Page 167 of 185 FirstFirst ... 67117157165166167168169177 ... LastLast
Results 1,661 to 1,670 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1661
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    என் தம்பி
    கருத்து !

    (பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி)

    குடும்பம் என்பது ஒரு மரத்தைப் போல. இலை, கிளை, மலர், காய், கனி, இவைகளோடு பார்க்கும்போது தான் மரத்தின் அழகையும், மதிப்பையும் நாம் உணருகிறோம். அதைப்போல, அண்ணன்-தம்பி, தாய்-தந்தை, இத்தனை உறவினர்களோடு ஒரு குடும்பத்தைப் பார்க்கும்போது தான் ஒற்றுமையின் சிறப்பை, ஒரு குடும்பமாக இருக்கும் மதிப்பை நாம் தெரிந்து கொள்ளுகிறோம். இலையில்லையேல், கிளையில்லை, கிளையில்லையேல் மலரில்லை, மலரில்லையேல் காய் இல்லை, கனியில்லை. அதைப்போல பாசத்தின் ஆதாரமத்திலே தான் ஒரு குடும்பத்தின் உயர்வே இருக்கிறது. காலமெனும் பூமியில் வளரும் இந்த குடும்ப மரத்தில் விதிச்சூறாவளி அடிக்கும்போது காயும், கனியுமாக இருந்த மரம் அசைகிறது-ஆடுகிறது. புயல் ஓய்ந்தபின் மீண்டும் பூத்து, காய்த்து சிரிக்கிறது.

    இந்த உண்மையின் உண்மையைச் சொல்லுகிறது என் தம்பியின் கதை.

    இதற்கு வெள்ளித்திரை விளக்கம் தரும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1662
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி - கம்பெனி பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1663
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி - கம்பெனி பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1664
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி விளம்பர நிழற்படங்கள் ... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து..





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1665
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி திரைப்படத்தைப் பற்றிய நமது முரளி சாரின் ஆய்வுப் பதிவுகள்...

    நாள் - 3rd January 2010, 12:18 AM
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post462046
    என் தம்பி - Part I

    தயாரிப்பு : சுஜாதா சினி ஆர்ட்ஸ்

    இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

    வெளியான நாள்: 07.06.1968

    நகரம் என்றும் சொல்ல முடியாமல் அதே சமயம் கிராமம் என்றும் இல்லாமல் உள்ள ஒரு நடுவாந்திர ஊர். அங்கே மிகப் பெரிய செல்வந்தர் முருகபூபதி. அவரின் மனைவி இறந்து விடவே இரண்டாம் திருமணம் திருமணம் செய்திருக்கிறார். மூத்த மனைவியின் மூலமாக ஒரு மகனும் இரண்டாவது மனைவி மூலமாக ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் அவருடைய வாரிசுகள். தவிர, கணவனை இழந்த விதவை தங்கையும் அவரது மகன் மற்றும் மகளும் அந்த வீட்டிலே வளர்கிறார்கள். தம்பி முறையாகும் அவரது சித்தப்பா மகனும், அவரது மகளும் பர்மாவிலிருந்து அகதிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். ஒரே மகள் உமா போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் மேல் மூத்த மகன் கண்ணன் உயிரையே வைத்திருக்கிறான். அந்த பெண்ணும் அப்படியே.

    எல்லா நல்ல குணங்களும் பொருந்திய கண்ணன் ஜமீன் விவகாரங்களையும் கணக்கு வழக்குகளையும் கவனித்துக் கொள்ள இளைய மகன் விஸ்வம் ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். வீட்டிலே வளரும் அத்தை மகள் ராதாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தம்பியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்ணன் அவனை திருத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஒன்றுமில்லை.

    இந்நிலையில் விஸ்வத்தின் செயல்பாடுகள் பொறுக்க முடியாமல் ஜமீந்தார் அவனது கைகளுக்கு பணமே போகாமல் செய்து விட ஒரு நாள் இரவில் தந்தையின் பீரோ சாவியை எடுத்து பணத்தை திருட முயற்சிக்கும் போது அவர் பார்த்து விட கடுமையான வாக்குவாதம் முற்றி விஸ்வம் தந்தைக்கு நேராக துப்பாக்கியை எடுத்து நீட்ட அது அவரது இதயத்தை பாதித்து நெஞ்சு வலி வந்து விடுகிறது.

    படுக்கையில் விழும் அவர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். வக்கீலை அழைத்து உயில்எழுதுகிறார். அதன்படி சொத்துகளை நிர்வகித்து வரும் பொறுப்பையும் மூத்த மகன் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறார். மறுக்கும் கண்ணனிடம் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள செய்யும் அவர் யாருக்கும் தெரியாத குடும்ப ரகசியம் ஒன்றை கண்ணனின் காதில் சொல்கிறார். உயில் விஷயம் தெரிந்து தந்தையோடு சண்டை போடும் விஸ்வதிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே முருகபூபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.

    தந்தையின் மறைவிற்கு பிறகு சொத்துக்களை நிர்வகித்து வரும் கண்ணன் தம்பியை திருத்தி விட முயற்சிக்கிறான். ஆனால் மேலும் விஸ்வத்தைப் பற்றி தவறான செய்திகளே வருகிறது. எஸ்டேட் பங்களாவில் வேலைக்கார பெண்ணிடம் பழகுவது பற்றி புகார்கள் வர, கண்ணன் அதைப் பற்றி விசாரிக்கிறான். அலட்சியமாக பதில் சொல்லும் தம்பியை பார்த்து நீ திருந்தவே மாட்டியா என்று கேட்டு போகும் அண்ணனின் குரல் விஸ்வத்தின் மனதில் எதிரொலிக்கிறது. மறு நாள் காலை அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. பக்திமானாக படியில் இறங்கும் விஸ்வம் அனைவரிடமும் திருந்தி விட்டேன் என்கிறான். கோவிலுக்கு போகிறான்.

    கண்ணனுக்கு பெரும் சந்தோஷம். அந்த நேரத்தில் கண்ணன் ராதா இவர்களுடன் வெளியே செல்லும் தங்கை உமா தண்ணீரில் தவறி விழுந்து விட, காப்பற்ற செல்லும் கண்ணனும் சிக்கிக் கொள்கிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்ற விவரத்தை அப்போதுதான் ராதா தெரிந்துக் கொள்கிறாள். குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் தேர்ச்சி பெற்ற கண்ணன் நீச்சல் பயிற்சி பெறாததன் காரணம் அவனுக்கு நீரில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி அவனது தந்தை நீச்சல் சொல்லி தரவில்லை என்ற விஷயத்தை கண்ணன் சொல்கிறான்.

    இந்நிலையில் விஸ்வம் ஒரு நாள் தங்கள் தந்தைக்கு ஒரு நினைவிடம் அமைப்பதற்கு பக்கத்திலுள்ள தீவில் இடம் பார்த்திருப்பதாகவும் அதை பார்க்க வர வேண்டும் என்று சொல்லி கண்ணனை அழைத்துப் போகிறான். மோட்டார் படகில் செல்லும் கண்ணன் படகு வேறு திசையில் பயணிப்பதை பார்த்து காரணம் கேட்க விஸ்வம் தன் சுயரூபத்தை காட்டுகிறான். சொத்து முழுவதும் கண்ணன் கையில் இருப்பதால் வாழ்நாள் முழுக்க கண்ணனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அது தன்னால் முடியாது,ஆகவே கண்ணனை ஒழித்து விட்டு தான் சொத்தை அடைய போவதாக சொல்கிறான். கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இந்த படகில் அழைத்து வந்து விட்டு பாதி வழியில் ஆற்றில் குதித்து விடுகிறான். வெகு வேகமாக ஓடும் மோட்டார் படகை சமாளிக்க் முடியாமல் கண்ணன் திணற, படகு ஒரு பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.

    வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க விஸ்வமும் அவர்களுடன் சேர்ந்து சோகமாக இருப்பது போல் நடிக்கிறான். குழந்தை உமா அண்ணனை காணாமல் படுத்த படுக்கையாகி விடுகிறாள். இதற்கிடையே இப்போது சொத்தின் ஒரே பராமரிப்பாளாரான தன் அத்தையிடம் சொத்துகளையும் தன் பெரியம்மா [கண்ணனின் அம்மா] நகைகளையும் கேட்டு ரகளை செய்யும் விஸ்வம் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக மிரட்டுகிறான். நகைகளைப் பற்றி தெரியாது என்று சொல்லும் அத்தை சொத்துகளை தர சம்மதிக்கிறாள். முன்பு தன் அண்ணனிடம் தன் மகள் ராதாவை இந்த வீட்டு மருமகளாக்குகிறேன் என்று சொன்ன வாக்குறுதியை நினைவுப்படுத்தி விஸ்வம் ராதாவை மணந்துக் கொள்கிறேன் என்கிறான். ராதாவிற்கும் அவள் அண்ணன் சபாபதிக்கும் இதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர்களது தாய் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறாள்.

    இந்த நேரத்தில் எஸ்டேட் வேலைக்காரன் ஒருவன் சபாபதியிடம் வந்து பக்கத்து கிராமத்தில் ஒரு நாடக குழு முகாமிட்டிருப்பதாகவும் அதில் கள்ளபார்ட் போடும் நடிகன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்கிறான். நாடகத்தை பார்க்க செல்லும் சபாபதி நாடக நடிகன் கந்தப்பாவை பார்த்து பிரமித்துப் போகிறான். காரணம் அச்சு அசல் அவன் கண்ணனைப் போலவே இருப்பதால். அவனிடம் சென்று விஷயங்களை விளக்கி கண்ணனாக நடிக்க சொல்ல அவன் முதலில் மறுக்கிறான். யாருக்கும் தெரியாமல் சபாபதி அவனை கூட்டிக் கொண்டு வந்து குழந்தையை காட்டவே, அந்த பெண்ணிற்காக நடிக்க ஒப்புக் கொள்கிறான்.

    தன்னை ஒருதலையாய் காதலிக்கும் பர்மா மாமாவின் மகளிடமிருந்து பூட்டி கிடக்கும் அவர்களின் ஒரு வீட்டு சாவியை வாங்கி அங்கே கந்தப்பாவை தங்க வைத்து சபாபதி அவனை கண்ணனாக மாற்ற பயிற்சி கொடுக்கிறான்.

    சொத்துகளை விஸ்வம் பெயருக்கே மாற்ற ஏற்பாடு செய்து அதை அனைவர் முன்னாலும் செய்ய போகும் நேரத்தில் கந்தப்பா, கண்ணனாக உள்ளே நுழைய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. விஸ்வம் மட்டும் அதிர்ச்சி அடைகிறான். அதை வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் கூட அவன் மனதில் குழப்பங்கள்.

    வந்திருப்பவன் கண்ணன் அல்ல என்ற சந்தேகத்தை விஸ்வம் வெளிப்படுத்தி பல பரிட்சைகளை வைக்க அவை அனைத்திலும் கண்ணன் வெற்றிப் பெறுகிறான். இறுதியாக சிறு வயதில் போட்ட வாள் சண்டையை நினைவுப் படுத்தி சண்டைக்கு அழைக்கும் தம்பியின் சவாலை ஏற்று ஜெயித்துக் காட்டும் கண்ணன் தன்னை கொல்ல, வாள் முனையில் விஷம் தடவியிருக்கிறான் தம்பி என்று தெரிந்ததும் துடித்துப் போகிறான்.

    நீ என் அண்ணன் இல்லை. பணம் தருகிறேன், வீட்டை விட்டு போய் விடு என்று சொல்லும் தம்பியிடம் பேரம் பேசும் கண்ணன் அவன் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கிறான். ஆனால் பேரம் பேசும் போது அதை கேட்டு விடும் அத்தை அவனை தவறாக புரிந்துக் கொண்டு விடுகிறாள். சபாபதியும் உண்மையை சொல்ல, தான் கந்தப்பா அல்ல கண்ணன்தான் என்ற உண்மையை கண்ணன் சொல்ல யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆற்றில் விழுந்த தன்னை ஒரு நாடக குழு காப்பாற்றியதாகவும், அதன் மூலமாகதான் தான் உயிர் பிழைத்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே வேறு வேடத்தில் வந்ததாகவும் கண்ணன் சொல்வது எடுபடாமல் போகிறது. அவனை வீட்டை விட்டு துரத்துகிறார்கள். அப்போது இறக்கும் தருவாயில் தன் தந்தை தன்னிடம் சொன்ன ரகசியம் நினைவிற்கு வருகிறது. மீண்டும் வீட்டுக்குள் செல்லும் அவன் பாரம்பரியமான குடும்ப நகைகளை தந்தை எங்கே வைத்திருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என்றும் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தான் கண்ணன் என்பதை நிரூபிப்பதாக சொல்லி விட்டு செல்கிறான். இதை கேட்டு அவன் பின்னே செல்லும் தம்பி, அண்ணன் நகைகளை எடுத்தவுடன் அதை பிடுங்கி கொண்டு அண்ணனை கொல்ல முயற்சிக்க, அந்த முயற்சியில் அவன் இயந்திரத்திற்கு அடியில் மாட்டிக் கொள்ள, அவனை அண்ணன் காப்பாற்றுகிறான். அவனின் நல்ல மனது புரிந்து தம்பி மனம் மாற, எல்லாம் இனிதே முடிவடைக்கிறது.

    ....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1666
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி திரைப்படத்தைப் பற்றிய நமது முரளி சாரின் ஆய்வுப் பதிவுகள்...

    நாள் 3rd January 2010, 12:29 AM
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post462047
    என் தம்பி - Part II

    நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதற்கு முன் என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம். 1964 முதல் 1974 வரை எந்த சிவாஜி படத்தையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். காரணம் உடல் மெலிந்து ஸ்லிம் -மாக இளைமையான சிக்கென்ற நடிகர் திலகத்தை பார்ப்பதற்கே போகலாம் என்பான். ஒரு பிரபல ஒளிப்பதிவாளர் சொன்னதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழ் சினிமா நடிகர்களிலேயே காமிரா மூலமாக எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே முகம் நடிகர் திலகத்துடையதுதான் என்றார் அவர். என் தம்பி பார்க்கும் எவரும் இந்த இரண்டு கருத்துகளையும் ஆமோதிப்பார்.

    நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவருக்கு இந்த ரோல் a stroll in the park. அவ்வளவு இலகுவாக கையாண்டிருப்பார். சின்ன விஷயம் என்றாலும் அதை உன்னிப்பாக உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடியவர் என்பதற்கு இந்த படமும் ஒரு சான்று. முதல் பகுதியில் ஒரு செல்வந்தர் வீட்டு மகன், நடுவில் நாடகக்காரன் பிறகு மாளிகையில் நடிக்க வந்தவன், இறுதியில் உண்மையான கண்ணனாக வெளிப்படுவது இப்படி ஒரே கேரக்டர் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தும்.

    தங்கை பாசத்தை வெளிப்படுத்த அவருக்கு சொல்லியா தர வேண்டும்? போலியோ பாதித்த ரோஜாரமணியின் மேல் கொண்ட பாசம் எந்த இடத்திலும் மெலோடிராமாவாக போகாமல் கச்சிதமாக செய்திருப்பார். முத்து நகையே பாடலில் கண்ணழகையும் கையழகையும் முகத்தில் தவழும் ஆனந்த புன்னகையோடு பாடி விட்டு அடுத்த வரியில் காலழகு பார்த்தால் என்று காலைப் பார்த்து விட்டு சட்டென்று புன்னகை மறைந்து கண்ணில் நீர் கட்டி நிற்க [இது ஒரே ஷாட்-ல் வரும்] பார்ப்பது, அந்த கண்ணீர் கன்னத்தில் வழியாமல் தன்னை சமாளித்துக் கொண்டு அடுத்த வரியை பாடுவது என்பது அந்த யுக கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். அது போல் படத்தில் இரண்டு டூயட்கள். முதல் பாடலில் [அடியே நேற்று பிறந்தவள்] aristocratic behaviour என்றால் இரண்டாவது பாடலில் [அய்யையா மெல்ல தட்டு] வெஸ்டேர்ன் டான்ஸ் தெரியாத வேஷம் போட வந்த ஒரு நாடக நடிகன் எப்படி தடுமாறுவான் என்பதை அசலாக செய்திருப்பார்.

    இந்த படத்தில் ஸ்டைல்-க்கு ஒரு புதிய பாடமே நடத்தியிருப்பார். இரவு வெகு நேரம் கழித்து வரும் தம்பியிடம் விசாரிக்கும் போது White & White போட்டு அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஸ்டைல் சூப்பர் [இந்த போஸைதான் மறக்க முடியுமா டி.வி. நிகழ்ச்சியில் உபயோகித்தார்கள்].கந்தப்பா கண்ணனாக மாறி பங்களாவில் நுழையும் காட்சி.வாசலில் வந்து நிற்கும் ஸ்டைல் அதை தொடர்ந்து உள்ளே நடந்து வரும் ஸ்டைல் இவை அனைத்திற்கும் தியேட்டரே அதிரும். வெகு நாட்களுக்கு பின் அவர் கத்தி சண்டை போட்ட படம். இதில் முதலில் கத்தி பிடித்து நிற்பதிலாகட்டும் பின் படிகளில் ஏறிச் சென்று இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு ஸ்டெப் தாவி தாவி கத்தியை வீசும் போது தியேட்டரே ரகளையாய் இருக்கும்.

    தம்பியின் மீது காட்டும் பாசமும் பரிவெல்லாம் அவருக்கு ப்பூ.நாடக நடிகனாக வரும் போது லைவ்லி -யாக செய்திருப்பார். நாடக மேடையின் மீது அவருக்கு இருந்த பக்தி அவரது வசனங்களிலும் உடல் மொழியிலும் வெளிப்படும். [சங்கர தாஸ் சுவாமிகள் சொன்ன வசனங்களெல்லாம் ரத்தத்தில் ஊறியிருக்கு]. அவருக்கு இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்ச்சிக்கும் இந்த நாடக கலைஞன் ரோல் மிகவும் உதவி செய்தது.

    தெற்கத்தி கள்ளனடா பாடலுக்கு அவர் ஆடும் நடனம் unbelievable. தேர்ந்த நடனக் கலைஞரான ராஜசுலோச்சனாவுடன் போட்டி போட்டு ஆடும் அந்த ஆட்டம் ஒரு நாடக கூத்தாடியை கண் முன்னே கொண்டு நிறுத்தும்.

    சரோஜாதேவி வருவார், வசனம் பேசுவார், பாடலுக்கு வாய் அசைப்பார். பாலாஜி தம்பி. பொதுவாகவே பாலாஜியின் உடல் மொழியில் தென்படும் திமிர் (இல்லை) மெஜஸ்டிக் லுக், பணக்கார திமிரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு நன்றாக சூட் ஆனது.

    நாகேஷ் இந்த படத்தில் முழு நீள ரோல். கந்தப்பாவை கண்ணனாக மாற்றும் போதும் சினிமா பாட்டு பாடியே தன்னைக் கொல்லும் மாமா பெண்ணிடம் சிக்கி தவிக்கும் போதும் ரசனையாக பண்ணியிருப்பார். பர்மா அகதி அப்பா மகளாக வி.கே.ஆர்., மாதவி. எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணிக் குரலில் மாதவி பாடும் பிரபல பாடல்களின் இரண்டடிகள் எல்லாம் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கும். மேஜர், பண்டரிபாய், சுந்தரி பாய், நாகையா போன்ற பாலாஜி படத்தின் ஆஸ்தான நடிகர்கள் எல்லோரும் இதிலும் உண்டு. பக்த பிரகலாதா மூலம் பிரபலமான பேபி ரோஜாரமணி போலியோ தங்கையாக வருவார். [இந்த பேபி குமாரியான போது பாலாஜிதான் அவரது என் மகன் படத்தில் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தார்].

    .....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1667
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி திரைப்படத்தைப் பற்றிய நமது முரளி சாரின் ஆய்வுப் பதிவுகள்...

    நாள் 3rd January 2010, 12:42 AM
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post462049
    என் தம்பி - Part III

    தங்கை என்ற action பரீட்சை எழுதி பாஸ் செய்த பிறகு நடிகர் திலகத்தை வைத்து அடுத்த ஸ்டெப் எடுத்தார் பாலாஜி. அதுதான் என் தம்பி. மீண்டும் தெலுங்கு படம். ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். [இந்த ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் உரிமையாளர் வி.பி. ராஜேந்திர பிரசாத் அவர்கள்தான் பின்னாளில் நடிகர் திலகத்தை வைத்து எங்கள் தங்க ராஜா, உத்தமன் மற்றும் பட்டாக்கத்தி பைரவன் படங்களை எடுத்தவர். அவரது மகன் ஜெகபதி பாபு இன்று தெலுங்கில் ஹீரோ].

    முந்தைய படத்திலிருந்து நாயகியும் வசனகர்த்தாவும் இதில் மாறினார்கள். K.R. விஜயாவிற்கு பதிலாக சரோஜாதேவி. ஆரூர்தாஸிற்கு பதிலாக ஏ.எல்.நாராயணன்.

    பாலாஜியின் அபிமான நடிகையாய் இருந்தவர் சரோஜாதேவி. அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பி இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். புதிய பறவைக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவெளியில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்தார் அபிநய சரஸ்வதி. அவரின் கல்யாணத்திற்கு பிறகு அவர் நடிகர் திலகத்தோடு மீண்டும் இணைந்ததும் இந்தப்படத்தில்தான்.

    ஆலகாலா என்று பாலாஜியால் அன்போடு அழைக்கப்பட்டவர் ஏ.எல். நாராயணன். வசனம் எழுதுவதில் இவர் வாலி. அதாவது எதுகை மோனை தூக்கலாக இருக்கும். இந்த படத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் அனைத்து பாலாஜி படங்களுக்கும் எழுதினார். 1984 -ல் வெளியான விதி படத்தின் மூலமாக மீண்டும் ஆரூர்தாஸ் பாலாஜி காம்பில் நுழைந்தார்.

    படத்தில் சண்டை காட்சிகளே இல்லாமல் ஆனால் படம் முழுக்க ஒரு action மூட் என்று சொல்வோமே, அதை அதுவும் ஒரு குடும்பக் கதையில் ஏ.சி.டி. செவ்வனே நிலை நிறுத்தியிருந்தார். படத்தில் வரும் கத்தி சண்டை, பிறகு இறுதி காட்சியில் இரண்டு மூன்று punches, இவை மட்டுமேதான் இருக்கும். எந்த இடத்திலும் படம் போரடிக்காமல் போகும். கிளைமாக்ஸ் காட்சியில் பரம்பரை நகைகள் ஒரு பாழடைந்த கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அந்த லாஜிக் சறுக்கலை [தெலுங்கு மூலம்] மறந்து விட்டால் படத்தை ரசிக்கலாம்.

    கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் பாடல்கள் பெரிய ஹிட்.

    1. முத்து நகையே - டி.எம்.எஸ் - இரண்டு முறை வரும்.

    முதலில் சந்தோஷமாக இறுதியில் சோகமாக. மிகவும் ஹிட்டான பாடல்.

    2. அடியே நேற்று பிறந்தவள் நீயே - டி.எம்.எஸ்.- சுசீலா டூயட்.

    மெலோடியில் எம்.எஸ்.வி. பின்னியிருப்பார். அதிலும் வாடைக் காற்றில் வெளியில் நின்றால் போர்வை போல தழுவிக் கொண்டு என்ற வரிகள் சுகம்.

    3. தெற்கத்தி கள்ளனடா - சீர்காழி பாடும் நாடக மேடை பாடல்.

    தென்னாட்டு சிங்கம்டா சிவாஜி கணேசனடா என்ற வரிகளுக்காகவே ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்தார்கள், கேட்டார்கள்.

    4. அய்யையா மெல்ல தட்டு - டி.எம்.எஸ். சுசீலா டூயட். Western -Folk இரண்டையும் மன்னர் அழகாக மிக்ஸ் செய்திருப்பார்.

    வெஸ்டேர்ன் மற்றும் டப்பாங்குத்து இரண்டையும் நடிகர் திலகம் மாறி மாறி ஆடும் போது இங்கே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்.

    5. தட்டட்டும் கை தழுவட்டும் - சுசீலா. சரோஜாதேவியின் கூந்தலில் உள்ள பூவைப் சாட்டையின் மூலமாக பறிக்கச் சொல்லும் பரிட்சையின் போது வரும் பாடல். ஒரு பாஸ்ட் பீட்.

    சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் [மிட்லண்ட்,அகஸ்தியா,ராக்ஸி,ராம்] 8 வாரங்களை கடந்து ஓடிய இந்த படம் அதிக பட்சமாக மதுரை சென்ட்ரல் மற்றும் சேலம் சாந்தியில் 12 வாரங்கள் [84 நாட்கள்] ஓடியது. மதுரையிலும் சேலத்திலும் ரிலீஸ் ஆன தியேட்டரிலிருந்து ஷிப்ட் ஆன அரங்குகளில் 100 நாட்களை கடந்தது. வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு எல்லாம் நிறைந்த லாபத்தைக் கொடுத்தது. மறு வெளியீடுகளில் சக்கைப் போடு போட்ட படம் இது.

    இதன் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசும்போது ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். முன்பு மதுரையில் third party ரிலீஸ் என்று ஒன்று இருந்தது. ஒருவர் விநியோகஸ்தராகவோ அரங்க உரிமையாளராகவோ இல்லாவிடினும் படவிநியோகத்தில் பங்கு கொள்ளும் முறை இது. விநியோகஸ்தரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட படத்தின் பிரதியை சில குறிப்பிட்ட நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து ஒரு தியேட்டரில் ரிலீஸ் செய்து வரும் லாபத்தை எடுத்துக் கொள்வது. இதில் சிக்கல் என்னவென்றால் விநியோகஸ்தருக்கு வாடகை, தியேட்டருக்கு வாடகை, கேளிக்கை வரி அதை தவிர போஸ்டர் பேப்பர் விளம்பரம். இந்த செலவுகள் அனைத்தும் போக வசூல் வந்தால் லாபம். இல்லை போனது போனதுதான். இந்த third party distribution எல்லோருக்கும் கொடுக்க மாட்டார்கள். விநியோகஸ்தருக்கு நன்கு தெரிந்த ஆட்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இனி விஷயத்திற்கு வருகிறேன்.

    1982 -ம் ஆண்டு. எனது நண்பனின் அண்ணன் விநியோக துறையில் இருந்தார். அதை வைத்து எங்கள் நண்பர்கள் ஒரு நான்கு பேர் சேர்ந்து இது போல் அவ்வப்போது third party distribution செய்து வந்தார்கள். ஒரு பெரிய படம் செய்ய வேண்டும் என்று ஆசை. சேது பிலிம்ஸ் பெரிய கம்பெனி. அவர்களிடம் சென்று பேசினார்கள். சிவாஜி படம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணம். மதுரையில் உள்ள அலங்கார் திரையரங்கு ஒரு வார காலம் ப்ரீ-யாக இருந்தது. இவர்கள் விநியோகஸ்தரிடம் தொகையும் பேசி விட்டார்கள். ஆனால் என்ன படம் என்பது முடிவாகவில்லை. நண்பர்கள் ராஜா வேண்டும் எனக் கேட்கிறார்கள். விநியோகஸ்தரோ அதை தவிர வேறு எந்த படம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி என் தம்பி பற்றி சொல்லுகிறார்.[பாலாஜி படம் எல்லாம் அவர்கள்தான் Distribution. ராஜா எப்போது வெளியிட்டாலும் வசூல் அள்ளும் என்பதால் வெளி ஆட்களுக்கு தர மாட்டேன் என்கிறார்]. மூன்று பேருக்கு என் தம்பி நன்றாக போகும் என்பது எண்ணம். நான்காவது நண்பருக்கு சந்தேகம். ஆகவே தடுத்து விட்டார்.

    இவர்கள் வேண்டாம் என்று சொன்னவுடன் வேறு ஒருவர் விநியோகஸ்தரிடம் பேசி படத்தை வாங்கி அதே தேதியில் அதே அலங்கார் தியேட்டரில் ஒரு வாரத்திற்கு வெளியிட்டார். என் தம்பி படம் வெளியான வெள்ளிகிழமை மாட்னி முதல் கடைசி நாளான வியாழன் இரவு காட்சி வரை மொத்தம் 23 காட்சிகளும் ஹவுஸ் புல்.[தினசரி 3,சனி ஞாயிறு 4 காட்சிகள். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள்]. எல்லா செலவுகளும் போக பத்தாயிரத்திற்கு மேல் லாபம். 27 வருடங்களுக்கு முன் மிக பெரிய தொகை இது. நண்பர்களால் வெகு காலத்திற்கு இந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. எப்போது மறு வெளியீடு கண்டாலும் வசூலை குவிக்கும் படம் என் தம்பி என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். படத்தை நடிகர் திலகதிற்காகவே பார்க்கலாம்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1668
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி - முரளி சாரின் பதிவிற்கு சகோதரி சாரதா அவர்களின் பதில் பதிவு.
    நாள் - 3rd January 2010, 06:48 PM

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post462153

    டியர் முரளி,

    'என் தம்பி' திரைப்பட திறனாய்வு மிக, மிக அருமை. பலமுறை பார்த்த படமாயினும், உங்கள் எழுத்து வடிவில் பார்த்தபோது புதிய பரிமாணத்தில் பார்க்க முடிந்தது. நடிகர்திலகம் ஸ்டைல் ராஜாங்கம் நடத்திய படங்களில் இதுவும் ஒன்று. ஒரு சின்ன குறை. பாடல்களைப்பற்றி மிகச்சுருக்கமாக முடித்துக் கொண்டீர்கள். இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.
    'தட்டட்டும் கை தழுவட்டும்
    திட்டத்தை வெல்லட்டும்
    நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ... ஏனோ... ஏனோ...'
    பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதிலும் அதில் ஒலிக்கும் படு வேகமான பாங்கோஸ், மன்னரின் முத்திரை.

    இந்தப்படத்தில், நாடகத்தில் வரும் 'நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே' பாடல் மெட்டும், இதையடுத்து வெளியான தில்லானா'வில் மனோரமாவின் நாடகப்பாடல் மெட்டும் ஒரே மெட்டாக அமைந்தது எப்படி என்பதுதான் ஆச்சரியம். இத்தனைக்கும் வெவ்வேறு இசையமைப்பாளரகள். வெவ்வேறு இயக்குனர்கள்..?.

    ரோஜாரமணி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அவர் அருகில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. ஏராளமான நட்சத்திரங்கள் தென்பட்டனர். அப்போது, இருக்கைகளின் எண்களைப்பார்த்து அமர வைத்துக்கொண்டிருந்தவரால் அழைத்து வரப்பட்ட ரோஜாரமணி, எங்கே அமரப்போகிறாரோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது எனது வலப்புற இருக்கையில் வந்து அமர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் (அறிமுகப்படுத்திக்கொள்ள என்ன இருக்கு) , ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்துவங்கி விட்டார்.

    நடிகர்திலகம் பற்றி அதிகம் பேசினார். அவரைப்பற்றிக்குறிப்பிட்டபோதெல்லாம் ஒன்று கண்கலங்கினார், அல்லது உணர்ச்சி வசப்பட்டார். 'ஒரு காலத்தில் நான் இல்லாத சிவாஜி அங்கிள் படமே கிடையாது. அப்படி எல்லாப்படத்திலும் நான் இருந்திருக்கிறேன்' என்றார். அவர் நடித்த பல படங்களைப்பற்றி ஒவ்வொன்ன்றாக நினைவூட்டினேன். ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாகப் பேசினார். 'சிவாஜி அங்கிள் இல்லைங்கிறதை நினைச்சுப் பார்க்கவே முடியலை' என்று கலங்கினார். மேடையில் நிகழ்ச்சி பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. இருவருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை. 'யார் இந்தப்பொம்பளை, ப்ரோக்ராம் பார்க்க விடாமல் இடைஞ்சலாக?' என்று அவர் நினைக்கவில்லை. மிகவும் ஆர்வமாகப்பேசினார். 'ஸாரி, ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?' என்று (சும்மா சம்பிரதாயத்துக்காகக்) கேட்டேன். 'நோ.. நோ.. அதெல்லாமில்லை. நீங்க பேசுங்க' என்றார். எங்கள் உரையாடல் மற்றவர்களுக்கு இடஞ்சலாக இருக்குமோ என்று நினைத்த நேரங்களில், குனிந்து என் காதோடு பேசினாரே தவிர பேச்சை நிறுத்தவில்லை.

    எனது பேவரிட் பாடலான 'அன்னமிட்ட கைகளுக்கு' (இரு மலர்கள்) பாட்டைக் குறிப்பிட்டபோது, ஒரு சின்னக்குழந்தையின் குதூகலத்தோடு என் கையைப் பிடித்துக் கொண்டவர், 'ஐயோ, அது எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுங்க' என்றார் (அச்சமயத்தில் தருணே வளர்ந்த பையனாக இருந்திருப்பான்). நடிகர்திலகத்தின் படம அல்லாது நாங்கள் பேசிய ஒரே வெளிப்படம் 'வயசுப்பொண்ணு' மட்டுமே.

    போகும்போது, அவருடைய போன் நம்பரைத் தந்து 'ஒரு நாளைக்கு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க' என்றார். என்னால் போக முடியவில்லை. சமயம் வாய்க்காதது ஒருபுறம் என்றால், நாங்கள் சந்தித்தால் பேச வேண்டிவற்றை ஏற்கெனவே பேசிவிட்டோம் என்பது இன்னொரு காரணம். வீட்டுக்கு அழைப்பார் என்று தெரிந்தால், அத்தனை விஷயங்களையும் அரங்கிலேயே பேசியிருக்க மாட்டேன். ரோஜாரமணியை சந்தித்து உரையாடியது என்னால் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

    முரளி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘Third Party Distribution’ பற்றிய விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளன. இது எப்படி?. சென்னை காஸினோ சந்திலுள்ள 'மீரான் சாகிப் தெரு' விநியோகஸ்தர்கள் போலவா?.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1669
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி பாடல் காட்சிகள்

    முத்து நகையே



    அடியே நேற்றுப் பிறந்தவள்



    ஐயையா மெல்லத் தட்டு



    தட்டட்டும் கை தழுவட்டும்



    முத்து நகையே சோகம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post
  20. #1670
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என் தம்பி பாடல்களின் விவரங்கள்

    1. முத்து நகையே உன்னை நானறிவேன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    2. அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
    3. தெற்கத்திக் கள்ளனடா - சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
    3. ஐயையா மெல்லத் தட்டு - பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
    4. தட்டட்டும் கை தழுவட்டும் - பி.சுசீலா
    5. முத்து நகையே - சோகம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •