Page 117 of 185 FirstFirst ... 1767107115116117118119127167 ... LastLast
Results 1,161 to 1,170 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1161
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெற்ற மனம் சிறப்புச் செய்திகள்

    1. இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பவர்



    திரு கே.வி.சீனிவாசன்.

    ரங்காராவ் அவர்கள் தன் ஒரிஜினல் குரலிலேயே தமிழை நன்றாகப் பேசக் கூடியவர். என்றாலும் என்ன காரணத்தாலோ இப்படத்தில் அவருக்கு இரவல் குரல் பயன் படுத்தப் பட்டது.

    திரு கே.வி.சீனிவாசன் அவர்கள் மனோகரா நாடகத்தில் நடிகர் திலகம், பத்மாவதியாக நடித்த போது மனோகரனாக நடித்தவர்.


    2. பாரதிதாசன் பாடலை சந்திரபாபு இப்படத்தில் மட்டுமே பாடியுள்ளதாகத் தெரிகிறது. வேறெந்தப் படத்திலேனும் அவர் பாரதிதாசன் பாடல்களைப் பாடியுள்ளாரா என்பதை தெரிந்த நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    3. இப்படத்தில் இடம் பெற்றுள்ள டி.எம்.எஸ். பாடல் இது வரை வெளியே அதிகம் ஒலித்ததாகத் தெரியவில்லை. மிகவும் அருமையான பாடல்.
    Last edited by RAGHAVENDRA; 19th September 2013 at 08:01 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1162
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    66. விடிவெள்ளி VIDIVELLI



    தணிக்கை – 24.12.1960
    வெளியீடு – 31.12.1960
    தெலுங்கில் கஷ்ட சுகாலு

    தயாரிப்பு – பிரபுராம் பிக்சர்ஸ்
    நடிக நடிகையர்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எஸ்.வி.ரங்கா ராவ், எம்.என்.ராஜம், கே.பாலாஜி, பத்மினி பிரியதர்ஷினி, டி.ஆர்.ராமச்சந்திரன், சாந்தகுமாரி, எம்.ஆர்.சந்தானம் மற்றும் பலர்

    ஒளிப்பதிவு டைரக்டர் – ஏ.வின்சென்ட்
    ஒளிப்பதிவு – பி.என். சுந்தரம்

    ஒலிப்பதிவு டைரக்டர் – ஏ. கிருஷ்ணன்
    ரிக்கார்டிங், ரீரிக்கார்டிங் – டி.எஸ். கிருஷ்ணா

    நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன்

    உடை அலங்காரம் – பி. ராமகிருஷ்ணன்

    ஆர்ட் டைரக்ஷன் – கங்கா, உதவி செல்வராஜ்

    ஸ்டில்ஸ் – திருச்சி கே. அருணாச்சலம்

    மேக்கப் – ஹரிபாபு, பீதாம்பரம், ரங்கசாமி, ராமசாமி, குருசாமி, பாண்டியன்

    எடிட்டிங் – என்.எம். சங்கர், உதவி – வி.விஸ்வநாதன்

    புரொடக்ஷன் மற்றும் நிர்வாகம் – பி. நடராஜன், உதவி – தசரதன்

    ப்ரொடக்ஷன் உதவியாளர்கள் – பொன்ராஜ், குப்புசாமி, ஜி.கே.ராஜு, பொன்னுரங்கம்

    அசோஸியேட் டைரக்ஷன் – பி. மாதவன்

    உதவி டைரக்ஷன், உதவி எடிட்டிங் – கே.எஸ். துரை

    உதவி வசனம் – டி.ஏ. சடகோபன்

    ஸ்டூடியோ – விஜயா வாகினி

    கதை வசனம் டைரக்ஷன் – சி.வி.ஸ்ரீதர்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1163
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்


    1. பண்ணோடு பிறந்த்து தாளம் – கண்ணதாசன் – ஜிக்கி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
    2. என்னாளும் வாழ்விலே – மருதகாசி – பி.சுசீலா
    3. இடை கையிரண்டில் ஆடும் – கண்ணதாசன் – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
    4. காரு சவாரி ஜோரு – கு.மா.பாலசுப்ரமணியன் – ஜிக்கி, திருச்சி லோகநாதன்
    5. நினைத்தால் இனிக்கும் சுபதினம் – மருதகாசி – ஜிக்கி
    6. என்னாளும் வாழ்விலே சோகம் – மருதகாசி – பி.சுசீலா
    7. நான் வாழ்ந்த்தும் உன்னாலே – கண்ணதாசன் – ஜிக்கி
    8. கொடுத்துப் பார் பார் – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, திருச்சி லோகநாதன், ஜிக்கி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1164
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விடிவெள்ளி பாட்டுப் புத்தகத்தின் நிழற்படங்கள்



















    Last edited by RAGHAVENDRA; 20th September 2013 at 08:13 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1165
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்

    பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய நிழற்படங்கள்

    சாதனைச் செப்பேடுகள்

    காவிய விளம்பரம்


    காவிய விளம்பரம் : The Hindu : 5.10.1960


    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.12.1960



    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 28.12.1960



    முதல் வெளியீட்டு விளம்பரம் : கலைமகள் : ஜனவரி 1961



    100வது நாள் விளம்பரம் : The Hindu : 9.4.1961



    குறிப்பு:
    1. இக்காவியம் 100 நாள் கண்ட அரங்குகள்:
    சென்னை - சித்ரா - 104 நாட்கள்
    சென்னை - கிரௌன் - 104 நாட்கள்
    மதுரை - சிந்தாமணி - 104 நாட்கள்

    2. சென்னை 'சயானி'யில் 76 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் ஓடிய இக்காவியம், ஒரு சிறந்தவெற்றி கண்ட காவியம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

    3. "விடிவெள்ளி" மற்றும் "பாசமலர்" திரைக்காவியங்கள், 1959-ல் ஒரே நாளில் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டன. "விடிவெள்ளி" 31.12.1960 அன்றும், "பாசமலர்" 27.5.1961 அன்றும் வெளிவந்தன.

    வரலாற்று ஆவணம் : முரசொலி : 2.10.1959


    "விடிவெள்ளி" தொடக்கவிழா
    [இந்நிழற்படத்தில் எஸ்.எஸ்.வாசனுக்கு அருகே இடதுஓரம் வி.சி.சண்முகம், முத்துமாணிக்கத்திற்கு அருகே ஸ்ரீதர், ராம்குமாரைதோளில் தூக்கிவைத்துக் கொண்டுள்ளார்; முத்துமாணிக்கத்திற்கு முன்னே நின்றுகொண்டிருக்கும் குழந்தை, பிரபு]



    பொக்கிஷப் புதையல்

    வரலாற்று ஆவணம் : நடிகர் திலகம் பற்றி டைரக்டர் ஸ்ரீதர்

    நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) : ஆகஸ்ட் 1962





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1166
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    நாம் கூட்டு பிரார்த்தனையே செய்வோம்.உங்கள் தலைமையில்.
    அவள் யார், பெற்ற மனம், வளர்பிறை நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.

  8. #1167
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    விடிவெள்ளி.
    ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் படம்.அருமை நண்பருக்கு விடிவெள்ளி என்று நடிகர்திலகத்தின் கமெண்ட். கல்யாண பரிசு வெற்றி பெற்றும் போதிய வாய்ப்பு பெறாத ஸ்ரீதருக்கு உதவியாய் இந்த படத்தை நண்பரை வைத்து தயாரித்தார். ஏ.எம்.ராஜா ,நடிகர்திலகத்திற்காக இசையமைத்த முதலும் கடைசியும் ஆன படம். தமிழில் ஓட்ட நடை பாடல்கள் மிகவும் குறைவு. அவ்வாறு வந்தவற்றில் மிக சிறந்தவை கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை,இரவுக்கும் பகலுக்கும்(எங்கள் தங்க ராஜா).
    மற்ற பாடல்கள் எந்நாளும் வாழ்விலே,இடை கையிரெண்டில், பண்ணோடு பிறந்தது. எல்லாமே superb .
    சிவாஜி-சரோஜாதேவி இணை மிக பாந்தம். கொடுத்து பார் துள்ளல்,காதல் காட்சிகள் (சிவாஜி சிறிதே குற்ற உணர்வில்)நன்றாக இருக்கும். படமும் நன்றாக துவங்கி துவளும். இறுதியில் லாஜிக் உதைக்கும்.எந்த தகப்பனாவது காதலை பிரிக்க ,சிறு வயதில் இறந்த தன் மகனையே மகளோடு இணைத்து பேச வாய்ப்புண்டா?
    மிக சிறப்பான வெற்றி பெற்றாலும்,இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டிய படம்.நடிகர்திலகம் அருமையாய் பண்ணியிருப்பார்.இதற்கு பிறகு ஸ்ரீதர்-சிவாஜி இணைந்தது 7 வருடம் கழித்தே.(நெஞ்சிருக்கும் வரை)ஊட்டி வரை உறவு நீண்ட நாள் தயாரிப்பினால் பிந்தி விட்டது ரிலீசில்.
    Last edited by Gopal.s; 19th September 2013 at 12:33 PM.

  9. #1168
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1169
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவ மன்னிப்பு 16.03.1961

    தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.

    பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளுவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!

    எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.

    சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.

    அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.

    Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.

    அட்டகாசமாக antics செய்யும் M .R .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.

    படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.
    Last edited by Gopal.s; 20th September 2013 at 08:51 AM.

  11. #1170
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    petramanam

    .

    ragavender sir gopal sir
    if you see the ad of "petra manam" in 1955 in direction it was mentioned as "prasad" and also "viraivil veli varugiradhu"
    but movie released only in 1960 with "bhimsingh direction"
    Is there any history for this late release and also change in direction, if so please share

    regards

    Gk
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •