Page 158 of 185 FirstFirst ... 58108148156157158159160168 ... LastLast
Results 1,571 to 1,580 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1571
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாயே உனக்காக நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1572
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    அடுத்து.....

    நடிகர் திலகத்தின் திரை உலகப் பயணத்தில் திருப்புமுனையாக, முற்றிலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்கள் நடிகர் திலகத்தை தரிசித்த, புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கிய


    1967
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1573
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1967 ...

    இவ்வாண்டு வெளிவந்த படங்களைப் பற்றிப் பார்க்கும் முன்..

    இந்த திருப்புமுனை ஆண்டினைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதாகிறது.

    இதற்கு சரியான நண்பர்..

    வேறு யார்..

    நம்ம முரளி சார் தான்..

    முரளி சார்..

    1967ம் ஆண்டின் நடிகர் திலகத்தின் திரையுலகத் திருப்புமுனையைப் பற்றி ஒரு அறிமுகப் பதிவினை எழுத வேண்டுகிறேன்.

    அதற்குப் பிறகு தொடரலாம் என விரும்புகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes ifohadroziza liked this post
  7. #1574
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1967

    நடிகர் திலகத்திற்கு இது ஒரு திருப்புமுனையான ஆண்டு. ஆகவே அதை பற்றி நான் எழுத வேண்டும் என்று ராகவேந்தர் சார் சொல்லியிருக்கிறார். என்னை எழுத சொன்னதற்கு நன்றி.

    1967 உண்மையிலே திருப்புமுனையான ஆண்டுதான், பல்வேறு தளங்களிலும். இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் தலையெழுத்து முற்றிலுமாக மாறிய ஆண்டு. மாற்றங்கள் தவிக்க முடியாதது என்றாலும் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது பற்றி whether it was for good or not என்று 47 வருடங்களுக்கு பிறகு கேள்வி எழுப்பினால் நமக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. அதே நேரத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்லது இமேஜ் makeover பற்றிய கேள்விக்கு நமக்கு positive ஆன பதிலே பெருவாரியான மக்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

    1952-ல் தொடங்கி இடைவெளியில்லாமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் 1967- முதல் தான் நடிக்கும் படங்களின் genre -ல் ஒரு மாற்றத்தை கொடுத்தார். ஆழமான கதையம்சம் அழுத்தமான பாத்திரப் படைப்புகள் உணர்ச்சிக் குவியலான திரைக்கதை என்ற பாதையில் பயணம் செய்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதை தாண்டி நகைச்சுவை மிளிரும் பொழுது போக்கு படங்களுக்கும் மற்றும் action oriented பொழுது போக்கு படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தார்.

    அதற்கு முன் அவர் நகைச்சுவை படங்கள் செய்திருக்கிறாரே என்ற கேள்வி எழும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா மற்றும் பலே பாண்டியா ஆகியவற்றை மறந்து விட்டு பேசவில்லை. ஆனால் அவை few and far in between என்ற வகையிலேயே அமைந்திருந்தது. முறையே அவை வெளியான வருடங்களை பார்த்தோமென்றால் [1954,1958,1962] நான் சொல்வதன் அர்த்தம் புரியும். அது போன்றே murder mysteries ஆன புதிய பறவை, கல்யாணியின் கணவன் போன்ற படங்களிலும் கூட சண்டைக் காட்சிகள் கிடையாது. அல்லது மிக மிக அரிதாகவே அமைந்திருந்தது.

    இப்படி ஒரு மாற்றத்தை அவர் 1967- ல் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேட்டால் தமிழ் சினிமா வரலாற்றில் சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும்.

    60-களின் மத்தியில் தமிழ் சினிமாவில் மாற்றங்கள் வீச ஆரம்பித்த காலம் என குறிப்பிடலாம். அதுவும் தவிர அதே காலகட்டத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நம்முடைய பாட்டுடைத் தலைவனான நடிகர் திலகத்தின் வாழ்வில் நடந்தது.

    தமிழ் சினிமாவில் 60-களின் மத்தியில் புதிய வரவுகளாக பலர் அறிமுகமானார்கள். நடிகர்களை எடுத்துக் கொண்டோமென்றால் ஏவிஎம் ராஜன், சிவகுமார், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்றவர்க-ள் அறிமுகமாகி அதிலும் ஜெய் மற்றும் ரவி கதாநாயகனாகவே நிலை பெற்றார்கள். கேஆர்.விஜயா, ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா, வாணிஸ்ரீ போன்றவர்களின் திரையுலக பிரவேசமும் அந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. இவர்களின் வரவோடு அன்றைய இந்தி திரையுலக தாக்கமும் சேர்ந்துக் கொண்டது. இந்தி பட தாக்கம் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் நாயகன் நாயகி வெளிப்புற பாடல்காட்சிகள், அவற்றில் முன் காலங்களில் இல்லாத அளவிற்கு ஆடலுக்கு முக்கியத்துவம் பின் இளைஞர்களை கவர்ந்திழுக்க சண்டைக் காட்சிகள், மற்றும் கிளப் டான்ஸ் போன்றவை இடம் பெற ஆரம்பித்தன.

    அந்த காலகட்டத்தில் நகைச்சுவைக்கு காதலிக்க நேரமில்லை, தேன் மழை, suspense வகைக்கு அதே கண்கள், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் வல்லவன் ஒருவன், இசை கலந்த காதலுக்கு இதய கமலம், பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கு குமரிப் பெண் என்று வெரைட்டியாக படங்கள வந்த நேரம்.

    இந்த மாற்றத்தினால் அன்றைய முன்னணி நாயக நாயகியரும் பாதிக்கப்பட்டனர். நாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெமினி எஸ்எஸ்ஆர் போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகம். எஸ்எஸ்ஆர் ஒரு முதல் நிலை கதாநாயகன் என்ற நிலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். ஜெமினிக்கும் இறங்குமுகம்தான். ஆனால் அவ்வப்போது சில படங்கள் வந்து ஜெமினியை காப்பாற்றிக் கொண்டிருந்தது. ராமு, பணமா பாசமா போன்ற படங்களை சொல்ல வேண்டும். ஆனால் பணமா பாசமா முதற்கொண்டே அவர் heroine oriented subject படங்களான பூவா தலையா, தாமரை நெஞ்சம், இரு கோடுகள், காவிய தலைவி போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டிய நிலைமை.

    இந்த புது வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொண்டவர்கள் சிவாஜி -எம் ஜி ஆர் இருவரும். ராஜகுமாரி மந்திரி குமாரி காலம் முதல், வருடத்தில் ஒரு படமேனும் ராஜா ராணி பாத்திரங்களையுடைய சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை 1963 வரை செய்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் படவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை புரிந்துக் கொண்டு பழைய பாணியிலிருந்து மாறுபட்டு 1964 முதல் முழுக்க சமூக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன் பாணியிலிருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்டிருந்த come september ஆங்கிலப் படத்திலிருந்து inspiration உட்கொண்டு உருவான அன்பே வா படத்தில் அவர் நடித்ததை இங்கு உதாரணமாக கூற வேண்டும்.

    நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவரும் சற்றே light hearted subjects செய்யலாமா என்ற யோசனையில் இருக்கும் நேரம். இதே சமயத்தில் அவர் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். 50-களின் மத்தியில் திராவிட இயக்கத்தினரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர் [அவர் எந்த திராவிட இயக்கத்திலும் உறுப்பினராக இருந்ததேயில்லை] காங்கிரஸ் பேரியக்கத்தின் அனுதாபியாகவும் பெருந்தலைவரின் தொண்டராகவும் அறியப்பட்டுக் கொண்டிருந்தார். 1965-ல் அன்றைய தமிழக இந்திய அரசுகள் சந்தித்துக் கொண்டிருந்த கடுமையான சோதனைகளை பார்த்த அவர் தன்னாலான உதவியை செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். நமது எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினால் ஏற்பட்ட சோதனைகளை இந்திய அரசாங்கம் எதிர் கொள்ள இங்கோ மொழிப் போராட்டம் தூண்டி விடப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருந்தவர்கள், போரினால் ஏற்பட்ட உணவு தானிய பற்றாக்குறை போன்றவற்றை வைத்து அரசியல் செய்தவர்கள் பெருகிவிட, இந்த சூழலில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதை தன் கடமையாக நினைத்த நடிகர் திலகம் அதை முறைப்படி செய்தார்.

    இந்த அரசியல் நிகழ்வை இங்கே குறிப்பிட காரணம் அதற்கு முன்னரே சிவாஜி- எம்ஜிஆர் இருவரிடையே அல்லது அவர்கள் ரசிகர்களிடையே நிலவிய போட்டி இந்த நிகழ்வினால் மேலும் வலுவடைந்தது. அதனாலும் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் கதைகளின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

    நடிகர் திலகத்திற்கு 1966 ஜனவரி 26 அன்று பதமஸ்ரீ விருது கிடைத்தது. அன்றுதான் அவர் நடித்த 106-வது படமான மோட்டார் சுந்தரம் பிள்ளையும் வெளியானது. பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு பல்வேறு ஊர்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஓய்வு ஒழிச்சல் இல்லாத அவரது வேலைப் பளு காரணமாக டைபாயிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடுமையான முறையில் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார். ஆனால் blessing in disguise என்று சொல்வார்களே அது போல் இந்த சுகவீனம் ஏற்கனவே இளைத்துக் கொண்டிருந்த அவர் உடலை மேலும் இளைக்க வைத்தது. அதன் காரணமாக அவரது உடல் ஸ்லிமாகி அன்றைய 20-25 வயது இளைஞர்களுக்கு சவால் விடும் வண்ணம் படு சிக்காக ஸ்மார்டாக படப்பிடிப்புகளுக்கு திரும்பினார். .

    இந்த நேரத்தில் நடிகர் பாலாஜியை பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. ஜெமினியின் ஔவையார் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி பின் துணை நாயகன், இணை நாயகன் ஆக உயர்ந்து ஒரு சில படங்களில் நாயகனாகவும் இடம் பிடித்து வரும் நேரத்தில்தான் இந்த புது வெள்ள பிரவாகம். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாலாஜியும் ஒருவராகப் போனார். ஆனால் அதனால் நிலைகுலைந்து விடாமல் தனக்கு தெரிந்த ஒரே தொழிலான சினிமா தொழிலில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஆக்கப்பூர்வமாக யோசித்து அவர் எடுத்த முடிவுதான் தயாரிப்பாளர் ஆவது. தன் மூத்த மகளான சுஜாதாவின் பெயரில் [இரண்டாவது மகள் சுசித்ரா - மோகன்லாலின் மனைவி, மகன் சுரேஷ் பாலாஜி] சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமாக இருந்தவரான ஜெமினியை நாயகனாக்கி அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்து 1966-ல் வெளியிட்டார். படம் வர்த்தக ரீதியில் சரியாகப் போகவில்லை என்றாலும் கூட தைரியமாக ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்யக் கூடியவர் என்பதை அவர் பிரபல இந்தி நடிகர் அசோக்குமார் அவர்களை தன் முதல் படத்திலேயே நடிக்க வைத்ததன் மூலம் நிரூபித்தார்.

    அண்ணாவின் ஆசை சரியாக போகவில்லை என்றதும் பாலாஜியும் அவருக்கு பொருளாதார பின்புலமாக இருந்த சுதர்சன் சிட்பண்ட் வேலாயுதன் நாயரும் [கேஆர்விஜயாவின் கணவர்தான்] ஆலோசனையில் ஈடுபட அவர்களுக்கு தோன்றிய ஐடியாதான் நடிகர் திலகத்தை நாயகனாக்கி படம் எடுப்பது என்பது.

    பாலாஜி சென்று நடிகர் திலகத்தைப் பார்க்க, பாலாஜியை ஒரு இளைய சகோதரன் போலவே கருதியிருந்த நடிகர் திலகம் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். விசி.சண்முகத்திற்கும் சம்மதம். ஆனால் பாலாஜி ஒரு கண்டிஷன் போட்டார். அதுநாள் வரையில் எந்த தயாரிப்பளாரும் நடிகர் திலகத்தை காட்டாத ஒரு கோணத்தில் நடிகர் திலகத்தை காட்டப் போகிறேன். அதற்கு நீங்கள் மறுப்பு சொல்லக் கூடாது என்றார். சரி என்று சொல்லப்பட்டாலும் கூட எந்த மாதிரியான subject என்பது முடிவாகாமலே இருந்தது.

    பாலாஜியைப் பொறுத்தவரை அன்றைய சூழலில் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் விருப்பமாக இருந்த action oriented film வகையை சார்ந்த படமாக தயாரிக்க விரும்பினார். அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னவென்றால் அதுவரை action genre -ல் படங்கள் செய்யாத நடிகர் திலகம் அப்படி ஒரு படம் செய்யும்போது அவருக்கும் comfortable -ஆக இருக்க வேண்டும், audience -ற்கும் convincing ஆக இருக்க வேண்டும். பாலாஜி எதிர்கொண்ட மற்றொரு சவால் என்னவென்றால் நடிகர் திலகம் நடிக்கும் படம் என்றால் அதை பெரிதும் எதிர்பார்த்து வருவது அவரின் core constituency ஆன தாய்குலங்களும் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வரும் ரசிகர் கூட்டமும்தான். ஆகவே என்னதான் action படம் எடுத்தாலும் மேற்சொன்னவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் படம் வணிகரீதியாக வெற்றி அடையும். இல்லையென்றால் வணிகரீதியில் நஷ்டம் அடைவதுடன், நடிகர் திலகத்திற்கும் அவப்பெயர் வந்து சேரும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாலாஜிக்கு தோன்றிய ஐடியாதான் வெற்றிகரமாக ஓடிய பிறமொழிப் படத்தை ரீமேக் செய்வது.

    இப்படி பல parameters -ஐ அலசி ஆராய்ந்து அதற்கேற்றபடி பாலாஜி தெரிவு செய்த படம்தான் தேவ் ஆனந்த ஹீரோவாக நடித்த இந்திப் படமான Baazi . ஆனால் அது 1951-ல் வெளிவந்த படம். அதை 1967-க்கு ஏற்றவாறு மாற்றும் பொறுப்பு இயக்குனர் A .C திருலோகசந்தர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    பார்த்தால் பசி தீரும் படத்தின் கதை ACT யின் கதை என்றாலும் அது ஏவிஎம் படமாகவே தயாரானது. அதன் பிறகும் ஏவிஎம் வளாகத்துக்குள்ளேயே இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருந்த ACT-யை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார் பாலாஜி. இந்தி Baazi யை தமிழக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்த ACT அதை நடிகர் திலகத்திடம் திரைக்கதையாக சொல்ல நடிகர் திலகம் impress ஆனார். தங்கை படம் கருக் கொண்டது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. அதே வேகத்தில் நிறைவு பெற்று வெளியானது. action mood வகையை சார்ந்த தங்கை படத்தை ரசிகர்களும் பொதுமக்களும் இரு கரம் நீட்டி வரவேற்றனர். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட அரங்க உரிமையாளர்களுக்கும் லாபத்தையும் தாண்டிய வசூலை வாரி வழங்கினாள் தங்கை.

    Action படங்களில் நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்தது மட்டும்தானா 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்று கேட்டால் அது மட்டும் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்கை வருவதற்கு முன்னரே மேக்அப்பே இல்லாமல் நடித்த நெஞ்சிருக்கும் வரை படத்தை வெளியிட்டார்[ஒரு முன்னணி கதாநாயகன் ஜோடியும் இல்லாமல் மேக்கப் இல்லாமல் அதுவும் பொது தேர்தல் சமயத்தில் வெளியிடுவதற்கு அகில இந்தியாவிலேயே நமது நடிகர் திலகத்தை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்ன?].

    Action படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளையும் அவர் விடவில்லை. அதனால்தான் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி போன்ற நகைச்சுவை படங்களிலும், என் தம்பி, தங்க சுரங்கம், திருடன், சிவந்த மண் போன்ற Action படங்களிலும் நடிக்கும்போதும் கூட திருவருட்செல்வர், இரு மலர்கள், உயர்ந்த மனிதன், தெய்வ மகன், வியட்நாம் வீடு போன்ற அவர் மட்டுமே செய்யக்கூடிய படங்களிலும் அவர் நடித்தார்.

    இந்தப் பதிவு ஒரு நீண்ட பதிவாக போய்விட்டது. காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்பது ஒரு சில வரிகளில் சொல்லி முடிக்கக்கூடிய ஒன்றல்ல. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ரசிகர்களும் பொது மக்களும் அதை ஒப்புக் கொண்டதன் பின்னில் உள்ள சமூக உளவியல் காரணங்கள் ஆழமாக உட்செல்பவை. ஆராயப்பட வேண்டியவை. அதை பற்றி பேசுகிறோம் எனும்போது பல்வேறு சமூக அரசியல் தளங்களில் நாம் சஞ்சரிக்க வேண்டியிருக்கிறது.

    உலகத்தில் வெகு சில நடிகர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஸ்டார் என்ற வகையிலும் ஆக்டர் என்ற வகையிலும் அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட வெகு சிலரில் முதன்மையானவர் நமது நடிகர் திலகம், அந்த அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட்டதும் தொடர்ந்து இறுதி வரை நிலைத்து நின்றதற்கும் காரணமான முத்திரை பதித்த ஆண்டு 1967.

    நடிகர் திலகத்தை திரையில் எப்படி பார்க்க வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகன் நினைப்பானோ அது திரையில் வெளிப்பட்ட ஆண்டு 1967. இன்றைக்கும் கூட அவர் மறைந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகப் போகின்ற சூழலிலும் கட்சி, அரசியல், ஆட்சி, அதிகாரம், பணப்புழக்கம் போன்ற எந்தவித லாபநோக்கங்களும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற மனிதனுக்காக மட்டுமே இன்றைக்கும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்ட ஆண்டு 1967.

    இப்படி ஒரு பதிவிற்கு வாய்ப்பளித்த ராகவேந்தர் சாருக்கும் இந்த நீண்ட நெடிய(!) பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி!


    .

    அன்புடன்

  8. Thanks ifohadroziza, Russellmai, RAGHAVENDRA thanked for this post
    Likes ifohadroziza, Harrietlgy, RAGHAVENDRA liked this post
  9. #1575
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks ifohadroziza thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #1576
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்
    மிக்க நன்றி. பம்மலார் ஆவணத்திலகம், வாசு சார் ஆய்வுத் திலகம் என்றால் தாங்கள் நினைவுத் திலகமாய்த் திகழ்கின்றீர்கள். பாராட்டுதற்கு நிஜமாகவே வார்த்தைகள் முட்டுகின்றன. "உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது, அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது..." என்ற இந்த வரிகளைத் தான் இரவல் வாங்க வேண்டும்.
    தங்களுக்கு மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #1577
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1967 --- நடிகர் திலகத்தின் திருப்புமுனை ஆண்டு... ரசிகர்களுக்கும் தான்... அதுவரை இருந்த தலைமுறைகள் மட்டுமின்றி புதிய தலைமுறை ரசிகர்கள் உருவானது 1967ம் ஆண்டில் தங்கை திரைப்படம் மூலமே.
    திருவிளையாடல் மூலம் பெண்கள் மத்தியில் தனக்கிருந்த அசைக்க முடியாத பேராதரவை மேலும் பரவலாக்கிய ஆண்டு 1967.
    கல்லூரி மாணவியர் மத்தியில் நடிகர் திலகத்தின் புகழ் மேலும் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிய ஆண்டு 1967.
    ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டோர் தங்கள் உள்ளத்து பக்தியையும் இறைநம்பிக்கையையும் பிரதிபலிக்கும் பிம்பமாக நடிகர் திலகத்தை முற்றிலும் எண்ணத் தொடங்கிய ஆண்டு 1967. திருவிளையாடலில் தொடங்கிய இந்த ஈடுபாடு கந்தன் கருணையில் மேலும் பரவியது. மிச்சம் மீதி இருந்ததையும் 1968ல் திருமால் பெருமை மூலம் தன் வசமாக்கி தன் ஆளுமையை முழுமையாக ஆன்மீக நெறியாளர்களிடம் நடிகர் திலகம் செலுத்திய ஆண்டு 1967.
    காதல் என்பது மிகவும் கொடியதாக கருதப்பட்ட காலத்தில் நேரில் சந்திக்க இயலாத காதலர்கள், அப்படி சந்திக்க நினைத்தாலும் அதை தெரிவிக்க முடியாத காதலர்கள், அதற்கென பயன்படுத்த ஓர் உபாயத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு ... ஆம்... பேசும் தெய்வம் மூலம் காதலர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு கடிதத்தின் அவசியத்தை ஆழமாக உணர்த்திய ஆண்டு 1967..
    அது மட்டுமா... இறைவனின் அவதாரமாக புனித ஆன்மாவாகத் திகழ்ந்த காஞ்சி மாமுனிவரின் ஆசியைப் பெற, அவருடைய தரிசனத்திற்காக மக்கள் ஏங்கிக் கிடந்த காலத்தில் அவராலேயே அழைக்கப்பட்டு நடிகர் திலகம் ஆசி பெற்ற ஆண்டு 1967.
    மாதக் கணக்கில் இடைவெளி விட்டு ஒவ்வொரு படத்தையும் வெளியிடும் நடிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் பெரும் வெற்றி பெற்ற வரலாற்றை நடிகர் திலகம் படைத்த ஆண்டும் 1967. ஊட்டி வரை உறவு இரு மலர்கள் இரண்டுமே ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே நூறு நாட்கள் கண்டதும் அதை இன்று வரை மற்றவர்களால் முறியடிக்க முயலாமல் இருப்பதும் என இந்த சாதனையை நடிகர் திலகம் நிகழ்த்திய ஆண்டும் 1967.

    இவையெல்லாவற்றையும் மீறி, ஒரு மிகப் பெரிய அரசியல் சூறாவளியில் சிக்கினாலும் காங்கிரஸ் என்ற கப்பலை மூழ்க விடாமல் செய்து அதற்கு ஆக்ஸிஜன் கொடுத்து அதை இன்று வரை மக்கள் மனதில் நிலைக்கச் செய்த பெருமையான சாதனையை நடிகர் திலகம் நிகழ்த்திய ஆண்டும் 1967..

    நடிகர் திலகம் என்கின்ற ஒற்றை மதிற்சுவர் திராவிட சுனாமியை எதிர் கொண்டு தாங்கி காங்கிரஸ் என்ற மாளிகையை கட்டிக் காத்து இன்று வரை பராமரித்துக் கொண்டுள்ளது. கட்டிடம் சிதிலமடைந்தாலும் நடிகர் திலகம் என்கின்ற பலமான அஸ்திவாரத்தில் எழுந்த காங்கிரஸ் என்கின்ற மாளிகை இன்றும் மிச்சம் மீதி இருக்கும் நிலையில் பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அஸ்திவாரத்தை பலமாக நடிகர் திலகம் அமைத்துக் கொடுத்த ஆண்டும் 1967..

    இவை மட்டுமின்றி இன்னோர் முக்கியமான நிகழ்வும் குறிப்பிட வேண்டும். முழுக்க முழுக்க சென்னை சாந்தி திரையரங்கின் நிர்வாகம் நடிகர் திலகத்திடம் வசம் அமைந்ததும் இவ்வாண்டு தான். 1967ல் நெஞ்சிருக்கும் வரை திரையிடப்பட்ட போது தான் சாந்தி திரையரங்கின் நிர்வாகியாக நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய உறவினர் பொறுப்பேற்றார்.

    இந்த ஆண்டின் சிறப்பை மிக அருமையாக எழுதிய முரளி சாருக்கு மீண்டும் நன்றி.
    Last edited by RAGHAVENDRA; 8th January 2015 at 11:10 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1578
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivjai Ganesan Filmography Series

    110. Kandankarunai கந்தன் கருணை



    தணிக்கை – 10.01.1967
    வெளியீடு – 14.01.1967

    தயாரிப்பு – AL. ஸ்ரீநிவாசன் - ஏஎல்.எஸ். புரொடக்ஷன்ஸ்

    நடிக நடிகையர் ... படத்தின் டைட்டில் கார்டில் உள்ளபடி
    நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், ஜெமினி கணேஷ், கே.பி. சுந்தராம்பாள், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, அசோகன், பாலாஜி, ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், வி. கோபால கிருஷ்ணன், சிவகுமார், எஸ்.வி.ராமனாதன், எஸ்.வி.ராமதாஸ், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் காதர், இசைமணி சீர்காழி கோவிந்தராஜன், ..எஸ்.வரலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, மனோரமா, அம்பிகா, மணிமாலா, குமாரி ராதா, பேபி செல்வி... மற்றும் பலர்

    பின்னணி பாடியவர்கள்
    டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன், எஸ்.சி. கிருஷ்ணன், எஸ்.வி. பொன்னுசாமி, ஆதம்ஷா, டி.எம். தங்கப்பன், சைதை நடராஜன் (நாதசுரம்), பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, ஏ.பி. கோமளா,

    மேக்கப் – ரங்கசாமி, கோபால், ராமசாமி, பத்மனாபன், தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

    ஆடை அலங்காரம் – ஸி.கே. ராஜமாணிக்கம், காந்தி, ஸ்ரீநிவாசன்

    ஆபரணம்- ஸோமு ஆச்சாரி, கிருஷ்கோ ஷாப்பிங்

    ஸ்டில்ஸ் – முருகன் (M.R. BROS)
    விளம்பர டிஸைன்ஸ் - G.H.RAO
    தயாரிப்பு நிர்வாகம் – வீரய்யா
    புரொடக்ஷன் மேனேஜர் – எஸ்.வி. கல்யாணம்
    டைரக்ஷன் உதவியாளர்கள் – எஸ்.ஆர். தசரதன், எம். கருப்பையன், தஞ்சை மதி
    ஸ்டூடியோ – சாரதா (லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்)
    Recorded on RCA Sound System
    ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி. வைத்தியநாதன்
    அரங்கம் – பி.ஆர். ராமனாதன், பி. ராமமூர்த்தி
    அரங்க நிர்மாணம் – ஜி. மதுரை, என். கிருஷ்ணன்,
    அரங்க அலங்காரம் – சினி கிராஃப்ட்ஸ்
    உடைகள் – ‘ஸாரி சென்டர்‘
    ஓவியம் – ஆர். முத்து, வி. பரமசிவம்
    மோல்டிங் – எம். சிதம்பரம், ஆர். ஜெயராமன்
    ஸ்டண்ட் – சோமு
    ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ். மணி, எஸ்.வி. பத்மனாபன்
    ஒலிப்பதிவு – சிவானந்தம், உதவி – ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், ட்டி.டி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ். மாதவன்
    ப்ரிண்டட் அண்ட் ப்ராசஸ்டு அட் ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்டரி
    பாடல்கள் சில – தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
    பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் (திருப்பரங்குன்றத்தில்)
    நடன அமைப்பு – பி.எஸ். கோபால கிருஷ்ணன்
    எடிட்டிங் – ஆர். தேவராஜன்
    கலை – கங்கா
    ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ். ரங்கசாமி
    ஒளிப்பதிவு டைரக்டர், தந்திரக் காட்சிகள் – கே.எஸ். பிரசாத்
    சங்கீதம் – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்,
    அஸோஸியேட் டைரக்டர் – கே.கே. ஸம்பத்குமார்
    திரைக்கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி. நாகராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1579
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கந்தன் கருணை – சிறப்பு செய்திகள்




    1. நடிகர் திலகத்தின் வெற்றி வேல் வீரவேல் பாடலுக்கான அட்டகாசமான ராஜநடை, பின்னாட்களில் ஓர் இலக்கண நடையாக அமைந்தது குறிப்பிடத் தக்கது.




    2. 1967ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்குப் பெற்றுத் தந்த திரைக்காவியம்.



    3. பூவை செங்குட்டுவன் இயற்றி, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைப்பில் சூலமங்கலம் சகோதரிகள் பாடி பக்திப் பாடல் இசைத்தட்டாக வெளிவந்த தொகுப்பில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல் மிகப் பிரபலமாகி மக்களிடம் சென்றடைய, அப்பாடல் திரைப்படத்தில் பயன் படுத்தப்பட்டது.

    4. இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாடல் காலத்தை வென்று மிக மிக பிரபலமாக இன்றும் விளங்குகிறது.

    5. 1969ம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு துவங்கப்பட்ட போது அன்று இரவு 7.45 மணிக்குத் துவங்கிய தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் முதலில் ஒலிபரப்பான பாடல் அறுபடை வீடு கொண்ட திருமுருகா.

    6. அருட்செல்வர் ஏ.பி.என். அவர்களின் இயக்கத்தில் கந்தன் கருணை திரைக்காவியம், முருகன் திருவிழாக்கள் தோறும் அந்நாட்களில் தவறாமல் கோயில்களில் திரையிடப்பட்டது.

    Last edited by RAGHAVENDRA; 1st March 2015 at 07:36 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1580
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காணொளிகள்

    அறுபடை வீடு கொண்ட


    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்


    சொல்ல சொல்ல இனிக்குதடா


    என்றும் புதியது


    குறிஞ்சியிலே பூ மலர்ந்து


    வெள்ளிமலை பொதிகைமலை


    கந்தனுக்கு ஞானவேல்


    மனம் படைத்தேன் உன்னை


    வெள்ளிமலை மன்னவா


    ஆறுமுகமான பொருள்


    குறிஞ்சியிலே பூமலர்ந்து
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •