Page 153 of 185 FirstFirst ... 53103143151152153154155163 ... LastLast
Results 1,521 to 1,530 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1521
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    GENEROSITY / MAGNANIMITY / APPRECIATION ... WHATEVER YOU MEAN ... THE WORD IS SIVAJI GANESAN ..

    A SAMPLE



    "The story was conceived by A. P. Nagarajan, who wrote the screenplay as a five-part play. The stories were taken from an ancient Tamil epic, Thriuvilayadal Puranam, which consists of 64 stories, written by 64 nayanmargal (Saivate devotees). These Saivates were the devotees of Lord Shiva.[3] Actor Nagesh, who played a crucial role in the film, wrote in his biography,

    “ "Everyone kept telling me that I had done a superb job and at times stole the scene from the hero, so I was extremely scared it might not see the light of day as the director was struggling to trim the film's length. One day when I was in the recording theatre, Sivaji [Ganesan] walked in and wanted to see the "Dharumi" piece. He did not notice me in the dark sound engineers' room. He watched it once and then wanted to see it again – by this time I was sure that my scene, especially the solo lamenting, would be axed. To my astonishment, Sivaji turned and said, 'Do not remove a single foot from this episode as well as the episode featuring T. S. Balaiah. These will be the highlights of the film. This is my opinion, but as the director, you have the final say. Whatever dubbing additions have to be done, get that fellow (Nagesh), lock him up in the studio and don't let him run away till he completes it to your satisfaction. He has done outstanding work.' Such was his generosity to his fellow actors."[4]"
    - QUOTED FROM THE WIKIPEDIA PAGE OF THE MOVIE THIRUVILAIYADAL : http://en.wikipedia.org/wiki/Thiruvilayadal_(1965_film)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1522
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி ராக வேந்தர் சார்
    பாட்டும் நானே பாவமும் நானே பாடல் கா மு ஷெரிப் எழுதியதா அல்லது கண்ணதாசனா என்று நமது மதுர கானம் இதழில் கேள்வி கேட்டு இருந்தேன். நீங்கள் வெளியிட்ட திரு ஜெயகாந்தன் அவர்களின் கட்டுரையை ஒட்டியே அந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.
    தெளிவு பிறக்க வைத்ததற்கு நன்றி
    gkrishna

  5. #1523
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    திருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்
    சாந்தி,கிரௌன், புவனேஸ்வரி
    - புகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.
    திருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...

    சென்னை சாந்தி – 179 நாட்கள்
    சென்னை கிரௌன் – 179 நாட்கள்
    சென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்
    மதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்
    சேலம் சாந்தி – 132 நாட்கள்
    திருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்
    கோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்
    நாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்
    கரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்
    குடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்
    பாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்
    நெல்லை ரத்னா – 100 நாட்கள்
    தஞ்சை யாகப்பா – 100 நாட்கள்

    மற்றும்

    காஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்
    பல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்
    வேலூர் ராஜா – 84 நாட்கள்
    தாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்
    பெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்
    பெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்

    மேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.

    - தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.

    அந்த ஆண்டு வந்த தமிழ் படங்களில் மிக உச்ச பட்ச வசூல் பிரளயம் ஆயிற்றே திருவிளையாடல் !

    வந்த தருனமோ - திமுக வின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு, நாஸ்தீக கொள்கை , யுத்த நேரம் ப்ளாக் அவுட் சமாச்சாரங்கள் - நகரில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது நடந்த ஆக்ரமணம் - இவ்வளவு கடினமான நேரத்திலும் இப்படி ஒரு அசுர வசூல் !

    திருவிளையாடல் - தெய்வத்தின் தெய்வம் !

  6. #1524
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருவிளையாடல்- 1965.

    சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

    1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

    திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

    முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

    இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

    இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

    உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

    "இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
    ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
    இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
    ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
    சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
    சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
    அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
    ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
    ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
    ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
    ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
    சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

    இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

    நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

    கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

    இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

    இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

    முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


    அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

    அடுத்த episode love teasing பிரச்சினை.

    அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

    இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

    இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

    முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

    என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


    சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

    சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

    குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

    மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

    அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

    கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

    நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

    ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


    இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
    Last edited by Gopal.s; 12th October 2014 at 08:40 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1525
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் இராகவேந்தர் சார்,
    நடிகர் திலகத்தின் திருப்பு முனை காவியங்களில் ஒன்றான திருவிளையாடல் திரைப்படம் தொடர்பான விபரங்களை,அத்திரைப்பட பாடல்களின் காணொளி
    மற்றும் திரைப்பட பத்திரிக்கை விளம்பரங்களுடன் பதிவிட்டமைக்கு எனது நன்றிகள்.
    கோபு.

  8. #1526
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    105. NeelaVaanam நீலவானம்





    தணிக்கை –04.12.1965
    வெளியீடு – 10.12.1965

    தயாரிப்பு – பட்டு ஃபிலிம்ஸ்
    PRODUCER: PATTU FILMS MADRAS


    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ, நாகேஷ், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், வி.கே.ராமசாமி, சீதாலட்சுமி, மற்றும் பலர்
    Cast:
    DEVIKA, RAJASHRI, NAGESH, S.V. SAHASRANAMAM, V.K.RAMASAMY, SEETHALATCHUMI AND OTHERS.

    கதை வசனம் – கே.பாலச்சந்தர்
    STORY & DIALOGUE: K. BALACHANDER

    பாடல்கள் கண்ணதாசன்
    LYRICS: KANNADASAN
    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சதன்
    PLAYBACK: T.M.SOUNDARARAJAN, P.SUSHEELA, L.R. EASWARI, SADHAN

    ஒலிப்பதிவு இயக்குநர் – டி.எஸ்.ரங்கசாமி
    RECORDING DIRECTOR: T.S. RANGASAMY
    ஒலிப்பதிவு – டி.ஆர்.சாரங்கன்
    RECORDING: T.R. SARANGAN
    நடன அமைப்பு – டெஸ்மாண்ட், மாதவன்
    CHOREOGRAPHY: DESMOND, MADHAVAN

    கலை – கங்கா
    ART : GANGA

    உடைகள் – பி.ராமகிருஷ்ணன்
    COSTUME: P. RAMAKRISHNAN

    ஒப்பனை – ரங்கசாமி, பாண்டியன், பத்ரய்யா, சிவராம், ராமசாமி
    MAKE UP: RANGASAMY, PANDIYAN, BADHRAIYA, SIVARAM, RAMASAMY

    ஸ்டில்ஸ் - சிம்மய்யா
    STILLS: SIMMAIAH


    விளம்பர டிஸைன்ஸ் – சீநி சோமு
    PUBLICITY DESIGNS: SEENI SOMU
    விளம்பரம் – எலிகண்ட் ப்ப்ளிசிட்டீஸ்
    PUBLICITY: ELEGANT PUBLICITIES
    மக்கள் தொடர்பு – ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
    PRO: FILM NEWS ANANTHAN

    அரங்கப் பொருடகள் – சினி கிராஃப்ட்ஸ்
    SET PROPERTIES: CINE CRAFTS

    ஸ்டூடியோ – சாரதா – லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
    STUDIO: SARADHA (LESSEES OF MAJESTIC STUDIOS)

    ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி. வைத்தியநாதன்
    STUDIO EXECUTIVE: T.V. VAIDHYANATHAN

    ப்ராசஸிங் – ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி
    PROCESSING DONE AT: GEMINI STUDIOS LABORATORY

    ப்ரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – எம்.லட்சுமணன்
    PRODUCTION EXECUTIVE: M. LATCHUMANAN

    படத்தொகுப்பு – ஆர்.தேவராஜன்
    EDITING: R. DEVARAJAN

    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    MUSIC: MELLISAI MANNAR M.S. VISWANATHAN

    ஒளிப்பதிவு – எம்.கர்ணன்
    CINEMATOGRAPHY: M. KARNAN

    உதவி டைரக்ஷன் – எஸ்.தேவராஜன், கே.தங்கமுத்து, யூ.மோஹன், தியாகராஜன்
    ASSISTANT DIRECTION: S. DEVARAJAN, K. THANGAMUTHU, U. MOHAN, THIYAGARAJAN

    தயாரிப்பாளர் – வரதன்
    PRODUCER: VARADHAN

    டைரக்ஷன் – பி. மாதவன்
    DIRECTION: P. MADHAVAN
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷப் புதையல்

    ஷூட்டிங் ஸ்பாட்

    வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜூலை 1965






    அட்டைப்படம் : சினிமா கதிர் : ஆகஸ்ட் 1965




    அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1965




    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 3.12.1965




    'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 10.12.1965



    குறிப்பு:
    "நீலவானம்", சென்னை 'சித்ரா'வில் 63 நாட்களும், 'மஹாராணி'யில் 56 நாட்களும், 'சயானி'யில் 56 நாட்களும், 'ராம்' திரையரங்கில் 52 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது. மதுரை 'நியூசினிமா'வில் 56 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. மேலும், கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்று, ஒரு 'நல்ல வெற்றிக்காவியம்' என்கின்ற நிலையை அடைந்தது.
    நன்றி - பம்மலார் அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1528
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீலவானம் – சிறப்புச் செய்திகள்

    1. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களுக்குத் தனியாக இசையமைக்கத் தொடங்கிய திரைப்படம்
    2. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய முதல் படம். இத்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். இன்னொரு திரைப்படம் எதிரொலி.
    3. இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரம் சாந்தி திரையரங்கில் பணிபுரிவதாக அமைக்கப்பட்டிருந்தது.
    4. தேவிகாவின் சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதிரைப்படம்
    5. இத்திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலா அவர்கள் பாடிய ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே என்ற பாடல் அவருடைய மிகச்சிறந்த பாடல்களில் முக்கியமானதாக ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
    6. ராஜஸ்ரீ நடிகர் திலகத்திற்கு இணையாக நடித்த படம். ஓ லிட்டில் ஃப்ளவர் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் நடனம் இன்றளவும் ரசிகர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்படுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks ifohadroziza thanked for this post
    Likes ifohadroziza liked this post
  14. #1529
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீலவானம் – பாடல்கள்
    1. ஓ..லக்ஷ்மி, ஓ..மாலா – எல்.ஆர்.ஈஸ்வரி
    2. ஓ..லிட்டில் ஃப்ளவர் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    3. ஓஹோ..ஹோ.. ஓடும் எண்ணங்களே... பி.சுசீலா
    4. ஓஹோ ஹோ....ஓடும் எண்ணங்களே.. சோகம் – பி.சுசீலா
    5. சொல்லடா வாய் திறந்து அம்மா என்று .. பி.சுசீலா
    6.மங்கல மங்கையும் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
    Last edited by RAGHAVENDRA; 22nd October 2014 at 07:59 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russellmai thanked for this post
  16. #1530
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீலவானம் ... திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •