Page 112 of 185 FirstFirst ... 1262102110111112113114122162 ... LastLast
Results 1,111 to 1,120 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1111
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குறவஞ்சி திரைப்படப் பாடல் காட்சிகள்

    1. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே



    2. உனக்கும் புரியுது எனக்கும் புரியுது



    3. படியளப்பேனென்று பாராள வந்தவன்



    4. காதல் கடல் கரையோரமே



    5. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1112
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குறவஞ்சி திரைப்படத்தின் பாடல்கள் பட்டியல்

    1. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - ரா.கிருஷ்ணமூர்த்தி - சி.எஸ்.ஜெயராமன்
    2. தொகையறா தண்ணீரில் மீனிருக்கும் - உனக்கும் புரியுது எனக்கும் புரியுது - கண்ணதாசன் - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா
    3. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது - தஞ்சை ராமையா தாஸ் - பி.சுசீலா
    4. செங்கயல் வண்டு கலின் கலின் என்று - திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, ஏ.பி.கோமளா, ஏ.ஜி.ரத்னமாலா
    5. காதல் கடல் கரையோமே - தஞ்சை ராமையா தாஸ் - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, பி.சுசீலா
    6. அலை இருக்குது கடலிலே - மு.கருணாநிதி - கே.ஜமுனா ராணி
    7. என்னாளும் தண்ணியிலே - தஞ்சை ராமையா தாஸ் - ஏ.எல்.ராகவன், ஜிக்கி
    8. படி அளப்பேனென்று - கண்ணதாசன் - சி.எஸ்.ஜெயராமன்
    9. அடி அத்தாச்சி நாழி பத்தாச்சி - தஞ்சை ராமையா தாஸ் - ஏ.எல்.ராகவன், ராஜேஸ்வரி
    10. ஆலையிட்ட கரும்பாக - கண்ணதாசன் - சிதம்பரம் ஜெயராம்
    Last edited by RAGHAVENDRA; 12th August 2013 at 07:06 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1113
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குறவஞ்சி ... நடிகர் திலகத்தின் முத்திரைப் படங்களில் இதுவும் ஒன்று. கிணற்றுக் கடியில் வறியவனாக நடிக்க வேண்டிய காட்சியில் பழைய துணி இல்லாததால், அங்கிருந்த கோணியை அணிந்து நடித்தார். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் திலகம், அரண்மனை தர்பாரில் வழக்காடும் காட்சியில் தமிழ் மொழியின் சிறப்பையும், சாதி மறுப்புத் திருமணத்தின் சிறப்பையும் கலைஞரின் உரையாடலுக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பார். இந்தக் காட்சியில் நடிகர் திலகம் வழக்காடும் நேர்த்தி, மிகச் சிறந்த வழக்கறிஞராய் வாழ்வில் வரத்துடிப்பவர்களுக்கு நல்லதொரு பாடமாய் அமைந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் என் தனிப்பட்ட பார்வையில் பராசக்தி வழக்காடும் காட்சியை விட இது பல மடங்கு சிறப்பாக அமைந்திருக்கும். அதற்கு ஒரு காரணம் இந்த கால இடைவெளி எனலாம். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பில் மெருகேற்றிக் கொண்ட வந்த நடிகர் திலகத்திற்கு இந்தக் காட்சி நல்லதொரு தீனியாய் அமைந்ததும் குறிப்பிடத் தக்கது.

    இக்காட்சியைப் பாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற செம்மொழிச் சொற்றொடர் இக்காட்சியிலிருந்து உந்து சக்தியினைப் பெற்றது எனக் கூறலாம்.




    குறவஞ்சி திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களின் தகவலுக்காக

    நெடுந்தகட்டின் முகப்பு

    Last edited by RAGHAVENDRA; 13th August 2013 at 12:14 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1114
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Watched the movie during college days at Rajalakshmi theatre near Velachery.
    Highly watchable movie with unexpected climax.

  6. #1115
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1960- Kuravanji was expected to make it big as it was the first after NT parted from DMK to team with Mu.Ka but could stand upto expectation. I dont remember it too well as I saw it early 1970.

    I remember few sharp witty dialogues by Mu.Ka and few mischievous dialogue delivered by NT.

  7. #1116
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தெய்வ பிறவி-1960

    அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
    புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
    சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)

    சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.

    நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.

    நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
    ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.

    எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.

  8. #1117
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்பு கோபால் சார், 'தெய்வப்பிறவி' அலசல் அருமை.

    நடிகர்திலகம் - பத்மினி கலக்கலோடு சி.எஸ்.ஜெயராமனின் 'அன்பாலே தேடிய' மட்டுமல்லாது ஜமுனாராணியின் மூன்று முத்தான பாடல்களையும், தங்கவேலுவின் அட்டகாசமான நகைச்சுவையையும் ("ஏம்மா ரேடியோ, இன்னைக்கு என்ன டெலிவிஷன், வயர்லஸ் எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?") உள்ளடக்கியது.

    'தெய்வப்பிறவி' ஷூட்டிங்கின்போது காட்சிக்கான வசனங்கள் தவிர மற்ற நேரங்களில் நடிகர்திலகமும், எஸ்.எஸ்.ஆரும் பேசிக்கொள்வது கிடையாது. (ஆலயமணியின்போதுதான் நிலைமை சீரானது. அதன்பின் கைகொடுத்த தெய்வம், பச்சைவிளக்கு, பழனி, சாந்தி என்று கலக்கினர்).

    தெய்வப்பிறவி படப்பிடிப்பில் நடந்தவற்றை ஒருமுறை பத்மினி தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தார். சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் எதிரெதிரே நின்றாலும் பத்மினிதான் மீடியேட்டர். சிவாஜி பத்மினியிடம் "பப்பி, ராஜுவை இந்த இடத்தில் நிற்கச்சொல்லு. அப்போதான் நான் நடந்துவந்து நிற்பதற்கும் ராஜு வசனத்தை ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்" என்பாராம். அதற்கு எஸ்.எஸ்.ஆர். "இல்லே பப்பிம்மா, கணேஷை இந்தப்பக்கமாக வரச்சொல்லுங்கள். இல்லேன்னா அவர் முதுகு மட்டும்தான் கேமராவில் தெரியும். முகம் தெரியாது" என்பாராம்.

    அதற்கு பத்மினி, "என்ன இது, ரெண்டுபேரும் ஸ்கூல் பசங்க சண்டைபோட்டுக்கிட்டு பேசுற மாதிரி பேசிக்கிறீங்க" என்று சொல்லி சிரிக்க செட்டில் இருப்பவர்களும் சிரிப்பார்களாம்...

  9. #1118
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    61. தெய்வப் பிறவி Deiva Piravi



    Produced by: Kamal Brothers at AVM Studios, Madras
    Recorded on RCA Sound System
    Directed by Krishnan Panju

    தயாரிப்பு – கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.நடராஜன், கே.சாரங்கபாணி, ஏ.கருணாநிதி, எஸ்.ராமராவ், என்.ல்லிதா, எம்.எஸ்.சுந்தரிபாய் மற்றும் பலர்

    கதை வசனம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன்

    பாடல்கள் – உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமைய்யா தாஸ், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கவி ராஜகோபால்

    சங்கீத அமைப்பு – ஆர்.சுதர்சனம், பின்னணி இசை – ஏவி.எம்.வாத்ய கோஷ்டி

    பின்னணி பாடியவர்கள் – சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், கே.ஜமுனா ராணி, ஆர்.ராஜலக்ஷ்மி, எல்.ஆர்.ஈஸ்வரி

    நடன அமைப்பு – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, ஏ.கே.சோப்ரா, பத்மா

    ஒளிப்பதிவு – எஸ்.மாருதி ராவ், ஆபரேடிவ் காமெராமேன் – எம்.புண்ணியகோட்டி

    ஒலிப்பதிவு டைரக்டர் – எம்.முகுல் போஸ்
    ஒலிப்பதிவு – எஸ்.பி.ராமனாதன்

    ஆர்ட் – ஹெச்.சாந்தாராம்

    புரோஸஸிங் – சார்தூல் சிங் சேத்தி

    எடிட்டிங் – எஸ்.பஞ்சாபி

    மேக்கப் – கே.என்.கினி, டி.எம்.ராமச்சந்திரன், டி.தனகோடி, கே.குருசாமி

    செட்டிங்ஸ் – எஸ்.ஆறுமுக ஆசாரி, வி.நாகன் ஆசாரி

    புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – எம்.சரவணன்

    புரொடக்ஷன் மேனேஜர்கள் – கே.கே.ரத்னம் பிள்ளை, என்.எஸ்.மணி

    ஸ்டூடியோ – ஏவி.எம்.ஸ்டூடியோ, சென்னை

    உதவி டைரக்ஷன் – ஆர்.பட்டாபிராமன், ஆர்.விட்டல்

    டைரக்ஷன் – கிருஷ்ணன் பஞ்சு


    கீழ்க்காணும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார்









    ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு - பத்மினி - நடிகர் திலகம்


    Last edited by RAGHAVENDRA; 16th August 2013 at 05:17 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1119
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் மற்றும் தகவல்கள்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

    The Mail : 8.4.1960

    The Mail : 10.4.1960

    The Mail : 5.5.1960

    The Mail : 12.5.1960

    The Mail : 16.5.1960

    The Mail : 19.5.1960

    குறிப்பு:
    அ. 1960-ம் ஆண்டின் சூப்பர்ஹிட் காவியமான "தெய்வப்பிறவி" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

    1. சென்னை - பிளாசா - 121 நாட்கள்

    2. சென்னை - பிராட்வே - 107 நாட்கள்

    3. சென்னை - ராக்ஸி - 100 நாட்கள்

    4. திருச்சி - வெலிங்டன் - 107 நாட்கள்

    5. சேலம் - ஓரியண்டல் - 107 நாட்கள்

    6. கோவை - ராஜா - 100 நாட்கள்

    [100வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்...!]

    ஆ. இதர முக்கிய நகரங்களான மதுரையில்[சென்ட்ரல் சினிமா] 79 நாட்களும், நெல்லையில்[ரத்னா] 79 நாட்களும், திண்டுக்கல்லில்[சோலைஹால்] 73 நாட்களும், வேலூரில்[நேஷனல்] 66 நாட்களும், நாகர்கோவிலில்[பயோனீர்பிக்சர்பேலஸ்] 58 நாட்களும், இன்னும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களும் ஓடிய இக்காவியம், 1960-ம் ஆண்டில் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் சாதனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தைப் பிடித்த காவியம் கலையுலக மாமேதையின் "படிக்காத மேதை".
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1120
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தேசீய திரைப்பட விருது 1960 – அகில இந்திய தரச் சான்றிதழ்









    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •