Page 123 of 185 FirstFirst ... 2373113121122123124125133173 ... LastLast
Results 1,221 to 1,230 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1221
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எல்லாம் உனக்காக - காணொளிகள்

    அசைந்து குலுங்கும்


    இப்பாடலைப் பற்றிய ஆங்கில விளக்கவுரை யூட்யூப் இணைய தளத்திலிருந்து...


    This is a classic example of subtle acting. Sivaji and Savithri simply steal your hearts in the scene. This should be completely watched to understand the situation and hence the song is preceded and followed by the related narration. Anand (Sivaji) happens to marry Sarala (Savithri), physically handicapped. This is the first night scene. See how to the understanding between husband and wife is explored in this situation. She plays the visuals of her dance performance and both husband and wife look each other on seeing the visual. There is so much of mind expressed in their looks. At one stage Sarala sings along the song which moves Anand.

    An outstanding performance in a intricate relationship sequence stands testimony to the genius in Sivaji and Savithri.

    Film: ELLAM UNAKKAGA
    Direction: Athurthi Subba Rao
    Cast: Sivaji Ganesan, Savithri, Ranga Rao, T.S. Balaiah, C.K. Saraswathi and others.
    Music: K.V. Mahadevan


    உலகத்திலிருக்கும் அத்தனை விதமான நடிப்புப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப் பட வேண்டிய காட்சி. இந்தப் பாடலைத் தனியாகப் பார்ப்பதை விட அதன் முன்னும் பின்னும் தொடர்புடைய காட்சிகளோடு பார்த்தால் தான் இதன் மகத்துவம் விளங்கும் என்பதற்காக காட்சிகளுடன் தரவேற்றப் பட்டுள்ளது. குறிப்பாக திரையில் தன்னுடைய நாட்டியத்தைப் பார்த்தவாறே சாவித்திரி கலங்குவதும் சாவித்திரியை திரையிலும் அருகிலுமாக மாற்றி மாற்றிப் பார்த்து தன் மன ஓட்டத்தை முகத்தில் பிரதிபலிப்பதும், உலகத்தில் இவர்களை மிஞ்சிய நடிக நடிகையர் இருப்பார்களா என்ற கேள்வியைக் கட்டாயம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எழுப்பும்.

    Last edited by RAGHAVENDRA; 9th October 2013 at 10:41 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1222
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    71.ஸ்ரீ வள்ளி Srivalli







    தணிக்கை – 06.06.1961
    வெளியீடு – 01.07.1961





    தயாரிப்பு – கே.வெங்கடேசன், எல்.வெங்கட்ராமன் - நரசு ஸ்டூடியோஸ், சேலம்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ராகினி, ஹெலன், டி.ஆர்.மகாலிங்கம், ஈ.ஆர்.சகாதேவன், ஜே.பி.சந்திரபாபு, வி.ஆர்.ராஜகோபால், சி.எஸ்.பாண்டியன், சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சி.ஆர்.பார்த்திபன், பேபி உமா, சி.கே.சரஸ்வதி, பட்டம்மாள், வத்ஸலா மற்றும் பலர் நடித்த்து.

    கதை வசனம் பாடல்கள் – தஞ்சை ராமையா தாஸ்
    இசை – ஜி.ராமனாதன்
    ரீரிகார்டிங் சங்கீதம் – சி.என். பாண்டுரங்கன்
    ஆர்கெஸ்ட்ரா- ஜி.ராமனாதன் இசைக்குழுவினர்

    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, ஜிக்கி,

    நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.என். தண்டாயுத பாணி பிள்ளை, கே.டி. தங்கராஜு, வி.மாதவன்
    ஒலிப்பதிவு – கே.ராமச்சந்திரன்
    ஆர்ட் டைரக்ஷன் – கங்கா
    ஒளிப்பதிவு – கே.ஹெச். கபாடியா, பாபுபாய் உதேஷி
    தந்திரக் காட்சிகள் – பாபுபாய் உதேஷி
    ஆப்டிகல்ஸ் – ராவ்கோ எபெக்ட்ஸ் ஸர்விஸ்
    எடிட்டிங் – ஆர்.ராஜகோபால்
    மேக்கப் – டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, சுந்தரம்
    உடை – எம்.ஜி.நாயுடு, ஏ.அங்குசாமி,
    ஸ்டில்ஸ் – போட்டோ ஆர்ட் சென்டர்
    செட்டிங்ஸ் – எம்.எஸ்.சுப்ரமண்யம்
    செட் ப்ராப்பர்டீஸ் – சினி க்ராப்ட்ஸ்
    புரடக்ஷன் மேனேஜர் – வி.நாராயணன்
    உதவி டைரக்ஷன் – கே.ஷண்முகம், பி.எம்.மணி
    பிராசஸிங், பிரிண்டிங் – கேவா கலர், பை பிலிம் சென்டர், பாம்பே
    சவுண்ட் பிராசஸிங் – மெட்ராஸ் சினி லேபரட்டரீஸ்
    ஸ்டூடியோ – நரசு
    வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
    டைரக்ஷன் – டி.ஆர்.ராமண்ணா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1223
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மீண்டும் ஒரே நாளில் இரு படங்கள்... ஜூலை 1, 1961 ... பாச மலர் வெற்றி பவனி வந்து கொண்டு தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் போது ... இது தேவையா ... என ரசிகர்களின் உள்ளக் குமுறல்களைக் கண்டு கொள்ள யாரும் இல்லாமல், எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி இரண்டும் ஒரே நாளில் வெளியாகின்றன. சென்னை அண்ணா சாலையிலேயே பாரகனிலும் காஸினோவிலும் சித்ராவிலும் மூன்று நடிகர் திலகத்தின் புதிய படங்கள். பின்னாலேயே ஆகஸ்டில் மருத நாட்டு வீரன்...

    என்ன சொல்ல...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1224
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஸ்ரீ வள்ளி நிழற்படங்கள்

    பால முருகனாக நடிகர் விஜயகுமார்





    டி.ஆர்.மகாலிங்கம் நாரதராக, நடிகர் திலகம் முருகனாக



    எழில் தாரகை நாட்டியப் பேரொளியின் கண்கவரும் தோற்றம்



    நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1225
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஸ்ரீ வள்ளி காணொளிகள்

    உனக்காவே பிறந்த அழகன்



    ஹெலன் நடனப் பாடல்




    ஸ்ரீ வள்ளி திரைப்படப் பாடல்களைக் கேட்க

    http://www.inbaminge.com/t/s/Sri%20Valli/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1226
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    எல்லாம் உனக்காக படத்தை நான் பார்த்தது எழுபதுகளின் துவக்கத்தில் வடசென்னை ஸ்ரீ முருகன் தியேட்டரில் சிவாஜி வாரம் கொண்டாடப்பட்டபோது. (தினம் ஒரு படம் வீதம் செல்வம், எல்லாம் உனக்காக, இருவர்உள்ளம், நிச்சயதாம்பூலம், குங்குமம், அன்னைஇல்லம், அறிவாளி என ஏழு படங்கள். எப்படி நினைவிருக்கிறது என்றால் ஏழு படங்களையும் தினமும் மாலைக்காட்சி பார்த்தேன். All Black & White Classics. இதில் இன்னொரு விசேஷம் ஏழு படங்களிலும் ஏழு வெவ்வேறு கதாநாயகிகள்). அந்த வகையில் எல்லாம் உனக்காக என் மனதுக்கு நெருக்கமான படம்.

    படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமானால் மிக மிக அருமையான படம். நடிகர்திலகமும் சாவித்திரியும் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார்கள். பாசமலருக்கு முன் வந்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பது திண்ணம். அந்த அளவுக்கு படத்தின் தரம் அமைந்திருந்தது. இருவரும் ஜோடியாக நடித்த படங்களில் இது சிறந்த படமென்பேன். பார்த்தபோது எனக்கு இன்னொரு சந்தோஷம் என்னவென்றால், சிவாஜி வாரத்தில் இப்படம் சரியாக ஞாயிறன்று வந்து மாட்டியது. அரங்கில் நல்ல கூட்டம். எல்லா தரப்பினரும் நன்றாக ரசித்தார்கள். குறிப்பாக தாய்மார்கள்.

    'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடலை சிறுவயதில் பலமுறை வானொலியில் கேட்டு மனப்பாடம் ஆகியிருந்தது. படத்தில் காட்சியைப்பார்த்ததும் அழுது விட்டேன். இரண்டு திலகங்களும் என்ன ஒரு அற்புதமான அமைதியான நடிப்பு.

    அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலைப் பார்த்தபோது, பொன்னை விரும்பும் பூமியிலே பாடல் நினைவு வந்தது போல, இப்படம் பார்த்த சில மாதங்களிலேயே வெளியான தங்கப்பதக்கத்தில் 'சுமைதாங்கி சாய்ந்தால்' பாடலைப் பார்த்தபோது 'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடல்தான் நினைவுக்கு வந்தது.

    எல்லாம் உனக்காக பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் பெரும்பாலோர், இப்படம் பாசமலருடன் clash ஆனதைப்பற்றி வருத்தத்துடன் பேசியபடியே வந்தனர்.

    பார்க்க வேண்டிய அருமையான படம் 'எல்லாம் உனக்காக'....

  8. #1227
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    'ஸ்ரீ வள்ளி' நடிகர்திலகம் நடித்த இரண்டாவது முழுநீள வண்ணப்படம். முதல் கேவா கலர்ப்படம். (முதல் வண்ணப்படம் கட்டபொம்மன் டெக்னிக் கலர்) . இதற்கு முன் அம்பிகாபதியில் 'மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு' பாடல் மட்டும் கேவா கலரில் படமாகியிருந்தது.

    இப்படத்தை முதல்முறை பார்த்தது சென்ட்ரலை அடுத்த வால்டாக்ஸ் ரோட்டிலிருந்த ஸ்ரீபத்மநாபா தியேட்டரில். அதன்பிறகு எஸ்.ஐ.ஏ.திடலில் நடந்த பொருட்காட்சியில். அப்புறம் பார்க்க வாய்ப்பில்லை. அப்போதைக்கு நன்றாக இருந்தது.

    ஒருமுறை சாந்தி வளாகத்தில் திருச்சியைச்சேர்ந்த பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திருச்சியின் அந்தக்கால நிகழ்வுகளை சொன்னார். திருச்சியில் ஒரே காம்பவுண்டுக்குள் இருந்த வெலிங்டன், ராக்ஸி தியேட்டர்களில் வெலிங்டனில் ஸ்ரீவள்ளியும் ராக்ஸியில் சபாஷ் மாப்பிள்ளையும் ஒரே நேரத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருந்ததாம். இருதரப்பு ரசிகர்களுக்கும் தினமும் சண்டைதான் என்று சொன்னார்...

  9. #1228
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக்,
    தங்கள் நினைவாற்றல் அபாரம், பிரமிக்க வைக்கிறது. நானும் இப்படத்தை அங்கே இரண்டாம் முறை பார்த்தேன். அதற்கு சில வாரங்கட்கு முன்னர் தான் அம்பத்தூர் அருகே சற்று தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் கீற்றுக் கொட்டகையில் பார்த்தது.
    அதே போல் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தையும் தாங்கள் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததும் தங்கள் நினைவாற்றலுக்கு மற்றோர் சான்று.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1229
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    72. மருத நாட்டு வீரன் MARUTHANATTUVEERAN


    [மேற்காணும் நிழற்படம் உபயம் நெய்வேலி வாசுதேவன் சார்]


    வெளியீடு – 24.08.1961
    தயாரிப்பு – ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ் – பி.ராதாகிருஷ்ணா
    விஜயா-வாஹினி ஸ்டூடியோவில் தயாரிக்கப் பட்டது.
    வெஸ்ட்ரெக்ஸ் ரிக்கார்டிங் சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

    இயக்கம் – டி.ஆர். ரகுநாத்
    பாடல்கள் – கண்ணதாசன், அ.மருதகாசி

    சங்கீத டைரக்ஷன் – எஸ்.வி.வெங்கட்ராமன்
    ஒளிப்பதிவு டைரக்ஷன் – ஆர். சம்பத்
    ஒளிப்பதிவு – டி.வி. ராஜா ராம்
    ஒலிப்பதிவு டைரக்ஷன் – ஏ.கிருஷ்ணன்
    ஒலிப்பதிவு – ஏ.வி. பார்த்தசாரதி
    ஆர்ட் டைரக்ஷன் – கே. நாகேஸ்வர ராவ்
    ஸெட்டிங்ஸ் – சி.குப்புஸ்வாமி நாயுடு, கே.ஸ்ரீநிவாசன், டி.நீலகண்டன்
    சீனிக் எபெக்ட்ஸ் – ஆர்.ஜெயராம் ரெட்டி
    மோல்டிங்ஸ் – எம். கோபால் பிள்ளை
    சீப் எலெக்ட்ரீஷியன் – எம். சங்கர நாராயணன்
    புரோஸ்ஸிங் – விஜயா ரபரேடரி, செயலாளர் – வி.டி.எஸ். சுந்தரம்
    எடிட்டிங் மேற்பார்வை – டி.ஆர். ரகுநாத்
    எடிட்டிங் - பி.கே.கிருஷ்ணன், ஏ.பி.ஜெகதீஷ்
    மேக்-அப் – ஹரிபாபு, பீதாம்பரம், பி.பி.சந்திரா [நானு]
    ஆடைகள் – ராமகிருஷ்ணன்
    நடன டைரக்ஷன் – பி.எஸ். கோபால கிருஷ்ணன்
    நடனம் – எல். விஜயலக்ஷ்மி
    ஸ்டண்ட் டைரக்ஷன் – ஸ்டண்ட் சோமு
    செட் பிராபர்டீஸ் – ஸினி கிராப்ட்ஸ், நாதமுனி சன்ஸ், கிரி மியுஸீயம்
    ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
    விளம்பரம் – கே.நாகேஸ்வர ராவ், டி.டி,ராஜன்
    பத்திரிகை விளம்பரம் – அருண் – விஜயா ப்ப்ளிஸிடி
    ஜெனரல் நிர்வாகம் – சி.நாராயணன்
    புரொடக்ஷன் நிர்வாகம் – ஓ.என். நாராயணசாமி
    ஸ்டூடியோ புரோகிராம்ஸ் – சி.எஸ்.பிரகாஷ் ராவ், சி.சுந்தரம், ஜி.ராமதாஸ்
    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ரத்னமாலா


    நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜமுனா, கண்ணாம்பா, ஸ்ரீராம், பி.எஸ்.வீரப்பா, ஏ.கருணாநிதி, எம்.ஆர்.சந்தானம், கே.ஆர்.ராம்சிங், கணபதி பட், எம்.சரோஜா, ராமாராவ், சந்தியா, கே.வி.சாந்தி, மற்றும் பலர்



    மருத நாட்டு வீரன் விளம்பர நிழற்படங்கள்.
    உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்


    வீரப் பொக்கிஷங்கள்

    காவிய விளம்பரம் : கலைத்தோட்டம் : 15.6.1959

    [15.6.1959 தேதியிட்ட 'கலைத்தோட்டம்' பருவ இதழ் சற்றேறக்குறைய அப்பொழுது ஒரு மாதத்திற்குமுன் வெளியாகி விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவிய சிறப்பு மலராக மலர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.]



    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 24.8.1961

    Last edited by RAGHAVENDRA; 16th October 2013 at 08:43 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1230
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மருதநாட்டு வீரன் சிறப்புச் செய்திகள்


    1. மருத நாட்டு வீரன் திரைப்படத்திற்காக பூனா அருகில் பனாலா கோட்டையில் படப்பிடிப்பிற்காக நடிகர் திலகம் சென்றிருந்த பொழுது அங்கே அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அந்த ஊர் மக்கள் சார்பில் தரப் பட்டது. அந்த ஊரில் ஒரு பள்ளியில் தமிழ் கற்றுத் தரப்பட்டு வந்த்து., அந்த தமிழ் ஆசிரியர் நடிகர் திலகத்தை அப்பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார். அதை ஏற்றுக் கொண்டு அப்பள்ளிக்கு சென்ற நடிகர் திலகம், பள்ளிக்கு நன்கொடையும் அளித்தார்.


    2. மருத நாட்டு வீரன் திரைப்படத்தில் நடிகர் திலகம் பல்வேறு விதமான தோற்றங்களில் அமர்க்களப் படுத்தியிருப்பார். இதனை முந்தைய பதிவில் வாசு சார் அளித்துள்ள நிழற்படத்தில் காணலாம்.

    3. பாடல்கள் அத்தனையும் தெள்ளமுது. குறிப்பாக பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.

    4. கிட்டத் தட்ட மூன்று மணி நேரம் என்றாலும் படம் விறுவிறுப்பாக செல்லும்.

    Last edited by RAGHAVENDRA; 16th October 2013 at 08:56 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •