Page 19 of 185 FirstFirst ... 917181920212969119 ... LastLast
Results 181 to 190 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #181
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது
    கையளவே ஆனாலும் தயங்க மாட்டேன்

    பிறவிக் கலைஞர் நடிகர் திலகம் என்பதற்கு மிகச் சிறந்த சான்றான படம் அவன் தான் மனிதன். 175 என்கிற எண்ணுக்கு மிகப் பெரிய அளவில் பெருமை சேர்த்த படம், நடிப்பு. அவன் தான் மனிதன் படம் முடிந்த பிறகு ஒரு சில நாட்களுக்கு அந்த hangover ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். இதுவும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். சாந்தியில் பால்கனி வகுப்பிற்கு போட்டி அதிகம் இருக்கும். காரணம் ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களைப் பொழிவதற்கு சௌகரியமாக இருக்கும் என்பதால். புரொஜக்டரின் ஒளியில் அந்த பூக்கள் ஜொலிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #182
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கண்ணன் சார்,

    அற்புத நடையிலே 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடலைப் பற்றி எழுதி மனதை இனம் புரியா உணர்வால் ஆட்டுவித்து விட்டீர்கள். அற்புதம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #183
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகரன் சார்,
    Ananda Vikatan - Pokkizham - 06-02-2013 புகைப்படம் அருமை. நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #184
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Nadigar thilagam with Ilayaraja.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #185
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Exclusive

    சமீபத்தில் வெளி வந்த 'Life of Pie' ஆங்கிலப் படத்தில் நமது நடிகர் திலகத்தின் 'வசந்த மளிகை' போஸ்டர் இடம் பெற்றுள்ள காட்சி.

    Last edited by vasudevan31355; 1st February 2013 at 09:47 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #186
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

    9. MANIDANUM MIRUGAMUM மனிதனும் மிருகமும்



    Released first on :04.12.1953

    அரிதான விளம்பர நிழற்படங்கள் உவயம் ஆவணத் திலகம் பம்மலார்

    சுதேசமித்ரன் : 28.11.1953


    சுதேசமித்ரன் : 4.12.1953


    சுதேசமித்ரன் : 11.12.1953


    சுதேசமித்ரன் : 18.12.1953


    சுதேசமித்ரன் : 25.12.1953
    Last edited by RAGHAVENDRA; 9th February 2013 at 08:05 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #187
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    life of pie ஆங்கிலப் படத்தில் வசந்த மாளிகை போஸ்டர் இடம் பெற்ற காட்சியின் நிழற்படத்தை இங்களித்து அசத்தி விட்டீர்கள்.
    பாராட்டுக்களும் நன்றியும்
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #188
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மறைந்த கர்நாடக இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி அவர்கள் இப்படத்திற்காக பாடி அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட்டான பாடல், இமய மலைச் சாரலிலே ... கேட்கக் கேட்க தெவிட்டாச இசையமுது. அவருடைய படங்களை இணைத்து இப்பாடலை வழங்கியுள்ளார்கள். அவருக்கு நன்றி. இப்படத்தினுடைய காணொளி இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #189
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மனிதனும் மிருகமும்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன் – பாரிஸ்டர் மாதவன்
    கே. சாரங்க பாணி – பேராசிரியர் சேகர்
    டி.ஆர். ராமச்சந்திரன் – பேபி
    எம்.என்.கண்ணப்பா – சுந்தரம்
    நந்தாராம் – தேவேந்திர பூபதி
    டி.கே. சம்பங்கி – பாரிஸ்டர் ராமானுஜம்
    டி.என். சிவதாணு – டைகர்
    டி.எஸ். மாணிக்கம் – நடேசன்
    ஈ.ஆர். சகாதேவன் – சாமி
    மாதுரி தேவி – வாணி
    எம்.என்.ராஜம் – ராணி
    கே.எஸ். சந்திரா – மீனாட்சி

    நடனம் – குமாரி கமலா

    கதை வசனம் பாடல்கள் – எஸ்.டி.சுந்தரம்
    சங்கீதம் – எம். கோவிந்தராஜுலு நாயுடு
    பின்னணி பாடியோர் – எம்.எல். வசந்தகுமாரி, சி.எஸ்.ஜெயராமன், ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி, எம்.எம்.மாரியப்பா
    ஸ்டூடியோ – ரேவதி
    டைரக்ஷன் – கே.வேம்பு எஸ்.டி.சுந்தரம்
    பாடல்களின் பட்டியல்
    1. ஜெகம் யாவும் சுக வாழ்வின்
    2. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
    3. மோட்டாருக்கு பேட்டரி போல்
    4. இன்பக் குயில் குரலினிமை
    5. இமய மலைச் சாரலிலே – எம்.எல்.வசந்த குமாரி
    6. காலமென்னும் சிற்பி செய்யும் - எம்.எல். வசந்த குமாரி
    7. உன்னை நினைக்க நினைக்க

    பாட்டுப் புத்தகம் பைண்ட் செய்யப் பட்டுள்ள படியால் ஓரத்தில் சரியாக ஸ்கேன் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #190
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

    நடிகர் திலகத்தின் நாயகிகள் (11) ஜமுனா

    ஜமுனாவின் அழகிய தோற்றம்.



    நடிகர் திலகத்தின் முக்கியமான ஜோடிகளில் ஒருவர். தெனாலி ராமன், பொம்மைக் கல்யாணம், 'பொம்மல பெள்ளி' (தெலுங்கு) தங்கமலை ரகசியம், நிச்சயத் தாம்பூலம், மருத நாட்டு வீரன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்திற்கு இவர் இணை. அன்றைய நாட்களில் ஸ்லிம்மாக இருந்த ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது முக ஜாடை வட இந்தியக் 'கனவுக் கன்னி' ஹேமமாலினி அவர்களின் முக ஜாடையை சற்றே ஒத்திருப்பது போல எனக்கு தோன்றும். அழகான அலட்டல் இல்லாத நடிகை. 'அமுதைப் பொழியும் நிலவாக' அமர்க்களம் புரிந்தவர். "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?" பாடலை நாம் கேட்கும் போதெல்லாம் நடிகர் திலகத்திற்கு பிறகு நம் மனதில் இவர் நிழலாடுவது தவிர்க்க முடியாத ஒன்று. 'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் வரதட்சணைக் கொடுமையால் அவதியுறும் நாயகியாக அற்புதமாக நடித்திருப்பார். 'நிச்சயத் தாம்பூல'த்திலும் ('நெற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு' பாடலை மறக்க முடியுமா?!) அருமையான ரோல். கணவன் சந்தேகத்தால் அவதியுறும் மனைவி கேரக்டர். இதிலும் முத்திரை பதித்திருப்பார். 'தெனாலி ராமன்' திரைப்படத்தில் அமைதியே உருவாக ராமனின் மனைவியாக நடித்திருப்பார். தெலுங்கில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகை. கர்நாடகத்தில் பிறந்த இவர் ஆந்திராவில் செட்டிலானவர். தெலுங்கில் சாவித்திரிக்கு ஈடான புகழ் பெற்றவர். தனது 14-ஆவது வயதிலேயே 'மாபூமி' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர். 'மிலன்' (1967) என்ற இந்திப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது இவருக்குக் கிடைத்தது. (சாவித்திரி அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய 'பிராப்தம்' படம் 'மிலன்' இந்தியைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் சந்திரகலா ஏற்று நடித்த பாத்திரத்தை இந்தியில் ஜமுனா செய்திருந்தார்).1980-இல் இந்திரா காந்தி அவர்களின் தயவால் எம்பியாக காங்கிரசிலும், பின் பிஜேபி யிலும் இருந்தவர். சமூக நலப் பணிகளில் ஆர்வம் உடையவர்.

    'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ஜமுனா



    'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்.






    நடிகர் திலகத்தின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் சிவாஜி தரப்பு நடிகை என்ற மாபெரும் பெருமை பெற்ற நடிகர். இதை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். மற்றவர்களுடன் இவர் நடித்த படங்களில் 'குழந்தையும் தெய்வமும்' மற்றும் 'அன்புச் சகோதரர்கள்' படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏவிஎம்மின் 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமலின் தாயாராக நடித்துள்ளார்.

    'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தின் தலைவர், ஜமுனாவுக்கான அற்புதமான டூயட். ("இகலோகமே... இனிதாகுமே...")



    'நிச்சயத் தாம்பூலம்' படத்தில் மறக்க முடியாத ("பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!")



    'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ("இன்பமே பொங்குமே!") அபூர்வமான அருமையான டூயட். ('தங்கச் சுரங்க'த்தின் தலைவரின் ஸ்டைலை 'பொம்மைக் கல்யாண'த்திலேயே காணலாம். தலைவர் என்ன அழகு! என்ன ஒரு dress sense!)



    'மருத நாட்டு வீரன்' படத்தில் மறக்க முடியாத ("பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா!!") அட்டகாசமான டூயட்.


    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •