Page 102 of 185 FirstFirst ... 25292100101102103104112152 ... LastLast
Results 1,011 to 1,020 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1011
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    தேனும் பாலும் கூட கஸ்துரி பிலிம்ஸ் தானே? வீ.சி.சுப்பராமன் -இவர் nt தவிர வேறு யாரையும் வைத்து படங்கள் எடுத்ததாக நினைவில்லை.
    நான் சொல்லனும்னு நினைத்தவன், எதற்கும் 'தேனும் பாலும்' விளம்பரத்தைப் பார்த்து கன்பர்ம் பண்ணிட்டு வருவோமேன்னு தேடிப்பார்த்து கன்பர்ம் செஞ்சுட்டு வந்து பார்த்தால் அதுக்குள்ள நீங்கள் முந்திட்டீங்க. அது சரி, நீங்க சொன்னா என்ன நான் சொன்னா என்ன.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1012
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீங்கள் வேறு ,நான் வேறல்ல என்ற புரிதலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் கார்த்திக் சார்.

  4. #1013
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன்- 1959.

    நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

    தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

    இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

    1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

    2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

    3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

    4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
    (ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

    5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

    6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

    7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

    8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

    எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.

  5. #1014
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    நன்றி! இதோ... தங்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் மிகவும் பிடித்த Dr.ஷைலக்.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1015
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டபொம்மன் - தன்னுடைய சிறுபிள்ளை பருவத்திலிருந்து கட்டபொம்மனை தெருக்கூத்து, மற்றும் நாடகம் மூலம் பார்த்து உணர்ச்சி பொங்க அந்த வீரனை மனதோடு ஆத்மார்த்தமான ஆராதனை செய்ததன் பலனோ என்னவோ, கட்டபொம்மன் என்ற நாடகத்தை தான் நடத்தும்போதும் சரி, திரைப்படமாக எடுக்கும்போது தான் நடிக்கும்போதும் சரி, கிட்டத்தட்ட SPLIT PERSONALITY போல நாம் கட்டபொம்மனைத்தான் காண்போம், நம் சித்தர் சிவாஜியின் வடிவில்.

    CONVENTIONAL PERFORMANCE எல்லாவற்றையும் தூள் தூளாக்கி அதற்க்கு நான்கு அடுக்கு மேல் உள்ள SPIRITED PERFORMANCE அதுவும் HIGHEST EFFERVESCENCE நாம் காணமுடியும். இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாடகத்தில் நாம் பார்ப்பது ஒரு விதமான Performance. அதே நாடகம் திரைப்படமாக எடுக்கும்போது நாம் கண்டது மேற்கூறிய SPIRITED PERFORMANCE WITH HIGHEST EFFERVESCENCE .

    ஒருவர் மற்றவராக மாறும் தன்மை அதாவது psychiatry யில் கூறும் A possession state ,நாம் காட்சிக்கு காட்சி பார்க்கலாம். உதாரணமாக , தானாதிபதி பிள்ளையை கைது செய்ய எத்தனிக்கும் போது, " என்ன துணிச்சலடா உனக்கு " என்று கணநேரத்தில் கர்ஜிக்கும் இடமாகட்டும். அதற்க்கு சற்று முன்பு.."நான் பொருத்துகொள்ளலாம் பிள்ளை அவர்களே..ஆனால் நம்மை தூற்றமாடர்களா அந்நியர்கள் ....என்று பொருமலுடன் புலம்புவதகட்டும்...இப்படி பல காட்சிகள் நம் கண்முன்னே "ஒருவர் மற்றோருவராக மாறிய தன்மையை நன்கு புரியவைக்கும் !

    திரை உலகின் சித்தர் அல்லவா நம் நடிகர் திலகம், சிவாஜி கணேசன் என்ற உடலில் கட்டபொம்மன் என்ற ஆன்மாவை வரவழைத்து தனது உடலில் ஐகியபடுத்தி, கட்டபோம்மனயே பல நூறு ஆண்டுகளுக்கு பின் பேசவைத்த பெருமை கொண்டவர் நம் திரை உலக சித்தர் சிவாஜி அவர்கள்.

  7. #1016
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    The movie which made Kattabomman immortal, which is a research material till now for cinema buffs, which registered Sivaji's face as kattabomman in previous generations (thata,appa), current(Myself), future(My children)

    A long cherished dream from age of 7 came true for NT at age of 30

    Staged many times countless times as drama, ran like a hurricane in BO
    how much who ever types , it will always be liked
    NT didn't act he lived in that role
    Kattabomman voice could have been soft who knows,

    He broke all methods, schools of acting , performed like a lion roars in the movie

  8. #1017
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal sir,

    Your analysis is super, reading it again & again but searching for words to greet it, then how could I, if you are so good daily

  9. #1018
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Sowri sir for your write up on VPKB.
    Ragul, Thanks for your appreciation and definitely youngsters like you can take it further.

  10. #1019
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் நிழற்படம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1020
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நான் சொல்லும் ரகசியம் சந்திரபாபு வின் ஷைலக் தோற்றம் அருமையான நிழற்படம். அந்த பிரபலமான நாயக்கடி நோயாளி காட்சியில் அந்த நோயாளிக்கு வைத்தியம் பார்க்க இவரே நாய் போன்று மேஜைக்கு அடியில் குனிவதும், உடனே நோயாளி குனிவதும், ஒரு தட்டில் மருந்தை திரவமாக ஊற்றி அதை நாய் போல் குடிப்பது போல பாவலா காட்டுவதும் உடனே அந்த நோயாளி அதனைக் குடித்து விடுவதும் சிறந்த நகைச்சுவை மட்டுமின்றி, டாக்டரின் சமயோசித புத்தியையும் காட்டுகிறது. அதே போல் குரங்கு குடி நீரில் மருந்தை கலந்து விடுவதும் அது தெரியாமல் ஜி.சகுந்தலா அந்த மருந்தை நோயாளிக்குக் கொடுக்க ஏற்கெனவே பைத்தியமாய் இருந்த நோயாளி உடனே பைத்தியம் குணமாவது போல் வரும் காட்சிகள் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் சிரிக்க வைக்கும் வல்லமை படைத்தவை. குறிப்பாக நாய்க்கடி நோயாளி நாயைப் போல ஒரு காலைத் தூக்கப் போக உடனே சந்திரபாபு ஓடி வந்து அவரை சங்கிலியால் இழுத்துக் கொண்டு போவது போல் பாத்ரூமிற்கு அழைத்துச் செல்லும் காட்சி செம ரகளை. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த காட்சி டிவிடியில் எகிறி விடுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •