Page 155 of 185 FirstFirst ... 55105145153154155156157165 ... LastLast
Results 1,541 to 1,550 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1541
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கல்கி 04.09.1966 இதழில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் விமர்சனம்



    மஹாகவி காளிதாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பினைப் பற்றி பேசும் படம் இதழில் வெளிவந்த செய்தித் துணுக்கு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1542
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மகாகவி காளிதாஸ் திரைப்படத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள்... மீள் பதிவுகள்...
    நெய்வேலி வாசு சாரின் பதிவு
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post727296

    20.08.2011 – 2.15 pm

    அன்பு முரளி சார்,

    'மகாகவி காளிதாஸ்' பற்றிய தங்களது குறை திரு.ராகவேந்திரன் சார் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் திருப்திக்காக இதோ என்னுடைய பங்கு....

    'கல்லாய் வந்தவன் கடவுளம்மா....
    அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா...
    புல்லாய் முளைச்சவ சக்தியம்மா....
    அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா..ஆ..ஆ..ஆ...'

    கையில் அந்த ஊதுகுழலென்ன..
    தலையில் உச்சிக் குடுமி என்ன.....
    இரு கைகளிலும் வளையங்கள் என்ன...
    கருப்பு நிற கட்-பனியன் என்ன...
    கையில் பிடித்துள்ள கொம்பு என்ன...
    அதில் அழகாய்த் தொங்கும் சிறு மூட்டை தான் என்ன....
    ஆடுகள் மேய்க்கும் அழகென்ன ....
    ஊதுகுழல் ஊதும் உதட்டசைவுதான் என்ன...
    நடந்து வரும் நடையழகுதான் என்ன....

    நடிப்புச் சுரங்கத்தை வாரிக் கொடுத்த பாரியே!
    ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய்?...
    இந்த நன்றி கெட்ட உலகம் வேண்டாமென்றா?...

    (குறிப்பு : இந்தப் பாடலின் 1.09 நிமிடத்திலிருந்து 1.15 நிமிடம் வரை மிக உன்னிப்பாக அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1543
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மகாகவி காளிதாஸ் திரைப்படத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள்... மீள் பதிவுகள்...

    அன்பு நண்பர் கார்த்திக்கின் பதிவு...
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post727307

    20.08.2011 – 3.06 pm
    வாசுதேவன் சார்,

    'மகாகவி காளிதாஸ்' பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    மார்கழி மாதம் அதிகாலையில் எங்கள் தெரு கோயிலில், வருடாவருடம் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒலிபரப்புவார்கள். மற்ற புராணப்பட பாடல்கள் இருக்கிறதோ இல்லையோ, மகாகவி காளிதாஸ் பாடல்கள் நிச்சயம் இருக்கும். அதனால் எங்கள் தெரு மக்களுக்கு இப்படப் பாடல்கள் மனப்பாடம்...

    கல்லாய் வந்தவன்...
    சென்று வா மகனே...
    மலரும் வான் நிலவும்... (இரண்டு வெர்ஷன்)
    காலத்தில் அழியாத காவியம் பல தந்த...
    யார் தருவார் இந்த அரியாசனம்...

    இப்படி, இந்தப்படத்தின் பாடல்களை எப்போது எங்கே கேட்டாலும் மார்கழி மாத அதிகாலைப்பொழுது என் நினைவுக்கு வரும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1544
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அடியேனின் பதிவிலிருந்து..

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post727258

    20.08.2011 – 7.49 am

    காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கலை மன்னனே..
    காளி தாஸ் என்னும் கவிஞனை வடித்த மாபெரும் கலைச் சிற்பியே

    என்று அந்தத் திரைக்காவியத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே எழுதிக் கொண்டே இருக்கலாம்.

    அப்பாவி இடையனாக தேங்காயச் சில்லுகளை எடுத்து மாறு வேடத்தில் வந்திருக்கும் காளியிடம் நீட்டும் காட்சியா, அல்லது சென்று வா மகனே பாடல் காட்சியில் தான் மிகப் பெரிய உயரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அறியாத அந்த கள்ளங்கபடமற்ற முகத்தையும் அந்த நடையினையும் சொல்வதா, தன்னுடைய திருமணத்தைப் பற்றிய விவரம் அறியாமல் முதலிரவு அறையில் பழங்களை ருசிக்கும் குணத்தை மெச்சுவதா, தனக்கு காளியின் அருள் கிடைத்ததும் கோயிலில் யார் தருவார் அந்த அரியாசனம் என்று கணீரென்று பாடுவதை சொல்வதா

    “நடிகர் திலகம் ராஜ்ய சபா உறுப்பினராய் நியமனம் செய்யப் பட்டு, பதவியேற்ற நாளையொட்டி, தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியு்ம் நிகழ்ச்சியில் ஒளிபரபப் பட்ட முதல் பாடல், யார் தருவார் இந்த அரியாசனம் என்பது குறிப்பிடத் தக்கது”
    தர்பாரில் சைகையிலேயே ஒவ்வொரு கேள்விக்கும் அப்பாவியாக கையைக் காட்ட, அதற்கு மனோகர் தனி வியாக்கியானம் செய்ய, தன் முகத்தில் அப்பாவித்தனத்தையும் பெருமிதத்தையும் ஒரு சேர காட்டும் அந்த பாவத்தை சொல்லுவதா, புலவரான பின் தன்னுடைய உடல் மொழியிலேயே அந்தப் பாத்திரத்தின் சிறப்பினைக் கொண்டு வந்த பாங்கை சொல்வதா....

    ஒவ்வொரு காட்சியும் பல முறை பார்த்து ஆய்வு செய்ய வேண்டிய திரைக்காவியம் மஹாகவி காளிதாஸ்...
    …..

    இப்படிப் பல்வேறு பரிணாமங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரக்கல், மாணிக்கக் கல், மஹாகவி காளிதாஸ்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1545
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மகாகவி காளிதாஸ் திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் பதிவுகள்
    Part 1
    15.7.2009 01:07 AM - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post418855

    மகாகவி காளிதாஸ். - Part I


    தயாரிப்பு : கல்பனா கலா மந்திர்

    இசை : கே.வி.மகாதேவன்

    இயக்கம்: ஆர்.ஆர். சந்திரன்

    வெளியான நாள்: 19.08.1966

    வட மொழி இலக்கியத்தில் மிகப் பெரிய நிபுணனும் பல காவியங்களை படைத்தவனுமான காளிதாசன் வரலாற்றை தமிழில் சொல்லும் ஒரு முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டது. ஒரு கிராமத்தில் எதுவுமே தெரியாத ஒரு முட்டாள் எப்படி காளி அருள் பெற்று மேதையானான், போஜ மன்னனின் அரசவையில் தலைமை புலவன் பதவியை அடைந்தான், பின் அவன் சந்தித்த வீழ்ச்சி பற்றி சொல்கிறது இந்த படம்.

    கிராமத்தில் ஆடு மேய்க்கும் சின்னான். அவனுக்கு தாய் தந்தை இல்லை. அவனை வி.கே.ஆர் - சி.கே.சரஸ்வதி தம்பதியினர் வளர்த்து வருகிறார்கள். சின்னானுக்கு உலகமே தெரியாது. தன்னை வளர்த்தவர்கள் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கும் அவன் ஒரு சாப்பாட்டுப் பிரியன். குறிப்பாக இனிப்புகள் அதிலும் லட்டு என்றால் உயிர். காளி மேல் மிகுந்த பக்தி வைத்திருப்பவன். ஊருக்கு வெளியே உள்ள காளி கோவிலை தினம் சுத்தப்படுத்தி விளக்கு ஏற்றி வைப்பது அவன் வழக்கம். அதே ஊரில் உள்ள பூங்காவனம் என்ற பெண் அவனை விரும்புகிறாள். தன் மீது மிகுந்த பக்தி வைத்திருக்கும் சின்னானுக்கு காளி ஒரு வயதான மூதாட்டி உருவில் இடையே இடையே வந்து உதவுகிறாள்.

    அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் மிகுந்த அறிவாளி. அவளை அறிவுப் போட்டியில் வெல்பவனுக்கே மகளை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கிறான் மன்னன். ஆனால் இளவரசியை யாராலும் வெல்ல முடியவில்லை. தோற்பவர்களை பல வகையிலும் அவமானப்படுத்தும் அரசனின் மேல் புலவர்கள் அனைவருக்கும் கோவம் வருகிறது. அரசனை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஒரு முட்டாளை புலவன் போல் நடிக்க செய்து இளவரசியை திருமணம் செய்ய வைப்பது என்று தீர்மானம் எடுக்கின்றனர்.

    அவர்கள் தேடிச் செல்லும் வழியில் நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டும் சின்னானை பார்க்கிறார்கள். அவனே இதற்கு சரியானவன் என்று முடிவு செய்கிறார்கள். அவனுக்கு பலவகை ஆசை காண்பித்து அவனை அழைத்து செல்கிறார்கள். அவனது தோற்றத்தையும் ஆடையையும் மாற்றி அவனை கொலு மண்டபத்திற்கு கூட்டி சென்று இன்று சைகையினால் மட்டுமே பேசுவார் என்று சொல்லி, இளவரசி கேட்கும் சைகைகளை வேறு மாதிரி புரிந்துக் கொண்டு சின்னான் சைகை செய்ய அதற்கு வேறு விளக்கம் கொடுத்து அவனை வெற்றி பெற வைத்து விடுகிறார்கள். கல்யாணமும் நடந்து விடுகிறது. முதலிரவன்று உண்மை தெரிந்து விட இளவரசி அவனை காளி கோவிலிற்கு கூட்டி செல்கிறாள். அங்கே மனம் உருகி வேண்டும் தம்பதியினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் காளி, சின்னானை மேதையாக்குகிறாள். அவனிடம் போஜ மன்னனின் அரண்மனைக்கு செல்லும்படி கூறுகிறாள். இளவரசியையும் விலாசவதி என்ற பெயரில் போஜ மன்னனின் சபையினில் பாடகியாக்குகிறாள்.

    தன் வளர்ப்பு பெற்றோரை சந்தித்து விட்டு போஜ மன்னனை சந்திக்க வரும் காளிதாசன் கோவிலில் வைத்து விலாசவதியை பார்க்கிறான். அவளை வர்ணித்து ஒரு கவிதை பாட, அவன் பாடலில் பொருட்குற்றம் இருப்பதாக மன்னன் சொல்ல [அதாவது அன்று அமாவாசை, ஆனால் நிலவு வருவதாக காளிதாசன் பாடி விடுகிறான்] காளிதாசன் நிலவை வரவழைப்பதாக சவால் விடுகிறான். காளி அருளால் நிலவும் உதிக்கிறது. காளிதாசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, போஜ மன்னன் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான்.

    போஜ மன்னனின் அரசவையிலே தலைமைப் புலவர் தண்டி கவிராயர். அவருக்கு மன்னன் மீது சற்று கோபம். காரணம் மன்னன் காளிதாசனுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கிறான் என்று. ஆனால் காளி தேவியே அசரீரி வடிவில் காளிதாசனை புகழ்ந்து பேச தண்டியும் ஏற்றுக் கொள்கிறார்.

    அரசவை நாட்டியக்காரி மோகனாவிற்கு காளிதாசன் மேல் ஈர்ப்பு. ஆனால் காளிதாசனோ விலாசவதியை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மோகனா அவனை அடைய செய்யும் முயற்சிகள் தோல்வியுறுகின்றன.

    போஜ மன்னனின் சபையில் இருந்து காளிதாசன் சாகுந்தலம், மேக சந்தேசம், குமார சம்பவம், ரகு வம்சம் போன்ற காவியங்களை படைக்கிறான். அவன் புகழ் பரவுகிறது. அரசி காளிதாசனின் கவிதையின் பால் மிகுந்த ஈடுப்பாடு கொண்டவள். அவனோடு இலக்கிய சர்ச்சைகளில் நேரம் காலம் தெரியாமல் ஈடுபடுகிறாள். ஒரு சமயம் அரசியின் ஓவியத்தைப் பார்த்து விட்டு சாமுத்திரிகா லட்சணத்தின்படி அரசிக்கு ஒரு மச்சம் இருக்க வேண்டும் என்று சொல்ல அது சரியாக இருக்கிறது. இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மோகனா காளிதாசனை பழி வாங்க காளிதாசனையும் அரசியையும் இணைத்து அவதூறு பரப்புகிறாள்.

    ஒரு கட்டத்தில் விலாசவதியே இதை உண்மை என்று நம்பி காளிதாசனோடு சண்டையிட, நகர் வலத்திற்கு வந்த மன்னன் இதைக் கேட்டுவிட்டு துடித்துப் போகிறான். அது அவனை நோயில் தள்ளுகிறது. மனம் வெறுத்துப் போன காளிதாசன் தன் ஊர் கோவிலுக்கு சென்று தங்குகிறான்.

    காளிதாசனை காணாமல் மேலும் உடல் நலிவுறும் மன்னன் ஒரு வரி கவிதையை எழுதி அதை நிறைவு செய்பவர்களுக்கு பாதி ராஜ்ஜியத்தை பரிசளிப்பதாக அறிவிக்கிறான். இதற்கு ஆசைப் படும் மோகனா காளிதாசனின் ஊருக்கு சென்று அவனை சந்திக்கிறாள். அவனிடம் பொய் சொல்லி காளிதாசனை கவிதையை நிறைவு செய்ய வைத்து பிறகு அவன் தலையை வெட்டி விடுகிறாள்.

    கவிதையை படித்தவுடன் நடந்ததை புரிந்துக் கொள்ளும் மன்னன் மோகனாவை வெட்டி வீழ்த்துகிறான். காளிதாசனை தேடி செல்லும் போஜ மன்னனும் அங்கே நண்பனை காப்பாற்ற முடியாமல் உயிர் துறகின்றான். நண்பவர்கள் இருவரும் காளியின் அருளால் வானுலகம் செல்கின்றனர்.

    அன்புடன்
    Part 2 15th July 2009, 01:16 AM
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post418857
    மகாகவி காளிதாஸ். - Part II


    மகாகவி காளிதாஸ். நடிகர் திலகத்தின் நடிப்புலக பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல். நடிகர் திலகத்தின் நடிப்பு அபாரமாக வெளிப்பட்ட படங்களில் காளிதாசிற்கும் நிச்சயமான இடம் உண்டு. இரண்டு வித குணாதிசயங்கள். அதை அப்படியே அனாயசமாக செய்திருப்பார். கிளாஸிக் என்று சொல்லப்படுகிற தரத்தில் அவரது நடிப்பு அமைந்திருக்கும்.

    முதலில் வடி கட்டின அப்பாவி மற்றும் சாப்பாட்டு பிரியன். முதல் அறிமுக காட்சியிலே தூங்கி எழுந்து வந்து கண்களை மட்டும் தண்ணீரால் துடைத்துக் கொண்டு குளித்து விட்டேன், சாமி கும்பிட்டு விட்டேன் என்று தட்டின் முன் அமர்ந்து ஆவலோடு தோசை எங்கே என்று கேட்க கூழை கொண்டு வரும் தாயிடம் கோபித்துக் கொள்வது, நண்பன் தன் தங்கைக்கு கல்யாணம் என்று சொன்னவுடன் விருந்து இருக்கிறதா இனிப்பு இருக்கிறதா என்று கேட்கும் அந்த பரபரப்பு, பெரிய லட்டு இருக்கும் என்று சொன்னவுடன் இம்மாம் பெரிய லட்டு? நான் மம்மட்டி கொண்டு வரேன், உடைச்சு திங்கலாம் என்று சொல்லுவது, திருமணத்திற்கு போக கூடாது என்று அப்பன் சொல்லி விட முணுமுணுத்துக் கொண்டே ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி போவது, அங்கே காளியே மூதாட்டி உருவில் ஆடுகளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் கல்யாணத்திற்கு போய் விருந்து சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டுவது, அங்கே தன் தந்தையை கண்டவுடன் வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்வது, தன் இலையை தவிர தன் தாய் இலையிலும் அடுத்திருக்கும் பெண் இலையிலுமிருந்து லட்டு எடுத்து வைத்துக் கொள்வது, கோவிலுக்கு சென்றவுடன் லட்டை சாப்பிடும் போது என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்கும் மூதாட்டியிடம் மண்ணாங்கட்டி என்று சொல்வது அதை எனக்கும் கொடு என்று சொல்லும் போது சின்ன ஒரு விள்ளல் கொடுத்து விட்டு "பிக்கவே வர மாட்டேங்குது" என்று முனகுவது, நம்ம வீட்டிலும் விருந்து வைக்கலாம் என்று தந்தையிடம் சொல்ல அவர் விருந்து வைக்க காரணம் வேண்டுமே என்று கேட்க எனக்கு கல்யாணம் பண்ணி வை. அந்த முன்னிட்டு விருந்து வைக்கலாம் என்று அப்பாவியாக சொல்லுவது - இப்படி பிய்த்து உதறியிருப்பார், படிக்காத மேதை ரங்கனுக்கு பிறகு அப்படியே காளிதாஸ் சின்னான் என்றே சொல்லலாம்.

    அது மட்டுமா? புலவர்கள் அவரை ஏமாற்றி குடுமியை வெட்டியவுடன் அழுவது, அவர்கள் ஊருக்கு போகும் போது குடுமியை திருப்பி தருகிறோம் என்று சொல்வதை அப்பாவியாக நம்புவது, மன்னன் அரண்மனைக்கு கூட்டி சென்றவுடன் போட்டி மண்டபத்தில் அவர் காட்டும் முக பாவம், கல்யாணம் முடிந்து முதலிரவன்று உப்பரிக்கையில் தெரியும் நிலவைப் பார்த்து விட்டு வீட்டுக்குள்ளே நிலாவை வச்சிருக்காங்கபா என்று கமென்ட் அடிப்பது, அறையில் வைத்திருக்கும் பலகாரங்களை எடுத்து சாப்பிட்டு விட்டு அங்கே தொங்கி கொண்டிருக்கும் சேலையை["எங்க அம்மாவுக்கு அங்கே மாத்து சேலையே இல்லை. இங்கே தோரணமாக தொங்க விட்ருக்காங்க"] சுருட்டி எடுத்து வைத்துக் கொள்வது, உண்மை தெரிந்து அழும் இளவரசியிடம் நீ அழுவாதே! நான் வேலை செஞ்சு உனக்கு காஞ்சி ஊத்துறேன் என்று சொல்லுவது - இப்படி அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அவர் வெளிப்படுத்தும் விதத்தை காட்சிக்கு காட்சிக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

    எப்போதுமே இயல்பான நகைச்சுவையில் வெளுத்து வாங்கும் நடிகர் திலகம் இந்தப் படத்திலும் அதை திறம்பட செய்திருப்பார். சந்தைக்கு போய் விட்டு பலகாரங்களை வாங்கி கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்து விட்டு "பாதி பலகாரத்தை வர வழியிலே குரங்குக்கு போட்டேன், மீதியை உனக்கு கொண்டு வந்திருக்கேன்" என்பது, மன்னனிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று இவர் கேட்க மனோகர் ஒவ்வொன்றாக சொல்லி கடைசியில் யானை படை, குதிரை படை, காலாட்படை என்று சொல்ல, இவர் கையை சொறிந்துக் கொண்டே படை என்பது, இளவரசியிடம் புலவர்களைப் பற்றி சொல்லும் போது "அந்த புளுவங்க தான் இப்படி சொல்ல சொன்னாங்க" என்று சொல்லுவது [ஒரு படிப்பறிவில்லாதவனின் சொல் பிரயோகம் மட்டுமல்லாது புலவர்களின் உண்மை சொருபத்தையும் குறிக்குமாறு சொல்லுவார்], இப்படி அதையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இப்படிப்பட்ட சின்னான் காளிதாசனாக மாறியவுடன் தான் என்ன ஒரு மாற்றம்! அந்த கம்பீரம், அந்த ராஜ நடை, அந்த நிமிர்ந்த தோள்கள், அறிவின் தேஜஸ் வெளிப்படும் அந்த முகம், அந்த குறு நகை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார். முதலில் போலி புலவனாக நுழையும் போது காட்டும் நடைக்கும், காளிதாசனாக அருள் பெற்றவுடன் கோவிலிலிருந்து அவர் நடந்து போகும் அந்த ஸ்டைல் நடைக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்! அவர் கோவிலில் வைத்து போஜ மன்னனிடம் சவால் விடுவது, சௌகாரிடம் காட்டும் அந்த காதல்[ "என் முகத்தை நிலவு என்று சொன்னீர்களே! இப்போது நெருங்கி வரும் போது விலகி போகிறீர்களே" என்று கேட்கும் சௌகாரிடம் "இல்லை நிலவு என் அருகில் வரும் போது என் நிழல் பின்னே விழுகிறதா என்று பார்த்தேன்" என்று அவர் சொல்லுவதே அழகு]. அது போல் தன்னை நெருங்கி நெருங்கி வரும் எல். விஜயலட்சுமியிடம் அவர் தனக்கே உரிய பாணியில் பதில் சொல்லி விட்டு விலகி போவதை அழகாக செய்திருப்பார்.

    தன் மனைவியே தன்னையே சந்தேகப்படுகிறாள் என்று தெரிந்தவுடன் அவளிடம் கொள்ளும் கோபம், முகத்தில் தெரியும் அந்த வருத்தம் கலந்த சீற்றம் எல்லாமே நன்றாக இருக்கும். தன்னிடம் மரண கவி பாடச் சொல்லும் மன்னனிடம் அவர் தன் உணர்ச்சிகளை கொட்டுவது, கடைசியில் கே.பி.எஸ். தன்னைப் பற்றி பாடும் போது எல்லாவற்றையும் துறந்த ஒரு மனோ நிலயை வெளிப்படுத்துவது - இப்படி படம் முழுக்க நடிகர் திலகத்தின் நடிப்பு சாம்ராஜ்யம் கொடி கட்டி பறக்கும். நமக்கு தான் இங்கே எழுத இடம் இல்லாமல் போகும்.

    இந்த மன்னனுக்கு முன்னாள் மற்றவர்கள் எல்லோரும் குறுநில மன்னர்கள் அளவுக்கு கூட வரவில்லை என்பதுதான் உண்மை. சௌகாருக்கு வழக்கம் போல் கலங்கி அழும் வேடம். போஜ மன்னனாக முத்துராமன், வில்லன் போல அறிமுகமாகி சிறிது நேரத்திலேயே மாறி விடும் தண்டி கவிராயராக சகஸ்ரநாமம், தில்லானாவுக்கு ஒரு ஒத்திகை போல வில்லன் வேடம் [கௌரவ தோற்றம்] செய்யும் நாகேஷ், வழக்கமான சரளமான நகைச்சுவையில் வி.கே.ஆர் நடித்திருக்க இரண்டு அதிசயங்கள். எப்போதும் வில்லி வேடம் செய்யும் சி.கே.சரஸ்வதி இதில் அன்புள்ள அம்மா. கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த எல். விஜயலட்சுமி இதில் வில்லி வேடம் அழகாக செய்திருப்பார். நடிகர் திலகத்துடன் நடிக்கும் முதல் வாய்ப்பு என்பதால் இதை அவர் ஏற்றுக் கொண்டார் என்று சொல்லுவார்கள்.

    கே.பி.எஸ் அவர்களுக்கு இரண்டு பாடல்கள் மற்றும் சில வசனங்கள் தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. சின்னானை ஒரு தலையாக காதலிக்கும் பூங்காவனமாக மாலதி நடித்திருப்பார். மனோகர் வில்லன் தான். ஆனால் வில்லத்தனம் வேறு மாதிரி இருக்கும்.

    அன்புடன்
    Part 3 - 15th July 2009, 01:32 AM –
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post418865
    மகாகவி காளிதாஸ் - Part III


    படத்திற்கு இசை திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் மாமா. பாடல்கள் கண்ணதாசன் மற்றும் கு.மா. பாலசுப்ரமனியன்.[இவர் தான் திரைக்கதை வசனமும் கூட].

    1. கல்லாய் வந்தவன் கடவுளம்மா- ஆடுகளை மேய்த்துக் கொண்டே சின்னான் பாடும் பாடல்

    2. சென்று வா மகனே வென்று வா- புலவர் கூட்டம் சின்னானை அழைத்துச் செல்லும் போது கே.பி.எஸ் பாடும் பாடல். அந்த காலக்கட்டத்தில் பெருந்தலைவர் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவரையும் வாழ்த்துவதாக கண்ணதாசன் எழுதிய பாடல் என்று ஒரு செய்தி. [அதை நிரூபிப்பதைப் போல் ஒரு வரி எழுதியிருப்பார் - அறிவுலகம் உன்னை அழைக்கிறது.]

    3. யார் தருவார் இந்த அரியாசனம- சின்னான் காளிதாசனாக மாறிய பின் அந்த கோவிலில் வைத்தே பாடும் பாடல்.

    4. மலரும் வான் நிலவும்- காளிதாசன் தனியாகவும் பின் விலாசவதி தனியாகவும் பாடும் பாடல்.

    5. கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்- காளிதாசன் தன் காவியங்களை படைக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.

    6. காலத்தில் அழியாத காவியம் தர வந்த- படத்தின் இறுதியில் காளிதாசனை பார்த்து கே.பி.எஸ். பாடும் பாடல். நடிகர் திலகதிற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும்.

    இது தவிர சில விருத்தங்கள் [சிறு பாடல்கள்] - கோவிலில் பாடும் தங்கமே தாமரை, மன்னன் உடல் நலிவுற்று கிடக்கும் போது பாடும் பிறப்புற்றேன். பிறகு தாய் தந்தையரை சந்திக்கும் போது பாடும் பாடல். இந்த பாடல்களின் முதல் வரிகளை பார்க்கும் போதே பாடல்கள் எல்லாம் தேன் துளிகள் என்பதும் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் என்பதும் விளங்கும்.

    காமிராமென் ஆர்.ஆர்.சந்திரன் தான் இந்த படத்தை தயாரித்து இயக்கியவர். கு.மா. பாலசுப்ரமணியனின் திரைக் கதை சின்னான் காளிதாசனாக மாறும் வரை சுவையாக பின்னப்பட்டிருக்கும். பிறகு காளிதாசனின் கவிதை காவியங்களை பற்றி பேசாது அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை போஃகஸ் செய்தது ஒரு பின்னடைவு. காளியின் அருளால் கவியாவது இதன் பின்னாலே வெளியான சரஸ்வதி சபதத்திலும் தொடர்ந்தது. Better packaged என்ற கோணத்தில் சரஸ்வதி சபதம் மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.மேலும் மன்னனுக்கு வரும் இலக்கிய சந்தேகம், அதற்கு பரிசு, அதே முத்துராமன் அதே நாகேஷ் இவையெல்லாமே இந்த படத்திற்கு ஒரு வருடம் முன்பு வெளியான திருவிளையாடலை நினைவுபடுத்தியது.

    நடிகர் திலகம் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் இந்த 1966 வருடத்தில் தான் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி நடிகர் திலகத்தின் உடல் நலக் குறைவு காரணமாக ஏற்பட்டது. ஜனவரி 26 அன்று மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியான பிறகு அடுத்த படமாக மகாகவி காளிதாஸ் ஆகஸ்ட் 19 அன்று வெளியானது. ஒரு வார இடைவெளியில் ஆகஸ்ட் 26 அன்று நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் நடித்த தாயே உனக்காக வெளியானது. அடுத்த ஒரு வாரத்தில் செப்டம்பர் 3 அன்று சரஸ்வதி சபதம் ரிலீஸ். எனவே எப்போதும் போல் நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றுக்கு இன்று போட்டியாக வந்ததன் விளைவு காளிதாஸ் தன் தரத்திற்கேற்ற தகுதியான வெற்றியைப் பெற முடியாமல் போனது.

    எப்படி இருப்பினும் நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பிற்காகவே பார்க்க வேண்டிய படம் மகாகவி காளிதாஸ்.

    அன்புடன்

    PS: ஒரு வசனம் அது பேசப்படும் காலத்தைப் பொறுத்து அதற்கு வரவேற்போ எதிர்ப்போ உண்டாகும் எனபதற்கு இந்த படத்தில் வரும் ஒரு வசனமே உதாரணம். முப்பேறும் பெறுக என்று சொல்லச் சொல்லும் புலவரிடம் அதை உச்சரிக்க வராமல் நடிகர் திலகம் மூப்பனார் என்பார். இந்த வசனத்திற்கு எழுபதுகளின் இறுதியில் நடிகர் திலகமும் மூப்பனாரும் நண்பர்களாக இருந்த போது பலத்த கைதட்டலை நான் பார்த்திருக்கிறேன். எண்பதுகளின் மத்தியில் இருவரும் பிரிந்த பிறகு இதே வசனத்திற்கு எதிர்ப்பு கூக்குரலையும் கண்டிருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1546
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மகாகவி காளிதாஸ் காணொளிகள்

    காலத்தில் அழியாத


    யார் தருவார் இந்த அரியாசனம்


    மலரும் வான் நிலவும்


    கல்லாய் வந்தவன் கடவுளம்மா


    கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
    Last edited by RAGHAVENDRA; 9th November 2014 at 11:20 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1547
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1966ல் மகாகவி காளிதாஸ், தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் என தொடர்ச்சியாக வாரா வாரம் வெளியீடு..

    வெள்ளி விழா கொண்டாட வேண்டிய படங்களெல்லாம் இது போல் தொடர்ச்சியாக வெளியீடு கண்டு நம் படங்களுக்கு நம் படங்களே போட்டியாய் அமைந்ததனால் அரங்குகள் கிடைப்பதும் கஷ்டமாயின. இப்போது போல பகலில் ஒரு படம் மாலையில் ஒரு படம், இரவில் ஒரு படம் என்கின்ற சங்கதியெல்லாம் இல்லாத கால கட்டம் அது.

    மகாகவி காளிதாஸ் - 19.08.1966

    தாயே உனக்காக - 26.08.1966

    சரஸ்வதி சபதம் - 03.09.1966

    என்ன சொல்ல..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1548
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    108. SARASWATHI SABATHAM சரஸ்வதி சபதம்



    தணிக்கை 18.08.1966
    வெளியீடு 03.09.1966

    தயாரிப்பு – ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், ஜெமினி கணேசன், நாட்டியப்பேரொளி பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா, மனோரமா, வி.நாகையா, கே.சாரங்கபாணி, ஜி.சகுந்தலா, பேபி சுசரிதா, ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், பி.டி.சம்பந்தம், டி.என்.சிவதாணு, சிவகுமார், செந்தாமரை, எஸ்.ஏ.கண்ணன், மற்றும் பலர்.

    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சுசீலா, ஆதம்ஷா

    பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்,
    ஆபரேடிவ் காமிராமேன் – ஆர்.ராஜன், கே.எஸ்.மணி
    ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி
    ஒலிப்பதிவு – டி. சிவானந்தம்
    எடிட்டிங் – ராஜன், டி.ஆர். நடராஜன்
    கலை – கங்கா
    அரங்க அலங்காரம் – நியோ ஃபிலிமோகிராஃப்ட்ஸ்
    நடன அமைப்பு – கோபாலகிருஷ்ணன், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி
    குஸ்தி அமைப்பு – ஆஸாத் மிஸ்டர் மெட்ராஸ்
    குதிரைச்சவாரி – ஸ்டண்ட் சாரங்கன் கோஷ்டியினர்
    யானை “சீதா” – நேஷனல் சர்க்கஸ் கம்பெனி
    ஆடை அலங்காரம் – சி.கே.ராஜமாணிக்கம்
    மேக்கப் – ரங்கசாமி, தனகோடி, பத்ரையா, சேதுபதி, பத்மனாபன்
    ஸ்டில்ஸ் – முருகப்பன் – எம்.ஆர்.பிரதர்ஸ்
    விளம்பர நிர்வாகம் – மின்னல், சாந்தி பப்ளிசிட்டீஸ்
    விளம்பரம் – ஆஸ்பி லித்தோ ஒர்க்ஸ்
    டிசைன்ஸ் – ‘பக்தா’
    புரொடக்ஷன் நிர்வாகம் – எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
    ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி.வைத்யநாதன்
    ஃப்ளோர் இன்சார்ஜ் – சாரதா – என்.பஞ்சாபிகேசன், பி.எஸ்.கீர்த்திவாசன், மைக்கேல்
    அரங்கம் – பி.ஆர்.ராமனாதன், ராம்மூர்த்தி
    அரங்க நிர்மாணம் – சாரதா – மதுரை கிருஷ்ணன், வீர்ராகவன்
    ஓவியம் – ஆர். முத்து, வி.பரமசிவம்
    மோல்டிங் – சிதம்பரம், ஜெயராமன்
    Printed and Processed at ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி, சென்னை - 6

    ஒளிப்பதிவு டைரக்டர், தந்திரக்காட்சிகள் – கே.எஸ்.பிரசாத்
    அஸோஸியேட் டைரக்டர் – கே.கே.சம்பத்குமார்
    ஸ்டூடியோ – சாரதா (லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்)
    இசை – திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்


    திரைக்கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி.நாகராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post
  18. #1549
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    பொம்மை மாத இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்


    சரஸ்வதி சபதம் திரைக்காவியத்தின் விமர்சனம், குமுதம் 29.09.1966 இதழிலிருந்து..


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks Russellmai thanked for this post
  20. #1550
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து


    முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.9.1966



    100வது நாள் விளம்பரம் : தினமணி : 11.12.1966





    குறிப்பு:
    100 நாள் அரங்குகள் மொத்தம் ஏழு, அவையாவன:

    1. சென்னை - சாந்தி - 133 நாட்கள்

    2. சென்னை - கிரௌன் - 133 நாட்கள்

    3. சென்னை - புவனேஸ்வரி - 133 நாட்கள்

    4. மதுரை - ஸ்ரீதேவி - 104 நாட்கள்

    5. கோவை - ராஜா - 104 நாட்கள்

    6. சேலம் - சாந்தி - 100 நாட்கள்

    7. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்

    பக்தியுடன்,
    பம்மலார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Thanks Russellmai thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •