Page 56 of 185 FirstFirst ... 646545556575866106156 ... LastLast
Results 551 to 560 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #551
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அமர தீபம் சிறப்பு செய்திகள்



    1. நடிகர் திலகத்தின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப் பட்டு முதல் படமாக விநியோகம் செய்யப் பட்ட படம் அமர தீபம். இது ஹிந்தியிலும் அமர் தீப் என்ற பெயரில் தயாரிக்கப் பட்டது.

    2. சலபதி ராவ் அவர்கள் இப்படத்தின் இசையமைப்பாளர், என்றாலும் வேறு படங்களுக்காக பதியப் பட்ட பாடல்கள் இப்படத்தில் பயன் படுத்தப் பட்டன. பிரபல கர்நாக இசை மேதை ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களின் சாஹித்யமான எங்கே மறைந்தனையோ இப்படத்தில் பயன் படுத்தப் பட்டது. அதே போல் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் வேறு படத்திற்காக உருவாக்கிய பாடல்களில் ஒன்று இப்படத்தில் பயன் படுத்தப் பட்டது. நாடோடிக் கூட்டம் என்ற பாடல். இதே போல் இன்னொரு பாடல் உத்தம புத்திரன் படத்தில் பயன் படுத்தப் பட்டதாகவும் செவி வழி செய்தி அக்காலத்தில் வந்தது.

    3. இப்படமும் உளவியல் ரீதியாக ஆய்வு செய்யப் பட வேண்டிய படம். பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். முன்னர் இவர் பணியாற்றிய பூங்கோதை படத்தில் தான் பிரசாத் அவர்களும் இவரும் வின்சென்ட் அவர்களும் நடிகர் திலகத்தின் கண்களில் இருந்த விசேஷ சக்தியை உணர்ந்து அவரைப் பாராட்டினர்.

    4. சென்னையில் வெளியான திரையரங்குகள் - காஸினோ, கிரௌன், சயானி

    5. 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

    சென்னை காஸினோ, கிரௌன், திருச்சி பிரபாத் - 125 நாட்கள்

    6. சாவித்திரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த முதல் படம்

    7. சென்னை காஸினோ திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த படம்.

    8. தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப் பட்டு அதிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படம்.

    9. இவையனைத்துக்கும் மேலாக கதை வசனகர்த்தா ஸ்ரீதர் அவர்களை தயாரிப்பாளராக உயர்த்திய படம். தன்னிடம் இருந்த கதையை நடிகர் திலகத்திடம் சொல்லி, தாங்கள் இதை படமாக்க விரும்புவதாகவும் அதில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகியோருடன் ஸ்ரீதர் அணுகினார். அதே சமயம் தங்களிடம் முதலீட்டிற்கான மூல தனம் போதாது என்றும் நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லி படத்தின் விளம்பரம் வெளியிட்டு அதனை வைத்து பணம் ஏற்பாடு செய்து தயாரிக்க வேண்டும் எனவும் கூறி அதற்கு நடிகர் திலகமும் சம்மதித்து அதன் மூலம் ஈட்டப்பட்ட முதலீட்டை வைத்து தயாரிக்கப் பட்ட படம் தான் அமர தீபம். இதன் மூலம் வீனஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் உதயமாக நடிகர் திலகம் உந்து சக்தியாக விளங்கியது சிறப்பாகும்.

    Last edited by RAGHAVENDRA; 1st March 2013 at 08:54 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #552
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    சிவனுக்கு அப்பர் போல 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என அயராமல் உழைத்து அளிக்கும
    அன்பராராகவேந்திரா அவர்களே.. உங்கள் உன்னதத் தொண்டுக்கு நன்றி..

    செங்குட்டுவனாய் வசனம் பேசும் காட்சியை எத்தனை முறை கண்டாலும்
    இப்படி ஒரு தெய்வப்பிறவியும் இவ்வுலகில் உண்டா என வாய்விட்டு அரற்றி நம் நடிகர் திலகத்தைப் பாராட்டாமல் இருந்ததே இல்லை...

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  4. #553
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அமர தீபம் சிறப்புச் செய்திகள் 10.


    கே.பீ.தங்கவேலு, கொஸ்லாந்தை

    எம்.எல்.வஸந்தகுமாரி பாடிய ‘ எங்கே மறந்தனையோ‘ என்ற பாட்டு ‘ அமர தீபம்‘ படத்தில் ஏன் இடம் பெறவில்லை?

    இடம் பெற்றிருந்த்து. ஆனால் அந்தப் பாட்டு ரசிகர்களுக்கு திருப்தி யளிக்கவில்லை என்று நினைத்துப் பிறகு கத்தரித்து விட்டார்கள்.

    நன்றி – பேசும் படம், மே 1957, பக்.75
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #554
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் காவிரிக் கண்ணன்
    தங்களுடைய தொடர்ந்த பாராட்டிற்கும் ஆதரவிற்கும் என் உளமார்ந்த நன்றி.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #555
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அழியாக் காவியம் அமரதீபம் பதிவுகளுக்கும் செய்திகளுக்கும் நன்றி அன்பு ராகவேந்திரா அவர்களே..

    இந்திப்படம் தயாரித்ததும் சிவாஜி பிலிம்ஸ் அல்லவா?????

    அம்னீசியா எனப்படும் மறதிநோய் antegrade ( கஜினி கதை) , retrograde (( அமரதீபம், மூன்றாம் பிறை, எங்கிருந்தோ வந்தாள்) என இருவகைப்படும்.

    பழைய சேதிகள் அழிக்கப்பட்ட வெறுமைப் பதாகையாய் மனம் ஆகிவிட்டால்....

    விழிவாசல் அந்த வெறுமையை நிர்மலத்தை சூனியத்தைக் காட்டிக்கொடுக்கும்..

    அவ்வப்போது மனத்திரையில் விழும் பிம்பங்களுக்கேற்ப சின்னச் சின்ன சலனங்கள் - நங்கூரமில்லா நாவாயின் அசைவுகள்- விழிகளிலும் முகத்திலும் வந்துபோகும்..

    வாலிபவயது வரையிலான நினைவு, வறுமை, காதல் கலந்த எல்லாம் சுமக்கும் முகத்தைக் காண - தேனுண்ணும் உண்டு..


    அவ்வப்போது வந்துபோகும் உணர்வுத்தூறல் காண - பச்சைக்கிளி பாடுது..


    விழியீர்ப்பு விசையின் உச்சம் நடிகர்திலகத்தின் கண்கள்..
    அக்கால ஜாம்பவான்கள் கண்டு சொன்னதில் வியப்பென்ன!

    எப்போதும் கொண்டாடுவோம்!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #556
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    அமர தீபம் - சிறப்பு செய்திகள், காணொளிக் காட்சிகள் மற்றும் விளம்பர நிழற் படங்கள் (பம்மலாரின் உபயத்தில்) ஒரு திரைப்படத்தைப் பற்றிய முழுமையான தகவல்களாக, சிறப்பாக அமைந்திருந்தது. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #557
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    Special App0earance சிறப்புத் தோற்றம்

    1. மர்ம வீரன்

    நடிகர் திலகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்த முதல் படம்

    தணிக்கை - 31.07.1956
    வெளியீடு - 03.08.1956
    களம் - கிராமியம்

    தயாரிப்பு - ஜூபிலி பிலிம்ஸ்
    தயாரிப்பாளர் - வி.கோவிந்தராஜன்
    இயக்கம் - டி.ஆர். ரகுநாத்
    கதை வசனம் - ஏ.எல். நாராயணன்
    இசை - எஸ். வேதா
    பாடல்கள் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை ராமய்யா தாஸ், மருதகாசி, கண்ணதாசன், வில்லிப்புத்தன், சுந்தரக் கண்ணன்
    ஒளிப்பதிவு - சம்பத்
    ஸ்டன்ட் - சோமு

    நடிக நடிகையர் - ஸ்ரீராம், வைஜெயந்திமாலா, டி.எஸ். பாலய்யா, ராஜ சுலோச்சனா, கே.ஏ. தங்கவேலு, எம்.என்.ராஜம், சந்திரபாபு, பி.எஸ். வீரப்பா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #558
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மர்ம வீரன் சிறப்புச் செய்திகள்


    1. நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் தோன்றிய முதற் படம்
    2. வேதா அவர்கள் நடிகர் திலகத்தின் படத்திற்கு இசையமைத்த ஒரே படம்
    3. நடிகர் ஸ்ரீராம் அவர்களின் சொந்தப் படம்
    4. நடிகர் திலகமும் ஜெமினி கணேசனும் இணைந்து கௌரவ வேடத்தில் நடித்த படம்
    5. இனிமையான பாடல்கள் இப்படத்தின் பலம்.


    இப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #559
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    33. Vaazhvile Oru Naal வாழ்விலே ஒரு நாள்



    தணிக்கை – 15.09.1956
    வெளியீடு – 21.09.1956

    தயாரிப்பு – மெர்க்குரி பிலிம்ஸ்

    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், ஜி.வரலட்சுமி, ஸ்ரீராம், ராஜசுலோச்சனா, வி.கே. ராமசாமி, பிரண்ட் ராமசாமி, மாஸ்டர் நாகேஸ்வர்ராவ், ஜெயகௌரி மற்றும் பலர்

    திரைக்கதை – ஏ.வி.பி. ஆசைத்தம்பி, டி.என்.கே. பெருமாள்
    வசனம் – ஏ.வி.பி. ஆசைத்தம்பி

    பாடல்கள் – தஞ்சை ராமய்யாதாஸ், டி.கே. சுந்தர வாத்யார், சி.ஏ. லக்ஷ்மணதாஸ், கு.சா கிருஷ்ணமூர்த்தி, ஜி.சுந்தர பாகவதர், கே.எஸ். கோபால கிருஷ்ணன்

    இசை அமைப்பு – டி.ஜி. லிங்கப்பா, சி.என். பாண்டுரங்கம்
    நாடக இசை – எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு

    குரலிசை
    இசைக்குயில் தமிழிசைவாணி யூ.ஆர்.ஜீவரத்னம்
    பி.ஜி.கிருஷ்ணவேணி – ஜிக்கி
    சி.எஸ்.ஜெயராமன்
    டி.எம்.சௌந்தர்ராஜன்
    டி.ஏ.மோத்தி
    எம்.எம். முத்து
    மாஸ்டர் சுகுணகுமார்

    ஒளிப்பதிவு – ஜி.கே. ராமு, வி. குமாரதேவன்

    ஒலிப்பதிவு – சி.பி. கன்னியப்பன், லோகநாதன்

    ஆர்ட் டைரக்ஷன் – பி.பி.சௌத்ரி

    செட்டிங்ஸ் – பெருமாள் ராஜு
    ஆர்ட்டிஸ்ட் –ராமலிங்கம்

    மேக்கப் – தனக் கோடி, என்.பி. சிவராம்
    உடை அலங்காரம் – சி.கே. ஹரி, ஏ. மாணிக்கம்

    நடன அமைப்பு – பி. ஸோஹன்லால்
    ஸ்டில்ஸ் – பி.வி. சேஷய்யா – பட்டாராம் போட்டோ சர்வீஸ்

    எடிட்டிங் – கே. பெருமாள்

    ஸ்டூடியோ ப்ளோர் இன் சார்ஜ் – தண்ட பாணி
    விளம்பர நிர்வாகம் – எஸ் .கணேசன், டி.பாஸ்கர்
    உதவி டைரக்ஷன் – கே. பெருமாள், எஸ். நடராஜன்

    ப்ரொடக்ஷன் நிர்வாகம் – கே.பி. ஹரி

    பிராஸ்ஸிங் – பால் ஜி .ஷிண்டே, ஈஸ்வர் சிங்

    ஸ்டூடியோஸ் – பிலிம் ஸென்டர் மற்றும் நியூடோன்
    ஆர்சிஏ முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்ட்து.

    தயாரிப்பு – டி.எஸ். வெங்கிடசாமி

    டைரக்ஷன் – ஏ. காசிலிங்கம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #560
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    'வாழ்விலே ஒரு நாள்' திரைப்படத்தில் வரும் T.M.சௌந்தரராஜன் அவர்களும்,U.R.ஜீவரத்தினம் அவர்களும் இணைந்து பாடிய மிக இனிய பாடலான

    "தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ '' பாடலின் வீடியோ டவுன்லோட் லிங்க் இதோ...

    http://www.mediafire.com/download.php?ag8l34b0ykca49g

    உபயம் - விஷுவல் திலகம் வாசுதேவன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •