Page 74 of 185 FirstFirst ... 2464727374757684124174 ... LastLast
Results 731 to 740 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #731
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    அரிதான பல நிழற்படங்களை வழங்கி ராணி லலிதாங்கி திரைப்படத்தின் தகவல் களஞ்சியத்தை முழுமையாக்கியுள்ளீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி.

    தொடர்ந்து ...

    ராணி லலிதாங்கி – கதைச் சுருக்கம்
    பேசும் படம் ஏப்ரல் 1958 ஆண்டு மலரிலிருந்து
    மன்னன் அழகேசன் சந்தர்ப்பக் கோளாறு காரணமாக பல இடங்களில் பெண்மையின் குறைபாடுகளைக் காட்டும் பல நிகழ்ச்சிகளைக் காணுகிறான். இவைகளினால் பெண் வர்க்கத்தையே வெறுத்துத் துறவறம் பூண்டு விடுகிறான். ஆனாலும் அவன் வசிப்பது அரண்மனையில் தான்.

    ஏறக்குறைய அல்லி ராணியைப் போல் ஆண் வாடையே கூடாதென்ற கருத்துடன் அரசாண்டு வருகிறாள் ராணி லலிதாங்கி. மாறுபட்ட இரு துருவங்களுக்கும் பாசமும் பிணைப்பும் ஏற்படுவது தானே இயற்கை. அதற்கேற்ப மன்னன் அழகேசனைப் பார்த்த அவள் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள்.

    அவள் அவனை நெருங்க நெருங்க அவன் அவளை விட்டு விலகி விலகிப் போகிறான். அவனை அடைவதற்காக அவள் படாத பாடு படுகிறாள். பல சாகஸங்கள் செய்கிறாள். கடைசியில் இருவருக்கும் ஒரு போட்டி ஏற்படுகிறது. தனது ஆடல் பாடல்களினால் அழகேசனை மயக்கி மணந்து விடுகிறாள் ராணி லலிதாங்கி.
    இதனைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ள விமர்சனம்

    பழங்காலத்துப் பாட்டிக் கதை போலத் தோன்றும் இந்த ராஜா ராணிக் கதையில் அந்த இலக்கணத்துக்கேற்றபடி கூட விறுவிறுப்பான சம்பவங்கள் இருக்கவில்லை. சில இனிமையான கர்நாடக மெட்டுக்களில் அமைந்த பாடல்களும் சிவாஜி கணேசனின் ருத்ர தாண்டவமும் இப்படத்தின் சிறப்பான அம்சங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #732
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராணி லலிதாங்கி சிறப்புச் செய்திகள்


    1. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவிளையாடல் திரைப்பட ருத்ர தாண்டவம் பலர் அறிந்ததே. அறியாதது அதனை விட இன்னும் சிறப்பாக இப்படத்தில் அவருடைய ருத்ர தாண்டவம் இடம் பெறும் காட்சியாகும்.

    2. சமீபத்தில் ஓரிரு ஆண்டுகட்கு முன்னர் ஓர் அமைப்பின் சார்பில் இப்படம் திரையிடப் பட்டது. இதனைப் பற்றி நமது முரளி சார் இங்கே எழுதியிருக்கிறார். அந் நிகழ்ச்சியில் மறைந்த நடிகை ராஜ சுலோச்சனா அவர்கள் வந்திருந்து தமது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது முதலில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிக்க இப்படம் தயாரிக்கப் பட்டதாகவும் பின்னர் பல்வேறு காரணங்களால் படம் நிறுத்தப் பட்டு சிறிய கால இடைவெளியில் மீண்டும் துவங்கப் பட்டதாகவும் அப்போது நடிகர் திலகம் நடித்ததாகவும் கூறினார்.

    3. இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசை இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். ஆண்டவனே இல்லையே என்று துவங்கும் பல்லவியில் பாடலாசிரியரின் கற்பனை வளத்தைக் காணலாம்.
    Last edited by RAGHAVENDRA; 18th April 2013 at 07:33 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #733
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மிக மிக அரிய ஆவணம் - ராணி லலிதாங்கி பாட்டுப் புத்தகப் பக்கங்கள்

















    Last edited by RAGHAVENDRA; 18th April 2013 at 09:40 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #734
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    ராணி லலிதாங்கியின் அபூர்வ பாட்டு புத்தகத்தை அப்படியே பதிப்பித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.'ராணி லலிதாங்கி' பதிவுகளும் அருமை.

    அதேபோல ''இதயராஜா பித்தர்கள் குழு'' கணேசன் நடத்திய ஒரு நற்பணி விழாவில் (சுமார் ஒன்றரை வருடங்கள் இருக்கும் என்று நினைவு) நான், பம்மலார் சார் , நீங்கள், நம் முரளி சார் அனைவரும் அங்கு போடப்பட்ட தலைவர் பட கிளிப்பிங்ஸில் 'ராணி லலிதாங்கி' படத்தின் அட்டகாசமான தலைவரின் சிவதாண்டவ காட்சியை நம் ரசிகக் கண்மணிகளின் பெருத்த ஆரவாரத்திற்கிடையே ஒன்றாகக் கண்டு மகிழ்ந்தது நினைவுக்கு வந்து விட்டது. விழா முடிந்த பின்னால் கூட முரளி சார்,"இன்றைய விழாவின் ஹைலைட் 'ராணி லலிதாங்கி' நடனம்தான்" என்று சொல்லிக் கொண்டு வந்ததையும் மறக்க முடியாது.
    Last edited by vasudevan31355; 20th April 2013 at 03:25 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #735
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Next

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #736
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    42. அம்பிகாபதி AMBIKAPATHI
    [கற்பனை கலந்த கர்ண பரம்பரைக் கதை]



    வெளியான தேதி - 22.10.1957

    விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
    பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்

    பேசும் படம் : நவம்பர் 1957





    தயாரிப்பு - ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.பானுமதி, ராஜசுலோச்சனா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், வி.நாகையா, எம்.கே.ராதா, எம்.என். நம்பியார், கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி, கே.டி.சந்தானம், ருஷ்யேந்திர மணி,

    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு சமர்ப்பணம்

    திரைக்கதை – சக்தி கிருஷ்ணசாமி, சின்ன அண்ணாமலை, எம்.லட்சுமணன்

    வசனம் – ப.நீலகண்டன்

    பாடல்கள் – தஞ்சை ராமய்யா தாஸ், கண்ணதாசன், கே.டி.சந்தானம், கு.சா கிருஷ்ணமூர்த்தி, கு.மா. பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம், கோபாலகிருஷ்ணன்

    பின்னணி பாடியவர்கள்
    டி.எம்.சௌந்தர்ராஜன், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வி.என். சுந்தரம், ராகவன், சுசீலா, கான சரஸ்வதி, ராஜேஸ்வரி

    சங்கீதம் – ஜி.ராமனாதன், ஆர்க்கெஸ்ட்ரா – ஜி.ராமனாதன் குழுவினர்

    ஒளிப்பதிவு – வி.ராம்மூர்த்தி
    கேவா கலர் காட்சிகள் – டபிள்யூ.ஆர். சுப்பாராவ்,
    ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி

    ஒலிப்பதிவு – பாடல்கள் – வி.எஸ்.ராகவன், டி.எஸ்.ரங்கசாமி, ராஜகோபால், கண்ணன்
    வசனம் – சிவானந்தம்

    எடிட்டிங் – ஆர். தேவராஜன்

    புரொடக்ஷன் உதவி – கோபால் நாயர்

    லேபரட்டரி – விஜயா லேபரட்டரி – எஸ்.ரங்கநாதன்
    வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

    மேக்கப் – ஹரிபாபு, ராமதாஸ், ரங்கசாமி, ஜானகிராம், கிருஷ்ணராஜ்

    ஆர்ட் டைரக்டர் – சையத் அகமத்

    உடைகள் – பி.ராமகிருஷ்ணன், ராமு, மாதவன்

    ஸ்டண்ட் – ஸ்டண்ட் சோமு

    ஸ்டூடியோ – ரேவதி, நெப்டியூன்

    ஸ்டூடியோ நிர்வாகம் – டி.கிருஷ்ணசாமி முதலியார்

    செட்டிங்ஸ் – டி.நீலகண்டம்
    நடன அமைப்பு – குற்றாலம் கணேசப் பிள்ளை

    விளம்பர டிசைன்ஸ் – ஜி.எச்.ராவ்
    பத்திரிகை விளம்பரம் – அருணா அண்ட் கோ

    தயாரிப்பு – வி.அருணாச்சலம்

    உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, எம்.லட்சுமணன், மோகன் காந்திராமன்

    டைரக்ஷன் – ப.நீலகண்டன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #737
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    க்ஷண நேரத்தில் தோன்றி மறையும் அந்த ராமபிரான் காட்சியிலிருந்து நிழற்படத்தை மிகுந்த ஸ்ரமத்துடன் இங்கே நம்முடன் பகிரந்து கொண்ட தங்களுக்கும் தங்கள் உழைப்பிற்கும் என் உளமார்ந்த நன்றி.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #738
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக்க நன்றி ராகவேந்திரன் சார்! ராமராக தலைவர் காட்சியளிக்கும் அந்தபடத்தை மட்டும் பதிவிட்டு திலகப் புதிராகப் போடாமல் விட்டு விட்டேன். பல பேருக்கு அந்தக் காட்சி அம்பிகாபதியில் என்று தெரியாது.

    அம்பிகாபதி பற்றிய தங்களது பதிவுகள் கலக்கல்.

    இனி என் பங்கிற்கு. (என் மனம் மிக மிக மிக கொள்ளை கொண்ட படமல்லவா! அதனால் சிறப்புப் பதிவுகள் உண்டு.)
    Last edited by vasudevan31355; 21st April 2013 at 09:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #739
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அம்பிகாபதி' கலக்கல் நிழற்படங்கள்.

















    நடிகர் திலகமே தெய்வம்

  11. #740
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அம்பிகாபதி' நிழற்படங்கள் தொடர்கிறது.....









    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •