Page 52 of 185 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #511
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நானே ராஜா - ராமாயணத்தை நினைவு படுத்தும் கதையமைப்பு. நடிகர் திலகம் வில்லாளன் என்ற மன்னனாக வருவார். கதைப்படி வி.கோபாலகிருஷ்ணன் கிரிஜா காதலர்கள். ஆனால் நடிகர் திலகத்தின் தங்கையாக நடிக்கும் எம்.என்.ராஜம் கதைப் படி கோபாலகிருஷ்ணனை விரும்புகிறார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துடிக்கிறார். தன் சகோதரர்களான நடிகர் திலகத்தையும் எஸ்.வி.சுப்பையா வையும் அதற்குப் பணிக்கிறார். வி.கோபால கிருஷ்ணனைப் பழி வாங்குதற்காகவும் வழிக்குக் கொண்டு வருவதற்காகவும் ஸ்ரீரஞ்சனியையும் அவர் கணவரையும் கடத்தி வருகிறார் நடிகர் திலகம். அதனைத் தொடர்ந்து இடம் பெறும் சம்பவங்களே படத்தின் சாராம்சம்.

    மிகவும் மெதுவாக நகரும் படம். வலுவற்ற திரைக்கதை என்றாலும் அதனைத் தன் வசனத்தால் ஈடு செய்து விடுகிறார் கண்ணதாசன். இப்படத்திற்கு இசை மிகப் பெரிய ஆறுதல். பாடல்கள் அனைத்தும் தேன் சுவை. குறிப்பாக நடிகர் திலகம் போதையில் தள்ளாடியதே பாடுவதாக வரும் பாடல் மந்த மாருதம் தவழும் சூப்பர். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஸ்டைலில் நடிகர் திலகம் கலக்கி யிருப்பார். இப்படிப் பட்ட மெதுவான ஓட்டமுள்ள படத்தைப் பார்க்க வைப்பது இசையும் நடிகர் திலகமும் தான். பாடல்களைப் பாருங்கள். ஆதியந்த மில்லா அருள் ஜோதியே பாடல் மிக இனிமை. அதை விட இனிமையானது சிந்து பாடும் தென்றல் பாடல். முதல் முறை கேட்பவர்கள் அந்தப் பாடலை மீண்டும் போட்டுக் கேட்பார்கள்.

    பாருங்கள் பாடல்களையும் நடிகர் திலகத்தின் ஸ்டைலையும்

    பாடல் காட்சிகள்

    ஆதியந்தமில்லா அருள் ஜோதியே

    ஆடல் கலை – குமாரி கமலா நடனம்

    மந்த மாருதம் தவழும்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #512
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நானே ராஜா திரைப்படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள் ஓரிரு தினங்கள் தொடர்ந்த பின் அடுத்த திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப் படும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #513
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நானே ராஜா திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #514
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரா அவர்களுக்கு

    நான் இதுவரை காணாத நானே ராஜா படப் பாடல் காட்சிகளை அளித்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?

    அந்த ஒயிலான சிறப்பான நடிப்பை எப்படி வர்ணிப்பது?

    வார்த்தைகள் இல்லை!!!!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  6. #515
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் காவிரிக் கண்ணன்,
    இன்னும் வரப் போகும் திரைப்படங்களின் பட்டியலில் பல இதுபோன்ற அபூர்வமானவை இடம் பெற உள்ளன. காத்திருங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #516
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    29. Thenali Raman தெனாலி ராமன்

    தணிக்கையான நாள் 30.01.1956

    வெளியான நாள் 03.02.1956

    விக்ரம் புரொடக்ஷன் அன்பளிப்பு

    சிவாஜி கணேசன் – தெனாலிராமன்
    என்.டி.ராமராவ் – கிருஷ்ணதேவராயர்
    வி.நாகையா – அப்பாஜி
    எம்.என். நம்பியார் – ராஜகுரு
    பானுமதி – கிருஷ்ணா
    ஜமுனா – கமலா
    பாலசரஸ்வதி – ராதா
    சந்தியா – திருமலாம்பாள்
    வேணுபாய், இந்திரா ஆச்சாரி, இந்திரா, சுசீலாராணி, லக்ஷ்மிகாந்தம், மாஸ்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் பலர்
    வசனம் – கவிஞர் கண்ணதாசன்
    பக்திக் கருத்துக்கள் ஸ்ரீ முருக தாஸா அவர்கள் எழுதியது
    பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், ஆத்மநாதன்
    இசை அமைப்பு – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
    பின்னணி பாடியவர்கள் – பி.லீலா, பாலசரஸ்வதி, கோமளா, சுசீலா, சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம், கண்டசாலா
    நடன அமைப்பு – கோபாலகிருஷ்ணன், சோப்ரா
    மேக்கப் – கே.வி.சுவர்ணப்பா
    சிகை ஜோடனை – பிரபாராய்
    அரங்க அமைப்பு – நீலகண்டன் – ரேவதி, சுப்ரமணியன் – நரசு, நடராஜ், நாராயணன்
    சீன் ஜோடனை – ஸினி கிராப்ட்ஸ், கிரி
    ஸ்டூடியோ – ரேவதி, நரசு, விக்ரம்
    ப்ரோஸ்ஸிங் – கிருஷ்ணன் விக்ரம் ஸ்டூடியோ லேபரட்டரி
    ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி
    ப்ப்ளிஸிட்டி – எபிஷண்ட் ப்ப்ளிஸிட்டி
    எடிட்டிங் – பி.ஜி. மோஹன்
    ரீரிகார்டிங் – சேஷாத்ரி விக்ரம் ஸ்டூடியோ
    ஒலிப்பதிவு – வி.எஸ்.ரங்காச்சாரி, சேஷாத்ரி, ராமஸ்வாமி
    பாடல் ஒலிப்பதிவு – டி.எஸ். ரங்கசாமி
    புரொடக்ஷன் மேனேஜர் – வி.கே.ஸ்ரீனிவாஸன்
    அரங்க நிர்மாணம் – கங்கா வாலி
    ஆடை அலங்காரம் – அச்சுதன்
    காமரா – பி.என்.ஹரிதாஸ்
    மேற்பார்வை – திரு முருகதாஸா
    உதவி டைரக்ஷன் – எஸ்.என்.பாலசந்திரன்
    டைரக்ஷன் போடோகிராபி – பி.எஸ். ரங்கா

    93 ஆண்டுகள் வாழ்ந்த திரு பி.எஸ். ரங்கா டிசம்பர் 2010ல் காலமானார்.

    பிற்சேர்க்கை - 24.02.2013

    தெனாலி ராமன் சென்னை நகரில் வெளியான திரையரங்குகள் - ஸ்டார், கிரௌன், ராக்ஸி
    100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்கு
    சேலம் பேலஸ் - 101 நாட்கள்
    Last edited by RAGHAVENDRA; 24th February 2013 at 10:17 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #517
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தெனாலி ராமன் திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக குறுந்தகட்டின் முகப்பு நிழற்படமாக

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #518
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் தெனாலி ராமன். ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மட்டுமின்றி நல்ல திரைப்படங்களை விரும்புவோரும், பழைய சரித்திரக் கதைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கிருஷ்ண தேவராயரின் அரண்மனை தர்பாரில் தன்னுடைய திறமையால் நுழைந்து அவருடைய நெஞ்சில் தனி இடம் பிடித்து அவருடைய இக்கட்டான நேரங்களில் சரியான ஆலோசனைகளைத் தந்து புகழ் பெற்ற தெனாலி ராமன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. தெனாலி ராமனாக நடிகர் திலகமும் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமராவ் அவர்களும், மற்றும் ஜமுனா, சந்தியா, பானுமதி, நாகையா, நம்பியார் மற்றும் பலரின் திறனான பங்களிப்பில் மறக்க முடியாத படம் தெனாலி ராமன். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பில் இப்படம் தனி இடம் பிடிக்கிறது. குறிப்பாக முகலாய மன்னர்களின் தூதாக வந்து ராயரை வசியம் செய்ய முயலும் பானுமதியை விரட்ட பெண் வேடம் போட்டு நடிகர் திலகம் அந்தப் புரத்தில் நுழையும் காட்சி குறிப்பிடத் தக்கது.

    முகலாய மன்னர்கள் கிருஷ்ண தேவ ராயரைத் தந்திரமாக வசியம் செய்து தங்களுடைய கீழ்ப்படிதலில் விஜய நகர சாம்ராஜ்யத்தைக் கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணா [பானுமதி]வை அனுப்புகின்றனர். இத்திட்டத்தைத் தெரிந்து கொண்ட, விஜய நகர சாம்ராஜ்யத்தின் பால் அக்கறை கொண்ட தெனாலி ராமன், மூத்த மந்திரி [நாகையா]யுடன் கலந்தாலோசித்து இதை முறியடிக்கும் நோக்கில் கிருஷ்ணாவின் தாயார் வேடமிட்டு அந்தப்புரத்துள் நுழைகிறார்.

    இந்தக் காட்சியில் வயதான பெண்மணி வேடம் தரிக்கும் நடிகர் திலகம், பார்ப்பவர்களுக்கு அது வேடம் என்று தெரியும் என்பதையும் மனதில் நிறுத்தி அதே சமயம் அரண்மனைக் காவலாளிகள் சந்தேகப் படா வண்ணம் தன் குரலில் அந்த பெண்மையைக் கொண்டு வந்து தன் வயோதிகத்தையும் வெளிக்காட்டும் வண்ணம் குரல் சற்று உடைந்தாற்போல பேசி இக்காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.
    கண்டிப்பாக பார்க்க வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களில் தெனாலி ராமனும் ஒன்று. நடிப்பிற்காக மட்டுமின்றி மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்காகவும் இப்படம் குறிப்பிடத் தக்கது. பிறிதோர் சந்தர்ப்பத்தில் இப்படத்தில் மெல்லிசை மன்னரின் பங்கைப் பற்றித் தனியாக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்.

    இப்போது இதோ தெனாலி ராமன் காட்சியைக் காணுங்கள் ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #519
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Remarkable movie in NT's film journey.

  11. #520
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரு சின்ன புள்ளி விவரக் கண்ணோட்டம் இந்நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.

    தெனாலி ராமனைத் தொடர்ந்து 17.02.1956ல் பெண்ணின் பெருமை திரைப்படமும் 25.02.1956ல் ராஜா ராணி திரைப்படமும் சேர்த்து மொத்தம் 31 படங்களாகின்றன.

    17.10.1952ல் பராசக்தியில் தொடங்கி 25.02.1956ல் வெளிவந்த ராஜா ராணி வரையில் மொத்தம் 31 படங்கள் வெளி வந்துள்ளன. இந்த கால கட்டத்தைப் பார்த்தால் மொத்தம் 3 ஆண்டுகள் 4 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 40 மாதங்கள். நடிக்கத் தொடங்கி 40 மாதங்களில் 31 படங்கள் என்பது வேறு எந்த கதாநாயக நடிகரும் தமிழ்த் திரையுலகில் செய்ததாகத் தெரியவில்லை. அதுவும் அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம் உருவாக்கத் தேவைப்படும் அதிக கால அவகாசத்தை எடுத்துக் கொண்டால் இது நிச்சயம் பெரிய விஷயமாகும். இது மட்டுமின்றி 13.11.1955ல் கள்வனின் காதலி, கோடீஸ்வரன் திரைப்படங்கள் வெளியானதில் தொடங்கி 25.02.1956ல் ராஜா ராணி வரை 105 நாட்களில் 8 படங்கள் வெளி வந்துள்ளன. இதிலும் 13.11.1955 மற்றும் 14.01.1956 இரு நாட்களிலும் தலா இரு படங்கள். இதுவும் குறிப்பிடத் தக்கதாகும்.

    இதன்றி 14.01.1956 தொடங்கி 25.02.1956 வரையிலான 43 நாட்களில் நான் பெற்ற செல்வம், நல்ல வீடு, நானே ராஜா, தெனாலி ராமன், பெண்ணின் பெருமை, ராஜா ராணி என 6 படங்கள் ...

    இவையெல்லாம் எந்த அளவிற்கு தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்களின் favourite ஆக அவர் திகழ்ந்திருந்தார் என்பதை எடுத்துக் காட்டும் சான்றல்லவா..
    Last edited by RAGHAVENDRA; 23rd February 2013 at 09:07 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •