Page 162 of 185 FirstFirst ... 62112152160161162163164172 ... LastLast
Results 1,611 to 1,620 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1611
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கை விளம்பர நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
    நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

    தங்கை

    [19.5.1967 - 19.5.2012] : 46வது ஆரம்ப தினம்

    பொக்கிஷப் புதையல்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : காஞ்சி : 4.6.1967



    52வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 9.7.1967


    குறிப்பு:
    1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 77 நாட்கள் வரை ஓடிய "தங்கை", ஒரு சிறந்த வெற்றிக்காவியம்.

    2. "தங்கை"யின் 50வது நாள் சென்னைப் பதிப்பு விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.


    பக்தியுடன்,
    பம்மலார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1612
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கை - பாடல் காட்சிகள்

    இனியது இனியது உலகம்


    கேட்டவரெல்லாம் பாடலாம்



    த்த்தித்த்த்திப் பக்கம் வந்து

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1613
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சாரின் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதப் பதிவு...

    இணைப்பு -

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post873298
    நாள் 8.06.2012 காலை 8.35 மணி



    நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்.(வீடியோ தொடர்) 1)



    படம்: தங்கை.

    படம் வெளி வந்த ஆண்டு: 19.5.1967

    தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.

    சண்டைப் பயிற்சி: 'ஸ்டன்ட்'சோமு அவர்கள். உதவி: அழகிரிசாமி அவர்கள்.



    நடிகர் திலகம் அவர்கள் பல படங்களில் அற்புதமான சண்டைக்காட்சிகளில் அனாயாசமாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அவர் ஸ்டைலே தனிதான். ஆக்ஷன் படங்களிலும் தன்னால் மிளிர முடியும் என்பதை அவர் 'தங்கை' படத்தின் மூலம் அட்டகாசமாக நிரூபித்தார். அந்த ஆரம்பமே அமர்க்களம்தான். நடிகர் திலகம் பாச,பந்த,உணர்வுகளின் சங்கமக் காவியங்களில் இருந்து சற்றே விடுபட்டு ஆக்ஷன் முவிகளில் கவனம் செலுத்த பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் என்றும் தங்கையைச் சொல்லலாம். அதற்கு வித்திட்டவர் கே.பாலாஜி அவர்கள். நடிகர் திலகத்தின் ஆக்ஷன் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் அவரே. அதே போல இளைஞர்களைக் கவரும் நடிகர் திலகத்தின் அருமையான ஸ்டைலான performance-க்கும் வழி செய்தது 'தங்கை'.

    இந்த சண்டைக்காட்சியைப் பாருங்கள். என்ன ஒரு அற்புதமான ஸ்டைல்! எதிரியுடன் தன் இரண்டு கைகளை சேர்த்துத் தட்டியபடியே களத்தில் இறங்கி,வில்லன் கத்தியை எடுத்தவுடன் முகத்தில் காட்டும் அந்த expression, சண்டை முடிந்தவுடன் எதிரியை வீழ்த்திவிட்டு, அவன் மேல் அப்படியே அமர்ந்து இடது கரத்தால் ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைக்கும் அந்த ஸ்டைலை எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த சண்டைக்காட்சி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது நிஜம்.

    எனவேதான் நடிகர் திலகம் சண்டைக்காட்சிகளிலும் பிரமாதப் படுத்தினார் என்பதை அனைவரும் அறியும் வண்ணம் 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' என்ற தலைப்பில் ஒரு வீடியோ தொடராக தரலாமே என்ற எண்ணம் எழுந்தது. மறைத்து புதைக்கப்பட்ட நடிகர் திலகத்தைப் பற்றிய பல உண்மைத் தகவல்கள் நம் அன்பு பம்மலார் அவர்கள் மூலம் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டுவது போல சண்டைக்காட்சிகளில் நடிகர் திலகம் சுமார் ரகமே என்ற மாயை நொறுங்க தொடங்கப்படுவதுதான் இந்த 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' வீடியோத் தொடர். நிச்சயம் இத்தொடர் உங்கள் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையுடன் இதைத் தொடங்குகிறேன். வழக்கம் போல் தங்கள் அனைவரது அன்பும், ஆதரவும் இத்தொடருக்கும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன். இத்தொடரில் வரும் சண்டைக்காட்சிகளைப் பற்றிய தங்கள் அனைவரது எண்ணங்களையும், கருத்துக்களையும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    நன்றி!




    முதன்முறையாக இணையத்தில் 'தங்கை' படத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான சண்டைக்காட்சி தரவேற்றப்பட்டு தங்கள் அனைவருக்காகவும் இதோ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1614
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    114. Paalaadai பாலாடை



    தணிக்கை - 12.06.1967
    வெளியீடு - 16.06.1967

    தயாரிப்பு - கமலா பிக்சர்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, K.R. விஜயா, நாகேஷ், V.K.ராமசாமி, V. கோபாலகிருஷ்ணன், செந்தாமரை, மனோரமா, T.P. முத்துலட்சுமி, மற்றும் பலர்

    நடனம் - ராஜேஸ்வரி

    கதை வசனம் பிலஹரி (T. ராமன்)

    பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், தஞ்சைவாணன்

    பின்னணி பாடியவர்கள்
    T.M.சௌந்தர்ராஜன், P. சுசீலா, K. ஜமுனா ராணி, தாராபுரம் சௌந்தர்ராஜன்

    ஒலிப்பதிவு டைரக்டர் - T.S. ரங்கசாமி

    ஒலிப்பதிவு - T.D. கிருஷ்ணமூர்த்தி உதவி - R.S.வேதமூர்த்தி, ஜோ. அலோஷியஸ்

    ஆபரேடிவ் காமிராமேன்- D.S.பாண்டியன்

    மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, M.ராமசாமி, ரவி

    உடைகள் - P. ராமகிருஷ்ணன், உதவி - P.S. நடராஜன், குப்புசாமி

    நடன அமைப்பு - சின்னி-சம்பத், தங்கப்பன், சுந்தரம்

    ஸ்டில்ஸ் - C. பத்மனாபன்

    செட் ப்ராபர்டீஸ் - சினி கிராப்ட்ஸ்
    விளம்பரம் - எலிகண்ட்
    டிசைன்கள் - பக்தா

    ப்ராஸஸிங் - T. ராமஸ்வாமி, ஏவி.எம்.ஸ்டூடியோஸ் லாபரட்டரி, சென்னை-26.

    அரங்க அமைப்பு - B.R. ராமநாதன், S. ராம மூர்த்தி, G. மதுரை, N. கிருஷ்ணன், K. வீர்ராகவன்

    வண்ணக்கலை - R. முத்து, V. பரமசிவம்

    ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோ

    ஸோல் புரொப்ரைட்டர் - ஸ்ரீ A.L. சீனிவாசன்

    ஸ்டூடியோ பிரதம நிர்வாகி - T.V. வைத்தியநாதன்
    ஸ்டூடியோ புரோக்ராம்ஸ் - A. சுந்தர்ராஜன்

    Recorded on RCA Sound System

    நிர்வாகம் - K.S. துரை,

    கலை - கங்கா, உதவி - பாபு

    எடிட்டிங் - A. பால்துரைசிங்கம்

    உதவி டைரக்ஷன்- S.S. வாசன், S.K. அன்வர் ஜான், எம்.குருசாமி

    இசை திரை இசைத் திலகம் - K.V. மகாதேவன, உதவி - புகழேந்தி

    ஒளிப்பதிவு டைரக்டர் - G. விட்டல் ராவ்

    தயாரிப்பு - M.R. சந்தானம்

    திரைக்கதை - டைரக்ஷன் - A. பீம்சிங், அஸோஸியேட் டைரக்ஷன் - திருமலை-மகாலிங்கம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1615
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாலாடை - பாடல்களின் விவரங்கள்

    1. பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும் - பி. சுசீலா - கண்ணதாசன்
    2. எங்கே எங்கே எங்கே - டி.எம்.சௌநதர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
    3. அப்படி என்ன பார்வை அங்குமிங்கும் - பி.சுசீலா - கண்ணதாசன்
    4. டூயட்டு டூயட்டு - தாராபுரம் சுந்தர்ராஜன், கே.ஜமுனா ராணி - தஞ்சைவாணன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1616
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாலாடை காணொளிகள்



    முழுப்படம் காண




    எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1617
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரைப்படப்பட்டியல் திரியில் அடுத்து....



    Perception of Vision ... இந்த அறிவியல் கூற்றை வைத்து மேலே உள்ள படத்தை Mouse மூலம் ஸ்க்ரால் செய்து கொண்டே வந்தால் பின்னணியில் உள்ள கதவு பக்கவாட்டில் நகர்வது போல் தோன்றுகிறது. நடிகர் திலகம் காட்சியளிக்கும் நிழற்படம் கூட நடிக்கும் போலிருக்கிறதே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1618
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)

    அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.

    பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.

    கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. #1619
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    115. Thiruvarutchelvar திருவருட்செல்வர்




    தணிக்கை - 10.07.1967
    வெளியீடு - 28.07.1967

    தயாரிப்பு - ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்

    நடிக நடிகையர் -

    நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், நடிக மன்னன் ஜெமினி கணேஷ், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், நாட்டியப்பேரொளி பத்மினி, முத்துராமன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமா, பத்மஸ்ரீ நாகையா, ஜி.சகுந்தலா, குட்டி பத்மினி, கே.சாரங்கபாணி, ஈ.ஆர்.சகாதேவன், டி.என்.சிவதாணு, பி.டி.சம்பந்தம், வி.கோபாலகிருஷ்ணன், கே.வி.ஸ்ரீனிவாசன், மாஸ்டர் பிரபாகரன், மாஸ்டர் அண்ணாதுரை, எஸ்.ஆர்.தசரதன், கரிக்கோல்ராஜ், செந்தாமரை, எஸ்.ஆர்.கோபால், சிவசூரியன், சந்திரன்பாபு, குண்டுகருப்பையா, பாலசுந்தரம், ஆதம்ஷா, எஸ்.வி.ராஜகோபால்,

    சிவன்-சக்தி நடனம் - குமாரி வித்யா மூர்த்தி, எஸ்.ஆர்.ராஜு

    மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, பத்மனாபன், ராமசாமி, தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

    ஆடை அலங்காரம் - சி.கே.ராஜமாணிக்கம், காந்தி, தம்பு

    ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோ

    ஸ்டூடியோ நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

    ஓவியம் - ஆர்.முத்து, வி.பரமசிவம்
    மோல்டிங் - எம்.சிதம்பரம், ஆர்.ஜெயராமன்
    அரங்க நிர்மாணம் - ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
    அரங்க நிர்வாகம் - பி.ஆர்.ராமனாதன், எஸ்.ராம்மூர்த்தி
    பிரத்யேக ஒளி அலங்காரம் - ஏ.ஆர்.சிங்காரம்
    அரங்க அலங்காரம் - சினி கிராஃப்ட்ஸ், நியோ பிலிமோ கிராஃப்ட்ஸ்

    ஸ்டில்ஸ் - முருகப்பன் - எம்.ஆர்.பிரதர்ஸ்

    விளம்பர நிர்வாகம் - மின்னல், சாந்தி பப்ளிசிட்டீஸ்
    டிசைன்ஸ் - பக்தா
    விளம்பரம் - ஆஸ்பி லித்தோ வொர்க்ஸ்
    டைட்டில்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்

    பிரிண்டட் அண்டு பிராஸஸ்ட் அட் - ஜெமினி ஸ்டூடியோ லாபரட்டரி, சென்னை-6.

    புரொடக்ஷன் நிர்வாகம் - எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
    நிர்வாகம் - கே.வெங்கடாசலம், கே.என்.வைத்தினாதன்

    நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்

    ஒலிப்பதிவு - டி.சிவானந்தம், உதவி - ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், கே.ரங்கபாஷ்யம், எம்.துரைக்கண்ணு
    ஆபரேட்டர் - ஆர். அனந்தராமன்
    ஒலிப்பதிவு டைரக்டர் - டி.எஸ்.ரங்கசாமி

    கலை - கங்கா, உதவி - செல்வராஜ்

    எடிட்டிங் - ராஜன், டி.ஆர்.நடராஜன்

    ஆபரேடிவ் காமிராமேன் - எஸ்.வி.பத்மனாபன், கே.எஸ்.மணி,
    ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்

    சங்கீதம் - திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி - புகழேந்தி

    உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர்.தசரதன், எம்.கருப்பையன், தஞ்சை மதி

    அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்

    திரைக்கதை வசனம் டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன்
    Last edited by RAGHAVENDRA; 22nd June 2015 at 07:53 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks Russellmai thanked for this post
  19. #1620
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருவருட்செல்வர் விளம்பர நிழற்படங்கள்

    18.08.1968 தினமணி கதிர் இதழில் வெளிவந்த விளம்பரம்



    தினமணி கதிர் 11.08.1968 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •