Page 322 of 398 FirstFirst ... 222272312320321322323324332372 ... LastLast
Results 3,211 to 3,220 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3211
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி - முல்லை - இனைய தளம்

    நான் யார்? நான் யார்? நீ யார்?
    எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.

    குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.

    அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.


    „இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3212
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like


    மென்மையான கதாநாயகனின் காதல் பாடல்.


  4. #3213
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    15.3.1968

    குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .

    வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

    ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
    படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
    உன் விழியும் என் வாளும்
    என்னை தெரியுமா ....
    நீயேதான் எனக்கு மணவாட்டி
    நான் யார் .. நான்யார் ..நீ யார்
    துள்ளு வதோ இளமை
    ஆடலுடன் பாடலை
    குங்கும பொட்டின் மங்கலம்
    அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -குண்டுமணி - ஜஸ்டின் - காந்தாராவ் ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
    மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
    ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
    அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
    வினோத் சார் வேலூரில் தாங்கள் அனுபவித்த மக்கள்திலக்தின் மாறுபட்ட இரு வேறு தோற்றத்தில் கலக்கல் மற்றும் மெகா ஹிட் படத்தின் (குடியிருந்த கோயில் ) அனுபவம் அருமை

  5. #3214
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like


    முரட்டு கதாநாயகனின் காதல் பாடல்.


  6. #3215
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    இரண்டு கதாநாயகனும் நம் கதாநாயகன் தான். அது தான் நமது எம்.ஜி.ஆர்.




  7. #3216
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Matador உடையில் நமது தலைவர் மிக அழகாக இருப்பார்.

    துள்ளுவதோ இளமை.




    நமது தலைவர் எத்தனையோ உடை அணிந்து நடித்திருந்தாலும் இந்த ஒரு உடையை நான் அணிந்து பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டு இருக்கிறேன்.



  8. #3217
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mgr roop View Post
    இரண்டு கதாநாயகனும் நம் கதாநாயகன் தான். அது தான் நமது எம்.ஜி.ஆர்.



    thank you roop sir

  9. #3218
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    சென்ற வருடம் குடியிருந்த கோயில் திரைபடம் உட்லாண்ட்ஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அப்போது சத்யா அவர்களால் எடுக்கபட்ட விடியோ.




  10. #3219
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    மேற்படி நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம்.


  11. #3220
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    பெண்கள் கூட்டம் வராத திரையரங்கில் இன்று பெண்கள் கூட்டம் அலைமோதும் அளவிற்கு நமது மக்கள்திலகத்தின்

    எங்க வீட்டுப் பிள்ளை படம் ஓடி கொண்டிருகிறது என்று படம் பார்த்துக்கொண்டே தகவள் தந்த திரு புதுச்சேரி கலியபெருமாள் சார் உங்களுக்கு எனது நன்றிகள்


    அதனால் தான் அவர் மக்கள்திலகம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •