Page 177 of 185 FirstFirst ... 77127167175176177178179 ... LastLast
Results 1,761 to 1,770 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1761
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography

    128. Kaval Deivam காவல் தெய்வம்




    தணிக்கை 28.04.1969
    வெளியீடு 01.05.1969

    தயாரிப்பு அம்பாள் புரொடக்ஷன்ஸ்

    கதை - ஜெயகாந்தன்
    கௌரவ நடிகர்கள் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி

    மற்ற நடிக நடிகையர்

    சௌகார் ஜானகி, லட்சுமி, ஜி.சகுந்தலா, ஸ்ரீரஞ்சனி, ல்லிதா, சிவகுமார், எஸ்.ஏ.அசோகன், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே.தேவர், வி.கோபால கிருஷ்ணன், சக்தி சுகுமாரன் & நாகேஷ் மற்றும் பலர்

    பிரகலாத நாடகம் - புரிசை நடேசத் தம்பிரான் குழுவினர்
    கரக ஆட்டம் - கலைமணி குழுவினர்
    நையாண்டி மேளம் - மதுரை அவனியாபுரம் P. சுந்தரராஜ் குழுவினர்
    பாடல்கள் - மாயவ நாதன், தஞ்சை வாணன், நெல்லை அருள்மணி

    பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, தாராபுரம் சுந்தர்ராஜன்

    வில்லுப்பாட்டு - குலதெய்வம் ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன், ஷண்முகசுந்தரி, ஆண்டாள்

    இசை - தேவராஜன், உதவி - சேகர்

    கலை - பி. நாகராஜன்

    ஒளிப்பதிவு - விஜயன்
    ஆபரேடிவ் கேமராமேன் - டி.வி.பாலு

    ஒலிப்பதிவு - பாடல்கள் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம். உதவி, கே.சம்பத், எம்.வெங்கட்ராமன்

    வசன ஒலிப்பதிவு - டி.வி.நாதன், உதவி - கந்தசாமி, பாலசந்தர்

    ஒளிப்பதிவு உதவியாளர்கள் - கோவிந்தராஜ், பாண்டியன்

    உதவி டைரக்ஷன் - டி.வி.ராம், டி.கே.மோகன்

    ரீ-ரிக்கார்டிங் - ஈ.ஐ.சீவா - சாஸ்த்தா கம்பைன்ஸ், உதவி - கே.ஜகபதி ராவ், வி.பார்த்தசாரதி

    ஸ்டில்ஸ் - ஆர்.என்.நாகராஜ ராவ், ஏ.சங்கர் ராவ், ஆர்.என். நரசிங்கராவ்

    விளம்பரம் - எலிகண்ட் பப்ளிசிடீஸ்
    விளம்பர டிசைன்கள் - பக்தா

    மேக்கப் - ஆர்.ரங்கசாமி, எம்.ராமசாமி, பத்மனாபன், கே.ராமன், தனகோடி, எம்.கோபாலன், ஏ.ஜானகிராமன்

    நடன அமைப்பு - எஸ்.எம்.ராஜ்குமார்

    சண்டைப்பயிற்சி - ஏ.எஸ்.துரை, சி.எம்.அரசு, என்.ஜி.பி.சாரதி

    உடைகள் - பி.ராமகிருஷ்ணன், பி.பொன்னுசாமி, டி.சேது

    பரத நாட்டியம் - சரளா-கனகா
    பயிற்சி - சரசா
    பின்னணி - ராதா ஜெயலட்சுமி
    பாடல் - முத்துத் தாண்டவர்

    செட்டிங்ஸ் - சுவர்ண ஆச்சாரி, ஷண்முக ஆச்சாரி, நாராயண ஆச்சாரி
    பெயிண்டிங்ஸ் - சங்கரலிங்கம், பார்த்தசாரதி, கருப்பையா
    புரோகிராம்ஸ் - கே.ஆறுமுகம், ஓ.அண்ணாமலை, ஜி.தேவாஜி ராவ்
    எலெக்ட்ரீஷியன்ஸ் - ராமச்சந்திரய்யர், மாணிக்கம்

    ஆபீஸ் நிர்வாகம் - கே.வி.ஆர்.ராமன், உதவியாளர்கள் - சக்தி சுகுமாரன், என்.ஜி.ராமதாஸ், எம்.பி.பால்ராஜ்

    புரொடக்ஷன் மேனேஜர் - வி.ஜி.வேணு

    செட் ப்ராபர்டீஸ் - நியோ பிலிமோ கிராப்ட்ஸ்

    வெளிப்புறப் படப்பிடிப்பு - பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட்., சுஜாதா மூவீஸ்

    ஸ்டூடியோ - கற்பகம், ஏவி.எம்., பிரசாத்

    ப்ராஸ்ஸிங் - டி.ராமசாமி, சேதிராம் அண்ட் கோ. [லெஸ்ஸீஸ் - ஏவி.எம்.பிலிம் லேபரட்டரீஸ்]

    டைரக்ஷன் - கே.விஜயன்
    Last edited by RAGHAVENDRA; 23rd December 2015 at 12:23 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1762
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காவல் தெய்வம் விளம்பர நிழற்படம் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..

    'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 1.5.1969

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1763
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காவல் தெய்வம் - சிறப்புச் செய்திகள்

    தன் மரியாதைக்குரிய திரு எஸ்.வி.சுப்பய்யா அவர்களுக்காக நடிகர் திலகம் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் நடித்துக் கொடுத்த படம்.


    தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரும் தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் மனம் கவர்ந்த திரைப்படம். இத்திரைப்படம் வெளியான சமயத்தில் சென்னை கோடம்பாக்கம் ராம் திரையரங்கில் இப்படத்திற்கான பேனரோடு இருந்த நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பார்த்து மனம் லயித்து நடிகர் திலகத்தின் சிறப்பை சிலாகித்துப் பேசியது அந்நாட்களில் சினிமா பத்திரிகைகளில் இடம் பெற்ற சுவாரஸ்யமான செய்தியாக விளங்கியது.


    G. Devarajan

    பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய ஒரே படம்.

    சாமுண்டி பாத்திரத்தைப் பார்த்து நாகேஷ் பாத்திரம் சொல்வது போல் வரும் , சிம்மக்குரலய்யா உமக்கு என்பது பிரபலமாகி நடிகர் திலகம், கலைக்குரிசில் போன்ற பட்டங்களோடு சிம்மக்குரலோன் என்கிற பட்டப்பெயரும் மிகப் பிரபலமானது.

    படத்தில் கௌரவ நடிகர் பட்டியலில் நடிகர் திலகத்தின் பெயர் இடம் பெற்றாலும் பாத்திரத்தின் முக்கியத்துவம், பெற்ற வரவேற்பு உள்ளிட்ட காரணங்களால் நடிகர் திலகத்தின் பிரதான வேடங்கள் படப்பட்டியலில் இடம் பெற்றது.
    Last edited by RAGHAVENDRA; 23rd December 2015 at 06:56 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #1764
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளிகள். நன்றி யூட்யூப் இணையதளம்.

    காவல் தெய்வம் ... முழுத் திரைப்படம்
    இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக..



    வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன்



    அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்



    அய்யனென்போம் அப்பனென்போம் - வில்லுப்பாட்டு



    பொறப்பதும் போறதும் இயற்கை..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #1765
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கல்கி 18.05.1969 தேதியிட்ட இதழில் வெளியான காவல் தெய்வம் விளம்பரம் - நிழற்படம் நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து..


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1766
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பளிப்பு.- 1969.

    வரும் புத்தாண்டில் 45 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

    முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

    பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

    ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

    நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

    பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

    விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

    படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

    எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

    நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #1767
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.


    இந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.

    அன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.

    தங்க சுரங்கம்- jamebond படம்.

    சிவந்த மண் - Action படம் .

    காவல் தெய்வம்- ரியலிச படம்.

    தெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.

    திருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.

    நிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .

    அஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.


    கிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.


    அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.

    தங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.

    குருதட்சிணை - பத்மினி,ஜெயலலிதா.

    தெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.

    திருடன்- கே.ஆர்.விஜயா.

    நிறைகுடம்- வாணிஸ்ரீ.

    சிவந்த மண் -காஞ்சனா.


    7 இயக்குனர்களுடன் பணியாற்றினார்.


    ஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.

    ராமண்ணா- தங்க சுரங்கம்.

    ஏ.பீ.நாகராஜன்- குருதட்சினை.

    டி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)

    முக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)

    கே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)

    ஸ்ரீதர் - சிவந்த மண் .


    6 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.


    அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.

    தங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)

    குருதட்சினை- புகழேந்தி(ஒரே படம்)

    காவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)

    அஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)

    நிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)
    Last edited by Gopal.s; 27th December 2015 at 01:34 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #1768
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிக்கல் சண்முகசுந்தரம்.

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.

    பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.

    அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

    முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.

    முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

    சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

    திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.

    படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.

    நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

    தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

    நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.

    மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

    இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.

    கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.

    தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.

    அன்புடன்

    July 27th [1968] happens to be the release date of Thillana. Last year when Swami published photos and Ads of Thillana it initiated a round of discussions about the film and the exchanges between Rakesh and Plum were lively. When I commended it, Plum asked me to write about the film. I promised him that I will do it but I could not keep my word. One year has gone and so I thought "lemme try something". I have talked about only Shanmugasundaram. While there had been great write ups about the film by the likes of Prabhu and Rakesh, i am not sure how much justice I have done. Still dedicating this to Plum.

    By Murali
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. #1769
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ப்ரிய சிக்கலாரைப் பற்றி சிறப்பான இடுகை திரு.முரளி----PR
    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

    சில நாட்களுக்கு முன்பு ஜெய்-யுடன் இதைப் பற்றி தான் விவாதித்துக்கொண்டிருந்தேன். எத்தனை shadesஐ அசாத்தியமாக காண்பித்திருப்பார். அசுர சாதனை. அடங்கிய தொனியில் இருக்கும் காட்சிகளிலும்.

    "கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
    "குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு,
    பிரமாதமான tag-team!
    அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது.
    தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும்.

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்.
    அதுவும் அந்த 'ஷண்முகா'வுக்கு 'அடி!' என்று அந்த துடுக்குத்தனத்துக்கு react செய்யும் விதம்

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு.
    தற்செயல் இல்லை. குழுவையே கடைசி ரயிலுக்காக காக்க வைப்பார். பாலையா காரணத்தை உடைக்கப்போக, வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கிளம்புவார். கனவானின் காதல் அல்லவா

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
    இப்படியும் சொல்லலாம். நான் இதை வேறு மாதிரி நினைத்தேன். அந்த தருணத்தில் அவன் மகாகலைஞன். தன்னை வரவேற்க வந்தவன், தனக்கு உரிய மரியாதையைச் செய்யவேண்டுமே ஒழிய, இன்னொரு கலைஞரை சந்தித்துப் பேசி, தன்னை incidentalஆக வரவேற்றதாக இருக்கக்கூடாது என்ற பிடிவாதம் தெரிந்தது.

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது?
    முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

    வைத்தி மொழிபெயர்த்ததும் "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. #1770
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

    பிறந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையுமே மிகை. ஏனன்றால், அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

    இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- 'இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.

    கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!

    தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், சில பக்கங்கள் முன் நாம் பார்த்த சத்ரபதி சிவாஜியின் கோவம்..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!

    அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.

    "வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.

    சற்று முன்வரை இவர்கள் சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!!

    தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி

    இங்கொரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடகக் கொட்டகைக்குப் பிறகு மோகனாவும்-சண்முகமும் இங்கு தான் சந்திக்கிறார்கள்.

    சிங்கபுரம் மைனர் திருந்திய விஷயம் எல்லாம் நமக்குத் தான் தெரியும். சண்முகத்துக்கு தெரிந்ததாக படத்தில் சொல்லப்படவில்லை. நாவலில் எப்படி என்று தெரியவில்லை.

    சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?

    அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.

    ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.

    ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.

    இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.

    கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.

    அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான்.


    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
    பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
    அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது
    ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" எனும்போது வரும் நெகிழ்வு. முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.

    ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!

    நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை.
    என்று சொல்லிவிட்டு அழகாக சொல்லிவிட்டீர்கள்!

    அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும்.

    பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.

    ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.

    எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த associations. ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the naadhaswaram flawlessly



    Quote Originally Posted by முரளிஶ்ரீநிவாஸ்
    அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு
    சமாதானமே கிடையாது. ஒருதலைபட்ச முடிவுதான்.

    Permit me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.

    பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)

    மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).

    இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.

    இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.

    இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!

    அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
    "நீ சொன்னே..நான் கேட்கலை" என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.


    "பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.

    A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.

    நினைவுபடுத்தியதற்கு நன்றி திரு.முரளி.

    All BY PR
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •