Page 164 of 185 FirstFirst ... 64114154162163164165166174 ... LastLast
Results 1,631 to 1,640 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1631
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    117. Iru Malargal இரு மலர்கள்

    தணிக்கை - 27.10.1967
    வெளியீடு - 01.11.1967
    தயாரிப்பு - மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், நாகையா, மனோரமா, பேபி ரோஜா ரமணி, மாதவி மற்றும் பலர்

    கதை டைரக்ஷன் - ஏ.சி.திருலோக்சந்தர், எம்.ஏ.
    வசனம் - ஆரூர்தாஸ்
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - ஆர்.கோவர்த்தன்
    ஒலிப்பதிவு பாடல்கள் அண்ட் ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.
    ஒலிப்பதிவு வசனம் - எஸ்.சி. காந்தி, என். ரகுநாதன் - ஜெமினி
    பாடல்கள் - வாலி
    ஒளிப்பதிவு - தம்பு
    ஆபரேடிவ் காமிராமேன் - கே.எஸ்.பாஸ்கர ராவ்
    எடிட்டிங் - பி.கந்தசாமி
    ஒப்பனை - டி.தனக்கோடி, ரங்கசாமி, ராமசாமி, எம்.சி.மாணிக்கம்
    உடைகள் - பி.ராமகிருஷ்ணன், தம்மு, கே.கமால்
    நடனம் - ஏ.கே.சோப்ரா, பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
    புரோகிராம் - ஆர்.ரமணி - ஜெமினி
    செட்டிங்ஸ் - பி.ஆர். நாராயணசாமி, ஏ.ராமானுஜம், வி.பி.ஆர்.மூர்த்தி, டி.ஆர்.சடகோபன்
    சீனிக் எஃபெக்ட் - ஆர்.லோகநாதன், ஆர்.செல்வராஜ்
    டைரக்ஷன உதவி - டி.எஸ்.பாலன்
    எடிட்டிங் உதவி - சிவம்
    கலை - ஏ.பாலு,
    ஸ்டில்ஸ் - சாரதி
    ஸ்டூடியோ அண்ட் லாபரட்டரி - ஜெமினி
    உதவி டைரக்ஷன் - நாஞ்சில் எஸ்.ராஜேந்திரன், ப.புகழேந்தி

    கதை - பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி

    "கடவுள் நல்லவரா, கெட்டவரா?"
    "நல்லவர்தான்!"
    "சிலருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிற அந்தக் கடவுள் சிலருக்கு ஏன் துக்கத்தைக் கொடுக்கணும்?"

    "கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே
    ..........
    அலையில் மிதந்த மலர் கண்டு
    அதன் மேல் கருணை மனம் கொண்டு
    தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
    தானே அதனைச் சேர்த்துக் கொண்டான்!"

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1632
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இருமலர்கள் - பாடல்களின் விவரங்கள்

    1. மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன்
    2. மன்னிக்க வேண்டுகிறேன் - வாலி - பி.சுசீலா டி.எம்.சௌந்தர்ராஜன்,
    3. வெள்ளி மணி ஓசையிலே - வாலி - பி.சுசீலா
    4. மகராஜா ஒரு மகராணி - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன், - பாட்டுப்புத்தகத்தில் குறிப்பிடவில்லை, இசைத் தட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷோபா, சதன்
    5. கடவுள் தந்த இருமலர்கள் - வாலி - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
    6. மன்னிக்க வேண்டுகிறேன் - வாலி - பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
    7. அன்னமிட்ட கைகளுக்கு - வாலி - பி.சுசீலா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1633
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...

    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    இரு மலர்கள்

    [1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்

    சாதனைப் பொன்னேடுகள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா கதிர் : நவம்பர் 1967

    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.2.1968

    சிறப்பு நிழற்படம் : பொம்மை : 1967

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1634
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரு மலர்கள் - நமது மய்ய நண்பர்களின் கருத்துப் பரிமாற்றங்கள்.

    வாசு சாரின் பதிவு

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1234210

    ரவி சார்!

    தந்தை கருவின் கரு தொடரில் அம்சமாக நடிகர் திலகத்தின் 'இரு மலர்கள்' படப் பாடலான 'மகராஜா' பாடலைப் போட்டு தூக்கத்தைக் கெடுத்ததற்கு உங்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?

    http://i.ytimg.com/vi/RpgUkozdBpI/hqdefault.jpg

    எனக்கும், முரளி சாருக்கும் உயிரோடு கலந்த பாட்டு. நிச்சயம் ரசிக வேந்தர் சண்டைக்கு வருவார். அவருக்கும் இது உயிர்தான். அப்புறம் கோ வருவார். இப்படிப் போய்க் கொண்டேதான் இருக்கும்.

    எவ்வளவு அழகு நடிகர் திலகம்! மன்மதனுக்கெல்லாம் மன்மதன் அவர்.

    'ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா' வை

    மகள் ரோஜாரமணி இவரிடம் கேட்டு கோரிக்கை வைக்க,

    வாயைப் பிளந்தவாறே 'டக்'கென்று மனைவி பக்கம் திரும்பி 'அதான் சொல்றாளே...அப்புறம் என்ன? ரெடியாகிறது'....என்று ராணியம்மாவை மனது வைக்க கைஜாடை காட்டி அழைத்து,

    'ஆகட்டும் தாயே! அது போல் நீங்கள் நினைத்தை முடிப்பேன் மனம் போல'

    என்று மகளின் கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் அடிபணிந்து,

    அப்படியே மனைவியை அணைத்து, ஓரக்கண்களால் 'தன்னம்பிக்கை'யை கண்களில் காட்டி, பெருமிதம் பொங்க, ஆண்மை நிறைந்த சிங்கமாய் கட்டிலுக்கு உள்ளுக்குள் ரெடியாவதை, அடுத்த தொட்டிலுக்கு மனைவியை ரெடியாகச் சொல்வதை மறைமுகமாக இவர் காட்டும் தோரணை இருக்கிறதே! ஒரு சில வினாடிகளே! அந்தக் கண்கள்தான் எப்படியெல்லாம் விரிந்து சுருங்கி ஜாலங்கள் புரிகின்றன! அந்த புருவங்கள்தான் என்ன மாதிரி ஏறி இறங்குகின்றன!

    ரவி! அப்படியே உங்களை.... ஆ....நற... நற.
    முரளி சார்
    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1234284
    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

    கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.

    வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.

    வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    அன்புடன்

    வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1635
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1636
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளிகள்
    மாதவிப் பொன்மயிலாள்

    மன்னிக்க வேண்டுகிறேன்

    மகராஜா ஒரு மகராணி

    அன்னமிட்ட கைகளுக்கு

    வெள்ளி மணி ஓசையிலே

    கடவுள் தந்த இரு மலர்கள்

    மன்னிக்க வேண்டுகிறேன் - சோகம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russellmai thanked for this post
  14. #1637
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரு மலர்கள் - சிறப்புச் செய்திகள்

    1. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.

    2. பாடல்களைப் பொறுத்த வரையில், மகராஜா ஒரு மகராணி பாடலை, ரோஜா ரமணிக்காக பாடியவர் ஷோபா அவர்கள். பின்னாளில் ஷோபா சேகர் என பாடல்களைப் பாடியவர். நடிகர் விஜய் அவர்களின் தாயார்.

    3. மாதவிப் பொன்மயிலாள் பாடல், படம் வெளியான கால கட்டத்தில், பல கல்லூரி மாணவிகள் தங்கள் கல்லூரி ஆண்டு விழாக்களில் நடனமாடியது மிகவும் பிரபலமான அப்பாடல் எந்த அளவிற்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு சான்று.

    4. கரகரப்ரியா ராகத்திற்கு மெல்லிசை மன்னரின் இப்பாடலைத் தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள்.

    5. விவிதபாரதி தொடங்கிய புதிதில், தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் இடையே சினிமா கேள்வி பதில் பற்றிய புதிர் நிகழ்ச்சி இடம் பெறும். அதில் ஒரு நிகழ்ச்சியில், நெற்றியை மூன்றாம் பிறையை ஒப்பிட்டு எழுதிய பாடல் எது எனக் கேட்கப்பட்ட போது பெரும்பாலானோர் எழுதிய சரியான விடை மாதவிப்பொன் மயிலாள் பாடலே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1638
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    118. Thirumal Perumai திருமால் பெருமை

    தணிக்கை - 08.02.1968
    வெளியீடு - 16.02.1968

    தயாரிப்பு - திரு வெங்கடேஸ்வரா மூவீஸ்

    நடிக நடிகையர் -
    நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, கே.ஆர்.விஜயா, சௌகார் ஜானகி, ராஜசுலோசனா, மனோரமா, ஜி.சகுந்தலா, டி.பி.முத்துலக்ஷ்மி, கே.ஆர்.தேவகி, எம்.எல்.பானுமதி, குட்டி பத்மினி, எம்.என்.நம்பியார், ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், சிவகுமார், எஸ்.ராமராவ், ஏ.கருணாநிதி, பி.டி.சம்பந்தம், மாஸ்டர் பிரபாகரன், மாஸ்டர் காதர், எஸ்.என்.லக்ஷ்மி, புஷ்பமாலா, ஷண்முகசுந்தரி, மற்றும் பலர்.

    நடனம் - குமாரி சரளா

    பின்னணி பாடியவர்கள் -
    டி.எம்.சௌந்திர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, மாஸ்டர் மகாராஜன், சைதை நடராஜன் - நாதஸ்வரம்.

    மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, பத்மனாபன், ராமசாமி, தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி, ராமு

    ஆடை அலங்காரம் - ஸி.கே.ராஜமாணிக்கம்-தம்பு

    ஸ்டில்ஸ் - முருகப்பன் - எம்.ஆர்.பிரதர்ஸ்
    விளம்பர நிர்வாகம் - எலிகண்ட்
    விளம்பரம் - ஆஸ்பி லித்தோ ஒர்க்ஸ்
    டிசைன்ஸ் - பக்தா
    டைடில் கார்ட்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்
    குதிரைச் சவாரி ஸ்டண்ட் அமைப்பு - சாமிநாதன் - வெங்கடேசன்

    புரொடக்ஷன் நிர்வாகம் - ஓ.என்.நாராயணசாமி, எஸ்.வி.ராஜகோபால்

    ஆபீஸ் நிர்வாகம் - எம்.கே.எஸ். மணி

    ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்

    ஸ்டூடியோ நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

    ஆபரேடிவ் காமிராமேன் - என்.கார்த்திகேயன், ஏ.பி.ராமானுஜம்

    ஒலிப்பதிவு - டி.சிவானந்தம்

    பிரிண்டட் அண்டு ப்ராஸ்ஸடு அட் ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்ரி, சென்னை-6.

    பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
    பிரத்தியேகப் பாடல்கள் - திவ்விய பிரபந்தப் பாசுரங்கள், பாரதியார் பாடல்

    நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்

    எடிட்டிங் - ராஜன், டி.ஆர்.நடராஜன்

    கலை - கங்கா

    ஒலிப்பதிவு டைரக்டர் - டி.எஸ்.ரங்கசாமி

    ஒளிப்பதிவு டைரக்டர் - W.R.சுப்பா ராவ்

    சங்கீதம் - திரை இசைத் திலகம் - கே.வி.மகாதேவன், உதவி - புகழேந்தி

    உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர்.தசரதன், எம்.கருப்பையன், தஞ்சை மதி

    அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்

    திரைக்கதை வசனம் டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன்
    Last edited by RAGHAVENDRA; 31st July 2015 at 05:05 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1639
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருமால் பெருமை - காணொளிகள்

    ஸ்ரீ ஹரிஹரி கோகுல ரமணா

    பல்லாண்டு பல்லாண்டு

    Last edited by RAGHAVENDRA; 31st July 2015 at 05:09 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post
  20. #1640
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருமால் பெருமை - காணொளிகள்

    கோபியர் கொஞ்சும் ரமணா

    திருமால் பெருமைக்கு நிகரேது

    Last edited by RAGHAVENDRA; 31st July 2015 at 05:10 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •