்க நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. பத்மினியும் சரியான ஈடு கொடுத்து கணவனை நல்வழிப்படுத்தும் பாக்கியவதியாக நன்கு சோபிக்கிறார். தங்கவேலு பத்மினியின் முறைப்பையனாக வந்து பத்மினி குடும்பத்துக்கு நல்லது செய்து நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். நடிகர் திலகத்தின் மகனாக வரும் அந்தப் பொடிப்பையன் பிரமாதப் படுத்துகிறான். முதல் பாதி பாட்டும், கூத்துமாக ஜாலி. பின் பாதி சோகம். இயக்கம் 'இருவர் உள்ளாம்' எல்.வி.பிரசாத். கொஞ்சம் கூட போரடிக்காமல் படத்தை விறுவிறுப்பாக தமக்கே உரிய பாணியில் கொண்டு செல்வார். முதல் பாதியில் ஒரு லோ கிளாஸ் ரௌடியின் ஸ்டைல்கள் சரமாரியாக நடிகர்திலகத்திடம் வெளிப்படுவதைக் காண முடியும்.

    இந்தப் படத்தை I.T.I படிக்கும் போதுதான் பார்க்க முடிந்தது. அதாவது 1986 இல். வெகு அபூர்வமான படம். கடலூர் பாலாஜி திரையரங்கில் காலை 10.30 காட்சி மட்டும் போட்டார்கள் வெகு அபூர்வமாக. எனக்கு கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... இதற்கு முன் இந்தப் படத்தைப் பார்த்தது கிடையாது. எப்படியாவது பார்த்து வேண்டும். நானோ என் கிளாசுக்கு லீடர். கிளாஸ் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குதான் முடியும். என்ன செய்வது?

    நைசாக என் ஆசிரியரிடம் சென்று தலை வலிப்பதாக ஒரு ரீல் விட்டேன். என் மேல் அபார நம்பிக்கை ஆசிரியருக்கு."சரி! ரெஸ்ட் எடுத்து விட்டு மதியம் கிளாசுக்கு வந்து விடு" என்று பெர்மிஷன் கொடுத்து விட்டார். அவ்வளவுதான். சைக்கிளில் ஒரே ஓட்டம். போய் படத்தைப் பார்த்து விட்டு மதியம் கிளாசுக்கு வந்து நல்ல பெயர் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள். லீவ் தான்.

    'பாக்கியவதி'(27-12-1957) மிக அரிய நிழற்படங்கள்


    Last edited by vasudevan31355; 27th April 2013 at 02:19 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #765
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.





    நடிகர் திலகமே தெய்வம்

  7. #766
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.


    நடிகர் திலகமே தெய்வம்

  8. #767
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.


    நடிகர் திலகமே தெய்வம்

  9. #768
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.









    நடிகர் திலகமே தெய்வம்

  10. #769
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்
    பாக்யவதி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் மலரும் நினைவுகள் மிகவும் சுவையாக இருந்தன. வகுப்பிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு விரைந்து சென்று பார்த்ததன் மூலம் அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் புலப்படுகிறது. சொல்லப் போனால் அநேகமாக இந்த அனுபவம் ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

    இது போன்று நமது நண்பர்கள் ஒவ்வொருவரும் அந்தந்தப் படத்தைப் பார்த்தது அல்லது அது தொடர்பான அனுபவங்கள் இவற்றை இங்கே பகிர்ந்து கொண்டால் பல புதிய தகவல்கள் கிடைக்குமல்லவா.

    தங்களுடைய அருமையான நிழற்படங்கள் இத்திரிக்கு மேலும் வலு சேர்க்கின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #770
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக்க நன்றி ராகவேந்திரன் சார். தாங்களும் மிக அழகாக, நேர்த்தியாக 'பாக்கியவதி' பதிவுகளைத் தொகுத்துள்ளீர்கள். நன்றி! இந்தப் படமும் எனக்கு மிக மிக பிடித்தபடம். நீங்கள் கூறியது போல ஏன் நம் ஹப்பர்கள் யாரும் இந்கு அதிகம் பங்கு பெறுவதில்லை என்று தெரிய வில்லை. இங்கு பதிவே அளிக்கக் கூடாது என்று தவறாகப் புரிந்து கொண்டார்களா? இங்கு பதிவிடப்படும் படங்களைப் பற்றிய அனைவரது கருத்துக்களும் இங்கு தாராளமாக இடம் பெறலாமே! படங்களைப் பற்றிய அல்லாத நடிகர் திலகம் சம்பந்தமான வேறு செய்திகளை பாகம் 10-இல் பதியலாம் என்று முன்னம் கூறியிருந்தோமே!

    அன்பு ஹப்பர்களுக்கு,

    Filmography thread இல் அந்தந்தப் படங்கள் பற்றிய கருத்துக்களை, தங்களுடைய சொந்த அனுபவங்களை, நிழற்படங்களை, படம் சம்பந்தமான வீடியோக்களை, ஆவணங்களை அல்லது விமர்சனங்களை இங்கு பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!
    Last edited by vasudevan31355; 28th April 2013 at 09:22 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •