Page 132 of 185 FirstFirst ... 3282122130131132133134142182 ... LastLast
Results 1,311 to 1,320 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1311
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பந்த பாசம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது கேள்வி குறியே. ஒரு நல்ல படம்.என்னை கவர்ந்தவை-
    நித்தம் நித்தம் பாடல்- அப்படியே மனசை கீறி கசிய வைக்கும்.சீர்காழியின் குரல் ஜாலம்,உணர்ச்சி பிழம்பான ஏற்ற இறக்க கசிவுகள்.மாயவநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் மேஜிக்.
    கவலைகள் கிடக்கட்டும்- ராகவேந்தர் குறிப்பிட்ட படி,சிவாஜியின் உடல் மொழி,பாவங்கள்,இயல்பான பாடலின் தாளகதிக்கேற்ப ,மனநிலைக்கேற்ப ...
    என்ன சொல்வது?
    பந்தல் இருந்தால்- ஆஹா ...வாணிக்கு அடுத்த அண்ணியின் இணைவில் ....
    ஒரு அற்புதமான இடம்- காதலியை சந்திக்கும் போது,கதாநாயகன் மனநிலை சரியிருக்காது.ஒரு வார்த்தை கூட பேசாமல் வெடுவெடுவென்று இருந்து சென்று விடுவார்.இந்த மாதிரி ஒரு காட்சியமைப்பை வைத்த பீம்சிங்கிற்கு சிரம் தாழ்த்திய 2014 இன் வணக்கம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes RAGHAVENDRA, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1312
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    83. ALAYAMANI ஆலயமணி





    தணிக்கை20.11.1962
    வெளியீடு 23.11.1962

    தயாரிப்பு - P.S.V. பிக்சர்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், S.S.ராஜேந்திரன்,, B.சரோஜா தேவி, R. விஜயகுமாரி, M.R.ராதா, M.V.ராஜம்மா,புஷ்பலதா, T.R.ராமச்சந்திரன், V.நாகையா, P.S.வீரப்பா மற்றும் பலர்

    மூலக்கதை: G. பாலசுப்ரமணியம்

    திரைக்கதை வசனம் ஜாவர் சீதாராமன்

    பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்

    நடனம்: S.M. ராஜ்குமார்

    செட் ப்ராபர்டீஸ் சினி கிராப்ட்ஸ்

    ஒலிப்பதிவு பாடல்கல் பின்னணி இசை – T.S. ரங்கசாமி

    ஒலிப்பதிவு வசனம்: K. துரைசாமி, முகுந்தன்

    கலை A பாலு

    மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, கஜபதி, சுந்தரம், ராஜேந்திரன்

    உடையலங்காரம்: P. ராமகிருஷ்ணன்

    ஸ்டில்ஸ் – R.P. சாரதி

    ஆபரேடிவ் காமிராமேன்: K.S. பாஸ்கர் ராவ்

    விளம்பரம் – அருணா அண்ட் கோ

    டிசைன்ஸ் – பக்தா

    வெளிப்புறப் படப்பிடிப்பு – பிரசாத் ப்ரொடக்ஷன்ஸ் யூனிட்

    ப்ராசஸிங் – விஜயா லாபரட்டரி

    ஸ்டூடியோ – விஜயா வாஹினி, மெஜஸ்டிக்

    உதவி டைரக்ஷன் - Ra.சங்கரன், , Rm. ராமசாமி, M.A. சௌந்தர்ராஜன்

    எடிட்டிங்: K.சங்கர், K. நாராயணன்

    ஒளிப்பதிவு – தம்பு

    இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி

    தயாரிப்பு - P.S. வீரப்பா

    டைரக்ஷன்: K சங்கர்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1313
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆலயமணி விளம்பர நிழற்படங்கள்
    உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்

    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்


    கலைக்கடவுளின் "ஆலயமணி"



    சாதனைப் பொன்னேடுகள்


    'விரைவில் வருகிறது' விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.6.1962





    முதல் வெளியீட்டு விளம்பரம் : ன்சுதேசமித்ர 18.11.1962





    'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 23.11.1962





    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 30.11.1962





    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 6.12.1962





    முதல் வெளியீட்டு விளம்பரம் : அறப்போர் : 7.12.1962





    First Release Ad : The Hindu : 1962





    50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 11.1.1963





    100th Day Ad : The Hindu : 2.3.1963





    100வது நாள் விளம்பரம் : மாலை முரசு : 3.3.1963
    [101வது நாளான 3.3.1963 ஞாயிறன்று கொடுக்கப்பட்டது]





    குறிப்பு:
    1. 3.3.1963 தேதியிட்ட 'மாலை முரசு' 100வது நாள் விளம்பரம், 101வது நாளில் கொடுக்கப்பட்டதால், மதுரையில் மட்டும், 101வது நாள் முதல் ஷிஃப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான 'பரமேஸ்வரி' இடம்பெற்றுள்ளது. "ஆலயமணி", மதுரை 'சென்ட்ரல் சினிமா'வில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி கண்டது. ஏனைய ஏழு அரங்குகளிலும், 105 நாட்கள் ஓடி, 1962-ம் ஆண்டின் 'இமாலய வெற்றிக்காவியம்' என்கின்ற அந்தஸ்தை அடைந்தது.

    2. அயல்நாடான இலங்கையிலும் " அபார வெற்றி "ஆலயமணி எழுப்பியது ஒலிகளை. 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

    3. மெகாஹிட் காவியமான "ஆலயமணி", 1962-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த Box-Office Record காவியம்.

    …..
    பக்தியுடன்,
    பம்மலார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1314
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    What wikipedia says about Alayamani:

    http://en.wikipedia.org/wiki/Aalayamani
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1315
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சித்தூர் வாசு
    தாங்கள் ஆலோசனையின் படி இனி வரும் படங்களின் நெடுந்தகடு விவரமும் அளிக்க முயல்கிறேன்.ஆலயமணி திரைப்படத்திற்கு இது தேவைப்படாது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Subramaniam Ramajayam liked this post
  11. #1316
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆலயமணி - திரைக்காவியத்தின் பாடல்களைப் பற்றிய விவரங்கள்


    1. மானாட்டம் தங்க மயிலாட்டம் - பி.சுசீலா
    2. கண்ணான கண்ணனுக்கு - சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
    3. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே - எஸ்.ஜானகி
    4. பொன்னை விரும்பும் பூமியிலே - டி.எம்.சௌந்தர்ராஜன்
    5. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
    6. சட்டி சுட்டதடா - டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks chinnakkannan thanked for this post
  13. #1317
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆலய மணி- 1962

    மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.

    ஆலய மணியின் கதையை பார்ப்போம்.

    பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.

    இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.

    இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.

    இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.

    மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)

    விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.

    பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.


    ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.


    இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.

    கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks chinnakkannan thanked for this post
  15. #1318
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    ALAYAMANI===A golden crown on NADIGAR THILAGAM'S FILMS CHALANGING ROLE
    SUPERBLY DONE BY OUR NT NO OTHER ACTOR CAN EVEN THINK OF DOING BETTER PERFORMANCE my favorie movie always'
    that year pesum padam has given honours as best actor to gemini film sumaithangi
    see the fate even that time
    MGR's remark --thambi ganesan thavira yaralum ponna mudiyatha role --open comment--those days. what a great styles acting mied with good songs music what not. simply great first picture celebrated 1oo days successful run in 4 theatres in madras
    after nododimannan record breaking collections at sri krishna mint area.

  16. #1319
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    இந்த விளம்பரத்தில் கீழ் பக்கத்தில் மேற்கண்ட படத்தின்

    விநியோகிஸ்த்தர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
    இலங்கை விநியோகஸ்தரின் விபரமும் உண்டு
    கவனித்து பாருங்கள் விபரம் பின்னர்

  17. #1320
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவா சார்
    வடிவுக்கு வளைகாப்பு இலங்கை விநியோகம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளோம்.
    Last edited by RAGHAVENDRA; 28th April 2014 at 07:42 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •