Page 140 of 185 FirstFirst ... 4090130138139140141142150 ... LastLast
Results 1,391 to 1,400 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1391
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Blast from Sarathy past on annai illam.

    நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-

    நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

    எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.

    சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.

    இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.

    இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.

    நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!

    இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.

    நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!

    வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!

    நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.

    இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
    Last edited by Gopal.s; 29th May 2014 at 05:13 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1392
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Namma Ooru Velan sir's Review.



    Annai Illam

    Starring Sivaji Ganesan, Devika, Muthuraman, Ranga Rao, Kannamba, Nagesh, MN Nambiar, OAK Devar, VK Ramasamy etc

    Producer: Kamala Pictures
    Lyrics: Kannadhasan
    Music: KV Mahadevan
    Director: P. Madhavan

    Paramasivam (Ranga Rao) is a rich man who believes in utmost charity. In the first 3 mins of the film, he gives away all his riches and becomes a destitude. In the meantime, his wife Gowri (Kannamba) is pregnant and is ready for delivery but Paramasivam is unable to collect money for treatment. In a moment of anger he fights with a moneylender and fearing for his life escapes. Nambiar seizes the moment and offers him refuge, saying that his wife had died in childbirth.

    Nambiar is involved in smuggling and makes Paramasivam his accomplice. Meanwhile Paramasivam's elder son, Kumar, is raised by him while the new born Shanmugam is raised by Gowri (each unknowing of the other.) All these happens within 10 mins of the film.

    Film opens with the grown Kumar (Sivaji) being pampered by his father. He drives to Geetha's (Devika) home who mistakes him as a driver and commands him to take her to college etc. A bemused Kumar plays along and one day deserts her along a lonely road. Angry Geetha attempts to walk off... nadaiyaa idhu nadaiyaa oru naadagam andrO nadakkudhu, idaiyaa idhu idaiyaa adhu illaadhadhu pOl irukkudhu

    Geetha, daughter of rich judge VKR later realises the truth and promptly falls in love with Kumar. madi meedhu thalai vaiththu vidiyum varai thoonguvOm, marunaal ezhundhu paarppOm

    In the meantime, Kumar meets Shanmugam and they become best of pals. Shanmugam has a girlfriend and in turn he asks Kumar if he has anyone special and if so, to describe her.... ennirandu padhinaaru vayadhu At the end of the song Kumar falls and hits a rock. Shanmugam brings him home and Kumar gets to know of Gowri (to whom he feels a strange affliation.)

    Through Kumar, Shanmugam's wedding is arranged for and when the bride's side questions Shanmugam's ancestry, Paramasivam stands guarantee although he has yet to meet Gowri.

    Things move fast and the police are on Nambiar's trail. Paramasivam is framed and once again he runs from the police (presumably) killing a constable along the way. He seeks refuge along the corridors of Gowri's house and is shocked to learn that she is alive. Unable to face her, he finally gets caught and is sentenced to death by the same judge friend VKR! In prison Paramasivam reveals the secret to Kumar but extracts a promise not to tell anyone about it.

    Gowri chances on a newspaper report and learns that her husband is to die soon! Both mother and son (without the knowledge of Shanmugam) try all means to save the life of Paramasivam, by making appeals right up to the president.
    When all fails a dejected Kumar sings sigappu vilakku eriyuthammaa.

    In the meantime Shanmugam's in laws are adamant of holding the wedding on the earlier agreed date, which coincidentally is the date Paramasivam is scheduled to hang!

    Will the wedding happen? Will Shanmugam learn the truth? What will happen to Paramasivam? To Gowri? To Kumar? See the silver screen for answers!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1393
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    93. Annai Illam அன்னை இல்லம்


    தணிக்கை 11.11.1963
    வெளியீடு 15.11.1963

    கதைத்துளி

    வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
    இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
    கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
    இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
    பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
    'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
    வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
    வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
    இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
    அந்தோ ?
    ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
    ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
    ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
    இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
    இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
    தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
    தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
    இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
    - அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்



    தயாரிப்பு – எம்.ஆர்.சந்தானம் - கமலா பிக்சர்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ்.வி.ரெங்கராவ், எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி, நாகேஷ், எம்.எஸ்.சுந்தரிபாய், குமாரி ச்ச்சு, ஜெயந்தி, ஓ.ஏ.கே.தேவர், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் பலர்

    மூலக்கதை – தாதா மிராஸி

    திரைக்கதை – ஜி.பாலசுப்ரமணியம்

    வசனம் – ஆரூர்தாஸ்

    பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், உதவி-பஞ்சு அருணாச்சலம்

    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

    சங்கீதம் – திரை இசை திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி

    பாடல்கள் ஒலிப்பதிவு & ரீரிகார்டிங் – டி.எஸ். ரங்கசாமி – மெஜஸ்டிக் ஸ்டூடியோ

    மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, பத்ரையா, பாண்டியன்

    உடைகள் – பி.ராமகிருஷ்ணன் உதவி – டி.எம்.சாமினாதன், கே.பி.குப்புசாமி

    ஒலிப்பதிவு – வி.சி.சேகர் – நெப்டியூன், உதவி ஹெச்.குப்புராவ், எம்.எஸ்.மணி

    செட் சாமான்கள் – சினி கிராஃப்ட்ஸ்
    செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம்
    எலக்ட்ரீஷியன் – வி.சேஷாத்திரிநாதன், W.முருகேசன், ஜி.பாஸ்கர்
    பெயிண்டிங்ஸ் – வி.வேங்கைமலை
    புரொடக்ஷன் நிர்வாகம் – கே.எஸ். துரை
    ஆபீஸ் நிர்வாகம் – சி. மாணிக்க வாசகம்
    ஆர்ட் – கங்கா உதவி – செல்வராஜ்
    ஸ்டில்ஸ் – திருச்சி அருணாசலம்
    விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிடீஸ்
    ஒளிப்பதிவு – பி.என்.சுந்தரம்
    எடிட்டிங் – என்.எம். சங்கர்
    பிராஸஸிங் – விடி.எஸ்.சுந்தரம், விஜயா லாபரட்டரி
    ஸ்டூடியோ – நெப்டியூன்-வாஹினி
    உதவி டைரக்ஷன் – கே.தங்கமுத்து, எஸ்.தேவராஜன், யூ.மோஹன்
    டைரக்ஷன் – பி. மாதவன்

    அன்னை இல்லம் விளம்பர நிழற்படங்கள் .. ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
    ஜூலை 1963-ல் வெளிவரப்போவதாக வெளியான விளம்பரம் : The Hindu : 14.4.1963



    பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1963



    முதல் வெளியீட்டு விளம்பரம்



    முதல் வெளியீட்டு விளம்பரம் [மதுரை]



    50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 3.1.1964



    50th Day Ad : The Hindu : 3.1.1964



    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 22.2.1964



    100th Day Ad : The Hindu : 22.2.1964

    Last edited by RAGHAVENDRA; 30th May 2014 at 03:58 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1394
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது நெஞ்செல்லாம் நீக்கமற நிறைந்த நெய்வேலி வாசு சாரின் அற்புதமான பதிவு
    (http://www.mayyam.com/talk/showthrea...l=1#post768704)

    டியர் ராகவேந்திரன் சார்,

    .....

    தங்களுக்கு மிகவும் பிடித்த 'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா"...பாடலைத் தங்களுக்காகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி.

    'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா" வீடியோ வடிவில்.

    முன்னொருமுறை தங்களை சென்னையில் நேரில் சந்தித்தபோது 'அன்னை இல்லம்' திரைப்படத்தில் வரும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ரசனையான
    காட்சியைப் பற்றி தாங்கள் என்னிடம் மிகவும் ரசித்துப் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. இப்போது நீங்கள் மறுபடியும் நடிகர்திலகத்தின் அந்த அட்டகாசமான நடிப்புக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

    அதுமட்டுமல்லாமல் தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியேசொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.

    தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)

    தாயிடம் அமைதி...

    தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.

    இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...

    அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .

    இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....

    முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..

    ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....

    ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
    என்று சொல்லிவிட்டு

    "இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!

    "உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை ஆட்டிக்கொள்வது அதியற்புதம்.

    இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.

    ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...

    அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.

    'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1395
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது அன்பிற்குரிய மாடரேட்டர் நவ் அவர்களின் அற்புதமான பதிவு

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post257451


    Annai Illam

    Starring Sivaji Ganesan, Devika, Muthuraman, Ranga Rao, Kannamba, Nagesh, MN Nambiar, OAK Devar, VK Ramasamy etc

    Producer: Kamala Pictures
    Lyrics: Kannadhasan
    Music: KV Mahadevan
    Director: P. Madhavan

    Paramasivam (Ranga Rao) is a rich man who believes in utmost charity. In the first 3 mins of the film, he gives away all his riches and becomes a destitude. In the meantime, his wife Gowri (Kannamba) is pregnant and is ready for delivery but Paramasivam is unable to collect money for treatment. In a moment of anger he fights with a moneylender and fearing for his life escapes. Nambiar seizes the moment and offers him refuge, saying that his wife had died in childbirth.

    Nambiar is involved in smuggling and makes Paramasivam his accomplice. Meanwhile Paramasivam's elder son, Kumar, is raised by him while the new born Shanmugam is raised by Gowri (each unknowing of the other.) All these happens within 10 mins of the film.

    Film opens with the grown Kumar (Sivaji) being pampered by his father. He drives to Geetha's (Devika) home who mistakes him as a driver and commands him to take her to college etc. A bemused Kumar plays along and one day deserts her along a lonely road. Angry Geetha attempts to walk off... nadaiyaa idhu nadaiyaa oru naadagam andrO nadakkudhu, idaiyaa idhu idaiyaa adhu illaadhadhu pOl irukkudhu

    Geetha, daughter of rich judge VKR later realises the truth and promptly falls in love with Kumar. madi meedhu thalai vaiththu vidiyum varai thoonguvOm, marunaal ezhundhu paarppOm

    In the meantime, Kumar meets Shanmugam and they become best of pals. Shanmugam has a girlfriend and in turn he asks Kumar if he has anyone special and if so, to describe her.... ennirandu padhinaaru vayadhu At the end of the song Kumar falls and hits a rock. Shanmugam brings him home and Kumar gets to know of Gowri (to whom he feels a strange affliation.)

    Through Kumar, Shanmugam's wedding is arranged for and when the bride's side questions Shanmugam's ancestry, Paramasivam stands guarantee although he has yet to meet Gowri.

    Things move fast and the police are on Nambiar's trail. Paramasivam is framed and once again he runs from the police (presumably) killing a constable along the way. He seeks refuge along the corridors of Gowri's house and is shocked to learn that she is alive. Unable to face her, he finally gets caught and is sentenced to death by the same judge friend VKR! In prison Paramasivam reveals the secret to Kumar but extracts a promise not to tell anyone about it.

    Gowri chances on a newspaper report and learns that her husband is to die soon! Both mother and son (without the knowledge of Shanmugam) try all means to save the life of Paramasivam, by making appeals right up to the president.
    When all fails a dejected Kumar sings sigappu vilakku eriyuthammaa.

    In the meantime Shanmugam's in laws are adamant of holding the wedding on the earlier agreed date, which coincidentally is the date Paramasivam is scheduled to hang!

    Will the wedding happen? Will Shanmugam learn the truth? What will happen to Paramasivam? To Gowri? To Kumar? See the silver screen for answers!
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1396
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளிகள்

    எண்ணிரண்டு பதினாறு வயது



    என்ன இல்லை எனக்கு



    மடி மீதூ தலை வைத்து



    நடையா இது நடையா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1397
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Karnan- 1964

    கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

    அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

    இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

    முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

    இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.

    கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

    கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

    ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

    மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.

    குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

    சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

    வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
    தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

    துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

    தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

    சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

    எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

    இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

    இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

    இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

    இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1398
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Gopal,

    what a deep analysis about karnan charector and the involvement of nadigarthilagam on that role.

    I am totally surrender.

  12. #1399
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    94. KARNAN கர்ணன்



    தணிக்கை – 24.12.1963
    வெளியீடு – 14.01.1964

    தயாரிப்பு – பி.ஆர். பந்துலு - பத்மினி பிக்சர்ஸ்

    வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
    பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
    இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    துணைத் தயாரிப்பு – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
    தயாரிப்பு-டைரக்ஷன் – பி.ஆர்.பந்துலு
    நடிக நடிகையர் –
    கொடை வள்ளல் கர்ணனாக – நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    என்.டி.ராமராவ் – கிருஷ்ணன்
    எஸ்.ஏ.அசோகன் – துரியோதனன்
    முத்துராமன் – அர்ஜூனன்
    ஓ.ஏ.கே.தேவர் – கனகன்
    ஜாவர் சீதாராமன் – பீஷ்மர்
    முத்தையா – சகுனி
    கே.நடராஜன் - தேரோட்டி அதிரதன்
    முஸ்தபா – கிருபாச்சாரியார்
    வீராச்சாமி – துரோணாச்சாரியார்
    ஆர்.பாலசுப்ரமணியம் – பரசுராமர்
    வி.எஸ்.ராகவன் – விதுரர்
    எஸ்.வி.ராமதாஸ் – இந்திரர்
    குலதெய்வம் ராஜகோபால் – சுமந்தன்
    பழ.செல்வராஜ் – துர்முகன்
    எஸ்.ஏ.ஜி.சாமி – திருதராஷ்டிரன்
    கண்ணன் – சஞ்சயன்
    பிரேம்குமார் – தருமர்
    சாண்டோ இந்திரஜித் – பீமர்
    தங்கராஜ் – நகுலன்
    சின்னையா – சகாதேவன்
    சண்முகசுந்தரம் – சல்லியன்
    கே.வி.ஸ்ரீநிவாசன் – முனிவர்
    மாஸ்டர் ஸ்ரீதர் – அனாதைப் பையன்
    மாஸ்டர் சுரேஷ் – விருக்ஷசேனன்
    பிரபாகர் ரெட்டி – சூரியன்
    சாவித்திரி கணேஷ் – பானுமதி
    தேவிகா – சுபாங்கி
    எம்.வி.ராஜம்மா – குந்தி தேவி
    ஸந்தியா – கனகன் மனைவி
    ருக்மணி – ராதை
    ஜி.சகுந்தலா – தோழி மங்களா
    கல்பனா – தரும தேவதை
    ஜெயந்தி – திரௌபதி
    ராஜேஸ்வரி – தோழி சத்யவதி
    சரோஜா – இளம் குந்தி
    மற்றும் ஸ்டண்ட் சோமு குழுவினரும், ராஜஸ்தான் போலீஸ் படையினரும், ஆயிரக்கணக்கான துணை நடிகர் நடிகைகளும்.

    கலை நுணுக்கப் பொறுப்பு
    ஒளிப்பதிவு டைரக்டர் – வி.ராமமூர்த்தி
    தந்திரக்காட்சிகள் – ரவி உதவி – பி.எல்.நாகப்பா, வி.சூர்யகுமார்
    ஒலிப்பதிவு பாடல்கள் & ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி
    வசன ஒலிப்பதிவு – வி.சிவராம் உதவி – எஸ்.ஜே.நாதன், எச்.நாகபூஷணராவ், ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ், கே.ஜி.சீனிவாசன்
    கலை – கங்கா உதவி – செல்வராஜ்
    இசை உதவி – கோவர்த்தனம் – ஹென்றி டேனியல்
    பாடல்கள் உதவி – பஞ்சு அருணாச்சலம்
    திரைக்கதை – ஏ.எஸ்.நாகராஜன்
    நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன், பி.ஜெயராமன் உதவி – லட்சுமி நாராயணன்
    எடிட்டிங் – ஆர்.தேவராஜன் உதவி – வி.பி.கிருஷ்ணன், சி.பழனி
    ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பீதாம்பரம், எஸ்.பார்த்தசாரதி உதவி – மணி, என்.ஏ.தாமோதரன்
    ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு உதவி – மு.கணேசன், எல்.ராதா, ஏ.டி.சண்முகம்
    தலை அலங்காரம் – ஜோஸஃபின்
    அரங்க ஓவியம் – முத்து உதவி – என்.சுப்பய்யா, பி.சுப்பிரமணி
    அரங்க நிர்மாணம் – ஏ.நாகரத்தினம் உதவி – டி.எஸ்.வெங்கடேசன்
    சிற்ப வேலைப்பாடு – கே.ஜி. வேலுசாமி உதவி – பாட்சா
    மின்சார மேற்பார்வை – வி.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.சந்திரன்
    வர்ண ரசாயனம் – பிலிம் சென்டர் பம்பாய்
    தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ். சுப்ரமணியம்
    அரங்க அலங்காரம் – எம்.சுப்ரமணியம், எஸ்.மணி
    அரங்க அலங்காரப் பொருட்கள் – சினி கிராஃப்ட்ஸ், கிரி மியூஸியம்
    புகைப்படம் – ஆர்.வெங்கடாச்சாரி
    விளம்பர ஓவியம் – ஜி.ஹெச். ராவ்
    விளம்பர நிர்வாகம் – அருணா & கோ.
    அரங்க நிர்வாகம் - ஆர். பாலு உதவி – என்.வி.மூர்த்தி, டி.வெங்கடாச்சலம்
    வில்வித்தை நிபுணர் – ராமமூர்த்தி
    அணிகலன், ஒப்பனை சாதனங்கள் – கிரிஷ்கோ, கணேஷ் ஜுவல்லரி
    துணிமணிகள் – இந்தியா சில்க் ஹவுஸ், ஸாரி சென்டர்
    ஸ்டூடியோ – விஜயா, நிர்வாகம் – வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ்
    உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், பழ.செல்வராஜ்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #1400
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கர்ணன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரம்



    1. மன்னவர் பொருள்களைக் கை கொண்டு நீட்டுவார் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    2. என்னுயிர்த் தோழி – பி.சுசீலா
    3. மழை கொடுக்கும் கொடையுமொரு – சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
    4. என்ன கொடுப்பான் – பி.பி.ஸ்ரீநிவாஸ்
    5. ஆயிரம் கரங்கள் நீட்டி – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன்
    6. கண்கள் எங்கே – பி.சுசீலா கோரஸ்
    7. இரவும் நிலவும் வளரட்டுமே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
    8. கண்ணுக்கு குலமேது – பி.சுசீலா
    9. போய் வா மகளே – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
    10. மஞ்சள் முகம் நிறம் மாறி – பி.சுசீலா கோரஸ்
    11. மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா – சீர்காழி கோவிந்தராஜன்
    12. உள்ளத்தில் நல்ல உள்ளம் – சீர்காழி கோவிந்தராஜன்
    Last edited by RAGHAVENDRA; 1st June 2014 at 06:51 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •