Page 101 of 185 FirstFirst ... 519199100101102103111151 ... LastLast
Results 1,001 to 1,010 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1001
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் சொல்லும் ரகசியம் நகைச்சுவை அம்சம் நிறைந்த படம். குறிப்பாக சந்திர பாபு வைத்தியராக வந்து அதகளம் பண்ணுவார். ஒரு நோயாளி நாய்க்கடிக்கு வைத்தியம் பார்க்க வரும் காட்சி திரையரங்கில் மிக பலத்த ஆரவாரம் பெறும். டி.வி.டியில் அந்தக் காட்சி இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் மற்ற காட்சிகளிலும் அவருடைய நகைச்சுவை சிறப்பாக இருக்கும். நடிகர் திலகத்தின் மிக ஸ்டைலான உடையலங்காரம், சொல்லவே வேண்டாம். பாகம் 11ல் வாசு சார் எழுதி வரும் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடரில் நான் சொல்லும் ரகசியம் இடம் பெறும் போது அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

    பார்க்க வேண்டிய படம் நான் சொல்லும் ரகசியம். ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் இடம் பெற்ற கண்டேனே உன்னை கண்ணாலே பாடல் நடிகர் திலகத்திற்கு மறைந்த பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடியுள்ள டூயட் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது.

    நான் சொல்லும் ரகசியம் வெற்றிப் படமாகும். 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வசூலில் நல்ல பலனளித்தது. இந்த தயாரிப்பாளரின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்று தான் நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைப்படமாகும்.

    இது வரை நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தைப் பார்க்காதவர்களின் தகவலுக்காக நெடுந்தகட்டின் முகப்பு இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1002
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள்

    கண்டேனே உன்னைக் கண்ணாலே



    பார்க்காத புதுமைகள் - ஹெலன் அவர்களின் நடனக் காட்சி .. ஹெலன் அவர்களின் நடனம் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் படங்களில், உத்தம புத்திரன், வணங்காமுடி, சித்தூர் ராணி பத்மினி ஆகியவை அடங்கும்.



    நான் சொல்லும் ரகசியம் - டி.எம்.சௌந்தர்ராஜன்




    ஒரு தொலைக்காட்சிக்கு அஞ்சலி தேவி அளித்துள்ள பேட்டியில் நடிகர் திலகத்தைப் பற்றிக் குறிப்பிடும் காணொளி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1003
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    Chevilo Rahasyam 1959 చెవిలో రహస్యం
    தெலுங்கில் செவ்வில்லோ ரஹஸ்யம் என மொழி மாற்றம் செய்யப் பட்டது.
    Last edited by vasudevan31355; 18th June 2013 at 09:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1004
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    The vidieo is wonderful. Kathavarayan one of the movvies I have missed those days, as iwas not impressed by the reports or vimasarnams i have received. I truly regret for having missed the picture after seeing story-clippings in the thread that way this filomography doing good job not only for general public,and alsofor some of our diehard fans like me, thanks to raghavender.
    iam not getting the link in you tube for the picture.

  6. #1005
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நான் சொல்லும் ரகசியம்' படத்தின் இன்னொரு சிறப்பம்சம் மனோரமா ஆச்சி அவர்கள் ஒரு காட்சியில் எஸ்.வி.சுப்பையா அவர்களின் மனைவி காமாட்சியாக அதாவது அஞ்சலி தேவியின் அம்மாவாக வருவார். ஒரே ஒரு காட்சி மட்டும். தற்கொலை செய்து கொள்ளப் போகும் சுப்பையா அவர்களை மறைந்து போன அவர் மனைவி காமாட்சி மனசாட்சியாய் வந்து தடுத்து நிறுத்தும் காட்சி. இதில் இன்னொரு வேடிக்கை தெரியுமா? மனோரமாவின் மகளாக வரும் அஞ்சலிதேவியின் பெயர் இந்தப்படத்தில் மனோரமா.



    1958-இல் வெளியான 'மாலையிட்ட மங்கை மனோரமாவின் முதல் படம். '1963-இல் வெளியான 'கொஞ்சும் குமரி'யில் மனோரமா அவர்கள் கதாநாயகியாக அறிமுகமான படம். ஆனால் அதற்கு முன்னமேயே 1957-இல் நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் மனோரமா தோன்றுவது ஆச்சி அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் கொண்ட அளவற்ற பற்றுக்கு நமது திலகம் அளித்த ஆசியோ!
    Last edited by vasudevan31355; 18th June 2013 at 09:57 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1006
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்தின் நிழற்படம் மிகவும் அருமை. அபூர்வமானது கூட. இதைத் தேடித் தந்த தங்கள் கடும் உழைப்பிற்கு என் பணிவான நன்றிகள். தங்கள் பங்களிப்பினால் இந்த திரியின் மாண்பு மென்மேலும் கூடுகிறது.
    பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1007
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் முகப்பிசை, முதன் முறையாக இணையத்தில் நமக்காக.

    http://www.mediafire.com/?s035pkpco926x5d
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1008
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சொல்லும் ரகசியத்திற்கு இவ்வளவு பங்களிப்பா? வேந்தரும்,வாசுவும் என்னை அதிசயிக்கவே வைக்கிறீர்கள்.

  10. #1009
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் சொல்லும் அதிசயத்தை... சாரி... ரகசியத்தைப் புரிந்து கொண்டீர்களா கோபால் சார்... இந்தப் படத்திலும் நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் ஸ்டைல் ,, என்று ஏராளமான விஷயங்கள் உள்ளன. டாக்டர் ஷைலக் .. சந்திரபாபு காமெடி அட்டகாசமாய் இருக்கும். நான் முன்னர் கூறியது போல் அந்த நாய்க்கடி நோயாளி காட்சி அமர்க்களமாய் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் ஓடும். ஆனால் டிவிடியில் சட்டென்று முடிந்து விடுகிறது. இந்தக் காட்சியின் போது தியேட்டரில் ஏக அமர்க்களமாய் இருக்கும். படத்தைப் பாருங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1010
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேனும் பாலும் கூட கஸ்துரி பிலிம்ஸ் தானே? வீ.சி.சுப்பராமன் -இவர் nt தவிர வேறு யாரையும் வைத்து படங்கள் எடுத்ததாக நினைவில்லை.
    Last edited by Gopal.s; 19th June 2013 at 09:35 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •