Page 124 of 185 FirstFirst ... 2474114122123124125126134174 ... LastLast
Results 1,231 to 1,240 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1231
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மருத நாட்டு வீரன் காணொளிகள்

    பார்க்கப் பார்க்கத் திக்ட்டாக தெள்ளமுது, ஸ்டைல் சக்கரவர்த்தியின் சூப்பர் தோற்றம், நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து சாவகாசமாக உண்டு உறங்கும் சௌந்தர ராஜனின் குரல், தேனினும் இனிதான வெங்கட்ராமன் அவர்களின் மெட்டமைப்பு, கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க வைக்கும் பாடல், மருத நாட்டு வீரன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...

    இதுவரை பார்த்திராதவர்கள் இப்பாடலை மறுபடியும் முதலிலிருந்து பார்ப்பார்கள் என்பது திண்ணம். இதோ நம் பார்வைக்கு



    விழியலை மேலே


    முழுத் திரைப்படமும் காண


    ஆசைக் காதல்


    புது இன்பம் ஒன்று


    அரும்புதிர முத்துதிர


    ராமராவ் பாட்டு


    எங்கே செல்கின்றாய்
    Last edited by RAGHAVENDRA; 16th October 2013 at 09:03 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1232
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மருத நாட்டு வீரன் திரைப்படத்தைப் பற்றிய நம் வாசு சாரின் பதிவிலிருந்து


    நடிகர் திலகத்தின் 72- ஆவது வெற்றிப் படைப்பு "மருத நாட்டு வீரன்"

    கேரளாவில் அமோக வெற்றி பெற்ற காவியம். 'ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்' தயாரிப்பில் 24.8.1961 அன்று வெளியான இப்படத்திற்கு இயக்குனர் திரு.T.R.ரகுநாத் அவர்கள். பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர்.

    ஜமுனா, கண்ணாம்பா, சந்தியா, P.S.வீரப்பா, ஸ்ரீராம், A.கருணாநிதி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

    இசை திரு.SV. வெங்கடராமன் அவர்கள். நடிகர் திலகத்தின் அறிவாளி, இரும்புத் திரை (நெஞ்சில் குடியிருக்கும்... அன்பருக்கு நானிருக்கும்...) ,கண்கள், கோடீஸ்வரன் மற்றும் மனோகரா போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.

    பாடல்களை இயற்றிவர்கள் திரு.மருதகாசி மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன்.

    சமாதானமே தேவை....
    புது இன்பம் ஒன்று..உருவாகி இன்று...
    பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?...
    விழியலை மேலே..செம்மீன் போலே...
    அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது ....

    போன்ற அற்புதமான பாடல்கள் இந்தத் திரைக் காவியத்தில்..

    இது தவிர "எங்கே செல்கின்றாய்?" என்ற P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் சோகமான பின்னணியில் ஒலிக்கும் பாடல், நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் ஒலிப்பது புதுமை.

    "கேரள மக்கள் அமோக ஆதரவு அளித்த படம்" என்று நடிகர் திலகம் அவர்கள் தன் சொந்தக் கருத்தாக இப்படத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

    மருத நாட்டு வீரனாக, சீன கைரேகை நிபுணராக, சமையல்காரராக,வேதியராக இப்படி பல மாறுபட்ட வேடங்களில் தோன்றி நடிகர் திலகம் அசத்திய படம்.

    'சமாதானமே தேவை'

    கட்சி பேதங்கள் எதற்காக...
    பல கலகமும் பகையும் எதற்காக...
    ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்...
    ஒரே கட்சியாய் இருந்திடுவோம்...

    ஆம்..நடிகர் திலகத்தின் கட்சியாய் இருந்திடுவோம்.

    இதோ நடிகர் திலகம் அவர்களின் குண நலன்களை விளக்கும் ஒரு ஒலி-ஒளிக் காட்சி....


    சமாதானத்தை விரும்பிய அந்த வெள்ளை மனம் கொண்ட மாசில்லா மாணிக்கம் நமக்கு அறிவுறித்திய "சமாதானமே தேவை" பாடல் ஒலி-ஒளிக் காட்சி வடிவில்...

    வாசு சாரின் முந்தைய பதிவிற்கான இணைப்பு

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post728943
    Last edited by RAGHAVENDRA; 16th October 2013 at 09:02 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1233
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    'மருத நாட்டு வீரன்'
    தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வருவதற்கு முன், கலர் டி.வி.க்கள் வருதற்கு முன், சென்னை கருப்பு வெள்ளை தூரதர்ஷனில் ஒவ்வொரு ஞாயிறன்றும் திரைப்படம் ஒலிபரப்பாகும்போது பார்த்த படம். (வண்ணப்படங்களைஎல்லாம் கூட கருப்பு வெள்ளையில் பார்த்த கொடுமைக்காலம்).

    'பருவம் பார்த்து அருகில்', மற்றும் 'விழியலை மேலே' பாடல்கள் இலங்கை வானொலி தயவில் ரொம்ப ஹிட்டாகி இருந்தன. மற்ற பாடல்கள் அவ்வளவாக பேமஸ் இல்லை.

    இந்தப்படத்தில் பதினான்கு கெட்டப்களில் வந்து நடிகர்திலகம் புதிய சாதனை படைத்தார். அதற்கு முன் திகம்பர சாமியார் படத்தில் ஒரே ரோலில் பனிரெண்டு கெட்டப்களில் நம்பியார் நடித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. அமைதியான அழகு கொண்ட நடிகைகளில் ஜமுனாவும் ஒருவர். அடுத்து நிச்சயதாம்பூலத்தில் அவரைக்காண ஆவலாய் இருக்கிறோம். (நிச்சயதாம்பூலம் விளம்பரப்பதிவுகள் நம் திரியில் இதுவரை எங்குமே இடம்பெறவில்லைஎன்று நினைக்கிறேன்)....

  5. #1234
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    73. பாலும் பழமும் Palum Pazhamum



    தணிக்கை – 23.08.1961
    வெளியீடு – 09.09.1961

    ஆனந்த விகடன் 03.09.1961 தேதியிட்ட இதழில் வெளியான பாலும் பழமும் திரைக்காவியத்தின் விளம்பரம்



    தயாரிப்பு – சரவணா பிலிம்ஸ், ஜி.என்.வேலுமணி
    திரைக்கதை, இயக்கம் – ஏ.பீம்சிங்
    கதை – ஜி.பாலசுப்ரமணியம் – பாசுமணி
    இசை – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
    ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
    எடிட்டிங் – ஏ.பீம்சிங், பால்துரைசிங்கம், திருமலை
    பாடல்கள் – கண்ணதாசன்
    குரல்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.சரோஜா தேவி, சௌகார் ஜானகி, பிரேம் நசீர், டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, கே.டி.சந்தானம், சாயிராம், ஏ.கருணாநிதி, மற்றும் பலர்


    பாலும் பழமும் ஷீட்டிங் ஸ்பாட் அபூர்வ நிழற்படம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1235
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து


    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1961


    முதல் வெளியீட்டு விளம்பரம் : திராவிட நாடு : 3.9.1961



    'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 9.9.1961


    'இப்பொழுது நடைபெறுகிறது' விளம்பரம்



    காவிய விளம்பரம் : The Hindu : 14.10.1961


    50வது நாள் : The Hindu : 28.10.1961


    12வது வாரம் : The Hindu : 25.11.1961


    100வது நாள் : The Hindu : 17.12.1961



    குறிப்பு:
    100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள் மொத்தம் பத்து, அவையாவன:

    1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

    2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

    3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

    4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

    5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

    6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

    7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

    8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

    9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

    10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
    Last edited by RAGHAVENDRA; 18th October 2013 at 08:07 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1236
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷம் ... தொடர்ச்சி...


    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

    "பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பு:

    வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961

    முதல் பக்கம்



    இரண்டாவது பக்கம்



    மூன்றாவது பக்கம்



    நான்காம் பக்கம்



    ஐந்தாம் பக்கம்



    ஆறாவது பக்கம்



    ஏழாவது பக்கம்



    எட்டாம் பக்கம்


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1237
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாலும் பழமும் திரைப்படத்தைப் பற்றிய சகோதரி சாரதா அவர்களின் பதிவு ...

    எம்எஸ்விடைம்ஸ்.காம் இணைய தளத்திலிருந்து...

    பாடல் பிறந்த கதை..... (5)

    "என்னை யாரென்று எண்ணி எண்ணி..."
    (பாலும் பழமும்)


    'காதலித்து ம்ணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கணகளையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடூக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்... இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்'

    இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப்போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்னதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாச்சலத்திடம்..

    "டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா" என்றார்.

    பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப்புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர்..

    "இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப்பற்றி நான் எழுதிய பாடல். இதில் 'அவன்' என்பதை அவள் என்று மாற்றிப்பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்" என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப்பார்த்தார். பாடல் இப்படி இருந்தது

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
    நான் 'அவன்' பேரை தினம் பாடும் குயிலல்லவா
    என்பாடல் 'அவன்' தந்த மொழியல்லவா

    இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட.... வாவ்... கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் "எப்படி கவிஞரய்யா இது...?"என்று .

    சொற்களை மாற்றியபின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப்பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது...

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
    நான் 'அவள்' பேரை தினம் பாடும் குயிலல்லவா
    என்பாடல் 'அவள்' தந்த மொழியல்லவா

    தொடர்ந்து கவிஞர்

    என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
    சருகான மலர் மீண்டும் மலராதய்யா

    என்று வரிகளை அடுக்கினார்.

    பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப்பார்க்க துவங்கி விட்டார். ஆனால் டி.எம்.எஸ். வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.

    "என்ன் சௌந்தர்ராஜன்... குரல் ஒரு மாதிரியாக இருக்கு?"

    "அதைச்சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்".

    (இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக்குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது 'டூயட்' பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)

    பீம்சிங் கேட்டார்.... "உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?"

    "இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்"

    "அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப்பாடலுக்கு வேண்டும்" என்றார் பீம்சிங்.

    டி.எம.எஸ்ஸும் வந்து விட்டார். "அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?" என்று கேட்க, இயக்குநர் சொன்னார் "இந்தக்காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விருகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்" என்றார்.

    டி.எம்.எஸ். ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் " அண்ணே..., மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்ன்ர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க". என்றார்.

    அதற்கு பீம்சிங்.. "பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்" என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

    நல்லவேளையாக பாடல் முடியும் வரை டி.எம்.எஸ். அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக்கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் ந்மக்கு நன்றாக தெரியும்....

    மீண்டும் சந்திப்போம்)
    இந்தப் பதிவிற்கான இணைப்பு

    http://www.msvtimes.com/forum/viewto...t=159&start=15
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1238
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சாரின் பதிவு

    டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

    பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

    அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

    கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

    முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா
    முறையுடன் மணந்த கணவன் முன்னால்
    பரம்பரை நாணம் போகுமா

    என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேச மறந்து சிலையாய் நின்றால்
    பேச மறந்து சிலையாய் நின்றால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி
    அதுதான் காதல் சன்னதி

    என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

    தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

    அன்புடன்
    இப்பதிவிற்கான இணைப்பு
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post737773
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1239
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    "BOX OFFICE RECORD" of PAALUM PAZHAMUM by our beloved Pammalar (Posted on 09.09.2010)

    பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'

    இன்று 9.9.2010, நடிப்பிலும், சாதனையிலும் தன்னிகரில்லா சிகரங்களைத் தொட்ட நடிப்புலக மகான், சாதனைகளின் சக்கரவர்த்தி நமது நடிகர் திலகத்தின் "பாலும் பழமும்" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டின் தொடக்கம்.

    பதிபக்தி (1958)[100 நாள்],
    பாகப்பிரிவினை (1959)[31 வாரம்],
    படிக்காத மேதை (1960)[22 வாரம்],
    பாவமன்னிப்பு (1961)[25 வாரம்],
    பாசமலர் (1961)[25 வாரம்]
    ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]

    தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத் தமிழனுக்கே!

    'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.

    இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.

    "பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.

    வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)

    வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10

    [ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

    2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

    3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

    4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

    5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

    6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

    7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

    8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

    9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

    10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்

    50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25

    [ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்

    2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்

    3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்

    4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்

    5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்

    6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்

    7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்

    8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்

    9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்

    10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்

    11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்

    12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்

    13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்

    14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்

    15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்

    16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்

    17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்

    18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்

    19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்

    20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்

    21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்

    22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்

    23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்

    24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்

    25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்

    6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7

    [ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்

    2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்

    3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்

    4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்

    5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்

    6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்

    7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்

    பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.

    சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

    அன்புடன்,
    பம்மலார்.

    (Thank you Pammalar sir)

  11. #1240
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக்,
    பம்மலாரின் சாதனைப் பட்டியல் மீள் பதிவிட்டு பாலும் பழமும் திரைப்படத்தின் வெற்றிப் பயணத்தை அழகாக அனைவருக்கும் புரியும் படி விளக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.

    தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும், இணையத்தில் முதன் முதலாக

    பாலும் பழமும் படத்தின் டைட்டில் இசை

    https://soundcloud.com/veeyaar/palum...um-title-music

    கேட்டு மகிழுங்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •