Page 142 of 185 FirstFirst ... 4292132140141142143144152 ... LastLast
Results 1,411 to 1,420 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

 1. #1411
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like


  படமும் - தகவலும்
  --------------------------------

  ஜெமினி கணேசன்
  அவர்களுடன் நான் கொடைக்கானலில் 20 தினங்கள் தங்கி இருந்தேன். சென்னை வீட்டிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தவுடன், மதுரை விமான நிலையத்திற்கு திரும்பினோம்.
  அங்கே முக்கியஸ்தர் அறையில் நுழைந்தவுடன் , அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் ஜெமினியை பார்த்தவுடன் "வாங்க மாப்பிள்ளே" என்று , சிரித்துகொண்டே........ தான் செல்லமாக வளர்க்கும் ,தாடியை தடவியவாறு, தன் அருகே அமரசொன்னார். .. நானும் என் பங்குக்கு சிவாஜியை பார்த்து, "வணக்கம் அண்ணே" என்றவாறு , அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது சிவாஜியுடன் வி.என்.சிதம்பரமும் கூட இருந்தார்.
  ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை இருந்தது. சிவாஜியுடன் எத்தனையோ போட்டோக்கள் எடுத்திருந்தாலும், சிவாஜி தாடி வைத்த கெட்டப்பில் ஒரு போட்டோவும் நான் எடுத்துகொண்டதில்லை. இதை விட ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என்று நினைத்த நான்,, அருகிலிருந்த வி.என்.சிதம்பரம் அவர்களிடம் என் சிறிய கேமராவை கொடுத்து சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் நான் அமர்ந்திருக்கும் காட்சியை படம் எடுக்க சொன்னேன். அவரும் படம் எடுத்து என் ஆசையை நிறைவேற்றினார்..

  அப்போது விமான நிலைய அறிவிப்பு ஒன்று......சென்னை செல்லும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகும் என்றார்கள். சிவாஜி, ஜெமினி மிகவும் நொந்தவாறே , அங்கு கொடுத்த சிற்றுண்டி மெதுவாக சாப்பிட்டுக்கொண்டே அரசியல், சினிமா என்று அனைத்து விசயங்களையும் மனம் திறந்து பேசினார்கள். இடை இடையே நானும் கலந்துகொண்டேன்,. இருவருக்குமே நல்ல அரசியல் விஷயங்கள் ஏராளமாக தெரிந்து உள்ளன... ஆனால் .சிவாஜிக்கு அரசியல் ஒத்துவரவில்லை. ஜெமினியோ அதற்குள் நுழையவே இல்லை..
  பத்திரிகையாளனாக நான் இருந்தும் அங்கு நடந்த உரையாடல்களை நான் வெளியே விடவில்லை....ஏனெனில், ..அது தான் நட்பு.!!! எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்courtesy net
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1412
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like
  1986-ம் ஆண்டு தீபாவளிக்கு "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'' இரண்டு படங்களும் ரிலீசாயின. ஒரு ஹீரோவின் படம், ஒரே நேரத்தில் இப்படி பண்டிகை நாளில் ரிசீலானது இதற்கு முன்பு சிவாஜி சாருக்குத்தான் நடந்தது.

  1970-ம் ஆண்டு தீபாவளிக்கு சிவாஜி சார் நடித்த "சொர்க்கம்'', "எங்கிருந்தோ வந்தாள்'' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாயின. இரண்டுமே வெற்றி பெற்றன. 16 வருடம் கழித்து, இப்படி தீபாவளி தினத்தில் வெளியான என் படங்களும் வெற்றி பெற்று எனக்கு மகிழ்ச்சி தந்தன.

  மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற படம்தான் தமிழில் "பாலைவன ரோஜாக்கள்'' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அது மாதிரி தமிழில் நான் நடித்த "பூவிழி வாசலிலே'', "கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' படங்களும் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படங்களின் ரீமேக்தான்.

  "மக்கள் என் பக்கம்'', "அண்ணா நகர் முதல் தெரு'', "பொம்முகுட்டி அம்மாவுக்கு'' என்று எனக்கு தொடர் வெற்றி தந்த படங்களும், மலையாள படங்களின் ரீமேக்தான். இந்த மூன்று படங்களிலும் மலையாளத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

  இதை நான் நன்றிப் பெருக்கோடு சொல்லக் காரணம் உண்டு. இந் தப் படங்களில் மாறுபட்ட சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைத்தன. இந்தப் படங்கள் என் ஹீரோ அந்தஸ்தை தக்க வைக்கவும் உதவின.

  "பாலைவன ரோஜாக்கள்'' படத்தை அடுத்து, நானும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் "சின்னதம்பி பெரியதம்பி.'' நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். படத்தை தயாரித்தவர் அண்ணன் `மாதம்பட்டி' சிவகுமார்.

  வழக்கமாக அவுட்டோர் படப்பிடிப்பு என்றால், ஓட்டலில்தான் தங்குவேன். இந்தப் படத்துக்காக அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் வீட்டிலேயே மொத்த யூனிட்டும் தங்கிக் கொண்டோம். அந்த அளவுக்கு கடல் மாதிரி பரந்து விரிந்தது அவர் வீடு. நான், பிரபு, கேமராமேன் சபாபதி, டைரக்டர் மணிவண்ணன் ஒரே ரூமில் தங்கிக் கொண்டோம். காலை முழுக்க படப்பிடிப்பு; மாலையானால் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் என்று ஒட்டுமொத்த யூனிட்டும் விளையாட்டு வீரர்களாகி விடுவோம். இரவானால் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும், பிரபுவும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள்.

  மாதம்பட்டி அண்ணன் வீட்டில், அப்போது யானை வேட்டைக்கு பயன்படுத்துகிற துப்பாக்கி உள்பட விதம் விதமான துப்பாக்கிகள் இருந்தன. வேட்டையாட தடை வந்த நேரத்தில், எல்லா ரக துப்பாக்கிகளையும் மொத்தமாக சரண்டர் பண்ணிவிட்டார். இப்படி ஆட்டம், கொண்டாட்டம் என்று ஒரே குடும்பம் போல பணியாற்றிய அந்தப் படமும் வெற்றி பெற்றது.

  இதையடுத்து சிவாஜி சாருடன் "முத்துக்கள் மூன்று'' படம் வந்தது. இந்தப் படத்தில், சிவாஜி சாருடன் நானும் பாண்டியராஜனும் மற்ற 2 ஹீரோக்கள். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ந்தேதி குன்னூரில் தொடங்கியது. அன்று சிவாஜி சாரின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் 2-ந்தேதி பாண்டியராஜனின் பிறந்த நாள். மறுநாள் 3-ந்தேதி என் பிறந்தநாள்! தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடர்ந்தது!

  இந்த படப்பிடிப்பின் போது சிவாஜி சாருக்கு பக்கத்து ரூமை எனக்கு கொடுத் திருந்தார்கள். நான் காலையில் விழித்ததும் தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகளை முடித்த கையோடு, `ஸ்கிப்பிங்'கும் செய்வேன். கயிற்றை கழற்றியபடி 2 ஆயிரம் தடவை தொடர்ந்து குதிப்பேன். அதன்படி, ரூமிலும் இந்தப் பயிற்சியை தொடர்ந்தேன். இதில் `ஸ்கிப்பிங்' குதியல் மட்டும் பக்கத்து ரூமில் தங்கியிருந்த சிவாஜி சாருக்கு `திங்... திங்...' என்று கேட்டிருக்கிறது.

  கொஞ்ச நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து போன். எடுத்துப் பேசினால் பிரபு லைனில் வந்திருக்கிறார். "என்ன தலைவரே! ஸ்கிப்பிங் பண்றீங்களோ?'' என்று கேட்டார். "ஆமாம்'' என்றேன்.

  "நீங்க குதிக்கிற சத்தம் அப்பாவுக்கு கேட்டிருக்கிறது. அப்பா எனக்குபோன் போட்டு, "சத்யராஜ் எவ்வளவு பொறுப்பா உடற்பயிற்சியெல்லாம் பண்றார். நீயும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதுதானே!'' என்று கேட்கிறார்'' என்றார்.

  எனக்கு பாராட்டு. பிரபுவுக்கு அட்வைஸ். சிவாஜி சாரின் `பார்வை' சரிதானே!''

  இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 4. #1413
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  நடிகர் திலகத்தின் நிழற்படத்திற்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி யுகேஷ் பாபு சார்.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. #1414
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  Sivaji Ganesan Filmography Series  96. Andavan Kattalai ஆண்டவன் கட்டளை


  12.06.1964 அன்று வெளியாகி (12.-06-2014) 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இன்றைய நாளில் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் பதிவிடுவது மிகவும் பொருத்தமாகவும் மனமகிழ்ச்சியாகவும் உள்ளது. என் பட்டியலில் முதல் பத்தில் இடம் பெறக் கூடிய நடிகர் திலகத்தின் இத்திரைக்காவியம் என்றென்றும் என்னைப் போன்ற ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும் வெற்றித் திரைக்காவியம்.


  வெளியீடு – 12.06.1964

  தயாரிப்பு – பி.எஸ்.வி.பிக்சர்ஸ்

  நடிக நடிகையர்

  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா. சந்திரபாபு, அசோகன், பாலாஜி, ராஜன், புஷ்பலதா, சுந்தரிபாய், சீதாலட்சுமி, பேபி ரமாமணி மற்றும் பலர்

  கௌரவ நடிகர்கள் – பி.எஸ்.வீரப்பா, ஜாவர் சீதாராமன், வி.நாகையா

  மூலக்கதை – கே.பி. கொட்டாரக்கரா

  திரைக்கதை வசனம் – ஜாவர் சீதாராமன்

  பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்

  இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி, உதவி – ஆர்.கோவர்த்தனம், ஹென்றி டேனியல்

  பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி

  எடிட்டிங் கே.நாராயணன், உதவி – எஸ்.முத்து, எஸ்.நீலகண்டன், கே.மோஹன்

  ஒளிப்பதிவு டைரக்ஷன் – தம்பு

  ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ்.பாஸ்கர் ராவ்

  ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி, உதவி – ஆர்.எஸ்.வேத மூர்த்தி, ஜோ.அலோஷியஸ்

  ஒலிப்பதிவு வசனம் – பி.எம்.மதன கோபால் – வாஹினி, முகுந்தன்-சினி சவுண்டு சர்வீஸ்

  கலை – ஏ.பாலு

  நடனம் – ராஜ்குமார்

  மேக்கப் – ரங்கசாமி, பத்ரையா, ராமச்சந்திரன், கிருஷ்ணராஜ், ராஜேந்திரன்

  உடைகள் – பி.ராமகிருஷ்ணன், உதவி- மணி, ராஜ்

  ஸ்டில்ஸ் – சாரதி

  விளம்பரம் – அருணா அண்ட் கோ

  டிசைன்ஸ் – பக்தா

  புரொடக்ஷன் நிர்வாகம் – எஸ். கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணன்

  அசோஸியேட் டைரக்ஷன் – ரா.சங்கரன், நாமக்கல் ரா. பாலு, உதவி – தாமோதரன்

  ஸ்டூடியோ – வாஹினி

  தயாரிப்பு – பி.எஸ்.வீரப்பா- பி.எஸ்.வி. பிக்சர்ஸ்

  டைரக்ஷன் – கே.சங்கர்
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. Thanks gopu1954 thanked for this post
  Likes kalnayak liked this post
 7. #1415
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like

  பாடல்கள்

  1. கண்ணிரண்டும் மின்ன மின்ன – பி.பி.ஸ்ரீநிவாசன், எல்.ஆர்.ஈஸ்வரி

  2. அழகே வா அருகே வா – பி.சுசீலா

  3. அமைதியான நதியினிலே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

  4. ஆறு மனமே ஆறு – டி.எம்.சௌந்தர்ராஜன்

  5. சிரிப்பு வருது சிரிப்பு வருது – ஜே.பி.சந்திரபாபு

  6. தென்னை இளங்கீற்றினிலே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 8. #1416
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  பம்மலாரின் ஆவணப் பொக்கிஷத்திலிருந்து

  பொக்கிஷப் புதையல் : படப்பிடிப்புக் கட்டுரை  வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ்(IMN) [சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964

  இந்தியன் மூவி நியூஸ் [IMN, சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964

  இந்த கிடைத்தற்கரிய ஆவணப்பதிவை அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. Thanks gopu1954 thanked for this post
  Likes kalnayak liked this post
 10. #1417
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  ஆண்டவன் கட்டளை பாட்டுப் புத்தகத்தின் முகப்பு

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 11. #1418
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  பாடல் காட்சிகள்
  ஆறு மனமே ஆறு

  aru maname aru
  அமைதியான நதியினிலே ஓடம்

  amaidhiyana nadhiyinile
  அழகே வா அருகே வா

  azhage vaa
  தென்னை இளங்கீற்றினிலே

  Thennai Ilankaatrinile
  சிரிப்பு வருது சிரிப்பு வருது

  sirippu varudhu
  கண்ணிரண்டும் மின்ன மின்ன

  kannirandum minna minna

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 12. Thanks gopu1954 thanked for this post
  Likes kalnayak liked this post
 13. #1419
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  ஆண்டவன் கட்டளை திரைக்காவியத்தைப் பற்றி முரளி சாரின் அருமையான கட்டுரையின் மீள்பதிவு

  கட்டுரையின் பாகம் 1க்கான இணைப்பு
  http://www.mayyam.com/talk/showthrea...l=1#post357900

  15th January 2009, 02:01 PM
  ஆண்டவன் கட்டளை - Part I

  தயாரிப்பு - பி.எஸ்.வி. பிக்சர்ஸ்

  இயக்கம் - கே. சங்கர்

  வெளியான தேதி - 12.06.1964

  கொண்ட கொள்கையில் உறுதியாக, கடமையே வெற்றிக்கு வழி என்று வாழும் ஒரு மனிதன் உணர்வுகளுக்கு அடிமையானால் அவனது வாழ்க்கை எந்தளவிற்கு திசை மாறி, நிலை தடுமாறி போகும் என்பதை திரையில் வடித்த படம்.

  கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் வாழ்கையை ஒரு கட்டுப்பாடோடு வாழ்பவர். டிசிப்ளின் என்ற வார்த்தையின் மறு உருவம். அவர் கடையை கடந்து போகும்போது கடை முதலாளி கடிகாரத்தில் நேரத்தை சரி பண்ணி வைத்து கொள்ளக்கூடிய அளவிற்கு, அவர் சாலையை கடக்கும் போது போக்குவரத்து போலீஸ் டிராபிக்-ஐ நிறுத்த கூடியளவிற்கு பெர்பெக்ட்.

  தான் மட்டுமல்ல தன் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். திறமையுள்ள மாணவன் கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லாமல் ஹோட்டலில் வேலை பார்ப்பதை பார்த்து விட்டு தானே பணம் கட்டி படிக்க வைக்கும் அளவிற்கு நல்ல மனம் படைத்தவர். அவரின் குணங்களினால் கவரப்பட்ட பெரும்பான்மை மாணவர்கள் அவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.

  ஊரில் அவரது தாய் மட்டும் தன் பேத்தியுடன் வசித்து வர, மாதம் ஒரு முறை தன் தாயை பார்க்க செல்வார் கிருஷ்ணன். செல்லும் போதெல்லாம் முறை பெண்ணை மணந்து கொள்ள சொல்லும் தாயை சமாளிப்பதே பெரிய வேலை. பிரம்மச்சரியத்தை முழுமையாக கடைப்பிடித்து கடமையே வெற்றிக்கு வழி என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழ நினைக்கும் கிருஷ்ணன் திருமணத்தை விரும்பவில்லை. முறைப்பெண்ணும் (கோமதி) நகரத்தில் சந்தித்த ராமு என்ற இளைஞனை (கிருஷ்ணன் படிக்க வைக்கும் அதே இளைஞன்) காதலிக்கிறாள்.

  அதே கல்லூரியில் படிக்கும் பெண் ராதா. அவளின் தாய் மாமன் மணி அந்த கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர். அவர் தன் பதவியை பயன்படுத்தி சில பல ஊழல்கள் செய்கிறார். ஆனால் தாய் மட்டுமே உள்ள ராதாவிற்கு தாய் மாமன் தயவில் வாழ வேண்டிய நிலைமை. மணிக்கு, கல்லூரியிலும் மாணவர்கள் மத்தியிலும் கிருஷ்ணனுக்கு இருக்கும் நல்ல பெயரை பார்த்து பொறாமையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவரின் சில தவறுகளை கிருஷ்ணன் பப்ளிக்காக சுட்டிக்காட்டுவதால் அந்த வெறுப்பு கூடுகிறது.

  பெண் வாசனையே இல்லாமல் வாழும் கிருஷ்ணன் ஒரு முறை லேடீஸ் ஹாஸ்டலுக்கு போக அங்கே விளக்கு அணைக்கப்படுவதால் நாடக ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் ராதா, கிருஷ்ணனை கட்டிப்பிடித்துக்கொள்ள முதல் முதலாக அனுபவிக்கும் பெண் ஸ்பரிசம் கிருஷ்ணனை சிறிது நிலை குலைய வைக்கிறது. கிருஷ்ணனை எந்த பெண்ணாலும் வீழ்த்த முடியாது என்று சக மாணவிகள் சொல்ல அதை ஒரு சவாலாக எடுத்து கொள்கிறாள் ராதா. அதன் பிறகு அவளது நடவடிக்கைகளில் மாற்றம். கிருஷ்ணனை கவர அவள் பல வழிகளை பயன்படுத்த அவர் மனதில் ஏற்படும் சலனம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதை மாற்றி இறுதியில் அவரும் காதலிக்க தொடங்கி விடுகிறார். இது தெரிந்து மணி அவரை கல்லூரியில் அனைவருக்கும் முன்பில் அவமானப்படுத்தி விடுகிறான். அதுவரை கௌரவமாக வாழ்ந்த கிருஷ்ணன் வாழ்க்கையில் சறுக்கல்கள். ராதாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்பி வீட்டிற்கு வரும் கிருஷ்ணனிடம் சரி என்று ஒப்பு கொள்ளும் ராதாவின் தாயார் ஆனால் மனதுக்குள் வேறு திட்டம் போடுகிறாள்.

  இதனிடையே ராதாவிற்கு வேறு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்யும் குடும்பத்தினர் ஒரு சுரங்கத்தில் என்ஜினீயர் வேலை செய்யும் சங்கர் என்பவரை தேர்வு செய்கிறார்கள். அவர் மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வாழ்கிறார். கல்யாணத்திற்கு ஒப்பு கொள்ள மறுக்கும் ராதா, கிருஷ்ணனை சந்தித்து கல்யாணம் செய்து கொள்ள போகும் நேரம் ஏற்படும் படகு விபத்து அவர்களது வாழ்க்கையை திசை திருப்புகிறது. ராதாவை கொன்று விட்டதாக கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மகன் கொலை குற்றவாளி என்று தெரிந்ததும் அவரை காண வரும் தாயும் அங்கே உயிரை விட அனாதை ஆகிறார் கிருஷ்ணன்.

  தண்டனை காலம் முடிந்து வரும் கிருஷ்ணனை வரவேற்க யாரும் இல்லை. அவர் வளர்த்த நாயும் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறந்து போக கிட்டதட்ட ஒரு துறவு நிலைக்கு போய் விடுகிறார். அப்படியே அலைந்து திரியும் அவரை அவரது பழைய மாணவன் சந்திக்கிறான். இப்போது அவருடன் அவரது அக்கா மகள் கூட இருக்கிறாள். அவர்கள் சென்று வேலை தேடும் இடம் ஒரு சுரங்கம். அங்கே தலைமை பொறுப்பில் இருப்பவர் சங்கர்.

  இதனிடையே தண்ணீரில் வீழ்ந்த ராதா காப்பாற்றப்பட்டு, அந்த எஞ்சினியர் சங்கர் வீட்டில் இருக்கிறாள். ஆனால் அம்னீஷியா பாதிக்கப்பட்ட அவளுக்கு பழைய நினைவுகள் ஞாபகம் இல்லை. இந்த நிலையில் ராதா - கிருஷ்ணன் சந்திப்பு நிகழ்கிறது. ராதாவை பார்க்கும் கிருஷ்ணனுக்கு திகைப்பு, ஆச்சர்யம், கோவம் எல்லாம் ஏற்படுகிறது. ஆனால் ராதாவிற்கு எதுவும் நினைவில்லை. இதனிடையே ராமு அந்த சுரங்கத்திற்கே எஞ்சினியராக வந்து சேருகிறான். எப்படி அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வருகின்றன என்பதே கிளைமாக்ஸ்.

  (தொடரும்)

  அன்புடன்

  பாகம் 2க்கான இணைப்பு
  http://www.mayyam.com/talk/showthrea...l=1#post357902
  15th January 2009, 02:05 PM

  ஆண்டவன் கட்டளை - Part II

  இந்த படத்தை பொருத்த வரை ஆலய மணி என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் - பி.எஸ்.வீரப்பா - கே.சங்கர் கூட்டணியில் வெளி வந்த அடுத்த படம்.

  இந்த படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மாறும்போதெல்லாம் அவரின் கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் மாறுவது குறிப்பிட வேண்டிய விஷயம். கடமை உணர்வோடு வாழும் புரொபெஸராக வரும் போது நடு வகிடு எடுத்த ஹேர் ஸ்டைல். காதல் வயப்படும் போது அழகான ஹேர் ஸ்டைல் (புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வரும் அதே ஸ்டைல்), குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் போது நெற்றியில் முடி வழியும் ஸ்டைல், துறவு போன்ற நிலையில் மொட்டை அடித்தது போன்ற ஸ்டைல். இப்படி அடுக்கி கொண்டே போகலாம். கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் போன்றவையே இப்படி என்றால், நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா?

  புரொபஸர் வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனி. ஜுலியஸ் சீசர் பற்றி அவர் விளக்குவது, எப்படி came, saw, conquered ("vili,vidi,vitti "- Prabhu, correct-aa?) சீசருக்கு மட்டுமே பொருந்தும் அதை ஆண்டனிக்கு உவமைப்படுத்துவது தவறு என்று சுட்டிக்காட்டும் விதம், சாக்ரடீஸ் பற்றி எடுக்கும் லெக்சர், (Those who cannot obey cannot command என்று மாணவனை அடக்குவது) எல்லாமே ஒரு கண்டிப்பான புரொபஸரை கண் முன்னே நிறுத்தும். அதே மனிதன் மெல்லிய ஆனால் வலிமையான உணர்வுகளால் சலனப்படும்போது எப்படி மாறுவான் என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். ஹாஸ்டல் நிகழ்ச்சி மனதை அலைக்கழிக்க, வீட்டில் இருக்கும் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் படங்களை பார்த்தும், புத்தகத்தை படித்தும் மனத்தை அமைதிப்படுத்துவது, மழை காரணமாக ராதாவுடன் ஏற்படும் ஒரு நிமிட நெருக்கம், அதை உணர்ந்தவுடன் curse the rain என்று கத்தி விட்டு பிறகு தவறு தன் மீது தான் என்று உணர்ந்ததும் bless the rain என்று சொல்லி விட்டு போவது, வகுப்பறையில் பாடம் எடுக்க முடியாமல் திணறுவது, ராதாவின் தாயார் கேட்கும் பணத்திற்காக சேட் கடையில் பணம் வாங்கும் போது அங்கு வேலை செய்யும் தன் ஊர்க்காரனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் திரும்பவது, கடைக்கு வெளியே சந்திக்கும் ராமுவையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்ப்பது, எல்லாம் துறந்த மன நிலையை வெளிபடுத்தும் அந்த நடை, அந்த பாடி லாங்க்வேஜ், வேலைக்கு சென்ற இடத்தில் சந்திக்கும் ராதாவிற்கு தன்னை தெரியவில்லை என்றவுடன் ஏற்படும் அந்த ஷாக், இவை எல்லாமே ஒன்றை ஒன்று வெல்லக் கூடியவை.

  ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு நுட்பமாக கவனித்து செய்வார் நடிகர் திலகம் என்பதற்கு இந்த படத்தில் வரும் இரண்டு காட்சிகள் போதும். பூங்காவில் மழையில் திடீரென்று ஏற்படும் இடி மின்னல் காரணமாக தன்னை அணைத்து கொள்ளும் ராதாவை அவரும் அணைத்து கொள்ள தேவிகா சொல்லும் வசனம் "மழை அழகா இருக்குலே". அதற்கு அவர் சொல்லும் பதில் "வானம் என்ற தந்தை பூமி என்ற அன்னையை அணைக்கும் காட்சி தானே மழை". இதை இரண்டாம் முறையும் சொல்லுவார். வசனத்தை அவர் சொல்லும் போது சிறிது blurred ஆக கேட்கும். அதாவது மழை கொட்டிக்கொண்டிருக்கும் போது நாம் ஏதாவது பேசினால் அது தெளிவாக அடுத்தவர் காதுக்கு விழாது. அதை அத்தனை நுட்பமாக செய்திருப்பார். [நண்பர் பிரபு ராம் பாணியில் சொல்வதென்றால் நேரொலியில் பேசியிருந்தால் அற்புதம். டப்பிங்கில் பேசியிருந்தால் அதி அற்புதம்]. மற்றொன்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆறு மனமே ஆறு பாட்டின் முடிவில் கடலையை ஊதி வாயில் போட்டுக்கொண்டே வரும் நடை (அந்த நீளமான நடையை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள்). அது போல அழகே வா அருகே வா பாட்டில் அவர் முகத்தை பார்த்தாலே அந்த பாத்திரம் அனுபவிக்கும் பல்வேறு உணர்வுகளும் அப்படியே வெளிப்படும். ரசிகர்களுக்காகவே சில ஸ்டைல் நடைகள், அமைதியான நதியினிலே ஓடம் பாட்டிலும் அது தூக்கலாக இருக்கும்.

  ஜெயிலில் நடக்கும் தாய் மகன் சந்திப்பையும் சொல்ல வேண்டும். தன் மகன் கொலைகாரன் என்று கேள்விப்பட்டவுடன் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் போய் அவனை சபித்து உயிர் விடும் தாய், தான் நிரபராதி என்பதை தன் தாய் கூட நம்பவில்லையே என்று கதறும் மகன், கல்லூரி மைதானத்தில் அனைத்து மாணவர்களுக்கு முன்பில் அவமானப்படும் புரொபஸர், இந்த இரண்டும் குறிப்பிடத்தக்க காட்சிகள்.

  தேவிகாவிற்கு ரொமான்ஸ் நன்றாக வரும் என்பது தெரியும். [பாலிருக்கும் பாடல், நான் என்ன சொல்லி விட்டேன் பாடல்,மடி மீது தலை வைத்து பாடல், கர்ணன் படத்தில் முதல் சந்திப்பு, கண்கள் எங்கே மற்றும் இரவும் நிலவும் பாடல், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் மற்றும் நீலவானம் படம்].

  ஆனால் இந்த படத்தில் தேவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதலில் சாதாரணமாக வருபவர் ஒரு seductress பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார். கிளாஸில் பாடம் நடத்தும் புரொபஸரை பார்க்கும் அந்த பார்வை, நமது மனதில் இருக்கும் நமது எதிரிகளான நுட்பமான உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று சொல்லும் புரொபஸரிடம் தனியாக வந்து அது என்ன என்று அப்பாவி போல கேட்பது, அழகே வா பாடலில் அந்த கடலில் குளித்து கொண்டே அவர் செய்யும் movements, புரொபஸர் தன்னை அனைத்துக்கொண்டதை ரசித்து கொண்டே கையை எடுக்கிறீங்களா என்பது, I am sorry என்று சொல்பவரிடம் But,I am not sorry என்று சொல்வது, what do you mean என்று அவர் கோபப்பட, இதுக்கெல்லாம் எப்படி சார் meaning சொல்றது என்று முகத்தில் வழியும் நீரை அவர் மீது செல்லமாக விசிறி விட்டு செல்வது - தேவிகாவிடம் இவ்வளவு காதல் குறும்பு நரம்புகளா என்று வியப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இடைவேளைக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வேலை இல்லை.


  மற்ற காரக்டர்கள் எல்லாம் படத்திற்கு உதவி செய்பவை. ஆனால் முழு நீள பாத்திரங்கள் அல்ல. சந்திரபாபு முற்பகுதியில் கொஞ்சம் அதிகமாக வருவார். ஆனால் காமெடி குறைவு தான். நடிகர் திலகம் படிக்க வைக்கும் மாணவனாக மற்றும் அவரது முறை பெண்ணை காதலிப்பவராக ராஜன், as usual. இளமையான புஷ்பலதா, மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் மெஜெஸ்டிக்கான பாலாஜி, இரண்டு மூன்று காட்சிகளிலே பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி விடும் சுந்தரி பாய் (ஏன் ஒரு பணக்கார மாப்பிளையை தேடுகிறேன் என்பதற்கு அவர் தேவிகாவிடம் விளக்கம் சொல்வது, பிறந்தது முதல் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியின் ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தும்), வழக்கம் போல அசோகன் (இந்த வருடத்தில்[1964] தான் அசோகன், நடிகர் திலகத்தோடு நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. கர்ணன், ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து], கௌரவ தோற்றத்தில் ஜாவர், வீரப்பா, நாகையா ஆகியோர்.

  ஜாவர் திரைக்கதை வசனம் பல இடங்களில் அவரது புத்தி கூர்மையை பறை சாற்றும். ஒரு குறை என்னவென்றால் கொஞ்சம் தூய தமிழ் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்றிருக்கிறது. அது இயல்பான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  தம்புவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். ராஜன் புஷ்பலதா டூயட் பாடலான கண்ணிரெண்டும் மின்ன மின்ன- வின் போது திரை முழுக்க அருவி, அதற்கு முன்னாள் ராஜன், புஷ்பலதா, அழகே வா பாடலின் போது வர்கலாவில் (கேரளா) தென்னை மரங்களோடு கடல் வந்து பேசும் காட்சிகள், அதன் சுற்று வட்டாரத்திலே எடுக்கப்பட்ட அமைதியான நதியினிலே ஓடம் (அந்த படகு காட்சிகள் எவ்வித ஜெர்க்மின்றி இருக்கும்), இதை தவிர படம் முழுக்க கண்ணை உறுத்தாத காமிரா.

  இசையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் கவியரசர் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் வந்த மிக சிறந்த பாடல்களாக இந்த படத்தின் பாடல்களை குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன். அமைதியான நதியிலே ஓடம் பாடலை கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணில் கண்ணீர் அரும்புவதையும் பார்த்திருக்கிறேன். கண்ணதாசனின் மிக சிறந்த தத்துவ பாடலாக ஆறு மனமே ஆறு பாடலை சொல்லுவதையும் கவனித்திருக்கிறேன். [நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் - எனக்கு மிகவும் பிடித்த வரிகள்]. இந்த பாடல் அறுபடை வீடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் . குறிப்பாக திருப்பரங்குன்றத்திலும், பழமுதிர் சோலையிலும் (அழகர் கோவில்) ஷூட்டிங் நடக்கும் போது கட்டுகடங்காத கூட்டம் என்று சொல்வார்கள். பாடல் பார்க்கும் போதே Frame- ல் மக்கள் கூட்டம் கூட்டமாக தெரிவார்கள். அதை கஷ்டப்பட்டு மறைத்து எடுத்திருப்பார்கள். அதுவும் அழகர் கோவிலில் விவேகானந்தர் உடையில் வெளி பிரகாரத்தில் நடிகர் திலகம் நடக்கும் ஸ்டைல் (பின்னால் துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும் கணேசன்), தியேட்டரில் மட்டுமல்ல, நேரில் பார்த்தவர்களும் கை தட்டியது சரித்திரம்.

  இது தவிர சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில் அழகே வா (சாதாரணமாக ஈஸ்வரி பாடும் சூழ்நிலை), பி.பி.எஸ் - ஈஸ்வரியின் கண்ணிரெண்டும் மின்ன மின்ன, சந்திரபாபுவிற்காகவே அமைக்கப்பட்ட சிரிப்பு வருது பாடல் எல்லாமே ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகவே குடியிருப்பவை.


  இவை எல்லாம் அமையப் பெற்றதால் இயக்குனர் சங்கரின் வேலை எளிதானது. ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் நூறு நாட்கள் என்ற வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனது வருத்தமான விஷயம். எனக்கு தோன்றுவது இரண்டு காரணங்கள். படத்தின் முடிவுக்கு இட்டு செல்லும் இடங்களில் அது வரை இருந்த இயல்பு போய் சிறிது செயற்கை நுழைந்து விட்டது ஒரு காரணம். இரண்டு, வெளியான வருடம் -1964. இந்த படத்திற்கு முன் கர்ணன், பச்சை விளக்கு, இந்த படத்திற்கு பின் கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி. ஆக இப்படிப்பட்ட படங்களுக்கு இடையில் வெளி வந்ததால் இந்த படம் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனதோ என்று தோன்றுகிறது. 70 நாட்கள் ஓடியது இந்த படம்.

  1964 மே 27 அன்று ஜவகர்லால் நேரு மறைந்து போனார். 1964 ஜூன் 12 அன்று வெளியான இந்த படத்தின் இறுதி காட்சி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வகுப்பறையில் நடிகர் திலகம் பேசுவது போல் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

  பல முறை பார்த்திருந்தும் இப்போது பார்த்த போது தோன்றிய எண்ணங்களை இங்கே எழுதியிருக்கிறேன்.

  அன்புடன்
  .
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 14. #1420
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like

  முரளி சாரின் பதிவிற்கு சாரதாவின் துணைப் பதிவு மீள் பதிவாக இங்கே

  சாரதா அவர்களின் பதிவிற்கான இணைப்பு
  http://www.mayyam.com/talk/showthrea...l=1#post358270
  16th January 2009, 12:51 PM

  டியர் முரளி,

  'ஆண்டவன் கட்டளை' படத்தைப்பற்றிய ஆய்வு மிக அருமை. படம் பெரிய வெற்றியடையாமற்போன காரணங்களில், வழக்கம்போல ஒன்றன் பின் ஒன்றான படங்கள் என்பதையும் மீறி, படத்தின் முடிவில் தோன்றிய செயற்கைத்தனமே என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். அன்றைய படங்களில் முடிவென்றால், ஒன்று காதலர்கள் சேருவதாக இருக்க வேண்டும், அல்லது மரணத்தில் முடிவதாக இருக்க வேண்டும் என்ற இரண்டே விதிகளின்படியே அமைக்கப்பட்டதால், இவற்றைத்தாண்டிய பரீட்சாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்படம் அதற்கான ஒரு நல்ல களமாக அமைந்திருந்தபோதிலும் கோட்டை விட்டு விட்டனர் என்றே சொல்ல வேண்டும். 'ஆலயமணி'யில் அவ்வளவு சோகத்துக்குப்பிறகும், இறுதியில் தாடியை ஷேவ் பண்ணிவிட்டு சரோஜாதேவியுடன் கைகோர்த்து, 'பொன்னை விரும்பும் பூமியிலே' என்று ஸ்டைலாக நடந்ததை ஒப்புக்கொண்ட மக்கள், ஆண்டவன் கட்டளையில், 'மாமனிதர் நேரு மறைந்து விட்டார் என்பதைப் பொய்யாக்குவோம். அவர் நம் நெஞ்சங்களில் உறைந்துவிட்டார் என்ப்தை மெய்யாக்குவோம் என்ற வசனத்தோடு படம் முடிந்ததை அரைகுறை மனதோடே ஏற்றுக்கொண்டனர்.

  என்னுடைய் 'ஆல் டைம் ஃபேவரிட்' தேவிகா இப்படத்தில் சூப்பரோ சூப்பர். அதிலும் 'அலையே வா' பாடலின்போது, பாறை மீது ஒருகைநீட்டிப் படுத்தவாறு, தலைமுடி நெற்றியில் விழ அவர்காட்டும் ஒய்யாரமான போஸ், அதிலும் அந்த துல்லியமான குளோஸப் ஷாட் நிச்சயம் ஆண்களைப் படாத பாடு படுத்தியிருக்கும். காரணம் அன்றைய காலகட்டத்தில் கதாநாயகிகள் அப்படி நடிப்பது ஒரு சவால். ஒரு வைஜயந்திமாலாவோ, அல்லது ஒரு ராஜஷ்ரீயோ இவ்வாறு நடித்திருந்தால் விந்தையில்லை. ஆனால் சாவித்திரி, சரோஜாதேவி, சௌகார், விஜயகுமாரி போன்றவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்த தேவிகாவிடம் நிச்சயம் ரசிகர்கள் இதை எதிர்பார்த்திருக்க வாப்பில்லை. அதைப்பார்த்த ரசிகர்கள் நிச்சயம் உற்சாகம் கொண்டிருப்பார்கள். அதே போல, வகுப்பறையில் இரட்டை ஜடையோடு தன் காந்தப்பார்வையால் ப்ரொஃபஸரை படாத பாடு படுத்துவதும் ஜோர். (இதுபோல தேவிகா என்றதும் கண்ணுக்குள் நிற்கும் இன்னொரு காட்சி, கர்ணனும் மகனும் போருக்குப்போகும்போது அவர்களை வழியனுப்பும் வேளையில் மஞ்சள் நிற சேலையும், விரிந்து தொங்கும் தலைமுடியுமாக அவர் தோன்றுவது. அத்துடன், அன்புக்கரங்களில் பாவாடை தாவணி காற்றில் பறக்க சின்னப்பெண் போல துள்ளித்துள்ளி ஆடி 'உங்கள் அழகென்ன அறிவென்ன' பாடி சிவாஜியை டீஸ் செய்வது. ஏன், அந்திமக்காலத்தில் அவர் நடித்த பாரதவிலாஸில், சுடிதாருடன் 'ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும் தீரம் காண ஆவோ' பாடுவது மட்டும் என்னவாம்). சுருக்கமாகச்சொன்னால் 'சிவாஜி-பத்மினி', மற்றும் 'சிவாஜி-கே.ஆர்.விஜயா' காலங்களுக்கிடையில் 'சிவாஜி-தேவிகா' காலம் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

  ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாகத்தர கண்ணதாசனால் மட்டுமே முடியும். பின் என்ன...

  தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
  தென்னைதனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது

  ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
  காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

  என்பதெல்லாம் தத்துவ முத்துக்களன்றி வேறில்லை.

  புரொஃபஸர் ரோட்டை கிராஸ் பண்ண ட்ராஃபிக்கையே கான்ஸ்டபிள் நிறுத்துவதைப்பார்த்து அதிசயிக்கும் நீதிபதி, அதே ப்ரொஃபஸர் தன் முன் கொலைக்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும்போது அவருக்கு பழைய ஃப்ளாஷ்பேக் தோன்றுவதைக் காண்பித்து, 'அவரா இப்படி?' என்று அதிரும் இடங்களில் சங்கர் இருக்கிறார்.

  சந்திரபாபு பாடும் 'சிரிப்பு வருத்து சிரிப்பு வருது ' பாட்டில் கண்ணதாசனின் வரிகள், எக்காலத்துக்கும் பொருந்துபவை...

  மேடையேறிப் பேசும்போது ஆறு போல பேச்சு
  கீழேயிறங்கிப்போகும்போது சொன்னதெல்லாம் போச்சு
  நல்ல கணக்கை மாத்து, கள்ள கணக்கை ஏத்து
  நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து (நண்பனை ஏமாத்து?)

  உள்ளே பணத்தைப்பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
  ஒளிஞ்சுமறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
  பணத்தை எடுத்து, நீட்டு கழுதை பாடும் பாட்டு
  ஆசை வார்த்தை காட்டு, உனக்கும் கூட ஓட்டு

  ஆறுபடைவீடுகளை உள்ளடக்கிய 'ஆறு மனமே ஆறு' பாடல், எதிர்பாராமல் இடைச்செருகலாக வந்த போனஸ். ('சிந்துநதியின்மிசை நிலவினிலே' போல). சிறப்புத்தேண்கின்னம் வழங்கும் வி.ஐ.பிக்கள் அனைவரும் மறக்காமல் சிலாகித்துப்பேசுவது 'கேஷுவலாக வேர்க்கடலை தின்னும்' காட்சியில் அவர் காட்டும் இயல்போ இயல்பு.

  வெற்றிப்படம்தான், ஆனால் நூறு நாட்கள என்ற எல்லைக்கோட்டைத்தொடவில்லை. எல்லாச்சிறப்பம்சங்களும் கொண்ட இரண்டு படங்களான ஆண்டவன் கட்டளையும், முரடன் முத்துவும் நூறு நாட்களைக்கடந்திருந்தால், 1964-ல் வெளியான அத்தனை (ஏழு) படங்களும் நூறு நாட்களைக்கடந்த சாதனைச்சிறப்பைப் பெற்றிருக்கும்.

  ஆயினும் சோடை போகவில்லை.... ஒரு பக்கம் நடிகர்திலகத்தின் மற்ற படங்கள், இன்னொருபக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய், பணக்கார குடும்பம், படகோட்டி படங்களின் அச்சுறுத்தல், இவை போக நகைச்சுவை, தேன் சொட்டும் பாடல்கள், வண்ணம் இவற்றோடு வந்து மோதிய காதலிக்க நேரமில்லை, வித்தியாசமாக கண்ணதாசன் தந்த கருப்புப்பணம் இவற்றை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை... இவற்றுக்கு நடுவே நடிகர்திலகம் அந்த ஆண்டில் நிகழ்த்திய்வை இமாலய வெற்றிகளே.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •