Page 154 of 185 FirstFirst ... 54104144152153154155156164 ... LastLast
Results 1,531 to 1,540 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

 1. #1531
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  நீலவானம் திரைப்படத்தினைப் பற்றிய முரளி சாரின் அற்புதமான கட்டுரை

  26th April 2009, 11:05 PM
  நீல வானம்

  தயாரிப்பு: பட்டு பிலிம்ஸ்

  கதை வசனம் : கே. பாலச்சந்தர்

  இயக்கம் : பி.மாதவன்

  வெளியான நாள்: 10.12.1965

  நாயகன் பாபு ஒரு அநாதை. ஒரு செல்வந்தர் உதவியினால் படித்து பட்டம் பெறுகிறான். வேறு வேலை கிடைக்காததால் தியேட்டரில் வேலை செய்கிறான். ஒரு சமயம் ஒரு பெண் ஒட்டி செல்லும் காரில் லிப்ட் கேட்டும் ஏறும் பாபு நாளைடைவில் அந்த பெண் விமலாவை காதலிக்க ஆரம்பிக்க அவளும் அவனை விரும்புகிறாள். அவளுக்கு தாய் இல்லை. தந்தை மட்டுமே இருக்கிறார். ஒரு மாமனும் இருக்கிறான். தினம் விமலாவின் காரில் ஏறி செல்லும் பாபு ஒரு நாள் தவறுதலாக விமலாவின் கார் என்று நினைத்து வேறு ஒரு காரை நிறுத்தி விட அதிலிருப்பது வேறொரு பெண் கௌரி. வெகுளியாக பேசும் அவள் தன் பிறந்த நாளுக்கு அவனை அழைக்க பாபுவும் செல்கிறான். அங்கே செல்லும் போதுதான் தன்னை படிக்க வைத்த செல்வந்தர் மில் ஓனர் சோமநாதனின் ஒரே மகள்தான் கௌரி என்பது அவனுக்கு தெரிய வருகிறது. பிறந்தநாள் விழாவில் வைர நெக்லஸ் காணாமல் போக, பாபு மீது சந்தேகப்பட்டு சிலர் கேள்வி கேட்க, சிலர் அவன் அணிந்திருக்கும் கோட்டை கழட்ட, சட்டையில்லாமல் வந்திருக்கும் பாபு அவமானத்தில் வெளியேறுகிறான்.

  அவன் வீடு தேடி வந்து வந்து மன்னிப்பு கேட்கும் கௌரியும் அவளது தந்தையும் அவனுக்கு அவர்களது நிறுவனத்தில் வேலை தருகின்றனர். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு, பக்கத்து வீடு தோழியுடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டு வளைய வரும் கௌரியின் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது. அடிக்கடி வயிற்று வலியினால் அவதிப்படும் அவளை டாக்டர் பரிசோதித்து விட்டு அவளுக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் கர்ப்பப்பையையும் பாதித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். அனால் அவள் பெற்றோர்கள் கௌரியிடமிருந்து இதை மறைத்து விடுகிறார்கள்.

  இதனிடையே பாபு விமலா கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். விமலாவின் மாமன் பிரகாஷ் கௌரியை திருமணம் செய்ய நினைக்கும் போது யாரோ சொல்வதை கேட்டு பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட கல்யாணத்தை பற்றி மிகுந்த கற்பனை செய்து வைத்திருக்கும் கௌரி மிகுந்த வருத்தம் அடைகிறாள். பாபு விமலாவை காதலிக்கும் விஷயம் தெரியாமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கௌரி கேட்க பாபு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, இதை கேட்டுக்கொண்டிருக்கும் சோமநாதன் பாபுவை தனியாக கூட்டி சென்று தன் மகளின் நிலைமையை விளக்கி சொல்லும் சோமநாதன், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பாபுவை மன்றாடி கேட்டுக் கொள்கிறார். பாபு தன் நிலைமையை எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் வற்புறுத்தவே, தனக்கு வாழ்வளித்த அவரை மீற முடியாமல் பாபு கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான். கௌரியின் நோய் பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையினால் அவன் பணத்திற்கு ஆசைப்பட்டு கௌரியை மணந்து கொள்வதாக நினைத்து கொள்ளும் விமலா, பாபு மீது மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைகிறாள். திருமணம் நடைபெறுகிறது.

  திருமணத்திற்கு பிறகு பாபுவையும் கௌரியையும் சந்திக்கும் விமலா அவர்கள் கொடைக்கானல் செல்வதை தெரிந்து கொண்டு அங்கும் வந்து விடுகிறாள். தினசரி கடிதங்களை அனுப்பி வைக்கிறாள். பாபுவை நேரிலும் சந்தித்து தொல்லை செய்ய அவன் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சென்னை திரும்பும் பாபு, சோமநாதனின் உடல் நல குறைவு காரணமாக கம்பெனியின் நிர்வாக பொறுப்பை ஏற்கிறான். கௌரி மூலமாக அங்கே வேலையில் சேரும் விமலா அங்கும் தன் திட்டத்தை தொடருகிறாள்.

  கௌரிக்கு இப்போது வலி அதிகமாகவே டாக்டரிடம் காண்பிக்க அவர் நோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அவளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் சொல்கிறார். சூழ்நிலையை சமாளிக்க கௌரியிடம் அவள் கர்ப்பமாக இருப்பதாக பாபு சொல்கிறான். குழந்தைக்காக ஏங்கிய கௌரிக்கு இது மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது. அதை உண்மை என்றே நம்பும் கௌரி தனக்கு வளைகாப்பு நடத்த சொல்கிறாள். வளைக்காப்பு நடை பெறுகிறது. அந்த நேரத்தில் பன்னாட்டு மருத்துவர்களின் காஃன்பிரன்ஸ் டெல்லியில் நடப்பதை அறிந்து கொள்ளும் பாபு அங்கு சென்று டாக்டர்களை சந்திக்கிறான். முதலில் மறுக்கும் அவர்கள் பிறகு சென்னை வந்து கௌரியை பரிசோதிக்க ஒப்புக் கொள்கின்றனர்.

  இதற்கிடையே தன் கணவனின் வாடிய முகத்தையும் இரவில் தனியாக கண் கலங்குவதையும் பல முறை பார்க்கும் கௌரி, பாபு கிழித்து போட்ட ஒரு போட்டோ-வின் ஒரு பகுதியை பார்த்து விட அவளுக்கு சந்தேகம் அதிகமாகி விடுகிறது. இதைப் பற்றி விமலாவிடம் விலாவரியாக பேச மனம் பொறுக்க முடியாமல் விமலா தான் அந்த பெண் என்பதை உணர்த்தி விட்டு போய் விடுகிறாள்.

  டெல்லியிலிருந்து திரும்பும் பாபுவை எதிர்கொண்டு ஏன் இந்த உண்மையை மறைத்தீர்கள் என்று கௌரி கேட்க, தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்ற உண்மை புரியாமல் அவளுக்கு நோய் பற்றி தெரிந்து விட்டது என்று நினைத்து பாபு உண்மையை சொல்லி விட கௌரிக்கு மீண்டும் மிக பெரிய அதிர்ச்சி. அவளை மிகுந்த பாடுபட்டு சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கும் நேரத்தில், நோய் முற்றி கௌரி இறந்து போகிறாள். அவள் நினைவாகவே பாபு தொடுவானத்தை நோக்கி நடந்து போவதோடு படம் நிறைவு பெறுகிறது.

  (தொடரும்)

  அன்புடன்

  மேற்காணும் கட்டுரை இடம் பெற்ற பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post394188
  பாகம் இரண்டு


  26th April 2009, 11:10 PM
  நீல வானம் - Part II


  இயக்குனர் சிகரம் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் இணைந்த படம். மாதவன் இயக்கத்தில் பாலச்சந்தர் கதை வசனம் எழுதினார். கான்சர் எனப்படும் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை அடிப்படையாக வைத்து ஒரு இயல்பான கதை கே.பி எழுதியிருக்க அதை தெளிவாக கையாண்டிருந்தார் மாதவன்.

  நடிகர் திலகத்தை பொறுத்தவரை அனாயாசமாக செய்த படங்களில் ஒன்று நீலவானம். எப்போதும் அவரது படங்களில் அவரது வேடங்கள் பலதரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதிலும் அப்படியே. ஹாப்பி கோ லக்கி கய்-யாக ஆரம்பிக்கும் அவரது பாத்திரம் பிறகு நன்றி, தியாகம், குற்ற உணர்வு, கோபம், நேசம், தவிப்பு, துடிப்பு, இயலாமை, முனைப்பு, ஏமாற்றம் என பல உணர்வுகளில் பயணித்து இறுதியில் சோகம் மற்றும் விரக்தியில் முடியும். இவை அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பார் சிவாஜி.

  காரில் லிப்ட் கேட்டு போய் விட்டு, தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் போது ராஜஸ்ரீயிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது, ராஜஸ்ரீயின் கார் என்று நினைத்து தேவிகாவின் காரை நிறுத்தி விட்டு பிறகு அந்த காரிலும் பயணம் செய்யும் போது வெகுளியாக பேசும் தேவிகாவிடம் தானும் வெகுளியாக பேசுவது, தன் ஒண்டு குடித்தன போர்ஷனுக்கு வரும் தேவிகா உடைந்து போன சேரில் உட்கார்ந்து விடாமல் இருக்க அவர் காட்டும் முகபாவங்கள், தேவிகாவின் பிறந்த நாள் விழாவில் நகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அணிந்திருக்கும் கோட்டை கழட்ட வெறும் உடலோடு நிற்கும் அவரை அனைவரும் கேலி செய்து சிரிக்க அவமானம் தாங்காமல் கூனி குறுகி வெளியேறுவது, செய்த தவறுக்கு பரிகாரமாக தேவிகாவின் மில்லில் வேலை போட்டு கொடுக்க அதை ராஜஸ்ரீயிடம் வந்து ஸ்டைலாக சொல்வது, என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்கும் தேவிகாவை பார்த்து பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நிற்க அந்த நேரம் அங்கு வரும் சகஸ்ரநாமத்தை பார்த்து விட்டு தன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ என்று அவர் காட்டும் பதைபதைப்பு, தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி யாசகம் கேட்கும் சகஸ்ரநாமதிடம் மறுத்து பேச முடியாமல் தவிப்பது, பணத்திற்காக விலை போய் விட்டதாக குற்றம் சாட்டும் ராஜஸ்ரீயிடம் உண்மையை சொல்ல முடியாமல் துடிப்பது, கல்யாணத்திற்கு பிறகு தன்னை பழி வாங்குவதற்காக கடிதங்களையும் போட்டோகளையும் ராஜஸ்ரீ அனுப்ப அதை பார்க்கும் தேவிகாவிடம் மென்று முழுங்கி சமாளிப்பது, தான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசை ஆசையாய் சொல்லும் மனைவியிடம் அவள் கொஞ்ச நாட்கள் தான் உயிரோடு இருக்க போகிறாள் என்பதை சொல்ல முடியாமல் மருகுவது, அவளின் வயிற்று வலிக்கு காரணம் கர்ப்பம் என்று பொய் சொல்ல அப்போது கல்யாணத்திற்கு முன்பும் வலி வந்ததே என்று கேட்கும் தேவிகாவிடம் சமாதானம் சொல்வது, குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று சொல்லும் தேவிகாவிடம் விளையாட்டாய் பேர்கள் சொல்லி விட்டு அந்த பேச்சை ரிகார்ட் செய்து வைத்து பிறகு போட்டு காட்டி கிண்டல் செய்வது, எப்போதும் மனக் கவலையில் முழுகி இருக்கும் தன்னிடம் விஷயம் தெரியாமல் விஷம் கக்கும் ராஜஸ்ரீயிடம் கோபத்தை வெளிக் காட்ட முடியாமல் துடிப்பது, வாய் தவறி பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று தேவிகாவிடம் பாடி விட்டு சட்டென்று உண்மை உறைக்க கலங்குவது, சர்வதேச டாக்டர்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் டாக்டர்கள் தேவிகாவின் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்று கை விரிக்க, தன் மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று மன்றாடுவது, டெல்லி சென்று திரும்பி வரும் தன்னை எதிர்கொண்டு என்கிட்டேந்து இந்த உண்மையை ஏன் மறைச்சீங்க என்று தேவிகா கேட்க தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்பது தெரியாமல் "நீ கூடிய சீக்கிரம் சாக போறங்கற உண்மையை உன்கிட்டயே நான் எப்படிமா சொல்லுவேன்" என்று போட்டு உடைக்க இப்படி வேறு ஒன்னு இருக்கா என்று தேவிகா கேட்க அப்போதுதான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று துடித்து போவது, ட்ரீட்மென்ட்-கு ஒத்து கொள்ள வைக்க மனைவியிடம் முன்பு அவள் சொன்ன டெய்லி பீச்சுக்கு போகலாம், சினிமாக்கு போகலாம், நிறைய கடலை உருண்டை சாப்பிடலாம் என்று சொல்லி சிரிக்க முயன்று முடியாமல் உடைந்து போய் அழுவது, தேவிகா எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வர மறுக்கும் சகஸ்ரநாமதிடம் "எனக்கு மட்டும் வருத்தமில்லை, சோகமில்லை சந்தோஷமாக இருக்கு" என்று கோபமாக கத்தி விட்டு ஒரு முறைப்போடு "வாங்க" என்று சொல்லி விட்டு போவது, இப்படி படம் முழுக்க நடிகர் திலகம் பிச்சு உதற, நமக்கு சரியான நடிப்பு விருந்து.

  தேவிகாவின் நடிப்புலக வாழ்க்கையிலே மிக சிறந்த படம் நீலவானம் என்றால் அது மிகையாகாது. ஒரு வெகுளியான அனைவரையும் நம்பும் பெண்ணாக,நோய் பாதிக்கப்பட்டு அனால் அதை பற்றி தெரியாதவராக, டாக்டர் என்றால் பயந்து நடுங்குபவராக, பக்கத்து வீடு தோழி தம்பட்டம் அடித்து கொள்வதை வந்து அப்பாவிடமும் கணவனிடமும் சொல்லி குறைப்பட்டு கொள்வதாகட்டும் ["அவ கல்யாணத்திலே கை கழுவுற தண்ணியிலே கூட ஏலக்காய் போட்டிருந்தாங்களாம்"], தன் அறையில் பாம்பு எப்போதாவது வரும் என்று சிவாஜி சொன்னவுடன் பயந்து கொண்டே அப்படி இப்படி பார்த்து கொண்டு பேசுவதிலும் சரி, வலி பொறுக்க முடியாமல் துடிப்பதிலாகட்டும், அதை குழந்தை உதைப்பதால் ஏற்படும் வலி என்று சொல்லி சிரிப்பதிலாகட்டும், தன் கணவன் தங்கு பிடித்த முறையில் தலை சீவ வேண்டும் என்று ஹேர் ஸ்டைல்-ஐ மாற்றி அமைப்பது, பிறகு தான் இறந்து போக போகிறோம் என்று தெரிந்தவுடன் கல்யாணத்திற்கு முன்பு இருந்த அந்த பழைய ஸ்டைல்-ஐ மீண்டும் அமைப்பது, கொடைக்கானலில் கணவனோடு வருங்காலத்தை பற்றி ஏராளமான கனவுகளுடன் ஆடிப் பாடி மகிழ்வது, தன்னை கேட்காமல் ராஜஸ்ரீயை ஏன் வேலைக்கு சேர்த்தாய் என்று கோவப்படும் கணவனை பார்த்து பயந்து போய் அழுவது, தன் கணவன் கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருப்பான் என்ற சந்தேகத்தை மன வருத்ததோடு ராஜஸ்ரீயிடம் பேசுவது, "ஆறிலே சாகலாம் அறியா வயசு, நூறிலே சாகலாம் அனுபவிச்ச வயசு ஆனா பதினாறிலே மட்டும் சாக கூடாது அது ரொம்ப கொடுமையான விஷயம்ங்க" என்று கதறுவது, தன் நோய் பற்றி உண்மை தெரிந்தவுடன் அவரிடம் வரும் ஒரு விரக்தி கலந்த முதிர்ச்சி என பல்முக பரிணாமம் காட்டியிருப்பார். தன்னுடைய படங்களை பற்றிய one liner -ல் "திருமதி தேவிகாவின் மிக சிறந்த நடிப்பை இதில் காணலாம்" என்று நடிகர் திலகம் குறிப்பிட்டிருப்பார். வஷிஷ்டரே பிரம்மரிஷி பட்டம் கொடுத்து விட்டார் எனும்போது அதற்கு மேல் சிறப்பாக நாம் என்ன சொல்லி விடப் போகிறோம்?

  நடிகர் திலகத்தோடு இந்த படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தன் பங்கை சரியாக செய்திருப்பார். சகஸ்ரநாமத்திற்கு ஏற்ற பாத்திரம். படத்தில் ராஜஸ்ரீயின் தந்தையாக வி.கே.ராமசாமியும், மாமனாக நாகேஷும் இருந்தாலும் இந்த கதைக்கு சற்றும் ஒட்டாத காமெடி அவர்களோடது. சீரியஸான கதைக்கு ஒரு outlet என்ற முறையில் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் கே.பியிடமிருந்து இப்படி ஒரு அபத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

  மற்றபடி அவரது வசனங்கள் வெகு இயல்பு. தன் மகளுக்கு வாழ்வளிக்க சொல்லி சிவாஜியிடம் சகஸ்ரநாமம் பேசும் காட்சிகள் கூட மெலோ டிராமாவாக செய்யாமல் இயல்பாக இருக்கும். அது போல் அந்த கால படங்களில் வரும் டாக்டர்கள் போல் இல்லாமல் யதார்த்தமாக நோய் பற்றி பேசுபவர்களாக அமைத்திருப்பார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் "ரொம்ப வலி அதிகமானா நோவல்ஜின் கொடுங்க" என்று டாக்டர் சொல்லும் போது அந்த காலத்திலேயே தியேட்டரில் பயங்கர சிரிப்பொலி கேட்கும்.

  காமிரா கர்ணன். அவரின் பிற்காலத்தில் அவர் செய்த ஆங்கில் (angle)சேட்டைகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருக்கும். மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பிறகு முதன் முதலாக எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் [இன்னும் சொல்ல போனால் இதுதான் முதல் படமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் கலங்கரை விளக்கம் தான் தனியாக எம்.எஸ்.வி இசையமைத்து வெளி வந்த முதல் படம் என்று சொல்கிறார்கள். க.வி. ரிலீஸ் தேதி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்]. அந்த பிரிவு தன்னை பாதிக்கவில்லை என்பதை மெல்லிசை மன்னர் உணர்த்தியிருப்பார்.

  ஒ லட்சுமி ஒ மாலா - நீச்சல் குளத்தில் ராஜஸ்ரீ பாடும் பாடல் - ஈஸ்வரி

  ஒ லிட்டில் பிளவர் - நடிகர்திலத்திற்கு இந்த படத்தில் இந்த ஒரே பாடல் தான். அவரது ஸ்டைல் நடை பற்றி கேட்க வேண்டுமா.? சரணத்தில் உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே என்று ஸெல்ப் மாக்கிங்-ம் (self mocking) உண்டு.

  ஓஹோ ஒ ஓடும் எண்ணங்களே - கொடைக்கானலில் வைத்து எடுத்திருப்பார்கள். தேவிகா தன் ஆசையை எல்லாம் பாடலாக பாட உள்ளுக்குள் நடிகர் திலகம் மருகும் காட்சி. குறிப்பாக

  வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
  வாடைக் காற்றில் மோதும் பனியில் அலைவோம் இங்கே

  என்ற வரிகளும்

  நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
  மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா

  என்ற வரிகளும் மனதை வாட்டும். பாடலின் போது Round ஹாட், கூலிங் கிளாஸ் சகிதம் நடிகர் திலகம் நிற்க தியேட்டரில் கைதட்டல் + விசில் பறக்கும்.

  மங்கல மங்கையும் மாப்பிளையும் வந்து - வளைக்காப்பு பாடல் - சுசிலா + ஈஸ்வரி. "தாமரை கோயிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகை செண்டாக" என்று கண்ணதாசனின் தமிழ் விளையாடலை இதில் கேட்கலாம்.

  சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - சுசிலாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று. சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று கண்ணதாசன் எழுதிய வரிகள்.

  மலரில்லாத தோட்டமா
  கனியில்லாத வாழையா
  மகனில்லாத அன்னையா
  மகனே நீ இல்லையா

  என்ற வரிகளின் போது சுசிலாவும் தேவிகாவும் கிளப்பியிருப்பார்கள்.

  இவை அனைத்தும் இருந்தும் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை இந்த படம் தொட முடியாமல் போனது வருத்தமே. நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆனால் 100 நாட்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போன படங்களில் ஆண்டவன் கட்டளைக்கு அடுத்தபடியாக நீலவானம் இடம் பிடிக்கும். படத்தின் மைய இழையே சோகம் என்பதால் மக்களுக்கு அதை ஏற்பதில் ஒரு தயக்கம் இருந்ததா, இல்லை திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் ஏற்படுத்திக் கொண்டிருந்த தாக்கத்தினால் இந்த படம் பாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை[திருவிளையாடல் வெளியாகி 132 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக் கொண்டிருந்த போதுதான் அடுத்த படமாக நீலவானம் வெளியானது].

  எப்படி இருப்பினும் நடிகர் திலகத்திற்காகவும் தேவிகாவிற்கும் வேண்டியே பார்க்க வேண்டிய படம் நீலவானம்.

  அன்புடன்
  முரளி சாரின் கட்டுரையின் பாகம் 2 இடம் பெற்ற பதிவிற்கான இணைப்பு

  http://www.mayyam.com/talk/showthrea...l=1#post394189
  Last edited by RAGHAVENDRA; 22nd October 2014 at 09:07 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. Thanks RavikiranSurya thanked for this post
  Likes gopu1954, RavikiranSurya liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #1532
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  நீலவானம் பாடல் காட்சிகளுக்கான காணொளிகள்

  ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே  மங்கல மங்கையும் – ஒலி மட்டும்  ஓ..லிட்டில் ஃப்ளவர்  ஓ..லக்ஷ்மி... ஒலி மட்டும்  சொல்லடா வாய் திறந்து

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. Thanks gopu1954 thanked for this post
 6. #1533
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  1965 ... நிறைவு...

  தொடங்க இருப்பது... புதிய அத்தியாயம்... 1966ம் ஆண்டு...

  இந்த உலகக் கலைஞனின் புதிய பரிமாணம்....

  சகாப்த நாயகனின் புதிய அத்தியாயம்...

  புதிய தலைமுறை ரசிகர்கள் ... புதிய பாத்திரங்கள்...

  அது வரை காணாத நடிகர் திலகத்தின் ஸ்டைல்களின் துவக்கம்...

  1966 துவக்கமே... சூப்பரோ சூப்பர்...

  காத்திருங்கள்..
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. #1534
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  Next Movie in Filmography.  மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966.

  ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.

  வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.

  ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.

  பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
  நாளும் வருகிறது.

  சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.

  மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.


  நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.

  குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.

  supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.

  நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).

  சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.

  மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 8. Thanks gopu1954 thanked for this post
  Likes kalnayak liked this post
 9. #1535
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

  106. MOTOR SUNDARAM PILLAI  தணிக்கை 21.01.1966
  வெளியீடு 26.01.1966

  மோட்டார் சுந்தரம் பிள்ளை
  நடிக நடிகையர் –
  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வி.நாகையா, சௌகார் ஜானகி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா, மணிமாலா, சிவக்குமார், காஞ்சனா, சூர்யகுமார், குமாரி சரஸ்வதி, நாகேஷ், ச்ச்சு, எஸ்.ராமராவ், பண்டரிபாய், சுந்தர்ராஜன், குட்டி பத்மினி மற்றும் பலர்

  கதை வசனம் – வேப்பத்தூர் கிட்டு

  பாடல்கள் – கொத்தமங்கலம் சுப்பு, வாலி

  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

  ஒளிப்பதிவு – வி.எல்லப்பா

  ஒலிப்பதிவு – காந்தி

  எடிட்டிங் – எம்.உமாநாத்

  கலை – எஸ்.ஜானகிராமன்

  தயாரிப்பு – எஸ்.எஸ்.வாசன்

  இயக்கம் – எஸ்.பாலு

  மோட்டார் சுந்தரம் பிள்ளை விளம்பர நிழற்படங்கள் – உபயம் ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள் மற்றும் இதயவேந்தன் வாசகர் வட்டம் வரலாற்றுச்சுவடுகள்  Last edited by RAGHAVENDRA; 4th November 2014 at 09:48 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. Thanks gopu1954 thanked for this post
  Likes kalnayak liked this post
 11. #1536
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  சிறப்பு செய்திகள்

  சென்னையில் வெளியான திரையரங்குகள்
  சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி

  100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

  மதுரை – கல்பனா – 100 நாட்கள்
  திருச்சி – பிரபாத் – 100 நாட்கள்


  1. கிராந்தி ஹிந்திப் படத்தின் தமிழாக்கம்

  2. மஞ்சி குடும்பம் என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது.

  3. இப்படத்திற்காக சினிமா கதிரின் அவ்வாண்டின் சிறந்த நடிகராக நடிகர் திலகத்தைத் தேர்ந்தெடுத்தது.

  4. இமேஜ் என்கின்ற வளையத்தை உடைத்தெறிந்து 13 குழந்தைகளுக்கு தந்தையாக தன்னுடைய 38 வயதிலேயே நடித்த உலகப் பெருநடிகர் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பிற்கு சிறந்த உதாரணம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.

  5. நடிகர் திலகத்துடன் ஜெயலலிதா, காஞ்சனா, மேஜர் சுந்தர்ராஜன் இணைந்த முதல் படம்.

  6. எஸ்.எஸ்.வாசன் தயாரிக்க அவரது புதல்வர் எஸ்.பாலு இயக்கிய படம்.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 12. Likes kalnayak, gopu1954 liked this post
 13. #1537
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  பாடல்கள்

  1. காதல் என்றால் என்ன

  2. காத்திருந்த கண்களே.

  3. எதிரில் வந்த்து பொண்ணு

  4. குபுகுபு குபுகுபு நான் என்ஜின்

  5. துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனசு

  6. மனமே முருகனின் மயில்வாகனம்

  7. பெண்மை என்ற பிறவி

  8. டிங்டாங் டிங்டாங் டிங்கு லலா...
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 14. Likes kalnayak, gopu1954 liked this post
 15. #1538
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  மோட்டார் சுந்தரம் பிள்ளை - காணொளிகள்

  மனமே முருகனின் மயில் வாகனம்  காத்திருந்த கண்களே  துள்ளித் துள்ளி விளையாட  காதல் என்றால் என்ன  gubu gubu nan en  full movie:

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 16. Likes gopu1954 liked this post
 17. #1539
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  Sivaji Ganesan Filmography Series

  107. Mahakavi Kalidas மகாகவி காளிதாஸ்  வெளியீடு 19.08.1966
  தயாரிப்பு – கல்பனா கலா மந்திர்
  நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், கே.பி.சுந்தராம்பாள், சௌகார் ஜானகி, எல்.விஜயலட்சுமி, நாகேஷ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஆர்.முத்துராமன், வி.கேராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், ஏ.கருணாநிதி, ஈ.ஆர்.சகாதேவன், ஜி.சகுந்தலா, சி.கே.சரஸ்வதி, மற்றும் பலர்

  கௌரவ நடிகர்கள் – நாகேஷ், எஸ்.வி.சகஸ்ரநாம்ம்

  ஸ்டூடியோஸ் – சாரதா, பிரதம நிர்வாகி – டி.வி.வைத்யநாதன்
  ஆர் சி ஏ முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

  ப்ராசஸிங் – விஜயா லேபரட்டரி, பி.எம்.விஜயராகவலு

  அரங்கப் பொருட்கள் சினி கிராப்ட்ஸ்

  பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, பொன்னுசாமி

  திரைக்கதை வசனம் கு.மா. பாலசுப்ரமணியம்

  பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், கு.மா. பாலசுப்ரமணியம்

  ஒலிப்பதிவு – T.D. கிருஷ்ணமூர்த்தி

  ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ். மணி, ஏ.ப்பி. ராமானுஜம்

  நடன அமைப்பு பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, உதவி லக்ஷ்மி நாராயணன், சந்திரகலா

  கலை ராமசாமி,
  உடையமைப்பு – எஸ்.நடராஜன்

  ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ், என். நரசிங்கராவ், ஏ.சங்கர் ராவ்

  ஒப்பனை கே.நவனீதம், ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், எம்.ராமசாமி

  விளம்பர டிசைன்ஸ் – ஜி.ஹெச். ராவ்
  விளம்பரம் அருணா அண்ட் கோ

  உதவி டைரக்ஷன் – எஸ்.சிவகுமார், சொ.மீனாட்சி சுந்தரம்

  படத் தொகுப்பு ப்பி.வி.நாராயணன்

  ஒளிப்பதிவு டைரக்டர் ஆர்.ஆர்.சந்திரன்

  ஒலிப்பதிவு டைரக்டர் ட்டி.எஸ்.ரங்கசாமி

  அசோஸியேட் டைரக்டர் – க.நாராயணன்

  இசை திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி புகழேந்தி

  தயாரிப்பு டைரக்ஷன் – ஆர்.ஆர்.சந்திரன்
  Last edited by RAGHAVENDRA; 9th November 2014 at 11:09 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 18. Likes gopu1954 liked this post
 19. #1540
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,074
  Post Thanks / Like
  முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1966

  ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 20. Likes gopu1954 liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •