Page 314 of 398 FirstFirst ... 214264304312313314315316324364 ... LastLast
Results 3,131 to 3,140 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3131
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy - net - kalapriya

    என் பள்ளிப்பருவத்தில் நானும் ஒரு சினேகிதனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் பட ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வந்தோம். தினத்தந்தி பேப்பரில் வரும் விளம்பரங்கள்,பேசும்படம் இதழில் வரும் படங்கள், எல்லாவற்றையும் வெட்டி ஒரு அரைக்குயர் நோட்டில் ஒட்டுவது. இது எங்கள் படிப்பை முழுதாக விழுங்கியது என்றே சொல்லவேண்டும். இதை அவ்வப்போது பார்க்கிற பள்ளித் தோழர்களும் அவர்களுக்கு கிடைக்கிற அபூர்வப் படங்களைத் தருவார்கள்.அப்படிச் சேகரிக்கையில் பேசும்படம் இதழில் இருந்து ஸ்ரீதர் தயாரிக்கும் “அன்று சிந்திய ரத்தம்” படத்தின் ஒரு ஸ்டில் கிடைத்தது. முற்றிலும் வித்தியாசமான ஒரு மேக் அப்புடன் எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ ‘எழுச்சிஉரை (!) ஆற்றுவதுபோல கையை உயர்த்திக் கொண்டு நிற்பார். இது 1963-64 என்று நினைவு.. அது ஒரு பொக்கிஷம்.
    தென்காசியில் ஒரு மாமா ஒருவர் இருந்தார்.அவரிடம் பழைய காலத்து ’பேசும்படம்’, இதழ்கள் இருக்கும். அவரிடம் பல அருமையான சினிமாப் புத்தக சேகரிப்புகள் இருந்தன. ’நாரதர்’ என்று ஒரு சினிமா பத்திரிக்கை.நாரதர் ஸ்ரீனிவாசராவ் என்பவர் நடத்தியது. அவர் விகடனின் சினிமா நிருபர் என்று நினைவு. அதிலிருந்து பிரிந்து வந்து இந்த இதழை நடத்தினார்.அவரிடம், ’பேசும்படம்’ போன்ற அமைப்பிலேயே ’குண்டூசி’, ’சினிமாக்கதிர்’, ’கலை’ போன்ற சினிமா பத்திரிக்கைகள் உண்டு. பேசும்படம் தான் நிறைய இருக்கும். ‘PICTURE POST’ என்று ஒரு ஆங்கில இதழ் கூட ஒன்று வைத்திருப்பார். அதுவும் பேசும்படம் வெளியீடு என்று நினைவு.பேசும்படம் வெளியிட்ட ஒரு மலர் பெரிய சைசில் உள்ளது ஒன்று அவரிடம் உண்டு. அதன் பல பக்கங்கள் இருக்காது.

    எம்.ஜி.ஆர். பம்பை முடி, ஓவர்கோட் அணிந்து ஒரு படம் “மலையாளம் தந்த மாணிக்கம்” என்ற தலைக்குறிப்புடன் இருக்கும். எல்லா பிரபலங்களுடைய படங்களும் இருக்கும். மற்றவர்களுக்கு என்ன ‘டைட்டில்’ போட்டிருந்தது நினைவில்லை.அதை எவ்வளவு கேட்டும் தர மறுத்துவிட்டார்.

    அவர் கோ ஆப்டெக்ஸில் வேலை பார்த்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு வேலை, அவரது மாடியறையில் ஒரு டிரங்குப்பெட்டியைத் திறந்து பழைய இதழ்களைப் பார்ப்பது. அப்படிப்பார்க்கும்போது மட்டும் நம்மையும் அனுமதிப்பார்.அதற்கே அவரது அப்பா ஏசுவார், ”ஆரம்பிச்சுட்டானா சின்னப்புள்ளைகளை வச்சுக்கிட்டு கூத்தடிக்க “ என்று. அவ்வப்போது அவர் வீட்டு அத்தை மரப்படிகளில் பாதிக்கு ஏறி மாடியை எட்டிப் பார்ப்பதும் வழக்கம். அங்கே ஒரு ’கேம்ப் கட்டில்’ உண்டு. அதில் அவர் அருகே உட்கார்ந்து கொண்டு, நானும் இன்னொரு அத்தை மகனும் பார்ப்போம். அவர் காண்பிக்கும் இதழ்களைத்தான் பார்க்க முடியும். எட்டிப்பார்க்கும் அத்தை ”ஏம்ல தரையில உக்காந்து பார்த்தா ஆகாதா” என்று சொல்லிவிட்டு தலை மறைவாள். மாமாவுக்கு பல் நீளம். காதில் ஒரு பஞ்சு வைத்திருப்பார்.காணாததற்கு ஒரு இரண்டுங்கெட்டான் வாசனை வீசுகிற எண்ணையொன்று தேய்த்துக் குளித்திருப்பார்.அவரிடம் ஒரு முறை ஆல்பத்தைக் காண்பித்து படங்கள் கேட்டேன். ஒரே ஒரு விளம்பரப்படம் தந்தார். ’மாலையிட்டமங்கை’யைத் தொடர்ந்து கண்ணதாசன் புரொடக்*ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஜி.ஆர் நடிக்கும் “ஊமையன் கோட்டை” . ஒரு கோட்டையை நோக்கி குதிரை வீரன் விரைவது போல வரையப்பட்ட படம். ஏதோ அம்புலிமாமா படக்கதையில் வருகிற மாதிரி இருந்தது. அதை மட்டும் தந்தார். ’வேலுத்தேவன்’ என்று ஒரு பட விளம்பரம். எம்.ஜி.ஆர் பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி உடையில் கையில் ஒரு கைத்தடி வைத்துக் கொண்டு நிற்பார்.இந்தப் பாடல்க் காட்சி ”தட்டுங்கள் திறக்கப்படும்/ கேளுங்கள் கொடுக்கப்படும்/ கொட்டுங்கள் அளக்கப் படும்/ கூறுங்கள் திருத்தப்படும்..” என்று தற்போது யூ டியூபில் காணக்கிடைக்கிறது.

    மதுரை வீரன் 1956-ல் வெளிவந்து பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. 33 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்.
    மலைக்கள்ளன் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருந்தது. மலைக்கள்ளன், 1954 –ல் தொடங்கிய மத்திய அரசின் தேசீய சினிமா விருது திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஒருவேளை, அன்று அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞரின் கதை என்பதனால்க் கூட இருக்கலாம். இந்தப் பரிசு பற்றி ஏனோ யாராலும் குறிப்பிடப்படுவதில்லை.


    . கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த மதுரை வீரன் வெற்றியைத் தொடர்ந்து லேனாச் செட்டியார் ராஜா தேசிங்கு படம் எடுத்தார். படத்தை முடிப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார் என்பார்கள். படமும் வருகிறது வருகிறது என்று அவ்வப்போது விளம்பரங்கள் வருமே தவிர படம் நான்கு வருடம் கழித்து வந்தது. திருநெல்வேலி ரத்னா டக்கீஸில் இடைவேளையின் போது, பலத்த விசில் கொண்டாட்டங்களுக்கு நடுவே ”விரைவில் வருகிறது ”ராஜா தேசிங்கு” என்ற ஸ்லைடு காண்பிப்பார்கள்.
    1958 –ல் ’நாடோடிமன்னன்’ இமாலய வெற்றிக்குப் பின் அதன் கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்தவர், கதை, வசனம் எழுதிய ‘கலையரசி’. ஐந்து வருட இடைவெளிக்குப் பின் வந்து தோல்வி கண்டது. தமிழின் முதல் சயின்ஸ் பிக்*ஷன் படம் இது. சின்ன அண்ணாமலை ஒரு காங்கிரஸ்காரர். அவர் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தை “’பாக்கெட்மார்’(தேவானந்த், கீதாபலி நடித்தது) இந்திப்படத்தைத் தழுவி எடுத்தார்.ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அப்படியே பல இடங்களில் இருக்கும். அது பாதியில் நின்றது.அதை ஏ.எல்.சீனிவாசன் தொடர்ந்து எடுத்தார், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    ’ஆனந்த ஜோதி’ எம்.ஜி.ஆர் தேவிகா நடித்து வெளிவந்த ஒரே படம் அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ”உடன்பிறப்பு” படம் . சியமாளா ஸ்டுடியோஸ் தயாரிப்பான சிலம்புக்குகை, டி.என்.ஆர் ப்ரொடக்*ஷன்ஸ் ராணி லலிதாங்கி(இது சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்தது.) கே.எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘பிரம்மாண்ட தயாரிப்பு’ என்று அறிவிக்கப்பட்ட “தங்கத்திலே வைரம்”. ரவீந்தர் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் “இணைந்த கைகள்” என்ற சரித்திரப்படம். ’பொன்னியின் செல்வன்’ படத்தையும் பலமுறை அறிவித்து, அவர் தயாரிக்க முயற்சித்து நடை பெறவே இல்லை. சதானந்தவதி பிக்சர்ஸ் ’ரிக்*ஷா ரெங்கன்’ என்று ஒரு படம். தேவர் பிலிம்ஸ் மறுபிறவி என்று ஒருபடம்.தேவர் படங்களின் இடைவேளையின்போது எமது அடுத்த தயாரிப்பு என்று ஒன்றைப் போடுவார்கள்.

    எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிக்கும் “ வெங்கிமலை ரங்கன்” என்று பலத்த கைதட்டலுக்கிடையே போடுவார்கள்.அப்படியெல்லாம் ஒரு படம் வரவே இல்லை. தாயைக் காத்த தனயன் படத்தின் இடைவேளை விட்டவுடன் தொடந்து அரங்கில் வெளிச்சம் பாய, மங்கலான திரையில் ஓடும், எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி நடிக்கும் ’தாய்க்குத் தலைமகன்’ என்று. ஆனால் அடுத்து வந்தது ‘குடும்பத்தலைவன்”. தாய்க்குத்தலைமகன் அதற்கு ஐந்து வருடம் கழித்து ஜெயலலிதா நடிக்க 1967-ல் வந்தது.

    படகோட்டி படத்திற்கு அப்புறம் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிக்கும் ‘பரமபிதா’ என்று படகோட்டி பாட்டுப் புத்தகத்தில் மேக் அப் டெஸ்ட் படங்கள் கூட அச்சிட்டிருந்தார்கள். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ’ஐ கன்ஃபெஸ்’( I, CONFESS ) படத்தின் தழுவல் என்று பேச்செல்லாம் அடிபட்டது. ம்ஹூம் வரவில்லை.(அகாதா கிறிஸ்டி எழுதிய ’மர்டர் ஷி ஸெட்’ (“MURDER, SHE SAID”) என்ற படத்தின் தழுவல்தான் எம்.ஜி.ஆரின் “என் கடமை”)
    Last edited by esvee; 12th March 2013 at 09:42 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3132
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3133
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் சக்தி திரை அரங்கத்தில் மக்கள்திலகத்தின் வண்ண காவியம் மாட்டுக்கார வேலன்


  5. #3134
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3135
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3136
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    10-03-2013 அன்று சென்னை சென்று திரும்பிய பொழுது மதுரவாயல் பகுதியில் கிளிக் செய்தது மிகவும் அற்புதமான ஒரு காட்சி



  8. #3137
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை திருவல்லிக்கேணி ஆர்த்தி ஹோட்டலில் சாப்பிடும் பொழுது கண்ணில் பட்டது

  9. #3138
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    10-03-2013 அன்று அனைத்து உலக எம்ஜியார் பொதுநல இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு மக்கள்திலகத்தின் சமாதியில் மலர்மாலை வைத்து வணங்கிய பொழுது

  10. #3139
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3140
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து உலக எம்ஜியார் பொதுநல இயக்கத்தின் தலைவர் திரு மக்கள்திலகத்தின் அண்ணன் பேரன்
    M .G .C .பிரதீப்பாலு

    அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது



Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •