Page 61 of 185 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #601
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    ரங்கோன் ராதா படப்பதிவுகள் ரம்மியம். தங்கள் அசுர உழைப்பு பராசக்தி தெலுங்குப் பதிவில் கண்கூடாகத் தெரிகிறது. Filmography திரி மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கிறது. வெளிவராத பல அபூர்வ தகவல்கள் இங்கு கிடைக்கின்றன. எதிர்கால சந்ததியனருக்கு இத்திரி ஒரு கலங்கரை விளக்கம் என்றால் அது மிகையல்ல. தன்னலமற்ற தங்கள் சேவைக்கு என் வந்தனங்கள். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #602
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்
    தங்களுடைய பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான படங்களைத் தவிர பெரும்பாலான படங்களைத் தாங்கள் சேகரித்திருப்பதோடு மட்டுமின்றி அவற்றின் நிழற்படங்கள் மற்றும் தகவல்களை முந்தைய திரிகளில் பகிர்ந்து கொண்டவையே இப்போது இத்திரிக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. அதே போல் ஆவணத்திலகம் பம்மலார் வழங்கியுள்ள விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைப் பக்கங்கள் இத்திரியின் மிகப் பெரிய பலம். அடியேனுடைய பணி அவற்றைத் தொகுத்து வழங்குவதே. எனவே தங்களுக்கெல்லாம் தான் இதனுடைய மேன்மையெல்லாம் சாரும்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #603
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு ராண்டார் கய் அவர்கள் பல பழைய படங்களைப் பற்றிய அபூர்வமான தகவல்களை அளித்து வருகிறார். சில சமயங்களில் அவருடைய கருத்து நமக்கு ஏற்புடையதாயிருப்பதில்லை என்பது உண்மையே. குறிப்பாக நடிகர் திலகத்தின் ஆரம்ப கால படங்களின் போது படமில்லாமல் வீட்டில் இருந்தார் என்பது போல தொனிக்குமாறு சில கருத்துக்கள் அவருடைய கட்டுரைகளில் இடம் பெற்றிருந்தன. அவற்றிற்கு மறுப்புத் தெரிவித்து அவருடைய கட்டுரை இடம் பெற்ற நாளிதழிற்கு தேதி வாரியாக படம் வந்த தகவல்களை அனுப்பி, அப்பத்திரிகைக்கு விவரங்களை விளக்கியதற்கப்பால், அப்பத்திரிகையில் அவருடைய கட்டுரைகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே தகவல்கள் இடம் பெற்று வருகின்றன. உலக அளவில் அப்பத்திரிகை மிகப் புகழ் பெற்றது மட்டுமின்றி ஆட்சேபணைகளைத் தெரிவித்தால் உடனே அதனைப் பரிசீலித்து அதிலிருக்கக் கூடிய நியாயங்களை ஏற்று அனுசரிக்கும் வகையில் நடத்தப் படுவதால் சமீப காலமாக அவருடைய கட்டுரைகளில் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையைப் பற்றி அவர் அதிகம் குறிப்பிடுவதாக எனக்குத் தெரியவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #604
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திர சார் / வாசுதேவன் சார்,

    "ரங்கோன் ராதா" படப்பதிவுகளும் பாடல் பதிவுகளும் அருமையிலும் அருமை!! நீங்கள் என்னதான் தொகுத்து வழங்குகிறேன் என்றாலும் அதில் உள்ள கடுமையான உழைப்பைக் கண்டு தலைவணங்குகிறோம்; எங்களால் இயலவில்லை என்பதையும் ஒத்துகொள்ள வேண்டிய நிலையிலும் தான் இருக்கிறோம்.

    இந்தக் கடுமையான உழைப்பிற்கு எங்கள் மனதார பாராட்டுக்கள்!!!!

    ஆனந்த்

  6. #605
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by anm View Post
    டியர் ராகவேந்திர சார் / வாசுதேவன் சார்,

    "ரங்கோன் ராதா" படப்பதிவுகளும் பாடல் பதிவுகளும் அருமையிலும் அருமை!! நீங்கள் என்னதான் தொகுத்து வழங்குகிறேன் என்றாலும் அதில் உள்ள கடுமையான உழைப்பைக் கண்டு தலைவணங்குகிறோம்; எங்களால் இயலவில்லை என்பதையும் ஒத்துகொள்ள வேண்டிய நிலையிலும் தான் இருக்கிறோம்.

    இந்தக் கடுமையான உழைப்பிற்கு எங்கள் மனதார பாராட்டுக்கள்!!!!

    ஆனந்த்
    Yes sir our royal Sauates to raghavendran and vasu sir for all your continious HARDWORK for the work you are doing for our NADIGARTHILAGAM

  7. #606
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thank u Anand sir and Subramaniam Ramajayam sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #607
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Everyone understand the hardwork involved as well as
    the dedication in glorifying our NT by Mr Raghavendra Sir
    and Mr Vasudevan Sir.

  9. #608
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    36. மக்களைப் பெற்ற மகராசி Makkalai Petra Magarasi



    தணிக்கை – 22.02.1957
    வெளியீடு – 27.02.1957



    சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிராட்வே, சயானி

    100 நாட்களும் அதற்கு மேலும் ஒடிய திரையரங்குகள்

    சேலம் ஓரியண்டல் - 122 நாட்கள்
    திருச்சி பிரபாத் - 100 நாட்கள்

    தயாரிப்பு – ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ்
    தயாரிப்பாளர்கள் – வி.கே. ராமசாமி, ஏ.பி. நாகராஜன்
    கதை வசனம் – ஏ.பி. நாகராஜன்
    சங்கீதம் – கே.வி. மஹாதேவன்
    பாடல்கள் – ஏ.மருதகாசி, தஞ்சை ராமையா தாஸ், கவி.கா.மு.ஷெரீப், ஏ.கல்யாண சுந்தரம்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், பி.பானுமதி, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம், பி.கண்ணாம்பா, டி.பி. முத்துலக்ஷ்மி, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, ஈ.ஆர்.சகாதேவன், பி.டி.சம்பந்தம், கே.சாயிராம், சி.டி.ராஜகாந்தம் மற்றும் பலர்

    பின்னணி பாடியவர்கள்
    டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி. கிருஷ்ணன், பி.பி.ஸ்ரீனிவாஸன், ஜிக்கி, ரத்னமாலா, உடுத்தா சரோஜினி, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி

    ஒளிப்பதிவு – வி.கே. கோபால்
    ஒலிப்பதிவு – சி.பி. கன்னியப்பன்
    பாடல்கள் ஒலிப்பதிவு – சி.பி.கன்னியப்பன், பி.வி. கோடீஸ்வர ராவ், ஏ.டி. நாறாயண்
    எடிட்டிங் – டி.விஜயரங்கம், கே.துரை
    ஆர்ட் – சிஎச்.ஈ. பிரசாத் ராவ்
    செட்டிங்ஸ் – எல்.பெருமாள் ராஜு
    ஆர்டிஸ்ட் – வீ.ராமலிங்கம்
    எலக்ட்ரீஷியன் – வி.ராமச்சந்திரன்
    லேபரட்டரி பிராஸசிங் – பால் ஜி. ஸிந்தே, ஈஸ்வர் சிங்
    ஸ்டில்ஸ் – வெங்கடாச்சாரி
    மேக்கப் – கெஜபதி
    உடையலங்காரம் – சி.கே. ஹரி
    டெய்லர் – கண்ணன்
    நடனம் – சாயி. சுப்புலக்ஷ்மி, கிருஷ்ணவேணி
    நடனம் – ஹிராலால், பி.வி.பலராம்
    ஸ்டண்ட் – பி.வி. பலராம்
    நிர்வாகம் – ஆர்.வெங்கட்ராமன்
    ப்ரொடக்ஷன் – எஸ்.வி.ராஜகோபால்
    ஸ்டூடியோ – பிலிம் சென்டர் பிரைவேட் லிமிடெட்
    ஆர்.சி.ஏ.சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
    டைரக்ஷன் – கே.சோமு
    Last edited by RAGHAVENDRA; 20th March 2013 at 09:31 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #609
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள்

    மணப்பாறை மாடு கட்டி


    போறவளே போறவளே


    அடி தாராபுரம் தாம்பரம்


    மக்களைப் பெற்ற மகராசி


    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா


    மல்லியக்கா மல்லியக்கா


    சொன்ன பேச்சைக் கேக்கணும்


    சீமைக்குப் போயி படிச்சவரு


    வந்த்து யாருன்னு உனக்குத் தெரியுமா


    செந்தாழம்பூவைப் போலே
    http://www.dailymotion.com/video/xrf...c#.UUiUlTe84jE
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #610
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் வித்தியாசமாக (வட்டார மொழியில்) பேசி நடித்த முதல் நடிகர் சிவாஜிகணேசன்தான்.


    1957_ம் ஆண்டில், "மக்களைப் பெற்ற மகராசி", "வணங்கா முடி", "புதையல்", "மணமகன் தேவை", "தங்கமலை ரகசியம்", "ராணி லலிதாங்கி", "அம்பிகாபதி", "பாக்யவதி" ஆகிய 8 படங்களில் சிவாஜி நடித்தார். "மக்களைப்பெற்ற மகராசி" ஒரு முக்கிய சாதனை நிகழ்த்திய படமாகும்.

    வி.கே.ராமசாமியும், ஏ.பி.நாகராஜனும் சேர்ந்து ஆரம்பித்த "ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ்" பட நிறுவனம், இப்படத்தை தயாரித்தது. கதை_ வசனம் ஓ.பி.நாகராஜன். இசை: கே.வி.மகாதேவன்.

    "மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி..." என்று பாடியபடி, கட்டுக்குடுமியுடன் சிவாஜி அறிமுகம் ஆகும் முதல் காட்சியே, ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றது. கொங்கு நாட்டு (கோவை வட்டார) தமிழில் அவர் பேசிய வசனத்தைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர். காரணம், அதற்கு முன் எல்லா நடிகர்களும், எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் வசனம் பேசி நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் வித்தியாசமாக (வட்டார மொழியில்) பேசி நடித்த முதல் நடிகர் சிவாஜிகணேசன்தான்.

    இதில், சிவாஜிக்கு ஜோடி பானுமதி. மற்றும் வி.கே.ராமசாமி, கண்ணாம்பா, எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், சாரங்கபாணி ஆகிய அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தனர். சிவாஜியின் நடிப்புக்காகவே, 100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம், "மக்களைப்பெற்ற மகராசி."
    நன்றி மாலை மலர் இணைய தளம் - http://cinema.maalaimalar.com/2010/0...22/sivaji.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •