Page 63 of 185 FirstFirst ... 1353616263646573113163 ... LastLast
Results 621 to 630 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #621
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1957ம் ஆண்டிற்கான பேசும் படம் பத்திரிகையின் சிறந்த நடிகர் விருதினை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது, மக்களைப் பெற்ற மகராசி திரைக்காவியம். 1958 ஏப்ரல் மாத பேசும் படம் ஆண்டு மலரில் வெளியிடப் பட்டுள்ள கௌரவ ஜாபிதாவில் இது குறிப்பிடப் பட்டுள்ளது.

    Last edited by RAGHAVENDRA; 25th March 2013 at 10:31 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #622
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மேற்காணும் பட்டியலில் பார்த்தால் 1957ல் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் பேசும் படம் பத்திரிகையின் வெவ்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளன

    மக்களைப் பெற்ற மகராசி - சிறந்த நடிகர் சிவாஜி கணேசன், சிறந்த வசன கர்த்தா - ஏ.பி. நாகராஜன்
    பாக்கியவதி - சிறந்த நடிகை - பத்மினி
    புதையல் - சிறந்த வில்லன் - பாலய்யா, சிறந்த வில்லி - எம்.என்.ராஜம் [புதையல் மற்றும் முதலாளி], சிறந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு
    வணங்காமுடி - சிறந்த இசையமைப்பாளர் - ஜி.ராமநாதன், சிறந்த பாடகர் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #623
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    37. VANANGAMUDI வணங்காமுடி

    தணிக்கை – 10.04.1957
    வெளியான நாள் – 12.04.1957

    தயாரிப்பு - சரவண பவா & யூனிட்டி பிக்சர்ஸ்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், சாவித்திரி, எம்.கே.ராதா, வி.நாகையா, எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு, கண்ணாம்பா, ராஜ சுலோச்சனா, எம்.சரோஜா, சந்தானம் மற்றும் பலர்

    கதை வசனம் – ஏ.கே. வேலன்

    சங்கீதம் – ஜி.ராமநாதன்

    குரூப் டான்ஸ் – ஜெயந்தி மற்றும் குழுவினர்

    பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ்

    பின்னணிப் பாடகர்கள்
    எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, பி.லீலா, டி.வி. ரத்னம், ஜிக்கி, டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, எஸ்.சி.கிருஷ்ணன்

    நடன அமைப்பு – கே.என். தண்டாயுத பாணி பிள்ளை

    நடனம் – ஹெலன்

    ஒளிப்பதிவு – பி.ராமசாமி

    ஒலிப்பதிவு – ஏ. கோவிந்தசாமி

    எடிட்டிங் – கே. கோவிந்த சாமி

    ஆர்ட் டைரக்ஷன் – எஸ்.வி.எஸ். ராமராவ்

    செட்டிங்ஸ் – எஸ். ரங்கசாமி
    பெயிண்டிங் – முத்து, ராம்குமார்
    செட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்

    உடை அலங்காரம் – பி. ராமகிருஷ்ணன்
    மோல்டிங் – எம்.பி.கோவிந்த சாமி

    ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
    ஸ்டன்ட்ஸ் – ஸ்டன்ட் சோமு பார்ட்டி
    மேக்கப் – ஹரிபாபு, நாகேஸ்வர ராவ், ஆர். ரங்கசாமி
    சிகை அலங்காரம் – ஜோஸபின்
    தயாரிப்பு மேற்பார்வை – சி. சுந்தரம்
    ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – டி.கே. ராமசாமி
    நிர்வாகம் – ஏ.கே. பாலசுப்ரமணியம், சி. சுந்தரம்
    ஸ்டூடியோஸ் – நெப்டியூன் ஸ்டீடியோஸ், மதறாஸ்
    ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

    ப்ராசஸிங் – பி.வி. நாயகம்
    அஸோஸியேட் – டி. ராமசாமி
    லேப் – ஏவி.எம். லேபரட்டரி
    உதவி டைரக்ஷன் – என்.கே. கோபாலகிருஷ்ணன்
    உதவி கதை வசனம், உதவி டைரக்ஷன் – நாகர்கோயில் பத்மனாபன்

    ஸீனரியோ டைரக்ஷன் – பி.புல்லையா
    Last edited by RAGHAVENDRA; 26th March 2013 at 04:48 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #624
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி சிறப்புச் செய்திகள்

    1. தமிழ் இலக்கியங்களின் பெயர்கள் இடம் பெற்ற பாடல் வா வா வளர்மதியே வா ... எம்.எல்.வி. அவர்களின் புகழை என்னாளும் பாடிக் கொண்டிருக்கும்.

    2. இப் படத்தின் இயக்குநர் பி.புல்லையா அவர்கள் தாதா சாஹேப் பால்கே அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர்

    3. என்னைப் போல் பெண்ணல்லவோ, தோடி ராகத்தில் அமைந்த மிகச் சிறந்த பாடல். அந்தக் கால கட்டத்திலேயே பல மிகச் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் போற்றிப் பாராட்டிய பாடல்

    4. 1957ம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.ராமநாதன் அவர்களுக்குப் பெற்றுத் தந்த படம்.

    5. சமீபத்தில் இயற்கை எய்திய ராஜ சுலோச்சனா அவர்களின் மிகச் சிறந்த நடிப்பிற்கு மற்றுமோர் உதாரணம், வணங்காமுடி.

    6. சென்னை நகர திரையரங்க வரலாற்றில் முதல் முதலாக 80 அடிக்கும் மேல் உயரமாக கட் அவுட் வைக்கப் பட்ட படம் வணங்காமுடி. நடிகர் திலகம் கைகள் கட்டுண்டு இருப்பது போன்ற போஸ் வைக்கப் பட்டிருந்தது. சென்னை சித்ரா திரையரங்கம் அருகே தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருந்த கூவம் நதியின் நீர்ப் பரப்பில் இந்த கட் அவுட்டில் இருந்த நடிகர் திலகத்தின் ஒவியம் இரவில் ஜொலிக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, அவருடை இடுப்பு அளவிற்கே நீரில் பிரதிபலிப்பு இருக்கும். அப்படி என்றால் அந்த கட் அவுட்டின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

    7. இப்படத்தின் படப் பிடிப்பின் போது சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுந்திருப்பேன், ரசிகர்களின் நல்லாசியால் உயிர் பிழைத்தேன், சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர் கதையாகி விட்டேன் என கூறியுள்ளார் நடிகர் திலகம்.

    8. சாவித்திரி இரு வேடங்களில் நடித்த படம்.

    9. தல விஞ்சனி வீருடு எனத் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப் பட்டு வெற்றிகரமாக ஓடிய படம்.
    Last edited by RAGHAVENDRA; 26th March 2013 at 07:06 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #625
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்
    1. ராஜ யோகமே பாரீர் – பி.சுசீலா குழுவினர்
    2. மலையே உன் நிலையை நீ பாராய் – சீர்காழி கோவிந்தராஜன்
    3. ஓங்காரமாய் விளங்கும் நாதம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    4. நீ என்னைப் போல் பெண்ணல்லவோ – பி.சுசீலா
    5. வா வா வளர்மதியே வா – எம்.எல். வசந்த குமாரி
    6. கட்டழகு மாமா – டி.வி. ரத்னம்
    7. மோகன புன்னகை செய்திடும் நிலவே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
    8. ஓ குமிர்த கும்மா கொய்யாப் பழம் போலே – ஜிக்கி
    9. வாழ்வினிலே வாழ்வினிலே – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
    10. ஈரைந்து மாதமே – டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #626
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி - ஒவ்வொரு பாடலைப் பற்றியும் பல பக்கங்கள் ஆய்வுரைகள் எழுதலாம்.

    நடிகர் திலகத்திற்கு இரண்டு டூயட் பாடல்கள் உள்ளன. ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிக்கும் வாழ்வினிலே வாழ்வினிலே என்ற பல்லவியில் இதே போன்று மனோகரா படத்திலும் இடம் பெற்றிருக்கும். அதுவும் ஏ.எம். ராஜா அவர்கள் பாடிய டூயட் பாடல்.

    அறிமுகக் காட்சியே அட்டகாசம். சாவித்திரி ஓடத்தில் பாடிக் கொண்டே வருவதற்கும் படத்தின் டைட்டில் முடிவதற்கும் தொடர்ந்து உடனே நடிகர் திலகம் சிற்பி சித்திரசேனனாக அறிமுகம். அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்தப் புன்னகை .. வசீகரமான அந்த முகம் ... நம்மை சொக்கிப் போட்டு விடும்.

    அதே போல் தங்கவேலுவை அடித்த உடன் அடுத்த விநாடியில் பாட்டும் பரதமும் எனத் தொடங்கும் தொகையறாவுடன் பாடல் துவங்கும். அப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் விழிகளில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம்..

    இதோ நம்மை மகிழ வைக்க வணங்காமுடி திரைக்காவியத்தின் பாடல் காட்சிகள்

    ராஜ யோகமே பாரீர்

    மலையே உன் நிலையை நீ பாராய்

    ஓங்காரமாய் விளங்கும் நாதம்

    வா வா வளர்மதியே வா

    மோகன புன்னகை செய்திடும் நிலவே

    வாழ்வினிலே வாழ்வினிலே
    Last edited by RAGHAVENDRA; 25th March 2013 at 11:26 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #627
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ...

    நடிகர் திலகம் சாவித்திரி காதல் வயப் படும் அந்தக் காட்சி ... முதலில் நையாண்டிகளுடன் தொடங்குவதும் படிப் படியாக அது அன்பாக பின் காதலாக மாறுவதும் நடிகர் திலகத்தின் முகத்தில் அப்படியே கதை சொல்வது போல் வரிசையாக தோன்றுவது .... பிறவிக் கலைஞனய்யா நீர் எனக் கூக்குரலிடத் தோன்றும்...

    இவரல்லவோ காதல் மன்னன் என நீங்கள் நிச்சயம் மனதிற்குள் நினைப்பீர்கள். முடிந்தால் அந்தக் காட்சியை விரைவில் காணொளியாகப் பார்ப்போம். அப்போது இதைத் தாங்களும் உணர்வீர்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #628
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் சிறப்பு மிகு தோற்றங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #629
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி முதல் வெளியீட்டு விளம்பர நிழற்படம் - உபயம் பம்மலார் மற்றும் வரலாற்றுச் சுவடுகள்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #630
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி திரைப்படம்

    சென்னையில் வெளியான திரையரங்குகள் - சித்ரா, காமதேனு, கிரௌன், சயானி

    100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

    சென்னை - கிரௌன்,
    திருச்சி - பிரபாத்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •