Page 76 of 185 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #751
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #752
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அம்பிகாபதி' சிறப்பு நிழற்படங்கள் தொடர்கிறது.....



    நடிகர் திலகமே தெய்வம்

  4. #753
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அகிலம் போற்றும் அரும்பெரும் நடிப்பு மேதையின் 42-ஆவது அழகோவியம் 'அம்பிகாபதி'.

    தஞ்சை ராமையாதாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அற்புத வைரவரிப் பாடல்கள்.

    ஜி.ராமநாதன் அவர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசை....

    மன்மதனையே அழகில் மிஞ்சும் மகா நடிகர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்...

    அற்புதக் குரலில் அனாயாசமாய் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வி என்.சுந்தரம், சுசீலா, ராஜேஸ்வரி....

    இனிய குரலுக்கு ஒரு அஷ்டாவதானி பி.பானுமதி...

    அருமையான இயக்கத்திற்கு ப.நீலகண்டன்.

    எக்காலத்திலும் மனதில் ரீங்காரமிட்டு வலம் வந்து கொண்டிருக்கும் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள். கண்டும் கேட்டும் இன்புறுங்கள்.

    சோறு மணக்கும் சோநாடாம்...



    என் ஆசைக் கனியமுதே...



    அம்புலியைக் குழம்பாக்கி....



    கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...



    மாசில்லா நிலவே நம்....

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #754
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாடா மலரே ! தமிழ்த் தேனே....



    வானம் எங்கே...



    ஆடட்டுமா...கொஞ்சம் பாடட்டுமா...



    கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...(டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வெண்கலக் குரலில்)



    கண்ட கனவும் இன்று பலித்ததே...



    கண்ணே உன்னால் நான் அடையும்....



    இட்ட அடி நோக...எடுத்த அடி கொப்பாளிக்க....



    பொனா ...ய்யன்னா ...க்கன்னா...காவன்னா...லூனாக் குதிரையின்னான்....

    Last edited by vasudevan31355; 21st April 2013 at 10:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #755
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிப்புலக நாயகரின் வாயடைத்துப் போகச் செய்யும் வாயசைப்பில்.

    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்.....



    சிந்தனை செய் மனமே.....



    வடிவேலும் மயிலும் துணை....

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #756
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எனக்கு மிக மிக மிக பிடித்தமான நடிகர் திலகத்தின் காவியங்களுள் அம்பிகாபதியும் ஒன்று. அந்த அழகு மதிவதன முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    அதுவும்




    வடிவேலும் மயிலும் துணை
    வடிவேலும் மயிலும் துணை - சொல்
    வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை

    நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
    நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
    தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
    வடிவேலும் மயிலும் துணை

    தமிழ்மாலை தனைச் சூடுவான்
    தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
    தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
    தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
    தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
    தமிழ்மாலை தனைச் சூடுவான்

    தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
    தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
    சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
    சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
    தாளையளித்திட வேணுமெனத் துதிபாடலுனை கிரி நாதனழைத்திட
    தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
    முத்தைத்தரு பத்தித் திருநகையென
    முதலடி உரைத்த தழைத்த கருணையை
    நினைத்து நினைத்து கவிமலர் தொடுத்த

    தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
    தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
    தமிழ்மாலை தனைச் சூடுவான்

    சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே யசையக் குழையூசலாட
    சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
    நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
    தலையலங்காரம் புறப்பட்டதே...

    பாடல் காட்சியில் இந்த மனிதப் புனிதர் வாயசைக்கும் அழகும், இம்மியளவு கூடப் பிசகாமல் முகபாவங்களில் புகுந்து விளையாடும் வித்தைகளும் இருக்கிறதே! நடிப்பின் இறைவா! நின்னை அடைய நாங்கள் செய்த புண்ணியம்தான் என்ன!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #757
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    தங்களை அம்பிகாபதி வெகுவாகவே பாதித்துள்ளான் என்பது தங்களுடைய பதிவுகளிலேயே தெரிந்து கொள்ள முடியும். வியக்க வைக்கும் மலைக்க வைக்கும், நெருங்கிப் பார்த்தால் நெகிழ வைக்கும் நிழற்படங்களின் அணிவகுப்பு, சான்றளிப்பது அயராத தங்களின் அர்ப்பணிப்பு. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    ஜி.ராமநாதன் அவர்களின் மறக்க முடியாத இசைக்காவியங்கள் பலவற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கது அம்பிகாபதி திரைப்படம். நான் குழந்தையாக இருந்த போது நெஞ்சில் புகுந்து நிலைத்து விட்ட பாடல், பானுமதியின் குரலில் ஒலிக்கும் கண்ணிலே இருப்பதென்ன பாடல். பின்னர் சிவாஜி ரசிகனாக இப் படத்தைப் பார்த்த போது .... ஆய கலைகள் அனத்தையும் வென்ற அட்டகாச நாயகனின் ஆய கலைகள் பாடல் கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தவை.

    மிக்க நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #758
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அம்பிகாபதி – சிறப்புச் செய்திகள்
    முதன் முதலாக நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் சிவாஜி கணேசன் அவர்களின் பெயர் டைட்டிலில் இடம் பெற்ற படம்

    புது வாழ்வு திரைப்படம் தோல்வியடைந்து தியாகராஜ பாகவதர் அவர்களின் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இப்படத்தில் மிகப் பெரிய தொகை தருவதற்கான விழைவுடன் தயாரிப்பாளர்கள் அவரை கம்பர் பாத்திரத்தில் நடிகர் திலகத்தின் தந்தை பாத்திரத்தில் நடிக்க அணுகினர். தான் ஏற்கெனவே அம்பிகாபதியாக நடித்து மக்கள் மனதில் நிலை பெற்ற படியால் இப்படத்தில் தந்தை வேடம் ஏற்பதில் விருப்பம் இல்லை என்றும், வேறு எந்தப் படமானாலும் நடிகர் திலகத்துடன் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்து வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார் பாகவதர் அவர்கள். பின்னர் திரு எம்.கே.ராதா அவர்கள் இவ் வேடத்தில் நடித்தார்.

    இப்படத்தில் மாசிலா நிலவே நம் பாடல் காட்சியும், ஆராவமுதே எனதன்பே பாடலும் மற்றும் ஓரிரு காட்சிகளும் வண்ணத்தில் திரையிடப் பட்டன. . பிற்காலத்தில் இப்படத்தின் நெகடிவ்கள் பிரதி எடுக்கும் போது வண்ணக் காட்சிகளையும் கருப்பு வெள்ளையிலேயே எடுத்து விட்டனர். அதன் பலன் இன்று கூட இந்தக் காட்சிகள் தனியாக தனித்து தெரியும். இதனை டி.வி.டி.பிரதிகளில் கூட காணலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #759
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அம்பிகாபதி – பாடல்கள்

    • கண்ட கனவும் இன்று பலித்த்தே – என்.எல்.கான சரஸ்வதி
    • சோறு மணக்கும் சோழ நாடாம் – ஆதிமூலம் - வி.என். சுந்தரம் -
    • வெல்க நின் கொற்றம் – ஆதிமூலம் - சீர்காழி கோவிந்தராஜன்
    • வரும் பகைவர் படை கண்டு – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    • கொட்டிக் கிழங்கோ கிழங்கு – வி.என்.சுந்தரம்
    • என்னரும் நலத்தின்னாள் – வி.என்.சுந்தரம்
    • கலையென்றால் கலையும் – என்.எஸ்.கிருஷ்ணன்
    • கண்ணே உன்னால் – என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்
    • காவி உடைகளை – கே.எஸ்.கோபால கிருஷ்ணன் - சீர்காழி கோவிந்தராஜன்
    • அந்தோ பரிதாபம் – கு.சா.கிருஷ்ணமூர்த்தி - சி.எஸ்.ஜெயராமன்
    • கன்னித் தமிழகம் – தஞ்சை ராமய்யா தாஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி
    • ஆட்டடுமா கொஞ்சம் பாடட்டுமா – கே.டி.சந்தானம் - பி.சுசீலா
    • போனா இய்யன்னா – சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன்
    • அமராவதியே என் ஆசைக் கனியமுதே – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    • அம்புலியைக் குழம்பாக்கி – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    • இட்ட அடி நோவ – டி.எம்.சௌந்தர்ராஜன்
    • கண்ணிலே இருப்பதென்ன – கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    • ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    • சிந்தனை செய் மனமே – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    • வடிவேலும் மயிலும் துணை – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    • தமிழ் மாலை தனைச் சூடுவார் – கே.டி.சந்தானம் - டி.எம். சௌந்தர்ராஜன்
    • சற்றே சரிந்த குழலே அசைய – டி.எம்.சௌந்தர்ராஜன்
    • நற்றேனொழுக நடன சிங்காரம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    • கண்ணிலே இருப்பதென்ன – பி.பானுமதி
    • அண்ணலும் நோக்கினான் – வி.என்.சுந்தரம்
    • மாசிலா நிலவே நம் – கு.மா.பாலசுப்ரமணியம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பானுமதி
    • சந்திர சூரியர் போம் – என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்
    • வாடா மலரே தமிழ்த் தேனே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பானுமதி
    Last edited by RAGHAVENDRA; 25th April 2013 at 11:38 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #760
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    43. பாக்யவதி Bagyavathi



    (நிழற்படம் உதவி – ஆவணத் திலகம் பம்மலார்)

    தணிக்கை – 24.12.1957
    வெளியீடு – 27.12.1957

    நடிக நடிகையர் –

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சோமு
    பத்மினி - மீனா
    கே.ஏ.தங்கவேலு - சங்கரன்,
    ராகினி - சுகுணா
    கே.சாரங்கபாணி - ராமசாமி
    பூபதி நந்தாராம் – சுப்பண்ணா
    கே.என்.கமலம் – சூரவல்லி
    கே.அரங்கநாயகி – சோமுவின் தாயார்
    மாஸ்டர் கோபால் – ரவி

    எம்.என்.ராஜம் - பாமா
    பி.டி.சம்பந்தம் - சாமிநாதன்
    லட்சுமி பிரபா - வேலம்மாள்
    மற்றும் பலர்.


    கதை வசனம் – ஆர். வெங்கடாச்சலம்

    பாடல்கள் – அ. மருதகாசி, சுப்பு ஆறுமுகம்

    இசை – சூஸர்ல தக்ஷிணாமூர்த்தி

    கலை – கங்கா, எஸ். ராஜேந்திர குமார்

    எடிட்டிங் – வி. சஞ்சீவி

    ஒளிப்பதிவு – பி.எல். ராய், எச்.எஸ். வேணு

    நடனம் – ராமசாமி, சம்பத்குமார், சின்னிலால்

    ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்

    ஸ்டூடியோ - வாகினி

    தயாரிப்பு – ஏ.சி. பிள்ளை

    திரைக்கதை இயக்கம் – எல்.வி. பிரசாத்


    பேசும்படம் ஏப்ரல் 1958 ஆண்டு மலரிலிருந்து
    கதைச் சுருக்கம்
    தமிழ்ப் பண்பு நிறைந்த தன் மனைவி மீனாவைத் தள்ளி வைத்து விட்டு, தாசி வீடே கதியெனக் கிடக்கும் சோமு, அவளைத் திருப்தி படுத்துவதற்காக கொள்ளைக் காரனாக மாறுகிறான்.
    மீனாவின் மீது காதல் கொண்ட அவளது பால்ய காதலன், அவள் சோமுவுக்கு மணமுடிக்கப் பட்ட சேதி கிடைத்ததும், அவளை சகோதரியாக வரிந்து, மீனாவிடம் சோமுவைக் கொண்டு வந்து சேர்க்கிறான். மீனாவும் தன் உயரிய குணங்களால் சோமுவைத் திருத்தி விடுகிறாள்.

    கீழ்க்காணும் விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்

    பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

    நடிகன் குரல் : ஜனவரி 1958


    The Hindu : 4.1.1958


    The Hindu : 14.1.1958


    குண்டூசி : பொங்கல் மலர் : 1958


    குறிப்பு:
    "பாக்கியவதி", சென்னை 'கெயிட்டி'யில் 63 நாட்களும், 'பிரபாத்'தில் 42 நாட்களும், 'சரஸ்வதி'யில் 35 நாட்களும் ஓடி மாநகரில் நல்ல வெற்றி. மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 56 நாட்கள் ஓடி வெற்றி. சேலம் 'ஓரியண்டல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி. ஏனைய அரங்குகளிலும் ஜெயக்கொடி நாட்டி சிறந்ததொரு வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

    வரலாற்று ஆவணம் :
    நடிகர் திலகம் பற்றி டைரக்டர் எல்.வி.பிரசாத்


    நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) : ஆகஸ்ட் 1962




    Last edited by RAGHAVENDRA; 26th April 2013 at 08:23 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •