Page 160 of 185 FirstFirst ... 60110150158159160161162170 ... LastLast
Results 1,591 to 1,600 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1591
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivajai Ganesan Filmography Series

    112. Pesum Deivam பேசும் தெய்வம்




    தணிக்கை - 04.04.1967
    வெளியீடு - 14.04.1967
    தயாரிப்பு - ரவி புரொடக்ஷன்ஸ்

    நடிக நடிகையர்
    பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், உலக நாட்டியப் பேரொளி பத்மினி, சௌகார் ஜானகி, நாகேஷ், எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், சத்யன், வி.எஸ்.ராகவன், கே.கண்ணன், ஜி.சகுந்தலா, சுந்தரிபாய், சூர்யகலா, ஜெயபாரதி, குழந்தை ராணி, சந்திரா மற்றும் பலர்

    மேக்கப் - தனகோடி, ரங்கசாமி, ராமசாமி, கிருஷ்ணராஜ், சீனிவாசன், செல்வராஜ், பாலகிருஷ்ணன்

    உடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், விவேகாநன்தன், தம்மு

    நடனம் - கள்ளபார்ட் நடராஜன், சாந்தா மற்றும் நடனக் குழுவினர்

    நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், தங்கராஜ், சின்னி சம்பத்
    பாடல்கள் - வாலி

    பாடியவர்கள் -டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.லீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா

    பாடல்கள் ஒலிப்பதிவு - டி.எஸ்.ரங்கசாமி - சாரதா ஸ்டூடியோ, உதவி - ஆர்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ்.

    ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.ஸ்டூடியோஸ்.
    வசனம் ஒலிப்பதிவு - எஸ்.பிரசன்னகுமார் - பரணி, கே.ஆர்.ராமசாமி - பிரசாத்

    செட்டிங்ஸ் - டி.வி.குமார், வி.குமார், சி.குப்புச்சாமி
    எலக்ட்ரீஷியன்ஸ் - டி.செல்வராஜ், என்.பக்கிரிசாமி, பி.தணிகாசலம்
    மோல்டிங் - சுப்பராயன்
    பெயிண்டிங் - ஆர்.முனுசாமி, பி.சுப்ரமணியம்

    வெளிப்புறப் படப்பிடிப்பு - "சித்ரா மூவீஸ்", சென்னை - 17

    ஸ்டில்ஸ் - டி.ஐ. சாந்தாமியான்,
    விளம்பர டிசைன்கள் - ஜி.ஹெச்.ராவ்
    விளம்பரம் - எலிகண்ட்

    அலங்காரப் பொருள்கள் - சினி கிராப்ட்ஸ்
    எவர்சில்வர் பாத்திரங்கள் - ருத்ரா டிரேடர்ஸ், சென்னை-17.
    பித்தளைப் பாத்திரங்கள் - பொன்னி ஸ்டோர்ஸ், சென்னை-17.

    புரொடக்ஷன் நிர்வாகம் - கே.என்.சுந்தரம், ஆர்.ராஜப்பா

    ப்ராஸஸிங் லேபரடரி by பி.எம்.விஜயராகவலு

    எடிட்டிங் - ஆர். தேவராஜன்

    ஒளிப்பதிவு டைரக்டர் - ஆர். சம்பத்

    உதவி டைரக்ஷன் - கே.பி.ரங்கநாதன், ஏ.கே.சுப்ரமணியம்

    இசை - திரை இசைத் திலகம் - கே.வி.மகாதேவன், உதவி - புகழேந்தி

    தயாரிப்பு - பாலு

    திரைக்கதை வசனம் இயக்கம் - "இயக்குநர் திலகம்" கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1592
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பேசும் தெய்வம் விளம்பர நிழற்படம் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1593
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பேசும் தெய்வம் - காணொளிகள்

    அழகு தெய்வம் மெல்ல மெல்ல
    டி.எம்.எஸ்., பி.சுசீலா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1594
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பிள்ளை செல்வமே -

    எஸ்.ஜானகி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1595
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இதய ஊஞ்சலாடவா
    டி.எம்.எஸ்., பி.சுசீலா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1596
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பத்து மாதம் சுமந்திருந்தேன்
    டி.எம்.எஸ்., பி.சுசீலா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russellmai thanked for this post
  14. #1597
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் அனுப்புவது கடிதம் அல்ல
    டி.எம்.எஸ்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russellmai thanked for this post
  16. #1598
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நூறாண்டு காலம் வாழ்க
    சூலமங்கலம் ராஜலட்சுமி,

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post
  18. #1599
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பேசும் தெய்வம் திரைக்காவியத்தைப் பற்றி நம் மய்யம் இணைய தளத்தில் நடிகர் திலகம் திரியின் வேறோர் பாகத்தில் முரளி சார் மற்றும் சகோதரி சாரதா அவர்களின் பதிவுகள் ...


    முரளி சாரின் ஆய்வு..
    நாள் - 15.05.2009, பகல் 12.29

    இணைப்பு -
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post399571

    பேசும் தெய்வம் Part I

    தயாரிப்பு : ரவி புரொடக்ஷன்ஸ்

    கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

    வெளியான நாள்: 14.04.1967

    சென்னையில் பெரிய செல்வந்தர் ரங்காராவ். மனைவி சுந்தரி பாய். ஒரு மகள் திருமணமாகி மதுரையில் வசிக்கிறாள். கணவர் கலெக்டர். ஒரே மகன் சந்துரு சட்டக் கல்லூரியில் படிக்கிறான். நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட அந்த பெற்றோர்கள் மகனுக்கு வேண்டியே சென்னையில் தங்கியிருக்கிறார்கள். தந்தையைப் பொறுத்த வரை திருப்பதி ஏழுமலையான் தான் எல்லாம். அவனிடம் உரிமையோடு எனக்கு இது இது வேண்டும் என்று லிஸ்ட் போட்டு கோரிக்கை வைப்பவர். தாயோ மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லும் சந்துரு ஒரு நாள் ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள் அழகில் கவரப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவளும் அவனை விரும்பவுதை உணர்கிறான். அவள் பெயர் லட்சுமி, அவள் யாருமற்ற அனாதை என்பதை தெரிந்து கொள்ளும் சந்துரு தன பெற்றோர்களை சம்மதிக்க வைக்க தன் அக்கா கணவரின் உதவியை நாடுகிறான். அவர் உதவியால் கல்யாணம் நடக்கிறது.

    சில வருடங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் சந்துரு லட்சுமி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் மனது வருத்தப்படுவதை நினைத்து சந்துருவும் லட்சுமியும் அப்செட் ஆகிறார்கள். வீட்டு வேலைக்காரி வேலம்மாள் மளிகை சாமான்களை தெரியாமல் எடுத்து செல்வதை பார்த்து விடும் லட்சுமி அவளை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க அவள் தன் குடும்ப கஷ்டத்தை கூறுகிறாள். அவளுக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள். இப்போது ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். கணவன் சரியில்லை. குழந்தை இல்லை என்று கவலைப்படும் நீங்கள் என் குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல இருப்பது வேண்டாம் பிறப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்று சந்துருவின் தந்தை சொல்ல அதன்படி செய்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அதை சீராட்டி வளர்க்கிறார்கள். ஆனால் டிப்திரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தையை சரியான நேரத்தில் டாக்டரிடம் காண்பிக்காததால் (வேலைக்காரியின் பேச்சை கேட்டுக் கொண்டு) குழந்தை இறந்து விடுகிறது. அதே நேரத்தில் மயங்கி விழும் லட்சுமி கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூற மீண்டும் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. அதற்கும் டிப்திரியா தாக்க ஆனால் இந்த தடவை தக்க சமயத்தில் சிகிச்சை கொடுக்கப்பட குழந்தை பிழைத்துக் கொள்கிறது.

    ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது சந்துரு சென்னையில் ஒரு மூத்த வழக்கறிஜரிடம் பணியாற்றுகிறான். அவனது பெற்றோர்கள் இப்போது நாகர்கோவிலில் வசிக்கிறார்கள். குழந்தை பாபுவை அல்லும் பகலும் கவனித்துக் கொண்டு அவனைப் பற்றியே கவலைப்படுவதால் லட்சுமியின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. பலவீனமான இதயமாக இருப்பதால் அதிர்ச்சி தரும் செய்திகளை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். இந்நிலையில் சந்துருவின் அக்கா மகளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு கோட்டயம் நகரில் வைத்து நடக்கிறது. லட்சுமி உடல் நிலை காரணமாக போகாமல் இருக்க பாபுவை கூட்டிக் கொண்டு சந்துரு கல்யாணத்திற்கு போகிறான். அங்கே பழைய நண்பர்கள் கூட்டத்தை சந்திக்க அனைவரும் சீட்டு கச்சேரியில் மூழ்குகிறார்கள். குழந்தை பாபு அழ சந்துருவின் அம்மா சந்துருவிடம் விட்டு செல்கிறாள். குழந்தை வேறு சில குழந்தைகளை பார்த்து விட்டு அவர்களுடன் விளையாடப் போகிறான். ஆனால் ஆட்டத்தில் ஆழ்ந்திருக்கும் சந்துரு இதை கவனிக்கவில்லை. ஒரு பொம்மைக்கு சண்டை போடும் குழந்தை வீட்டின் முன் உள்ள ஏரிக்கரையில் நிறுத்தி வைத்துள்ள படகில் ஏறி பொம்மையை எடுக்க முயற்சிக்க கயிற்றால் கட்டாமல் நிறுத்தி வைத்துள்ள படகு நகர்ந்து ஏரியில் தானே செல்லுகிறது.

    குழந்தையை காணாமல் அனைவரும் தேட ஏரிக்கரையில் குழந்தையின் ஒரு செருப்பு கிடக்கிறது. குழந்தை என்னவாயிற்று என்று தெரியாமல் சந்துரு தவிக்கும் போது லட்சுமி போன் செய்கிறாள். நிலைமையை சமாளிக்க குழந்தை தூங்குவதாக பொய் சொல்லுகிறான். அக்காள் கணவர் கலெக்டர் என்பதால் தன் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் துறையை வைத்து தேட செய்கிறார். ஆனால் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. அவரே சந்துருவிடம் சென்னைக்கு செல்லுமாறும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு வந்திருப்பதாகவும் லட்சுமியிடம் சொல்ல சொல்லுகிறார். சந்துருவும் அப்படியே செய்கிறான். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும் லட்சுமியிடம் குழந்தையை பிரிந்த ஏக்கம் என்று சொல்கிறான். ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களினால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது.

    இந்த நேரத்தில் பர்மாவிலிருந்து யுவான்சென் என்ற செல்வந்தர் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகிறார். எல்லா வசதிகளும் இருந்தும் அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. எனவே இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியாவிற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள். அவர்கள் பல அனாதை இல்லங்களுக்கு விஜயம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதுக்கு பிடித்த குழந்தை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கேரள மாநிலத்திற்கு செல்லும் அவர்கள் கடற்கரையில் அழகான குழந்தையை பார்க்கிறார்கள். மீனவ குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பாபு அவர்களை பார்த்தும் ஒட்டிக் கொள்கிறான். ஏரியில் தானே பயணித்த படகை ஒரு மீனவன் பார்த்து அதிலிருக்கும் பாபுவை எடுத்து தன் குடும்பத்தோடு தங்க வைத்திருப்பதை தெரிந்து கொள்ளும் அவர்கள் அவனுக்கு பணம் கொடுத்து பாபுவை கூட்டி செல்கிறார்கள்.

    இங்கே லட்சுமிக்கு சந்தேகம் வளர்ந்து குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க சந்துரு அவளை மதுரைக்கு கூட்டி செல்கிறான். அங்கே அக்காள் கணவர் குழந்தையை கொடைக்கானல் கான்வென்ட்- ல் சேர்த்திருப்பதாகவும் யாரும் பார்க்க முடியாது என்றும் சொல்ல லட்சுமியோ பாபுவை தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று கெஞ்ச கான்வென்ட் சுவருக்கு வெளியே மலை சரிவில் நின்று வரிசையாக செல்லும் குழந்தைகளில் ஒன்றை காண்பித்து அதுதான் பாபு என்று சொல்ல, என் பாபுவை எனக்கு தெரியும். நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று கதறும் லட்சுமி மயங்கி விழ டாக்டர்கள் குழந்தை வந்தால் தான் அவள் நிலைமை சீராகும் என்று சொல்லி விடுகிறார்கள். எப்போதும் உங்கள் திருப்பதியானை பற்றி சொல்லுவீர்களே இப்போது அவன் எங்கே என்று மகனே கேள்வி கேட்க மனம் கலங்கி மன்றாடும் தந்தையின் கையில் நண்பர் கொடுத்து விட்ட திருப்பதி பிரசாதத்தை வேலைக்காரன் கொண்டு தருகிறான். பிரசாதம் சுற்றி வந்திருக்கும் பேப்பரில் தங்களுக்கு வேண்டிய குழந்தை கிடைத்து விட்டதாகவும் தாங்கள் பர்மா திரும்புவதாகவும் யுவான்சென் தம்பதிகளின் பேட்டியும் குழந்தை பாபுவுடன் நிற்கும் புகைப்படமும் வெளியாகியிருப்பதை பார்க்கிறார். அவர்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பர்மா செல்வதையும் அறிந்து கொள்ளும் சந்துரு & லட்சுமி மதுரையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்று விமான நிலையத்தில் அந்த தம்பதிகளை சந்தித்து உண்மையை சொல்லி குழந்தையை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் யுவான்சென்னின் மனைவியோ குழந்தையை பிரிய மனமில்லாமல் தான் பர்மா வரவில்லை என்று கதறி அழ, அவளது நிலை கண்டு பொறுக்காமல் லட்சுமியே அவளிடம் குழந்தையை கொடுத்து விடுகிறாள். அவர்கள் விமானத்தில் சென்று விடுகின்றனர்.

    சென்னை திரும்பும் சந்துரு லட்சுமி தம்பதியினர் குழந்தையை மறக்க முடியாமல் தவிக்க அப்போது யுவான்சென் தம்பதியினர் குழந்தை பாபுவுடன் வீட்டிற்கு வருகிறார்கள். மீண்டும் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்துடன் படம் நிறைவு பெறுகிறது.

    (தொடரும்)

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post
  20. #1600
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சாரின் ஆய்வு..
    நாள் - 15.05.2009, பகல் 12.33

    இணைப்பு -
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post399572
    பேசும் தெய்வம் Part II

    தமிழகத்தில் திராவிட இயக்கம் தன் கொள்கைகளை திரைப்படம் என்ற வலிமையான ஊடகம் மூலமாக பரப்பி வந்த காலத்தில் அதற்கு மாற்றாக அதே ஊடகத்தை பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்த்து அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையை ஊட்டும் கதைகளை திரைப்படம் வாயிலாக மக்களுக்கு சொன்னவர் ஏ.பி.என். என்றால் அதே பாதையில் பயணம் செய்தவர் கே.எஸ்.ஜி. அப்படி, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும் உலகத்திலே மிகவும் உயர்ந்த செல்வமாக கருதப்படும் மழலை பாக்கியமும் சேர்ந்த ஒரு கதை கிடைத்த போது பேசும் தெய்வம் பிறந்தது. ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய டைட்டில் என்ற வகையில் டபுள் ஓகே.

    அறுபதுகளில் வந்த நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் அந்த கதாபாத்திரங்களை எல்லாம் நடிகர் திலகம் அனாயசமாக ஊதி தள்ளியிருப்பார். அந்த லிஸ்ட்-ல் பேசும் தெய்வம் சந்துருவிற்கும் இடம் உண்டு.

    இந்த படத்தில் வெகு இளமையாக சிக்கென்று இருப்பார். முதல் பகுதியின் பாதி வரை ரொம்ப ஜாலியாக ரொமன்ஸ் பண்ணுவார். பத்மினியை பார்த்த பிறகு அந்த உணர்வை ஒரு தவிப்போடு நாகேஷிடம் சொல்லுவது, பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, அத்தான் உதவியோடு கல்யாணத்தை முடிப்பது வரை அந்த மூட் நிலை கொள்ளும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையே என்று மூட் மாறும் போது ஒரு டல்னஸை பிரதிபலிப்பது, பிறக்கப் போகும் குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் மனம் கலங்கி பேசுவது, தனக்கே குழந்தை பிறந்தவுடன் வரும் அந்த சந்தோஷம், குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு இயல்பான பேச்சுக்கு திரும்புவது, கல்யாணத்தில் சீட்டு கச்சேரியில் மூழ்கியவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே வெளிப்படுத்துவது, குழந்தையை காணோம் என்றதும் சாதாரணமாக இருக்கும் அந்த முகம், அந்த பேச்சு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது, ஊருக்கு வந்த பிறகு பத்மினியிடம் உண்மையையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் தவிப்பது கொடைக்கானலில் பள்ளிகூடத்திற்கு வெளியிலிருந்து குழந்தையை பார்த்து விட்டு பத்மினி அது என் பாபு இல்லை என்று சொன்னவுடன் சும்மா சொல்லாதே என்று சத்தம் போட்டு விட்டு பத்மினியின் நேரடி பார்வையை தாங்க முடியாமல் மெல்லிய குரலில் நல்லாப் பாரு என்று திரும்பிக் கொள்வது - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    பத்மினியை பொருத்த வரை முதலில் மாணவி என்பது சிறிது நெருடலாக இருந்தாலும், சிவாஜியை சந்திக்கும் முன்பும் அதற்கு பின்பும் அவர் காட்டும் அந்த பருவ ஏக்கங்கள் சிறிது ஓவராக இருந்தாலும் திருமணத்திற்கு பின் அந்த பாத்திரத்தின் முதிர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். குழந்தையை ஊருக்கு அனுப்பும் அந்த காட்சி அவர் நடிப்புக்கு ஒரு உரைகல். கணவனின் நடவடிக்கைகள் இயல்புக்கு மாறாக இருப்பதை எண்ணி குழந்தைக்கு என்னவோ என்று பதறுவதை நன்றாக செய்திருப்பார்.

    படத்தில் ஸ்கோர் செய்பவர்கள் என்று இருவரை சொல்லலாம். முதலில் ரங்காராவ். அவரது காஷுவல் நடிப்பு பிரச்சிதி பெற்றது என்றாலும் இந்த படத்தில் அதை எடுத்து சொல்ல வேண்டும். ஏழுமலையானிடம் அவர் ஒன் டு ஒன் பேசுவதே அழகு. அதீத உரிமையோடு அவர் கோரிக்கைககளை வைப்பது, மனைவியிடமும், மகனிடமும், மருமகன் மற்றும் மருமகளிடமும் அவர் தன் தரப்பை எடுத்து சொல்வது எல்லாம் ரஸகரம்.

    இன்னொருவர் சகஸ்ரநாமம். எந்த சூழ்நிலையிலும் அலட்டிக் கொள்ளாத அந்த காரக்டர், பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், உணர்ச்சிவசப்படும் எல்லோரையும் அவர் சமாதானப்படுத்துவது, சூழ்நிலையை சமாளிக்க அவர் தரும் லாஜிக் ஐடியாக்கள், இப்படி ஒருவர் நம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பார்வையாளர்களுக்கு ஒரு எண்ணம் வரும்.

    அம்மா வேடத்தில் சுந்தரி பாய் வழக்கம் போல். நாகேஷ் முதல் அரை மணி நேரத்தோடு சரி. படத்தின் இறுதிக் கட்டத்தில் சௌகார் மற்றும் சத்யன் என்ட்ரி. சத்யனின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு அந்த வேடம் இல்லையென்றால் கூட அந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் வட்டார தமிழ் இனிமையாக இருக்கும். குழந்தையை பத்மினி எடுத்துக் கொண்டு விட ஏர்போர்ட்-ல் வைத்து கதறும் அந்த ஒரே சீன் மட்டுமே சௌகாருக்கு வாய்ப்பு என்றாலும் அதில் ஸ்கோர் செய்திருப்பார்.

    முதலில் படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த கே.எஸ்.ஜி பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றவுடன் நடிகர் திலகத்தின் படத்தை இயக்கினார். முதலில் கை கொடுத்த தெய்வம். 1964-ல் வந்த அந்த படத்திற்கு பிறகு 1966-ல் நடிகர் திலகம் நடித்த வி.கே.ஆரின் சொந்த படமான செல்வம் படத்தை டைரக்ட் செய்தார். பிறகு தானே நடிகர் திலகத்தை வைத்து பேசும் தெய்வம் ஆரம்பித்தார். 1961-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற பத்மினியை மீண்டும் தமிழ் திரையுலகிற்கு சித்தி மூலமாக கொண்டு வந்த கே.எஸ்.ஜி இதில் மீண்டும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜோடியான நடிகர் திலகத்தையும் நாட்டியப் பேரொளியையும் இணைத்தார். 1961-ல் வெளி வந்த ஸ்ரீவள்ளிக்கு பிறகு அவர்கள் இணைந்தது இந்த படத்தில் தான் [1962 -ல் வெளி வந்த செந்தாமரை படத்தில் இந்த ஜோடி இருந்தது. ஆனால் அது வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம். பிறகு 1966-ம் ஆண்டு வெளியான சரஸ்வதி சபதம் படத்தில் சேர்ந்து நடித்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதே வருடத்தில் வெளியான தாயே உனக்காக படத்தில் இருவருமே கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தனர்].

    படத்தின் துவக்கத்தில் கே.எஸ்.ஜியின் குரல் ஒலிக்கும் போது ஒரு டாகுமெண்டரி பீல் வந்தாலும் கூட அதை மேற்கொண்டு கதை சொன்ன விதத்தில் சரி செய்திருப்பார். பெண்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருந்த கே.எஸ்.ஜி அதற்கேற்றார் போல் காட்சிகள் அமைப்பார். திருப்பதி கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி அந்த வகையை சார்ந்தது.[அந்த காலக் கட்டங்களில் தியேட்டரில் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தை இந்த காட்சி அள்ளிக் கொள்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்]. பெண்களை நம்பி எடுத்த இந்த படமும் அவரை ஏமாற்றவில்லை.

    நாம் இதுவரை பதிவு செய்த படங்களிலிருந்து பேசும் தெய்வம் வித்தியாசப்படுவது இசையமைப்பில். ஆம், இந்த படத்திற்கு இசை - திரை இசை திலகம் மாமா மகாதேவன். பாடல்கள் வாலி. இந்த படத்தில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முன் வாலி முதன் முறையாக நடிகர் திலகத்தின் அன்புக் கரங்கள் படத்திற்கு எழுதினார். பிறகு பேசும் தெய்வத்திற்கு முன் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு என்ற ஒரே பாடலை எழுதினார். ஆனால் அவருக்கு இந்த பட பாடல்கள் தான் பெரும் புகழ் தேடி தந்தது.

    1.நான் அனுப்புவது கடிதம் அல்ல- டி.எம்.எஸ்.

    வாலி எதுகை மோனைகளுக்கு பெயர் பெற்றவர். அது இந்த பாடலில் சிறப்பாக இருக்கும்.

    நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
    நீருக்கு மீன் எழுதும் கடிதம்
    மலருக்கு தேன் எழுதும் கடிதம்
    மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

    இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றமும் வாயசைப்பும் அருமையாக இருக்கும்.

    2. அழகு தெய்வம் மெல்ல மெல்ல- டி.எம்.எஸ்

    இதில் ராஜ உடையில் வரும் நடிகர் திலகம் முதல் சரணத்தில்
    "இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல" என்ற வரியின் போது ஒரு சின்ன நடை நடப்பார். நான் முதன் முதலில் இந்த படத்தை பார்த்தது ஒரு மறு வெளியீட்டின் முதல் நாள் (வெள்ளிகிழமை) மதியக் காட்சி. அதிகமாக பொது மக்களே வந்திருந்த அந்த காட்சிக்கே தியேட்டர் அதிர்ந்தது என்றால் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.

    3. இதய ஊஞ்சல் ஆடவா- டி.எம்.எஸ், சுசீலா.

    இந்த டூயட் பாடல் முதலில் மெலடியாகவும் பிறகு கள்ளபார்ட் நடராஜன் அன் கோஷ்டி ஆடும் போது ஷோக்கா ஜொலிக்குதப்பா என்று குத்து ஸ்டைல்-க்கு மாறும். தியேட்டரில் ஆட்டம் கூடும்.

    4. பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா- டி.எம்.எஸ்,சுசீலா.

    முந்தைய பாடல் போலவே இதுவும் ஸ்லோ பிறகு பாஸ்ட் என்று பீட்ஸ் மாறி மாறி வர ரசிகர்கள் ஆட்டம் அணை மீறும்.

    5. நூறாண்டு காலம் வாழ்க- ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா.

    குழந்தையை தொட்டிலிட்டு பாடும் பாடல்.

    6. பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே- சுசீலா

    குழந்தையை வைத்து கொண்டு சௌகார்,சத்யன் பாடும் பாடல்.

    இந்த படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வெளியான முதல் நடிகர் திலகம் படம். ஆனால் அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தன் படங்களை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நடிகர் திலகம் நிரூபித்தார். படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் கூட அனைவருக்கும் லாபம் ஈட்டி தந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி 35 நாட்களுக்குள் (வழக்கம் போல்) அடுத்த படமான தங்கை வெளியானது. அடுத்த நான்கு வாரத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற கதையம்சம் கொண்ட பாலாடை வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    படம் வெளியான போது சென்னை கெயிட்டி தியேட்டரில் திருப்பதி கோவில் போலவே அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி.

    மொத்தத்தில் பார்க்கலாம், ரசிக்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •