Page 53 of 185 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #521
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    30. Pennin Perumai பெண்ணின் பெருமை




    தணிக்கையான நாள் - 09.02.1956
    வெளியான நாள் 17.02.1956

    தயாரிப்பு - ராகினி பிலிம்ஸ்
    மணிலால் பேனர்ஜியின்
    ஸ்வயம் சித்தா கதையைத் தழுவியது

    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சாந்தகுமாரி, வி.நாகய்யா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு, பி.எஸ்.டானம், கே.எஸ்.அங்கமுத்து, மற்றும் பலர்

    வசனம் பாடல்கள் – தஞ்சை ராமய்யா தாஸ்

    ஒளிப்பதிவு – பி.எல். ராய்

    ஒலிப்பதிவு – என். சேஷாத்ரி

    ஒலிப்பதிவு – பாடல்கள், பின்னணி சங்கீதம் – டி.எஸ். ரங்கசாமி

    எடிட்டிங் – பி. நரசிம்ம ராவ், ஸ்ரீராமுலு
    சங்கீதம் – பி.என்.ஆர், ஏ. ராமராவ்
    பின்னணி சங்கீதம் எம். வேணு

    பாடியவர்கள்
    கண்டசாலா,
    டி.எம்.சௌந்தர்ராஜன்,
    சீர்காழி கோவிந்தராஜன்,
    பி.லீலா,
    ஜிக்கி,
    பி. சுசீலா

    ஆர்ட் – கே.சுப்பராவ்
    செட்டிங்ஸ் – நீலகண்டன், ராம்குமார்

    மேக்கப் – ஹரிபாத சந்திரா, கே. நாகேஸ்வர்ராவ்

    ஸ்டில்ஸ் – எம். சத்யம், ஜெய்ஹிந்த் ஸ்டூடியோ

    நடன அமைப்பு – பி.கிருஷ்ணமூர்த்தி, வி.பி. பலராமன், சின்ன சத்யம், சம்பத்

    செட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ், கே.நாதமுனி அண்ட் சன்ஸ்

    ஸ்டூடியோ – ரேவதி

    ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

    பிராஸ்ஸிங் – ஏ. தியாகராஜன், விஜயா லேபரட்டரி

    அஸோஸியேட் டைரக்டர் – ஏ. சேஷகிரி ராவ்

    ப்ரொடக்ஷன் – ஆர். ரங்கராஜன்

    தயாரிப்பு அண்ட் டைரக்ஷன் – பி. புல்லையா


    சென்னையில் வெளியான திரையரங்குகள் – காஸினோ, பிராட்வே, மஹாலக்ஷ்மி



    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்



    சென்னை காஸினோ – 105 நாட்கள்
    சென்னை பிராட்வே – 105 நாட்கள்
    சேலம் நியூ சினிமா – 105 நாட்கள்
    திருச்சி ராஜா – 105 நாட்கள்

    விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
    Last edited by RAGHAVENDRA; 25th February 2013 at 08:57 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெண்ணின் பெருமை பாடல் காட்சிகள்
    தமிழ்த்திரையுலகில் இணையில்லா இரு குரலிசையென புகழ் பெற்ற டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா இருவரும் பாடிய முதல் பாடல்.
    Azhuvadha Illai Sirippadha


    முகப்பிசை



    மற்ற பாடல்களுக்கான இணைப்புகள்

    கண்ணா மறையாதேடாKanna Maraiyadheda


    இதய வானில் ஒளியை வீசும்


    கன்னித் தமிழ் நாடு


    கூவுது கூவுது சேவல்


    கிருஷ்ணா உன் செயலால்


    கண்டேன் கனவிலே


    முடியுமா


    வந்து வந்து கொஞ்சுவதேன்


    உத்தமனே உலகில்


    வாழ்க்கை ஓடம்


    முகூர்த்த நாளும் முடிவாச்சா


    காட்சிகளுக்கு நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் மய்ய நண்பர் பேராசிரியர் சேக்கரகுடி கந்தசாமி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #523
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெண்ணின் பெருமை - சிறப்புச் செய்திகள்

    நடிகர் திலகமும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த முதல் படம்

    இன்றைய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர் திரு ராகவேந்திர ராவ் அவர்கள் புல்லையா அவர்களிடம் உதவி இயக்குநராய் இப்படத்தில் பணி புரிந்துள்ளார்.

    இப் படத்தில் நட்சத்திரத் தேர்வின் போது நடிகர் திலகம் அவர்கள், ஜெமினி கணேசனிடம் எந்தப் பாத்திரம் வேண்டும் என்று தேர்வு செய்யச் சொல்லி அவர் கதாநாயகநாக அப்பாவி வேடம் தேர்வு செய்த பின், தான் வில்லன் வேடத்தை திறம்படச் செய்ததோடு மட்டுமல்லாமல் எந்த இமேஜ் வளையத்திலும் சிக்காதவர் என்ற பெருமையை நிலைநாட்டினார். இன்றைக்கும் வில்லன் என்றால் பெண்ணின் பெருமை நடிகர் திலகத்தின் பாத்திரம் தான் நினைவுக்கு வரும் என்கிற அளவிற்கு தன் திறமையை நிரூபித்துக் காட்டினார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #524
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Rare info on Tenali Raman & Pennin Perumai.
    Thanks Mr Raghavendra Sir. We have to salute for your
    efforts in taking thread to new heights.

  6. #525
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஒரு சின்ன புள்ளி விவரக் கண்ணோட்டம் இந்நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.

    நடிக்கத் தொடங்கி 40 மாதங்களில் 31 படங்கள் என்பது வேறு எந்த கதாநாயக நடிகரும் தமிழ்த் திரையுலகில் செய்ததாகத் தெரியவில்லை. இது மட்டுமின்றி 13.11.1955ல் கள்வனின் காதலி, கோடீஸ்வரன் திரைப்படங்கள் வெளியானதில் தொடங்கி 25.02.1956ல் ராஜா ராணி வரை 105 நாட்களில் 8 படங்கள் வெளி வந்துள்ளன. இதிலும் 13.11.1955 மற்றும் 14.01.1956 இரு நாட்களிலும் தலா இரு படங்கள். இதுவும் குறிப்பிடத் தக்கதாகும்.


    இதன்றி 14.01.1956 தொடங்கி 25.02.1956 வரையிலான 43 நாட்களில் நான் பெற்ற செல்வம், நல்ல வீடு, நானே ராஜா, தெனாலி ராமன், பெண்ணின் பெருமை, ராஜா ராணி என 6 படங்கள் ...

    இவையெல்லாம் எந்த அளவிற்கு தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்களின் favourite ஆக அவர் திகழ்ந்திருந்தார் என்பதை எடுத்துக் காட்டும் சான்றல்லவா..
    sathanai thilagam nam nadigar thilagam-yarum ninaika kooda mudiyatha sathanaigal seithavar.
    Vazga Sivaji pugaz

  7. #526
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    [QUOTE=RAGHAVENDRA;1020798]விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் தெனாலி ராமன். ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மட்டுமின்றி நல்ல திரைப்படங்களை விரும்புவோரும், பழைய சரித்திரக் கதைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். பானுமதியை விரட்ட பெண் வேடம் போட்டு நடிகர் திலகம் அந்தப் புரத்தில் நுழையும் காட்சி குறிப்பிடத் தக்கது.


    கிருஷ்ணாவின் தாயார் வேடமிட்டு அந்தப்புரத்துள் நுழைகிறார்.

    இந்தக் காட்சியில் வயதான பெண்மணி வேடம் தரிக்கும் நடிகர் திலகம், பார்ப்பவர்களுக்கு அது வேடம் என்று தெரியும் என்பதையும் மனதில் நிறுத்தி அதே சமயம் அரண்மனைக் காவலாளிகள் சந்தேகப் படா வண்ணம் தன் குரலில் அந்த பெண்மையைக் கொண்டு வந்து தன் வயோதிகத்தையும் வெளிக்காட்டும் வண்ணம் குரல் சற்று உடைந்தாற்போல பேசி இக்காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.
    கண்டிப்பாக பார்க்க வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களில் தெனாலி ராமனும் ஒன்று.

    Nandri thiru. ragavendra,

    Thenali raman kaviyathai kana aval athigamhi ullathu.
    Vazga Sivaji pugaz

  8. #527
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பெண்ணின் பெருமை - சிறப்புச் செய்திகள்

    நடிகர் திலகமும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த முதல் படம்

    இன்றைய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர் திரு ராகவேந்திர ராவ் அவர்கள் புல்லையா அவர்களிடம் உதவி இயக்குநராய் இப்படத்தில் பணி புரிந்துள்ளார்.

    இப் படத்தில் நட்சத்திரத் தேர்வின் போது நடிகர் திலகம் அவர்கள், ஜெமினி கணேசனிடம் எந்தப் பாத்திரம் வேண்டும் என்று தேர்வு செய்யச் சொல்லி அவர் கதாநாயகநாக அப்பாவி வேடம் தேர்வு செய்த பின், தான் வில்லன் வேடத்தை திறம்படச் செய்ததோடு மட்டுமல்லாமல் எந்த இமேஜ் வளையத்திலும் சிக்காதவர் என்ற பெருமையை நிலைநாட்டினார். இன்றைக்கும் வில்லன் என்றால் பெண்ணின் பெருமை நடிகர் திலகத்தின் பாத்திரம் தான் நினைவுக்கு வரும் என்கிற அளவிற்கு தன் திறமையை நிரூபித்துக் காட்டினார்.
    அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,

    தங்களின் "பெண்ணின் பெருமை" பற்றிய குறிப்புகள் அருமை.

    இந்தப் படத்தின் கதை தாங்கள் குறிப்பிட்டது போல் வங்கக் கதை தான். இருப்பினும், இந்தப் படத்தின் மூலம் (அல்லது ஒரே நேரத்தில் எடுக்கப் பட்டிருக்கலாம்) தெலுங்கில் வந்த "அர்த்தாங்கி" திரைப்படம் ஆகும். தெலுங்கில், மக்களின் அனுதாபத்தைப் பெறும் நாயகன் பாத்திரத்தில் அந்த நேரத்தில் முன்னணியில் இருந்த ஏ. நாகேஸ்வர ராவும், வில்லன் பாத்திரத்தில் அப்போது தான் புகழ் பெறத் துவங்கிய, சிறு சிறு வேடங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜக்கையாவும் நடித்தனர் (கடைசி வரை அவர் இதே போன்ற வேடங்களில் தான் தெலுங்கில் நடித்து வந்தார் என்பது வேறு விஷயம்). மேலும், நடிகர் திலகத்தின் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட போதெல்லாம், இதே ஜக்கையா தான் நடிகர் திலகத்திற்கு குரல் கொடுத்தார். ஏனென்றால், அவரது குரல் வளம் அப்படி இருக்கும். ஆல் இந்தியா ரேடியோவில் அவர் முதலில் பணி புரிந்து கொண்டிருந்தார் - இதே குரல் வளத்துக்காக!).

    ஆக, தமிழில், இந்தக் கதையில், ஜெமினி நடித்த நாயகன் பாத்திரத்தில், அப்போது தமிழில் முன்னணியில் இருந்த நடிகர் திலகம் தானே நடித்திருக்க வேண்டும்? இருப்பினும், நடிகர் திலகம் தனக்கேயுரிய பெருந்தன்மையோடு அந்தப் பாத்திரத்தை விட்டுக் கொடுத்து, அதன் மூலம், ஜெமினி முன்னணி கதாநாயகனாக வழி வகுத்தார். தன் திறமையின் மேல் அவருக்கிருந்த தன்னம்பிக்கையும் ஒரு காரணம்; வில்லனாக ஒரு படத்தில் நடித்தாலும், வேகமாக அவரால் நாயகனாகவும் ஒளி விட முடியும்! அதை உடனே வெளி வந்த "ராஜா ராணி" யிலும், "அமர தீபம்" படத்திலும் செய்து காட்டினார்!! அதோடு விட்டாரா, அதே வருடத்தில் வெளி வந்த கடைசி படத்தில், மறுபடியும் வில்லத்தனமான பிரதான நாயகன் பாத்திரத்தில், "ரங்கூன் ராதா" படத்தில் பிரகாசித்தார்!!!

    மேலும், தாங்கள் நடிகர் திலகம் நடிக்க வந்து மூன்று வருடங்களுக்குள் 25 படங்களில் நடித்ததை விவரமாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், 1958 வரை, தமிழில் அதிகபட்சம் 40 படங்கள் கூட வெளி வந்ததில்லை. அந்த 36-40 படங்களில், நடிகர் திலகத்தின் படங்கள் ஒவ்வோர் வருடமும், 7-8 எனும்போது, அவரது ஆளுமை மற்றும் வீச்சு எந்த அளவிற்கு இருந்தது என்பது தெரியும்; இத்தனைக்கும், கூடுமானவரை, அத்தனை படங்களும், தரமான வெற்றிப்படங்கள் மற்றும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான பாத்திரங்கள்!

    நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றி.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  9. #528
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Parthasarathy Sir,

    Thanks for the additional info on NT's Sadhanai &
    confidence of our acting God in his abilities.

  10. #529
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    pennin perumai additional inf given by parthsarathy sir TO BE WRITTEN ON GOLDENWORDS OF NT LIFE HISTORY. really you have given wonderful point of happening in the past. kudos. your AAyvu Essays are very nice.
    YRSTERDAY UTTAMA PUTRAN in murasu watched very interesing as if first time crossed 25 WATCHINGS SO FAR. PUDIYAPARAVAI BEING TOP BENCHMARK.
    Last edited by Subramaniam Ramajayam; 25th February 2013 at 11:38 AM.

  11. #530
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தெனாலிராமன், பெண்ணின் பெருமை என்று நடிகர் திலகத்தின் படவரிசைகளின் சிறப்புகளை ஒரே தொகுப்பாக அளிப்பது அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை
    Last edited by KCSHEKAR; 26th February 2013 at 11:05 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •