Page 163 of 185 FirstFirst ... 63113153161162163164165173 ... LastLast
Results 1,621 to 1,630 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1621
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    பம்மலாரின் ஆவணப்பொக்கிஷத்திலிருந்து





    முதல் வெளியீட்டு விளம்பரங்கள்





    'பேசும் படம்' அட்டைப்பட விளம்பரம் : வெள்ளிவிழா மலர் ஆகஸ்ட் 1967



    அய்யன் சிவாஜி அப்பர் ஆகிறார்..... : பொம்மை : ஆகஸ்ட் 1967






    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1622
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    பாடல்களின் விவரங்கள்



    1. கலைமகள் துணைகொணடு - கண்ணதாசன - பி.சுசீலா கோரஸ்
    2. உலகெல்லாம் உணர்ந்தற்கரியான் - பெரிய புராணச் செய்யுள் - டி.ம்.சௌந்தர்ராஜன்
    3. ஆத்து வெள்ளம் காத்திருக்கு - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், எல்.ஆர்.ஈஸ்வரி கோரஸ்
    4. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி - கண்ணதாசன் - சீர்காழி கோவிந்தராஜன்
    5. பித்தா பிறைசூடி - சுந்தரர் தேவாரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    6. சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    7. காதலாகிக் கசிந்து - திருஞானசம்பந்தர் தேவாரம் - மாஸ்டர் டி.எல்.மகராஜன்
    8. மாசில் வீணையும் - திருநாவுக்கரசர் தேவாரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    9. பண்ணினோர் மொழியாள் - திருநாவுக்கரசர் தேவாரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    9. தாள் திறவாய் - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன், மாஸ்டர் டி.எல்.மகராஜன்
    10. சதரம் மறைதான் - திருஞானசம்பந்தர் தேவாரம் - மாஸ்டர் டி.எல்.மகராஜன்
    11. அப்பன் நீ அம்மை நீ - திருஞானசம்பந்தர் தேவாரம் - மாஸ்டர் டி.எல்.மகராஜன்
    12. ஆதி சிவன் தாள் பணிந்து - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன். பி.சுசீலா
    13. நாதர் முடிமேலிருக்கும் - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1623
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நமது அருமை சகோதரி சாரதா அவர்கள் எழுதிய அற்புதமான பதிவு. என்ன காரணத்தினாலோ அவர் அதை நீக்கி விட்டார். நல்லவேளை பிரபா அதை quote பண்ணி போஸ்ட் செய்த பதிவு இருக்கிறது. அதிலிருந்து (முழுமையாக இல்லாவிட்டாலும் கூட) உங்கள் பார்வைக்கு!

    திருவருட்செல்வர்

    அவரிடம் அடகுவைக்கப்பட்ட நம் இதயங்கள் மீட்கப்படவேயில்லை. கொண்டேபோய்விட்டார்.

    திகைப்பூட்டும் "திருவருட்செல்வர்" ( 2 )

    'பேரன்புமிக்க ரசிகப்பெருமக்களுக்கு நன்றி கலந்த வணக்கம்' என்ற வசீகரமான ஏ.பி.என்.னின் குரலைத்தொடர்ந்து 'மாமா'வின் வேகமான இசை வெள்ளத்துடன் எழுத்துக்கள் ஓடி முடிந்ததும்....

    சிவப்பு, நீலம், பச்சை என பலவண்னத்திரைகள் ஒவ்வொன்றாக விலக, நடன மங்கையர் கோரஸாக வாழ்த்திசைக்க, நடன மண்டபத்தின் பிரதானக்கதவு திறக்க, கம்பீரமாக நடந்து வரும் பாதங்களில் மலர் தூவ்ப்பட, நடந்து வந்த கால்கள் நின்றதும் கேமரா அப்படியே மேலே உயர... இந்த அற்புதக்காட்சியைக் காணக்காத்திருந்த ரசிகர்களின் கையொலியால் அரங்கமே அதிர...... நடிப்புலகின் நாயகன் அறிமுகம்.

    "மன்னவன் வந்தானடி தோழி' பாடல் ஒலிக்க, அந்த ‘தோழி’ என்ற வார்த்தை எப்போது முடியுமென்று காத்திருக்கும் ரசிகர்களின் அபார எதிர்பார்ப்பான அந்த கம்பீர நடையுடன் 'நடிகர்திலகம்' (நடையிலும் திலகம்) நட்ந்துவர, மீண்டும் திரையரங்கின் சுவர்களின் விரிசல் விழும் அளவுக்கு கைதட்டல் எழும்ப, 'சே... இது மாதிரி நடக்க இனி ஒருவன் பொறந்து வரணும்யா' என்று ஆங்காங்கே குரல்கள்

    அதைப்பலமடங்காகப்பெருக்கும் வண்ணம் நாட்டியப்பேரொளி தன் நடத்தால் உயர்த்திப்பிடிக்க, அம்ர்ந்திருக்கும் நிலையிலேயே ஒவ்வொரு அசைவுக்கும் நடிகதிலகம் முகபாவம் காட்ட...

    உண்மை தாயே, அந்த கேள்விக்கும் விடை தெரிந்தால்தான் உறங்கிக்கொண்டிருக்கும் என் உள்ளத்துக்கும் விழிப்பு வரும்". (ஏ.பி.என்.ன்னின் என்ன ஒரு சொல்விளையாட்டு)

    திகைப்பூட்டும் "திருவருட்செல்வர்" ( 3 )

    சிவனே அடியாராக வேடம் புனைந்து, ‘இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற பாடலுடன் வர

    யாரிவன் பித்தன்?. பாட்டனாம், பரம்பரையாம், அடிமையாம், சாசனமாம்….. தள்ளாத கிழவனுக்கு பொல்லாத வேளை வந்துவிட்டது’ என சுடு சொற்களால் அர்ச்சிக்க, கிழவரோ, வழக்குரை மன்றம் செல்கிறார்.

    ….. பெரிய புராணச்செய்யுளான “பித்தா, பிறைசூடிப்பெருமானே” என்ற பாடல், சௌந்தர் ராஜன் என்ற கலைவாணியின் மகனின் கம்பீரக்குடலில் துவங்க, தொடர்ந்து கண்னதாசன் என்ற சரஸ்வதியின் புத்திரனின்… ‘சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே.. உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே’ என்ற ஊனையும் உயிரையும் ஒருசேர உருக வைக்கும் பாடல்…

    பக்திப்பெருக்கில் எந்த ஊன் உருக – அந்த

    பரவசத்தில் உள்ளே உயிர் உருக

    சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்

    சந்ததியே உந்தனுக்கு அடி பணிய – இறைவா

    சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே


    எல்லோரும் பக்தியுடன் சுற்றிவரும் வண்ணம், திருவெண்னை நல்லூர் கோயிலை அப்படியே சாரதா ஸ்டுடியோவில் கொண்டு வந்து வைத்த கலை இயக்குனர் கங்காவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கங்கா அமைத்த சிறந்த அரங்குகளில் இது ஒன்று என்றால் அது மிகையில்லை.

    திகைப்பூட்டும் "திருவருட்செல்வர்" ( 4 )

    குளோசப்பில் காண்பிக்கும்போது பஞ்சடைந்து சுருங்கிப்போயிருக்கும் கண்களும், சுருக்கம் விழுந்த கன்னங்களும், நரைத்துப்போன தலையுமாக கூனிக்குறுகி அவர் நிற்கும்போது, கைதட்டத்தோன்றாது… கையெடுத்துக் கும்பிடத்தோன்றும் . ஆம் அங்கே நாம் காண்பது நடிகர்திலகமல்ல. சைவப்பழமான அப்பர் சுவாமிகள்.

    திருவிளையாடலிலும், சரஸ்வதி சபதத்திலும் பிரமாண்டமும், கலைஞர்களின் திறமையும் தான் நம்மை அதிகமாக ஆக்ரமித்ததே தவிர, இந்த அளவு பக்திப்பரவசத்தை நம் உயிரில் பாய்ச்சவில்லை என்பதை சற்று ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

    திண்ணையில், வலது கையைச்சுருட்டி நெற்றிப்பொட்டில் வைத்தவாறு, மறைந்த காஞ்சிமுனிவரைப்போல அவர் அமர்ந்திருக்கும் அந்தக்கோலம்….. மெய் சிலிர்த்துப்போகும்.

    நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே – உனக்கு

    நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே

    ஆதி சிவன் தலையமர்ந்த ஆணவமா - அவன்

    அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா


    அதற்குமேல் தன்னால் ஒரு அடி கூட நகரமுடியாத நிலையில் 'திருக்காளத்தி நாதனைக்காணமுடியவில்லையே' என மூர்ச்சையாகி விழ, காளத்திநாதன் கைலாயத்திலிருந்து தமபதி சமேதராய் நடனமாடி காட்சி தருவதோடு படம் நிறைவடைகிறது.



    நன்றி சாரதா!

    அன்புடன்

  7. #1624
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    The biggest boxoffice hit movie of 1972
    vasantha maligai not only in tamilnadu overseas also
    no equals for vasanthamaligai.

  8. #1625
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அடுத்து...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1626
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    116. Ooty Varai Uravu ஊட்டி வரை உறவு




    தணிக்கை - 18.09.1967
    வெளியீடு - 01.11.1967

    தயாரிப்பு - கே.சி.ஃபிலிம்ஸ்

    நடிக நடிகையர்
    பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, முத்துராமன், வி.கே.ராமசாமி, நாகேஷ், கே.ஆர்.விஜயா, எல்.விஜயலக்ஷ்மி, சச்சு, சுந்தரிபாய்,

    பாடல்கள் - கண்ணதாசன்
    பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி

    ரிகார்டிங் - டி.எஸ்.ரங்கசாமி- சாரதா, சுவாமிநாதன் - வாஹினி
    ரீரிகார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.
    நடனம் - பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி
    மேக்கப் - நாஞ்சில் சிவராமன், ரங்கசாமி, சங்க்ர் ராவ், உதவி - எஸ்.கிருஷ்ணன், வி.ஆர்.மணி
    உடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், உதவி - டி.கஜராஜன், எஸ்.பாபுராஜ்
    ஆபீஸ் நிர்வாகம் - நடராஜய்யர், வீரப்ப செட்டியார்
    செட் பிராபர்டீஸ் - சினி கிராப்ட்ஸ்,
    செட் அலங்காரம் - சம்பந்தம் பிள்ளை
    விளம்பரம் - செம்பி பப்ளிஸிடீஸ்
    விளம்பர டிசைன்ஸ் - பரணி
    உதவியாளர்கள் - ஒளிப்பதிவு - டி.பிலிப்ஸ், எடிட்டிங் - துரைராஜன், கலை - பாபு
    அவுட்டோர் யூனிட் - மூவீ சர்வீஸ், பிரசாத் புரொடக்ஷன்ஸ்
    ஸ்டூடியோ - சாரதா, ஜெமினி, விஜயா, வாஹினி
    Processed and Printed at Gemini Color Laboratory
    கலை - கங்கா
    ஸ்டில்ஸ் - திருச்சி அருணாசலம்
    எடிட்டிங் - என்.எம்.சங்கர்
    ஒளிப்பதிவு - என்.பாலகிருஷ்ணன்
    துணை வசனம் - கோபு
    உதவி டைரக்ஷன் - சக்கரவர்த்தி, ஆர்.ஸ்ரீதர் பாபு, எம்.பி.பாஸ்கர்
    இசை - மெல்லிசை மன்ன்ன் எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - கோவர்த்தனம்
    அசோஸியேட் டைரக்ஷன் - சி.வி.ராஜேந்திரன்
    Produced by Kovai Chezhiyan
    தயாரிப்பு - கோவை செழியன்
    கதை, வசனம், டைரக்ஷன் - ஸ்ரீதர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1627
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russellmai thanked for this post
  14. #1628
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    ஊட்டி வரை உறவு


    [1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்

    சாதனைப் பொன்னேடுகள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா கதிர் : நவம்பர் 1967


    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.2.1968



    காவிய விளம்பரம் : பொம்மை : 1967



    ஸ்பெஷல் ஸ்டில்ஸ்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russellmai thanked for this post
  16. #1629
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஊட்டி வரை உறவு - காணொளிகள்

    தேடினேன் வந்த்து



    பூமாலையில் ஓர் மல்லிகை



    அங்கே மாலை மயக்கம்




    ஹேப்பி இன்று முதல் ஹேப்பி




    புது நாடகத்தில் ஒரு நாயகி



    ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்



    யாரோடும் பேசக் கூடாது - ரீமிக்ஸ் - காட்சி ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post
  18. #1630
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஊட்டி வரை உறவு - சிறப்புச் செய்திகள்

    1. முதலில் வயது 18 ஜாக்கிரதை என்ற பெயரிலும் பிறகு காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டும் நடிகர் திலகம், கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் நடித்து சில ஆயிரம் அடிகள் படமாக்கப் பட்டன. பிறகு படம் நின்று விட்டது. மீண்டும் கே.ஆர்.விஜயா நடிக்க முதலிலிருந்து படம் எடுக்கப்பட்டது. இதைக்குறிக்கும் வகையிலேயே கவியரசர் அவர்கள் புது நாடகத்தில் பாடலை எழுதியதாக சொல்வார்கள்.
    2. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.

    3. பாடல்களைப் பொறுத்த வரையில், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டு சூப்பர் ஹிட்டாகிய பாடல், யாரோடும் பேசக் கூடாது பாடல் படத்தில் இடம் பெறாத்து ஏமாற்றமே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •