Page 103 of 185 FirstFirst ... 35393101102103104105113153 ... LastLast
Results 1,021 to 1,030 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1021
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #1022
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post

    Dear Mr. Gopal,

    Outstanding presentation and amazing assertion! In fact, tears rolled down especially for these lines!! "எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது".

    Regards,

    R. Parthasarathy

  4. #1023
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    என்ன இப்படி சஸ்பென்சில் வைத்துள்ளீர்கள் வீர பாண்டிய கட்ட பொம்மனை?

  5. #1024
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அது தான் நான் சொல்லும் ரகசியமாச்சே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1025
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வருகிறார் வீராதி வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

    முதலில் டைட்டில் மியூஸிக்..

    http://www.mediafire.com/?bbujdlaf3bopnmr
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1026
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தயாரிப்பாளர் இயக்குநர் பி.ஆர். பந்துலு அவர்களின் அறிமுக உரை

    வணக்கம். தமிழ்நாட்டில் விடுதலைப் போருக்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்முவின் வரலாற்றைப் படமாக்கி சுதந்திரம் பெற பாடுபட்ட அத்தனை தியாக ரத்னங்களுக்கும் இதைப் பெருமையோடு சமர்ப்பிக்கிறோம்.

    17ம் நூற்றாண்டின் முற்பகுதியிலே, வெள்ளைக்காரக் கூட்டத்தால் கிழக்கிந்தியக் கும்பெனி என்ற பெயரோடு சென்னப் பட்டினத்துக்கு வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். பண்டங்களின் பாதுகாப்புக்கென செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள். அப்போது தமிழ்நாட்டில் பல பாளையங்களுக்கு தலைமையரசராக இருந்த ஆற்காட்டு நவாபுக்கு கும்பனியார் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்தார்கள். கடனைத் திருப்பித் தர முடியாத நவாப் 1792ம் ஆண்டில் பாளையக் கார்ர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் அதிகாரத்தை கும்பனியாருக்கே உரிமையாக்கி விட்டார். அன்று தான் நம் நாட்டில் ஆங்கில ஆட்சி தொடங்கியது. இதைத் தடுக்கத் துணிந்தவர்களில் முதன்மையானவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். வீர நெஞ்சம் படைத்த அப்பெரு மன்ன்ன் சிறந்த பக்திமான். திருச்செந்தூர் முருகப் பெருமானின் உச்சிக் காலப் பூஜை நடப்ப்தை அறிவிக்க, திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரையிலுள்ள 40 கல் தூரத்திற்கு பல மணி மண்டபங்கள் அமைத்திருந்தார்.

    ஒரு நாள்..
    இதனைப் பந்துலு அவர்களின் குரலில் கேட்டால் .... தத்ரூபமாய் இருக்கும் அல்லவா...

    இதோ கேளுங்கள் ...

    http://www.mediafire.com/listen/y453...RODIALOGUE.mp3

    படத்தில் காட்டப் படும் வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டிய மணிமண்டபம் ...

    Last edited by RAGHAVENDRA; 22nd June 2013 at 08:51 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1027
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography

    55. வீரபாண்டிய கட்டபொம்மன் Veerapandiya Kattabomman

    தணிக்கை – 11.04.1959
    வெளியீடு – 16.05.1959

    தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்

    வரலாறு-திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு தலைவர் – ம.பொ.சிவஞான கிராமணியார்
    வரலாறு – திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு உறுப்பினர்கள் –

    சக்தி கிருஷ்ணமசாமி, பி.ஆர்.பந்துலு, சிவாஜி கணேசன், பி.ஏ.குமார், கே.சிங்கமுத்து, எஸ்.கிருஷ்ணசாமி

    கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி

    பாடல்கள் – கு.மா. பாலசுப்பிரமணியம்

    இசை – ஜி.ராமநாதன்
    இசைக்குழு – ஜி.ராமநாதன் பார்ட்டி

    பின்னணி பாடியவர்கள்
    டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.சீனிவாச ராவ், வி.என்.சுந்தரம், வி.டி.ராஜகோபால், சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ரத்னமாலா, ஜமுனா ராணி, மற்றும் பலர்

    நடன அமைப்பு – ஹீராலால், கோபால கிருஷ்ணன், மாதவன்
    உதவி – சின்னி சம்பத்

    நடனம் – சுகுமாரி

    ஆங்கில நடன இசை – ஜோ.டி.க்ரூஸ்

    ஒளிப்பதிவு டைரக்டர் – டபிள்யூ.ஆர்.சுப்பராவ்
    காமிரா இயக்குநர் – கர்ணன்

    ஒலிப்பதிவு டைரக்டர் – பி.வி.கோடீஸ்வர ராவ்
    வசன ஒலிப்பதிவு – ஜி.மோகன்

    கலை – கங்கா

    ஒப்பனை – ஹரிபாபு, டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பி.கிருஷ்ணராஜ்

    தலை அலங்காரம் – டி.தனகோடி, ஜோசபின்

    ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு

    ஜரிகை வேலைப்பாடு – பி.பாண்டுரங்கம்
    மணி மகுடங்கள் – கோபால் ராவ்
    நகைகள் – களஞ்சியம் சகோதர்ர்கள்
    அலங்காரத் துணி மணிகள் – பனாரஸ் எம்பிராய்டரி மியூசியம், சென்னை – 2.
    தொகுப்பாளர் – ஆர்.தேவராஜன்
    ஸ்டூடியோ – பரணி, நிர்வாகம் – ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
    வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன் – கட்டபொம்மன்
    ஜெமினி கணேசன் – வெள்ளையத் தேவன்
    பத்மினி – வெள்ளையம்மாள்
    எஸ்.வரலட்சுமி – ஜக்கம்மாள்
    ராகினி – சுந்தரவடிவு
    வி.கே.ராமசாமி – எட்டப்ப நாயக்கர்
    ஜாவர் சீதாராமன் – பானர்மேன்
    ஓ.ஏ.கே. தேவர் – ஊமைத்துரை
    எம்.ஆர்.சந்தானம் – தானாபதி சுப்பிரமணிய பிள்ளை
    வி.ஆர்.ராஜகோபால் – கரியப்பன்
    ஏ.கருணாநிதி – சுந்தரலிங்கம்
    பக்கிரிசாமி – பொன்ன்ன்
    சின்னய்யா – அடப்பக்காரன்
    ஸ்டண்ட் சோமு – கோபால அய்யர்
    கே.வி.சீனிவாசன் – துபாஷ் ராமலிங்க முதலியார்
    ஆனந்தன் – துரைசிங்கம்
    நடராஜன் – கர்ணம் மாக்ஸ்வெல்
    எஸ்.ஏ.கண்ணன் – காப்டன் டேவிசன்
    பார்த்திபன் – டபிள்யூ.சி.ஜாக்சன்
    கிருஷ்ணசாமி – ஆலன்
    கண்ணன் – கவர்னர்
    முத்துலட்சுமி – காமாட்சி
    தாம்பரம் ல்லிதா – வள்ளி
    பேபி காஞ்சனா – குழந்தை மீனா

    உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், எஸ்.ஆர்.புட்டண்ணா

    தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர். பந்துலு
    Last edited by RAGHAVENDRA; 22nd June 2013 at 09:02 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1028
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றிய தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்கு சற்று அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். படம் பெற்ற பாராட்டுக்கள், நடிகர் திலகம் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது, சிறந்த இசையமைப்பாளர் விருது, தமிழ் மொழியின் வளர்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் பங்கு, அன்று தொடங்கி இன்று வரை அநைத்துத் தலைமுறையினர் மீதும் அப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், என்று ஏராளமான தகவல்கள் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப் பட உள்ளன. பொறுமையாக எல்லாவற்றையும் பார்ப்போம்.
    Last edited by RAGHAVENDRA; 22nd June 2013 at 09:05 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1029
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு இசை ஜி.ராமநாதன் என்றாலும், அதில் இடம் பெற்ற ஒரு ஆங்கில நடன இசையை ஜோ.டி.க்ரூஸ் என்பவர் இசையமைத்திருந்தார். அந்த ஆங்கில நடன இசை இணையத்தில் முதன் முதலாக நம் செவிகளுக்கு

    http://www.mediafire.com/?bcd76ka5v9ag8r2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1030
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாஞ்சாலகுறிச்சியின் சிங்கத்தை வரவேற்க தயாராவோம். நமது திரியில் மட்டுமல்ல. மும்பை நகரத்தில் இந்த சிங்கத்திற்கு மெருகேற்றும் வேலை மிக சுறுசுறுப்பாக நடைபெறுகிறதாமே ? படத்தின் உரிமையை வைத்திருப்பவர்கள் இப்போதே வணிகம் பேச ஆரம்பித்து விட்டனராமே? City NSC ஏரியாவின் வணிக தொகையை கேட்டாலே அதிருகிறதாமே?

    அன்றும் இன்றும் என்றென்றும் சாதனை சித்திரத்தின் மறு பெயராக விளங்கி கொண்டிருக்கும் சிம்மக் குரலோனின் Magnum Opus-ஐ வரவேற்க தயாராவோம்!

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •