Page 157 of 185 FirstFirst ... 57107147155156157158159167 ... LastLast
Results 1,561 to 1,570 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1561
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    செல்வம் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்துடன் சேர்ந்து கதாநாயக அந்தஸ்தைப் பகிர்ந்து கொள்பவர் திரை இசைத் திலகம் எனலாம்.
    இவரைத் தவிர வேறு யாரையும் இப்படத்திற்கு இசையமைப்பாளராய் நினைத்துப் பார்க்க முடியவில்லை, மெல்லிசை மன்னர் உள்பட..
    ஒவ்வொரு காட்சியிலும் திரை இசைத் திலகத்தின் பின்னணி இசை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் ஜீவனைப் புகுத்தி இத்திரைப்படத்தை காவியமாக்கியுள்ளது.
    பாடல்கள்... அந்தந்த உணர்வுகளை மிகச்சிறப்பாய் வெளிக்கொணரும் காரணிகளாய் விளங்குகின்றன..

    கேவி.மகாதேவனின் இசை வரலாற்றில் ஒரு மைல்கல் செல்வம் திரைக்காவியம்..

    சரியான இசையமைப்பாளரை இத்திரைக்காவியத்திற்கு தேர்வு செய்த வி.கே.ஆருககும் அவரை நன்கு பயன்படுத்திக்கொண்ட கே.எஸ்.ஜி. அவர்களுக்கும் நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes ifohadroziza, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1562
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செல்வம் திரைக்காவியத்தைப் பற்றிய முரளி சாரின் ஆய்வு...

    செல்வம் - Part I


    தயாரிப்பு: வி.கே.ஆர். பிக்சர்ஸ்

    திரைக்கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

    வெளியான நாள்: 11.11.1966


    [இந்தப் படத்தைப் பற்றி NOV ஏற்கனவே ஒரு விமர்சனம் எழுதியிருப்பதால் இங்கே சுருக்கமாக கதை. NOV எழுதியதன் லிங்க் http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=675].

    ஊரில் பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு செல்வம். தந்தை இல்லை. தாய் மட்டுமே. தாய் ஜாதகத்திலும் ஜோஸ்யத்திலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜோஸ்யர் கிழிக்கும் கோட்டை தாண்டாதவர். வெளிநாடு சென்று படித்து விட்டு வரும் செல்வம் சொந்த ஊரில் ஒரு உர தொழிற்சாலையை நிறுவி வெளிநாட்டு நிபுணரை வரவழைத்து தொழிலாளிகளுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்கிறான்.

    செல்வத்திற்கு இரண்டு மாமன்கள். ஒருவர் செல்வம் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு ஒரு மகள். அடுத்த மாமா அதே ஊரில் தனியாக வசிக்கிறார். அவர் மகள் வள்ளி. செல்வமும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரியும். செல்வத்தின் அம்மா இவர்கள் இரண்டு பேரின் ஜாதகங்களை ஜோஸ்யரிடம் காண்பிக்க இந்த திருமணம் நடந்தால் ஒரு வருடத்தில் செல்வம் இறந்து விடுவான் என்று சொல்லி விடுகிறார். செல்வத்தின் தாய் வள்ளியிடம் சென்று தன் மகனை மறந்து விடும்படி சொல்கிறாள். செல்வம் வந்து கேட்டால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்கிறாள். அவளும் அப்படியே சொல்ல செல்வம் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைக்கிறான்.

    ஆனால் செல்வத்தால் வள்ளியை மறக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கே வள்ளி திருமணம் நடைபெறப் போகும் நேரம். முருகன் வள்ளி திருமாங்கல்யத்தை எடுத்து செல்வம் வள்ளி கழுத்தில் கட்டி விடுகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் செல்வத்தின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்கிறாள். மீண்டும் ஜோஸ்யரை நாட அவர் ஒரு பரிகாரம் சொல்கிறார். அதாவது கணவன் மனைவி ஒரு வருடம் சேராமல் இருந்தால் இந்த தோஷம் நீங்கி விடும் என்று சொல்ல செல்வமும் வள்ளியும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். வள்ளி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

    ஜோஸ்யர் மேலும் ஒரு விஷயம் சொல்கிறார். செல்வத்திற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தால் இந்த தோஷம் நிரந்தரமாக விலகி விடும் என்று. செல்வத்தின் தாய் வீட்டோடு இருக்கும் தன் தம்பியிடம் வெளியூரிலிருக்கும் அவன் மகளை வரவழைக்க சொல்கிறாள். உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத அந்த மாமன் மகளின் அருகாமை செல்வத்தை சற்றே சலனப்படுத்த அவன் அதிலிருந்து மீள்கிறான். செல்வத்தை பார்த்துக் கொள்ள ஊரிலியே ஒரு பெரிய டாக்டர் ஏற்பாடு செய்யப்படுகிறார். இளமை உணர்வுகளால் தூண்டப்படும் செல்வம் வள்ளியை காண அவள் வீட்டிற்கு செல்ல அவள் அவன் செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி அவனை திருப்பி அனுப்பி விடுகிறாள்.

    வீட்டில் இருக்க பிடிக்காமல் தொழிற்சாலை கெஸ்ட் ஹௌசில் டாக்டருடன் போய் தங்குகிறான் செல்வம். அங்கே டாக்டரிடம் தன் நிலைமையைப் பற்றி விவாதிக்கிறான். மூட நம்பிக்கைகள வேண்டாம் என்றும் நேர் வழியில் சென்றால் நிச்சயம் நன்மைகளே விளையும் என்கிறார் டாக்டர். அடுத்த அறையில் வெளிநாட்டு நிபுணரும் அவர் மனைவியும் நெருக்கமாக ஆடும் நடனம் செல்வத்தின் உணர்வுகளை தூண்டி விட தன் மனைவியை தேடி போகிறான். முதலில் தடுக்கும் வள்ளி பின் செல்வத்தின் நிர்பந்தத்தினால் உடன்படுகிறாள். செல்வத்தை தேடி வரும் டாக்டர் மட்டும் விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார். செல்வத்தின் வீட்டில் இருக்கும் பெண்மணி வள்ளி வீட்டு வாசலில் கார் நிற்பதையும் செல்வமும் டாக்டரும் வள்ளி வீட்டிலிருந்து வெளியே வந்து கார் ஏறி செல்வதை பார்த்துவிட்டு செல்வத்தின் தாயிடம் போய் சொல்கிறாள். செல்வத்தின் தாய் வள்ளியை மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கூட்டி செல்கிறாள்.

    இதற்கிடையில் வள்ளி கர்ப்பமடைக்கிறாள். இதை செல்வத்தின் தாய்க்கு தெரியாமல் மறைக்கும் பொறுப்பு டாக்டரின் தலையில் விழுகிறது. ஜோஸ்யர் கொடுத்த ஒரு வருட கெடு முடியும் நாள் நெருங்க நெருங்க செல்வத்திற்கும் பயம் தோன்ற ஆரம்பிக்கிறது. ஜாதகத்தில் நம்பிக்கை என்பதை விட தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மனதளவில் குழம்ப குழம்ப, பரிகாரங்களும் பூஜைகளும் முழு வீச்சில் நடைபெற அந்த கெடுவின் கடைசி நாளும் வர அந்த இறுதி நிமிடங்கள், அந்நேரம் அரேங்கேறும் புதிய திருப்பங்கள், ஜோசியம் பலித்ததா, செல்வத்தின் நிலைமை என்ன வள்ளியின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

    அன்புடன்

    (தொடரும்)

    பதிவிட்ட நாள் நேரம் 14th December 2010, 09:25 PM

    பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post596383
    செல்வம் - Part 2

    இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் படங்களின் generic nature என்று சொல்வோமே அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்த படம் என்று சொல்லலாம். அதுவரை அவர் படங்கள் என்றாலே சீரியஸ் கதைகள் அழுத்தமான காட்சியமைப்புகள் என்ற நிலையிலிருந்து ஒரு light hearted படம் என்ற மாறுதலை கொண்டு வந்த படம். இதற்கு முன்னரே அவர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா போன்ற இவ்வகைப் படங்கள் செய்திருக்கிறார் என்றால் கூட அவை அழுத்தமான படங்களுக்கு நடு நடுவே வந்தவை. அது மட்டுமல்ல இவை மூன்றும் முறையே 1954,58,62 -ம் ஆண்டுகளில் வந்தவை. அவற்றை தொடர்ந்து அது போன்ற படங்கள் வரவில்லை. ஆனால் செல்வம் வெளிவந்த பிறகு இந்த light hearted படங்கள் வரிசையில் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி என்று வரிசையாக வெளியாக ஆரம்பித்தன.

    நடிகர் திலகம் இந்த செல்வம் பாத்திரத்தை ப்பூ என்று ஊதியிருப்பார். தாயை மிகவும் நேசிக்கிற தாயின் உணர்வுகள் புண்படக் கூடாது என்று நினைக்கிற மகன், அதே நேரத்தில் சின்ன வயதிலிருந்தே தான் நேசித்த கல்யாணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்ட முறைப்பெண், ஜாதக தோஷம் காரணமாக அந்த முறைப்பெண் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்கின்ற போது என்னமாய் அதை வெளிப்படுத்துகிறார்! அவரின் அறிமுக காட்சியிலே முறை பெண்ணின் மீது உள்ள ஆசை வெளிப்பட்டு விடும். காரின் ஜன்னல் வழியாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டே வரும் செல்வம், அவள் இருக்கும் இடம் வந்தவுடன் இறங்கி ஓடிவந்து பேசும் இடம், மாமா வீட்டிற்கு போகும் இவரைப் பார்த்தவுடன் கதவை திறக்காமல் விஜயா நிற்க, இவர் ஒளிந்துக் கொண்டு விஜயா கதவை திறந்தவுடன் சட்டென்று உள்ளே நுழைந்து விஜயாவிடம் வம்பு
    பண்ணுவது இங்கேயெல்லாம் இளமை துள்ளும் நடிகர் திலகத்தை பார்க்கலாம். சின்ன சின்ன கிண்டல் வசனங்களை ஒரு comic sense கலந்து பேசுவதில் எப்பவுமே நடிகர் திலகம் பிரமாதப்படுத்துவார். இதிலும் அதை நிறைய பார்க்கலாம். அம்மாவின் ஜோஸ்ய மற்றும் சாஸ்திர சம்பிரதாய அதீத நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகட்டும் [குளிப்பதற்கு நல்ல நேரம் போய்விடப் போகிறது என்று சொல்லும் அம்மாவிடம் இரண்டு வருஷத்திலே நிறைய improvement], கல்யாணத்தைப் பற்றி விஜயாவிடம் பேச அவர் பத்துக்குள்ளே ஒரு நம்பர் சொல்லுங்க என்று கேட்க நாசமாப் போச்சு என்று சலிப்பதாகட்டும், அந்த கிண்டல் வெளிப்படும் இடங்களை ஜாலியாக பண்ணியிருப்பார். வெளிநாட்டிலே என்ன படிச்சிட்டு வந்தே, என்ன செய்யப் போறே என்று கேட்கும் மாமனிடம் என்ன செய்யப் போறேன் என்பதை அவர் விவரிக்கும் இடம் வெகு வெகு இயல்பு.

    தன் அத்தையின் சொல்படி வீடு தேடி வரும் சிவாஜியை பிடிக்கவில்லை என்று கதவை திறக்காமலே விஜயா சொல்லிவிட அதுவரை அமைதியாக இருக்கும் நடிகர் திலகத்தின் முகம் அப்படியே மாற, என்னை ஏன் வெறுக்கிறே என்று கேள்வி கேட்டு பதில் இல்லாமல் திரும்பி போக எத்தனிக்கும் போது, விஜயா கதவை திறக்க சிவாஜி கோவத்தில் காரணம் சொல்லு என்று அவள் கழுத்தைப் பிடிக்க மாமா நாகையா அவர் வேறொருவருக்கு மனைவியாக போகிறவ, அவளை தொட்டு பேசாதே என்று சொல்ல கோவத்தில் வார்த்தை வராமல் ஓஹோ! வேறொருவனுக்கு மனைவியா, பாக்கிறேன் எவன்னு பாக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி போவதில் ஆரம்பித்து அந்த கோவம் சற்றும் குறையாமல் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் அவ மனசை யாரோ கலைச்சிருங்காங்க அவங்க மட்டும் என் கையில் கிடைச்சா-னு ஆத்திரத்தை கொட்டுவது, உடனே மாமா வீட்டிலே போய் பேசணும்-னு அம்மாவை வற்புறுத்துவது, அம்மா இப்போது வேண்டாம் என்று சொன்னவுடன் சரி என்று அரைகுறை மனசுடன் மாடிப்படி ஏறுவது, திடீரென்று சடசடவென்று இறங்கி வந்து அவ எப்படிமா இப்படி சொன்னா என்று குமுறுவது மீண்டும் அம்மா சொல்படி படியேறி விட்டு ஆற்ற முடியாமல் இறங்கி வந்து குலுங்குவது - இந்த இடங்களில் ஒரு நடிப்பு சாம்ராஜ்யத்தையே நடத்தியிருப்பார். தனக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைப்பதற்கு ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு மாமன் மகளின் அருகாமை தன்னை எப்படி சலனப்படுத்துகிறது என்பதை அவர் ரங்காராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி சொல்லும் இடம் இன்னொரு class act.

    தன்னை அலைகழிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் மனைவியை தேடி போக அங்கே எங்க வந்தீங்க என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் அஷ்டகோணலாக மாற, உங்களை சின்ன வயசிலிருந்து பார்த்திட்டு இருக்கேன், ஆனா இன்னிக்கு உங்க முகத்திலே இருக்கிறதை மாதிரி பார்த்ததேயில்லை என்று மனைவி சொல்ல என் மனசிலே இருக்கிறதை எப்படி சொல்லுவேன்-னு கேட்கும் அந்த இடம், கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு தம்பதியினரைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் அந்த தவிப்பு, உடனே மீண்டும் மனைவியை நாடி செல்ல, மனைவி தடுக்க எதையுமே அனுபவிக்காம நான் போயிட்டேனா என்று சுய இரக்கம் கொள்ளும் இடம், இவை எல்லாமே எந்த கதையானாலும் தன் நடிப்பு என்றுமே சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதை நடிகர் திலகம் உணர்த்தும் இடங்கள். தன் உணர்வுகளுக்கு வடிகால் கிடைத்தவுடன் உண்மை நிலை உறைக்க தாய்க்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஆபத்து வந்து விடுமோ என பயப்படும் இடங்கள் எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம். கிளைமாக்ஸ் காட்சி அவர் மேல் இன்னும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தால் அவர் நடிப்பின் சிறப்பை இன்னமும் ரசித்திருக்கலாம்.

    கே.ஆர்.விஜயா நாயகி. நடிகர் திலகத்தோடு புன்னகை அரசி ஜோடியாக நடித்த முதல் படம். இதற்கு முன்பு கை கொடுத்த தெய்வம், சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இந்தப் படத்தில்தான் ஆரம்பித்தது. பின்னாளில் நடிகர் திலகத்தோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெறுவதற்கு இந்த படமே தொடக்கமாக இருந்தது.

    சில நேரங்களில் வெகு இயல்பாக இருக்கும் விஜயாவின் நடிப்பு சில நேரங்களில் melodrama-வாக இருக்கும். உன் அத்தானை நீ கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என தன் அத்தை சொல்லும் போது அந்த அதிர்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் அவர், சில வசனங்கள் முடிந்த பிறகு சொல்றது நீங்கதானா, கேட்கறது நான்தானா என்று பேசும் இடம் ஒரு உதாரணம். கதைப்படி இப்படிப்பட்ட ஒரு இருதலைக் கொள்ளி காரக்டர் என்பது ஒரு சவாலான பாத்திரம் படம் வெளிவந்த காலக்கட்டத்தின் தன்மையை மனதில் கொண்டு பார்த்தால் பெரிதாக குறை சொல்ல முடியாதபடி நடித்திருப்பார்.

    ஜோஸ்யத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட தாயாக எம்.வி.ராஜம்மா அதை நன்றாக செய்திருப்பார். கே.எஸ்.ஜி.யின் படங்களில் தவறாமல் இடம் பெறும் இருவர் இதிலும் உண்டு. ரங்காராவ் மற்றும் சகஸ்ரநாமம். இருவருமே தங்களின் இயல்பான நடிப்பிற்கு புகழ் பெற்றவர்கள். இதில் ரங்காராவிற்கு டாக்டர் வேடம், நகைச்சுவை கலந்த அந்த வேடத்தில் கலக்கியிருப்பார் SVR. எல்லாவற்றையும் விளக்கிவிட்டு ஒவ்வொரு முறையும் புரியுதா என்று கேட்டுவிட்டு வரும் பதிலில் திருப்தி இல்லாமல் என்ன புரிஞ்சுதோ என்று கேட்டு விட்டு போவது அவரின் முத்திரை. காமடியும் கை வந்த கலை என்று சொல்லாமல் சொல்கிறார்.

    சகஸ்ரநாமத்திற்கு சிவாஜியின் தாய் மாமன் வேடம். அதை எப்போதும் போல் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியே அவருடைய பாதி வேலையை செய்துவிடும். வீட்டில் இருந்துக் கொண்டே கூனி வேலை பார்க்கும் பெண்மணியாக சுந்தரிபாய். அவருக்கேற்ற ரோல். ரமாபிரபா நடிகர் திலகத்தின் மற்றொரு முறைப் பெண்ணாக மேகலா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் படத்தின் surprise நாகையாதான். நாகையா என்றாலே நம் நினைவிற்கு வரும் அந்த மனம் தளர்ந்த பயம் நிறைந்த நடுங்கும் குரலில் பேசும் உருவத்திற்கு மாறாக ஒரு ரோல். கே.ஆர்.விஜயாவின் தந்தையாக தன் சகோதரியின் மூட நம்பிக்கைகளைப் பார்த்து அதற்கு எதிராக வாதிடும் அந்த கதாபாத்திரத்தை சில காட்சிகளே வந்தாலும் பளிச்சென்று செய்திருக்கிறார் நாகையா. நாகேஷ் கதாகாலட்சேபம் செய்பவராக கிளைமாக்ஸ்-ல் மட்டும் தலை காட்டுகிறார். படத்தை தயாரித்தது வி.கே.ராமசாமி என்றாலும் அவர் படத்தில் இல்லை.

    பி.எஸ்.ராமையாவின் கதைக்கு திரைக்கதை வசனம் இயக்கம் கே.எஸ்.ஜி. கைகொடுத்த தெய்வம் என்ற அற்புதமான படத்திற்கு பிறகு நடிகர் திலகத்துடன் மீண்டும் இணைந்த படம். உறவு கொள்ள முடியாத கணவன் மனைவி என்ற விஷயத்தின் மேல் கேஎஸ்ஜிக்கு ஒரு அலாதி விருப்பம் இருந்ததோ என்று தோன்றுகிறது. சாரதா, கற்பகம் பிறகு செல்வம் என்ற மூன்று படங்களையும் பார்க்கும்போது அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. காரணங்கள்தான் ஒவ்வொன்றிலும் வேறு. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பது சரியா தவறா என்பதே கதையின் முடிச்சு. அதை ஒரு முழு நீள திரைப்படமாக்குவது என்பது சற்று கடினமான காரியமே. அதை முடிந்தவரையில் தொய்வில்லாமல் நகர்த்தி செல்ல கே.எஸ்.ஜி. முயன்றிருப்பார். கே.எஸ்.ஜியின் படங்கள் பெண்களை குறி வைத்தே எடுக்கப்பட்டவையாய் இருக்கும். இந்த படத்திலும் அதைத்தான் செய்திருப்பார். வசனங்கள் வெகு இயல்பாக வந்து விழும். ஜோஸ்யதையும் ஜாதகத்தையும் நம்புவதுதான் சரியானது என்று சொல்லுகிறாரோ என நினைக்கும் போது கிளைமாக்ஸ்-ல் வரும் அந்த ட்விஸ்ட் முதல் முறை பார்பவர்களுக்கு ஒரு சின்ன ஷாக்.[வெளிவந்த காலகட்டத்தில் நடந்ததை சொல்கிறேன்].

    அன்புடன்

    (தொடரும்)

    பதிவிட்ட நாள் நேரம் 14th December 2010, 09:31 PM

    பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post596385
    செல்வம் - Part 3

    செல்வம் - Part III

    அன்றைய காலக்கட்டத்தில் [60-களின் மத்தியில் மன்னர்கள் பிரிந்த பிறகு] இசையமைப்பாளரைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அல்லது கே,வி.எம், பாடல்களுக்கு கண்ணதாசன் அல்லது வாலி என்று இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த ட்ரெண்டை சற்றே மாற்றியவர் கே.எஸ்.ஜி. கற்பகத்தில் பாடல்கள் அனைத்தையும் வாலிக்கு கொடுத்தவர் கை கொடுத்த தெய்வம் மற்றும் சித்தி படங்களில் கண்ணதாசனை எழுத வைத்தார். 1966 ல் சித்தி படத்திற்கு கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி என்றால் அதே 1966 ல் வெளியான செல்வம் படத்திற்கு திரை இசை திலகத்தையும் வாலியையும் பயன்படுத்தினார். படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார்.

    இசையமைப்பாளராக மாமா வந்ததன் காரணம் தயாரிப்பாளர் வி.கே.ஆர். அவர் ஏ.பி.என்னுடன் சேர்ந்து தயாரிப்பில் பங்கு கொண்ட மக்களைப் பெற்ற மகராசி, வடிவுக்கு வளைக்காப்பு போன்ற படங்களில் மாமாதான் இசை. எனவே தனியாக சொந்த படம் எடுத்தபோது அதே அடிப்படையில் கே.வி.எம் இசை அமைத்தார்.

    1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு எழுதிய பாடல் படத்தின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் வருகையை எதிர்பார்த்து கே.ஆர். விஜயா பாடும் பாடல். நடுவில் வந்து நடிகர் திலகம் சேர்ந்து கொள்வார். டி.எம்.எஸ்-சுசீலா பாடியிருப்பார்கள். இருவரும் சேர்ந்து இருந்தாலும் தனி தனியே பாடுவது போல் காட்சி அமைப்பு. இரண்டும் வெவ்வேறு டியூன் போல தோன்றும்.

    2. அவளா சொன்னாள் இருக்காது - மிக மிக பிரபலமான பாடல். எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று விஜயா சொல்லிவிட நடிகர் திலகம் மனம் வெறுத்து பாடுவது. வாலியின் வார்த்தைகள் வலுவாக வந்து விழும்.

    உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம்

    முப்பது நாளும் நிலவை பார்க்கலாம்

    சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.

    என்ற சரணத்தையும் மிஞ்சும் வண்ணம் அடுத்த சரணம்.

    அன்னை தந்த பால் விஷமுமாகலாம்

    என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்

    என்று பாடிவிட்டு வலது கையை மேலே உயர்த்தி

    நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் என்று வெடிக்கும் போது இங்கே தியேட்டர் அதிரும். கொள்ளிடம் ஆற்றங்கரையில் வைத்து படமாக்கப்பட்டிருக்கும்.

    3. லில்லி லல்லி ஜிம்மி பப்பி - ரமாபிரபா நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பாடும் பாடல் - ஈஸ்வரி பாடியிருப்பார்.

    4. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல - விஜயாவை தேடி வரும் நடிகர் திலகம் தன் உள்ளக்கிடக்கையை பாடலாய் வெளிப்படுத்த விஜயா பாடலிலே பதில் சொல்வார். இந்துஸ்தானி ராகமான தேஷ் எனப்படும் ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்வார்கள். மிக பிரபலமான பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் அழகாய் மெருகு படுத்தியிருப்பார்கள். பாடலின் இறுதியில் சிவாஜியிடம் சத்தியத்தை நினைவுபடுத்தும் செயற்கையான அந்த இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படமாக்கமும் நன்றாய் இருக்கும்.

    5. எனக்காகவா நான் உனக்காகவா - தாராபுரம் சுந்தரராஜன் ஜமுனா ராணி பாடிய, படத்தில் montage ஆக இடம் பெறும் பாடல். முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் வரும். தாராபுரம் சுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் பின்னாளில் இசையமைப்பாளராகி ராமண்ணாவின் நீச்சல் குளம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் கூட அவர் பேர் சொல்லும் பாடலாக இன்றும் விளங்குவது இந்தப் பாடல்தான். மெலடி என்பதன் அர்த்தத்தை இதில் தெரிந்துக் கொள்ளலாம்.

    மலர் மீது பனி தூங்க

    மரம் மீது கனி தூங்க

    மலை மீது முகில் தூங்க

    மடி மீது நீ தூங்க

    நீராட நதியா இல்லை?

    இளைப்பாற நிழலா இல்லை?

    பசியாற உணவா இல்லை?

    பகிர்ந்துண்ண துணையா இல்லை?

    கதையின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வாலியின் வரிகள்.

    திரையுலகில் பல வருடம் நடிப்பிலும் தயாரிப்பிலும் அனுபவமுள்ள வி.கே.ஆர். சற்று சிரம திசையில் இருந்தபோது நடிகர் திலகத்தை அணுக அவர் உதவி செய்வதற்காக உடனே செய்த படமே செல்வம். குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படம் 1966 நவம்பர் 11 தீபாவளியன்று வெளியானது. சென்னை சித்ரா,மதுரை சென்ட்ரல், கோவை, சேலம் போன்ற நகரங்களில் இந்தப்படம் 1967 பொங்கல் வரை ஓடியது. அதாவது 64 நாட்கள். சென்னையில் மற்ற இரண்டு அரங்குகளிலும் திருச்சி போன்ற நகரங்களிலும் 57 நாட்கள். வழக்கம் போல் நடிகர் திலகத்தின் இன்னொரு படமே போட்டியாக வரும் காட்சியும் சென்னை சித்ராவில் அரங்கேறியது. கந்தன் கருணை படத்திற்காக செல்வம் மாறிக் கொடுத்தது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் அதே தீபாவளிக்கு வெளிவந்த எந்த பிரம்மாண்ட கலர் படங்களும் செல்வம் ஓடிய நாட்களை தாண்ட முடியவில்லை.

    படம் வெளிவந்த பிறகு சிரம திசையிலிருந்து மீண்டார் வி.கே.ஆர். மறு வெளியீடுகளில் மிக நன்றாக போன படங்களில் செல்வமும் உண்டு. அப்போதும் வி.கே.ஆருக்கு லாபமே.

    நடிகர்திலகத்திற்காகவே பார்க்கலாம்.

    அன்புடன்

    பதிவிட்ட நாள் நேரம் 14th December 2010, 09:40 PM
    பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post596389
    Thank you Murali Sir
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1563
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சாரின் பதிவுகளுக்கு ரெஸ்பான்ஸ் பதிவாக சகோ. சாரதா அவர்களின் அருமையான ஆய்வு..

    டியர் முரளியண்ணா,

    சுருக்கமாகச்சொல்கிறேன் என்று துவங்கி மிக மிக விளக்கமாக விவரித்து விட்டீர்கள். 'செல்வம்' திரைப்பட திறனாய்வு சூப்பர். உங்களது திறனாய்வு அருமை என்று சொல்வது, தேன் இனிக்கிறது என்று சொல்வதைப்போல.

    ...

    இந்தக்குறிப்பிட்ட காட்சியை நீங்கள் விவரிக்கும் விதம், திரையில் நேரில் பார்ப்பதுபோலிருக்கிறது. ஏற்கெனவே நான் பலமுறை சொன்னது போல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகர்திலகத்தைப் பற்றி புகழ்ந்து பேசும் வி.ஐ.பி.க்கள் இதுபோன்ற காட்சிகளையெல்லாம் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசுவது கிடையாது. ஸ்டீரியோ டைப்பாக ஓரிரண்டு காட்சிகளையே திருப்பித்திருப்பி சொல்லி, மக்களை சலிப்படையச்செய்கின்றனர். இனி அம்மாதிரி நிகழ்ச்சிகளில் 'அதிகம் தெரியாத' வி.ஐ.பி.க்களுக்கு பதிலாக, விவரம் தெரிந்த உங்களைப்போன்ற தீவிர ரசிகர்களை அழைத்து விவரிக்கச்செய்யலாம்.

    'எனக்காகவா.. நான் உனக்காகவா' முழுப்பாடலையும் காட்சியமைப்பையும், கே.எஸ்.ஜி.பிற்காலத்தில் (1973) தான் எடுத்த (முத்துராமன். பிரமீளா நடித்த) வாழையடி வாழை படத்தில் பயன்படுத்தியிருப்பார்

    'என்னடி இத்தனை வேகம்' பாடலும், 'அவளா சொன்னாள்.. இருக்காது' பாடலும் தஞ்சை மாவட்டம் கல்லணையில் படமாக்கப்பட்டவை. அப்போதைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மல்லியம் கிராமத்தைச்சேர்ந்த இயக்குனர் கே.எஸ்.ஜி., பெரும்பாலும் தன் படங்களின் வெளிப்புறக்காட்சிகளை தனது மல்லியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலேயே வைத்துக்கொள்வார். கற்பகம் படத்தின் அவுட்டோர் காட்சிகள் அனைத்தும் அங்கேதான் எடுக்கப்பட்டன. 'பக்கத்துவீட்டு பருவமச்சான்' பாடலின் கடைசியில் சாவித்திரி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்று பாடுவாரே அதுதான் மல்லியத்திலுள்ள கே.எஸ்.ஜி.யின் வீடு. 'சித்தி' படத்தில் ஜெமினி பத்மினி பாடும் 'தண்ணீர் சுடுவதென்ன' பாடல் மல்லியம் காவேரி ஆற்றில் படமானது. (இவரது உறவினரான மல்லியம் ராஜகோபாலின் 'சவாலே சமாளி' படத்தில் வி.எஸ்.ராகவனும், டி.கே.பகவதியும் நின்று பேசும் மரப்பாலமும் மல்லியம் காவேரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டதுதான்).

    கே.எஸ்.ஜி.யின் அடுத்த படமான 'பேசும் தெய்வம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருச்சி விமான நிலையத்தின் உட்புறத்தில் எடுக்கப்பட்டது. முன்பெல்லாம் விமான நிலையங்களில் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்த நிலையத்தார் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் விமான நிலையக்காட்சிகளின் போது, அப்போதைய சென்னை விமான நிலையத்தை வெளிப்புறத்தில் தூரத்தில் காட்டிவிட்டு, பின்னர் ஓஸியானிக் ஓட்டல் அல்லது அட்லாண்டிக் ஓட்டல் ரிஸப்ஷன்களை விமான நிலையத்தின் உட்புறமென்று காட்டுவார்கள்.

    ஆனால் பேசும் தெய்வத்தின் கிளைமாக்ஸ் திருச்சி விமான நிலையத்தின் உள்ளேயே படமாக்கப்பட்டது. ஏர்போர்ட்கள் மத்திய அரசின் பொறுப்பில் இருந்தபோதிலும், படப்பிடிப்புக்காக முதல்வர் பக்தவத்சலம் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொடுத்தவர் நடிகர்திலகம்தான்.

    செல்வம் ரிலீஸானபோது சரஸ்வதி சபதம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதுசரி, 'செல்வம்' படத்தோடு வெளியான மற்ற கலர்ப்படங்கள் செல்வம் அளவுக்கு ஓடவில்லையென்று குறிப்பிடுள்ளீர்களே, அது 'சர்க்கஸ் படம்'தானே. அவை ஓடிய 'நாள்' எத்தனை என்று பிறர் 'பார்க்க சொல்லலாமா?'
    பதிவிட்ட நாள் நேரம் 15th December 2010, 11:21 AM
    பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post596587
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1564
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    The colour photo of STYLE KING IN SELVAM Simply Superb.

  9. #1565
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செல்வம் - பாடல்களின் விவரங்கள் .. ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு


    1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு - p. சுசீலா
    2. காற்றிலே ஒடியும் கொடியிடை - ஆலங்குடி சோமு - t.m.சௌந்தரராஜன்
    3. அவளா சொன்னாள் - வாலி - t.m.சௌந்தரராஜன்
    4. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல - வாலி - t.m.சௌந்தரராஜன், p. சுசீலா
    5. ஒண்ணு ரெண்டு மூணு - வாலி - எல்.ஆர்.ஈஸ்வரி
    6. வா வா வா எனக்காகவா நான் உனக்காகவா - வாலி - தாராபுரம் சௌந்தரராஜன், கே.ஜமுனா ராணி
    7. எது வந்தால் தானென்ன - உளுந்தூர்பேட்டை சண்முகம் - சீர்காழி கோவிந்தராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #1566
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    என்னடி இத்தனை வேகம் - பாடலின் துவக்கத்தில் நடிகர் திலகம் விமானத்திலிருந்து இறங்கும் காட்சி..

    துரதிருஷ்டவசமாக டிவிடியில் ஒரே விநாடி வந்து போகிறது. படத்தில் அவர் இறங்கி ஓடி வந்த பிறகு இன்னும் ஓரிரு விநாடிகள் மிட்-க்ளோஸப்பில் உண்டு. அந்தக் காட்சி தான் பம்மலாரின் கலர் ஸ்டில்லில் உள்ளது. கலர் ஸ்டில்லில் முழு உருவம் இருந்தாலும் படத்தில் மிட் க்ளோஸப்பில் மார்பு வரையில் திரையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அதில் ஒரு வசீகரப் புன்னகையோடு தலைவர் தந்த போஸ் ... ஆஹா.. ஆயுள் முழுமைக்கும் அது ஒன்றே போதும்..

    5.45 விநாடியில் காற்றிலே ஒடியும் கொடியிடை பாடல் நடிகர் திலகம் பாடத் துவங்குகிறது. அந்த படிக்கட்டுகளின் உச்சியில் அவர் நிற்கும் ஸ்டைல், இறங்கி கே.ஆர்.விஜயாவை நோக்கி ஓடி வரும் வேகம், மரத்திலே படரும் வரிகளின் போது அவரின் சூப்பர் நடை...

    ஒரிஜினல் படப்பிரதியில் படிக்கட்டு முழுதும் சூப்பர் வேகத்தில் ஓடி வருவார். டிவிடியில் இந்த இடம் ஜம்ப்பாகிறது.

    இந்தப் பாட்டிற்காகவே இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடி யிருக்க வேண்டும்.
    Last edited by RAGHAVENDRA; 25th December 2014 at 10:55 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #1567
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    Guest Roles

    Thaye Unakkaga தாயே உனக்காக



    கதை – BALLAD OF A SOLDIER “ஒரு போர் வீரனின் பாட்டு” என்னும் ரஷ்யக் கதையின் தழுவல்


    Written by:
    Valentin Yezhov
    Grigori Chukhrai

    http://en.wikipedia.org/wiki/Ballad_of_a_Soldier

    தணிக்கை – 24.08.1966
    வெளியீடு – 26.08.1966

    தயாரிப்பு – ஸ்ரீ கமலாலயம்
    திரைக்கதை பாடல் கவிஞர் கண்ணதாசன்
    வசனம் ஏ.எல். நாராயணன்
    கௌரவ நடிகர்கள் – பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், நாகேஷ்
    கௌரவ நடிகைகள் – பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, ஜெயல்லிதா, சாந்தகுமாரி

    நடிக நடிகையர்
    சிவகுமார், மனோகர், வி.கே.ராமசாமி, வி.ஆர்.ராஜகோபால், முஸ்தபா, சுந்தர்ராஜன், ஸ்ரீராம், ராமதாஸ், கன்னையா, மாஸ்டர் பாபு, புஷ்பலதா, மனோரமா, சி.கே.சரஸ்வதி, குமாரி சச்சு மற்றும் பலர்

    இசை திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    பின்னணி – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, வசந்தா
    நடன அமைப்பு – தங்கப்பன், ஜெயராமன், மாதவன்

    ஒலிப்பதிவு பாடல்கள் அண்ட் ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்க்சாமி
    ஒலிப்பதிவு வசனம்- சாரங்கன்
    ஒப்பனை – கிருஷ்ணராஜ், தனக்கோடி, செல்வராஜ், ரங்கசாமி, கோபால், ராமசாமி

    புகைப்படம் – எம். முருகப்பன்
    பொதுமக்கள் தொடர்பு – பி.ஜி. ஆனந்தன்
    அலுவலக நிர்வாகம்- பி.ஆர்.எஸ். ராமனாதன், கே.நடராஜய்யர்
    விளம்பரம் எலிகண்ட்
    விளம்பர ஓவியம் – ஜி.ஹெச்.ராவ்
    அலங்காரப் பொருள்கள் – நியோ பிலிமோகிராப்ட்ஸ்
    ஆடைகள் நடராஜ் டெக்ஸ்டைல்ஸ், சென்னை
    ஸ்டூடியோ – சாரதா- லெஸ்ஸீஸ் - மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ், ஜெமினி
    லாபரேட்டரி – விஜயா, வி.டி.எஸ்.சுந்தரம்
    ஆடை அணி மணி – வி.ஜானகிராம்
    தயாரிப்பு நிர்வாகம் – எம்.சி.கே.தாஸன்
    கலை – ஆர்.ராதா
    எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
    படப்பிடிப்பு – சி.நமசிவாயம்
    ஆபரேடிவ் கேமராமேன் – ஏ.நடராஜ்
    உதவி டைரக்ஷன் – முத்துக்குமார், எஸ்.முருகேசன், பி.அழகப்பன்
    உரிமையாளர் – ஜே.எல்.கம்பைன்ஸ், சென்னை – 34
    கூட்டுத்தயாரிப்பு – கே.முருகேசன்
    தயாரிப்பு – ஆர்.எம். கண்ணப்பன்
    டைரக்ஷன் – பி.புல்லையா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #1568
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாயே உனக்காக விளம்பர நிழற்படங்கள்...






    www.nadigarthilagam.com இணையதளத் தொகுப்பிலிருந்து..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post
  17. #1569
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாயே உனக்காக திரைக்காவியத்தில் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் காட்சிகளைப் பற்றிய வாசு சாரின் அற்புதமான ஆய்வுரை

    நடிகர் திலகத்தின் அற்புத கௌரவத் தோற்றத்தில் அழியா 'கெளரவம்' பெற்ற திரை ஓவியம் 'தாயே உனக்காக'. நாட்டுக்கு சேவை செய்து உயிரை தியாகம் செய்யும் அற்புதமான ராணுவ கேப்டன் கதாபாத்திரம் நடிகர் திலகத்திற்கு. 'Ballad of a soldier' ("ஒரு போர் வீரனின் பாட்டு") என்னும் ரஷ்ய கதையின் தழுவல் தான் 'தாயே உனக்காக'. சோவெக்ஸ்போர்ட் என்ற ரஷ்ய பிலிம் கம்பனி கதை உரிமை அளித்தது.

    திரு.சிவக்குமார் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். (சிவக்குமாரின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் திரு. விஜயகுமார் அவர்கள் நடித்திருப்பார்.) திரு கே.வி .மகாதேவன் இசையமைப்பில், திரு பி.புல்லையா அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்திருந்தார்.

    பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்...
    கருநீல மலை மேலே தாய் இருந்தாள்..
    ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்...

    போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படம்.

    ராணுவ அதிகாரியாக மிடுக்குடன் நம் பத்மஸ்ரீ அவர்கள். போரில் காயமுற்று மருத்துவமனையில் ராணுவ வீரரான சிவக்குமாரிடம் தன் மனைவியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், பிளாஷ்பேக்கில் வரும் அந்த மிக அரிய டூயட் பாடலில் பத்மினி அவர்களுடன் மலையாள மற்றும் கன்னட உடை அணிந்து அந்தந்த கலாச்சாரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் காண்பிக்கும் போதும், போருக்குப் போகுமுன் பத்மினியிடம் உணர்ச்சி மயமான வசன மழை பொழிந்து விட்டு விடை பெறும் போதும் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் நம்மை ஆட்டிப் படைத்து விடுகிறார் நடிக வள்ளல்.

    'பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்' என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற பின்னணிக் குரலோசையில் தேச பக்தியை நினைவூட்டும் விதமாக, தென்னிந்திய கலாச்சார உடைகளில் நடிகர் திலகம் புகுந்து விளையாடுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
    மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post730220
    பதிவிட்ட நாள் நேரம் – 26.08.2011 காலை 11.28 மணி



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post
  19. #1570
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மற்ற காணொளிகள்

    யேசுநாதர் பேசினால்



    காவேரியில் தேம்ஸ் நதி



    கருநீல மலைமேலே



    அமைதிப் புறாவே

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •