Page 105 of 185 FirstFirst ... 55595103104105106107115155 ... LastLast
Results 1,041 to 1,050 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1041
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவண நிழற்படங்கள் ... தொடர்ச்சி....


    100வது நாள் விளம்பரம் : The Hindu : 23.8.1959



    வெள்ளிவிழா குறும்பிரசுர விளம்பரம்
    [மதுரை-ராம்நாட்-திருநெல்வேலி ஏரியாக்களின் விநியோகஸ்தரான 'அஜந்தா பிக்சர்ஸ்(மதுரை)' வெளியிட்டது]



    குறிப்பு:
    அ. "வீரபாண்டிய கட்டபொம்மன்", நமது தேசிய திலகத்தின் 55வது திரைக்காவியம் மற்றும் முழுமுதல் வண்ணச்சித்திரம். முழுவதும் 'கேவா' கலரில் தயாரிக்கப்பட்டு பின் 'டெக்னி' கலராக மாற்றப்பட்டு திரையிடப்பட்ட திரைக்காவியம். 'டெக்னி' கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் உருவாக்கப்பட்டன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'டெக்னி' கலரில் வெளிவந்த முதல் திரைக்காவியம்.

    ஆ. முதல் வெளியீட்டில் வெளியான அனைத்து ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், அதில்,25 அரங்குகளில் 97 நாட்களும் அதற்கு மேலும் மிகமிக வெற்றிகரமாக ஓடி விண்ணை முட்டும் சாதனையைப் புரிந்தது. இதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.

    இ. வெள்ளிவிழா கொண்டாடிய அரங்கு : 1
    1. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 181 நாட்கள்

    ஈ. 97 நாட்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடி விழாக் கொண்டாடிய அரங்குகள் : 24
    1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
    2. சென்னை - கிரௌன் (1017 இருக்கைகள்) - 111 நாட்கள்
    3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 111 நாட்கள்
    4. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 160 நாட்கள்
    5. திருச்சி - ஜுபிடர் - 153 நாட்கள்
    6. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 118 நாட்கள்
    7. திண்டுக்கல் - சக்தி (1208 இருக்கைகள்) - 111 நாட்கள்
    8. வேலூர் - ராஜா - 104 நாட்கள்
    9. திருவனந்தபுரம் - பத்மனாபா - 104 நாட்கள்
    10. கொழும்பு(இலங்கை) - கெயிட்டி - 140 நாட்கள்
    11. கோவை - ராஜா (1423 இருக்கைகள்) - 97 நாட்கள்
    12. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 97 நாட்கள்
    13. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 97 நாட்கள்
    14. நெல்லை - ராயல் (1053 இருக்கைகள்) - 97 நாட்கள்
    15. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 97 நாட்கள்
    16. தஞ்சை - யாகப்பா (1280 இருக்கைகள்) - 97 நாட்கள்
    17. குடந்தை - டைமண்ட் - 97 நாட்கள்
    18. விருதுநகர் - ராதா (731 இருக்கைகள்) - 97 நாட்கள்
    19. தர்மாபுரி - சென்ட்ரல் - 97 நாட்கள்
    20. கடலூர் - நியூசினிமா - 97 நாட்கள்
    21. பாண்டிச்சேரி - கமர்ஷியல் - 97 நாட்கள்
    22. ஆரணி - லக்ஷ்மி (1197 இருக்கைகள்) - 97 நாட்கள்
    23. காஞ்சிபுரம் - கண்ணன் (1210 இருக்கைகள்) - 97 நாட்கள்
    24. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 97 நாட்கள்

    உ. நமது நடிகர் திலகத்தின் 56வது திரைக்காவியமாக "மரகதம்", 21.8.1959 வெள்ளியன்று, "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெளியான 98வது நாளில் வெளியானதால், 97 நாட்கள் ஓடியிருந்த நிலையில் இக்காவியம், "மரகத"த்திற்கு வழிவிடவேண்டியதாகிவிட்டது. இதனால் இந்த வண்ணக்காவியம் 14 அரங்குகளில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களைக் கடந்தது.

    ஊ. மெகாமகா வெற்றிக்காவியமான "வீரபாண்டிய கட்டபொம்மன்", தமிழ்த் திரை வரலாற்றில், 1959-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம்.

    எ. 1959-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலக பாக்ஸ்-ஆபீஸில் வசூலில் மாபெரும் சாதனை புரிந்த திரைக்காவியங்கள்:
    1. வீரபாண்டிய கட்டபொம்மன்
    2. பாகப்பிரிவினை
    3. கல்யாண பரிசு

    ஏ. ஏழிசை வேந்தர், சாதனைச் சிகரம் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் ஒரே வருடத்தில் இரு வெள்ளிவிழாக் காவியங்களை அளித்த பெருமை நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. நமது நடிகர் திலகத்தின் 1959-ம் ஆண்டு வெளியீடுகளான "வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் "பாகப்பிரிவினை", இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய காவியங்கள். இதே சாதனையைப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என இன்னொரு ஐந்து முறை செய்து காட்டியிருக்கிறார் நமது சாதனைச் சக்கரவர்த்தி. [பாகவதருக்கு 1937-ல், "சிந்தாமணி"யும், "அம்பிகாபதி"யும் பொன்விழா(50 வாரங்கள்) கொண்டாடின.]

    ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.

    சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1042
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சாரின் கை வண்ணத்தில் அற்புதமான வடிவமைப்பில் கட்டபொம்மன் கம்பீரமாக...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1043
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    quote from Vasu Sir's earlier post




    The Gramophone Company of India Ltd தயாரித்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியத்திற்கான (R.P.M. Record) இசைத்தட்டில் உள்ள பாடல்களின் விவரங்கள். "டக்கு டக்கு" மற்றும் "சிங்காரக் கண்ணே" பாடல்கள், பாடல்கள் விவர அட்டையில் miss ஆகி இருப்பதைக் காணலாம்.



    இணையதளம் ஒன்றில் கிடைத்த தலைவரின் பென்சில் ஸ்கெட்ச் கட்டபொம்மன் ஆர்ட். வரைந்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை, அந்த ஓவியருக்கு நம் வாழ்த்துக்கள். அந்த தளத்திற்கும் நம் நன்றிகள்.


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1044
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    quote from my earlier post


    கெய்ரோ ஆசிய ஆப்பிரிக்க விழாவில் நடிகர் திலகம் சிறந்த நடிகர் பரிசு பெற்றது தெரியும். அந்த விழாவினைப் பற்றிய செய்தி, மற்ற விவரங்கள் நாம் அறிந்து கொண்டால் முழுமை அடையும்.

    மார்ச் 15 1960 அன்று நடைபெற்றது இரண்டாம் ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழா

    Prince of Samarkand என்கிற ருஷ்யப் படமும் தாஜ் மஹல் என்கிற இந்திய குறும்படமும் இணைந்து தங்கக் கழுகு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டன. சிறந்த நடிகருக்கான வெள்ளிக் கழுகு விருதிற்கு சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பாளருக்கான வெள்ளிக் கழுகு விருதிற்கு ஜி.ராமநாதன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு சிறப்பு விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. Kaiss and Laila என்ற படத்தில் நடித்த மகதா என்கிற எகிப்து நடிகையும் Five Golden Flowers என்ற படத்தில் நடித்த Yan Li Tchun என்கிற சீன நடிகையும் சிறந்த நடிகைக்கான வெள்ளிக் கழுகு விருதினை பகிர்ந்து கொண்டனர். இதே சீன படத்தை இயக்கிய Wang Chia Ni என்பவர் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக் கழுகு விருதினைப் பெற்றார். முழு நீள படங்களில் பங்கேற்றவர்களுக்கான 12 சிறந்த பங்களிப்பிற்கான நற்சான்றிதழ் பத்மினி அவர்களுக்கும் வழங்கப் பட்டது.

    இந்த விவரங்கள் ஹிந்து பத்திரிகையின் இணைய பதிப்பில் தரப் பட்டுள்ளன.

    நடிகர் திலகத்திற்கு வழங்கப் பட்ட சான்றிதழின் நிழற்படம்



    எகிப்து நடிகை மகதா நடித்த கைஸ் மற்றும் லைலா படத்திலிருந்து ஒரு நிழற்படம்



    சீன நடிகை நடித்த சீன மொழிப் படத்திலிருந்து ஒரு நிழற்படம்


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1045
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவணத்தின் நிழற்படம்... தொடர்ச்சி...


    1959-ல் முதல் வெளியீட்டில், வெள்ளிவிழா கொண்டாடிய அதே (உங்கள்)மதுரை 'நியூசினிமா' திரையரங்கில், சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ல் மீண்டும் வெளியாகி சக்கைபோடு போட்ட இக்காவியத்தின் 'இன்று முதல் [7.4.1989]' விளம்பரம்:

    வீரத்திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்"

    மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 7.4.1989


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1046
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவணங்களின் நிழற்படங்கள் .... தொடர்ச்சி...


    இசைத்தட்டு விளம்பரம் : The Hindu : 14.8.1959
    [திரைக்கதை-வசனம் மற்றும் பாடல்கள் அடங்கியது]



    காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 24.5.1959
    ["கட்டபொம்மன்" விமர்சனம் 'விகட'னில் மூன்று பக்கங்களில் வெளிவந்தது]

    முதல் பக்கம்



    இரண்டாவது பக்கம்



    மூன்றாவது பக்கம்




    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1047
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் - இந்த வரலாற்று காவிய நாயகனை நம் நடிகர் திலகத்தை தவிர யாரால் செவ்வன செய்திருக்க முடியும்? ஏழு வயது கனவல்லவா நம் திரை உலக சித்தருடயது.

    இனி எந்த சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களை பற்றியும் திரைப்படம் எடுக்க முடியாத சூழல் தான் நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் நிலவுகிறது..காரணம் ..நம் திரையுலக சித்தரை போல எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்கு ஒப்ப பொருந்தும் ஒரு நடிகன் நம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லையே ?

    இன்றைய சூழலில் எந்த நடிகனுக்கு தலையில் கிரீடம் மற்றும் கையில் செங்கோல் வைத்தால் நன்றாக இருக்கும் ? சற்று யோசித்து பாருங்கள். ?
    அப்படியே வேஷ பொருத்தம் ஒரு 25% பொருந்துகிறது என்று வைத்துகொண்டாலும் அந்த "குரல்" எந்த நடிகருக்கு இருக்கிறது ? தமிழ் ஒழுங்காக எவன் பேசுகிறான் ? " ல " போடவேண்டிய இடத்தில் "ள" போடுகிறான். "ழ " போடவேண்டிய இடத்தில் "ள" "லா" போடுகிறான் ! இதுதானே இன்றைய நிலை.

    மேலும் தயாரிப்பாளர்கள் நம் சித்தரை இது போன்ற காவியங்கள் எடுக்க முதலில் அணுகும்போது நடிகர் திலகம் இதுபோன்ற subject தேர்வு செய்தது முழு முழு வியாபாரநோக்கம் மட்டுமே அல்ல !

    இந்த சமுதாயத்திற்கு, இளைய தலைமுறையினருக்கு தன்னால் முடிந்தவரை தமிழறிஞ்சர்கள், பெரியவர்கள், விடுதலைக்கு பாடுபட்ட வீரர்கள், இதிகாச நாயகர்கள், வரலாற்று விற்பன்னர்கள் இவர்களை நினைவுபடுத்தி, அறிமுகபடுத்தி நம் தேசத்தின் பெருமைகளை அவர்கள் உணரவேண்டும் என்ற ஒரு புனிதமான நோக்கமும் கொண்டதால், தன்னுடைய கடமையில் அதுவும் முக்கியமான ஒன்று என்று கருதியதால் தான் நமக்கு இதுபோன்ற காவியங்கள் கிடைக்கபெற்றனர். திரை உலகின் சித்தரே நாங்கள் என்ன பேறு செய்தோம் உம்முடைய ரசிகராக பிறக்க.

    நம் நடிகர் திலகம் செய்தது போல இந்திய உலக அளவில் எந்த ஒரு நடிகரும் இதை செய்ததில்லை இனி செய்யபோவதும் இல்லை என்பது உறுதி !

    இப்பொழுதுள்ள நடிகர்கள் எவர் இதை போல செய்ய நினைத்தாலும் அது வெற்றி பெறாது, காரணம் அவர்களிடம் அதை நல்ல எண்ணத்திற்காக செய்யவேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் இல்லை !

    வெறும் வியாபாரம் மட்டுமே குறிகோளாக உள்ளது..! When there is no sincerity and dedication towards benefit of the society they will never succeed ! நடிகர் திலகம் 3 மாதத்தில் முடிக்கும் கட்டபொம்மன் போன்ற ஒரு படத்தை இவர்கள் முடிக்க மூன்று அல்லது ஐந்து வருடங்கள் எடுத்துகொள்வார்கள் ! காரணம் கேட்டால் ஆயிரம் காரணங்கள் கூறுவார்கள். இத்தனைக்கும் இவர்கள் வருடத்தில் ஒரு படம் கூட ஒழுங்காக நடிப்பதில்லை.

    தமிழ் திரைஉலகு உள்ளவரை தமிழர்களுக்கு நாயகர்களான கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய காவியங்கள் தான் நினைவில் இருக்கும் வேறு எந்த நாயகர்களும் நினைவில் நிற்க்கமாடார்கள் என்பது திண்ணம் !

    நடிகர் திலகத்திற்கு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கும், தாழ்புனற்சியால், தலைகனத்தால் குள்ளநரித்தனம்கொண்ட, மக்களை ஏமாற்றும் ஊழல் புரியும் துரோகிகளுக்கு அரணாக விளங்கும் தமிழக மண்ணே ...இந்த இழிவு உனக்கா ! அவருக்கா !
    Last edited by NTthreesixty Degree; 23rd June 2013 at 03:17 PM.

  9. #1048
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragavendran sir,

    Its raining info about வீரபாண்டிய கட்டபொம்மன், truly feeling blessed seeing it

    1000 thanks

  10. #1049
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன்

    இந்த ஒரு காட்சி போதும் நம் சித்தரின் சிறப்பை சொல்வதற்கு -

    இறைவனை கும்பிடும் நேரத்தில் அந்த முகத்தில் எவ்வளவு சாந்தம். பின்னர் வீரன் வந்து பநேர்மன் வருகையை சொன்னதும் எட்டப்பன் காட்டிகொடுத்த செய்திகேட்டு...போர் அறிவிப்பு வெளியிடும் இந்த ஒரு காட்சி.....

    முகம் சாந்த நிலையிலிருந்து எவ்வளவு டிகிரி கோப கனல் வீசுகிறதென்று பார்த்தால் புரியும். இந்த காட்சியில் நடிகர் திலகம் இல்லவே இல்லை ...அது உண்மையான கட்டபொம்மன் தான் என்று கற்பூரம் அடித்து கூறும் அளவிற்கு கிட்டத்தட்ட ஒரு Split Personality முறையில் உண்மையான கட்டபொம்மன் நம் கண் முன்பு தோன்றும் காட்சி.

    எக்காலத்திலும் எந்த ஒரு நடிகராலும் இதை மிஞ்சும் ஒரு நடிப்பை வெளிகொண்டுவரமுடியவே முடியாது !

    Nadigar Thilagam has set the top most standard of performance in his 25% capacity which none can dream of. No wonder, you were adjudged the Best Actor in the whole of Asia - Africa and was made the One Day Mayor and presented with the Golden key of Cairo on par with Pandit Jawaharlal Nehru. It is 2013 now and none was able to achieve that across India since 1960. - Truly A universal Actor, by all means !

    Last edited by NTthreesixty Degree; 23rd June 2013 at 11:29 PM.

  11. #1050
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன்

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •