Page 310 of 398 FirstFirst ... 210260300308309310311312320360 ... LastLast
Results 3,091 to 3,100 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3091
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    900 பதிவுகள் - அருமை திரு ஜெய் சார்
    வாழ்த்துக்கள் . தொடர்ந்து அசத்துங்கள் . விரைவில் நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் என்ற பட்டத்தை பெற விரும்பும்
    esvee
    வினோத் சார் தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3092
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    கர்நாடக முன்னாள் முதல்வர் திரு.ராமகிருஷ்ணஹெக்டே மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் திரு.என்.டி.ராமராவ் ஆகியோருடன்

  4. #3093
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான - இளமை துள்ளல் பாடல் . மறக்க முடியுமா

  5. #3094
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    ஓயாத உழைப்புக்கு இடையே குழந்தைகளோடு குழந்தையாய்
    நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை என பாடுகிறாரோ ...

  6. #3095
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3096
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    அன்னைக்கு ஓர் ஆலயம் அமைத்த நம் அருமை அண்ணல் அங்கு வழிபடும் போது எடுத்த புகைப்படம்
    தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை.

  8. #3097
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3098
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னைப் பற்றியே நினைப்பது விலங்கு குணம். பிறரைப் பற்றியும் அவர்கள் நலன் குறித்தும் சிந்திப்பது மனித குணம். மனிதரில் மா மனிதர்கள் புனிதர்கள் பசித்திருப்பவர்களை புசிக்க வைத்து பார்த்து மகிழ்வார்கள். இந்தப் பெருங்குணம் தாய் உள்ளம் கொண்டவர்களுக்கே உரியது.
    திரைப்படம் ஒன்றில் கேட்ட பாடல் வரிகள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன.
    பசிக்கு விருந்தாக
    நோய்க்கு மருந்தாக
    இருப்பவர் தெய்வமடி
    தன் பசியைக் கருதாது
    பிறர்க்குத் தருவோர்கள்
    தெய்வத்தின் தெய்வமடி
    என்ன ஆழமான கருத்துள்ள அழகான பாடல்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காரை நிறுத்தச் சொன்னதும் உள்ளே அமர்ந்திருந்தோர் உள்ளத்தில் எதற்காக என்ற கேள்விக்குறி எழாமலில்லை.
    சொன்னதைச் செய்து பழக்கப்பட்ட உண்மையான ஊழியர்கள் என்பதால் கேள்வி இதயத்தோடு நின்றது. காரை சாலையில் ஓர் ஓரமாக நிறுத்தினர்.
    தன் அருகில் வைத்திருந்த பையை எடுத்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடன் வந்தவர்களிடம் நீட்டுகிறார்.
    ஒரு ஜமுக்காளத்தை எடுத்து விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து சாப்பிடுங்கள்.
    நாங்கள் .... .... ... சபாபதி முழுதும் சொல்லாமல் இழுக்கிறார்.
    நீங்கள் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். என்னை வரவேற்று உபசரிக்கிற ஆர்வத்தில் அவர்கள் உங்களை அந்தக் கூட்டத்தில் கவனித்திருக்க முடியாது என்று சந்தேகப்பட்டுத்தான் இட்லியை பொட்டணம் கட்டிக் கொண்டு வந்தேன். நான் புறப்படத் தாமதமாகிவிடும் என்று சாப்பிட்டு விட்டதாகப் பொய் சொன்னால் எனக்குத் தெரியாதா? இரவில் சாப்பிடமல் இருக்கக் கூடாது என்று கனிவோடு கூறுகிறார்.
    வந்து ... ... தங்கள் பொய் அவருக்குத் தெரிந்து விட்டதே என்ற அச்சம் அவர்களுக்கு
    சரி சரி நேரமாகிவிட்டது. முதலில் போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள் அவர் கண்டிப்பு அவர்களைத் துரத்துகின்றது.
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அன்பு நெஞ்சத்தை எண்ணி நெகிழ்ந்தபடி ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து, சாப்பிடத் துவங்குகின்றனர். வந்து அமர்ந்து சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர மறந்து விட்டது அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.
    இந்த சமயத்தில் ஒரு கை
    தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்தையும் தம்ளரையும் நீட்டுகிறது
    அவர்கள் நிமிர்ந்து பார்க்கின்றனர்.
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சர்வ சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் தண்ணீர் ஊற்றி வைக்கிறார்.
    ஆம் ஊழியர்களுக்கு ஊழியம் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.
    அவர்கள் கண்கள் பனிக்கின்றன. லட்சோபலட்சம் பேர் அவரை உபசரிக்கக் காத்திருக்கும் போது, அந்த மாமனிதரோ சாதாரணமான தங்களுக்காக பசியறிந்து உணவு தந்து, தாகமும் உணர்ந்து தண்ணீர் வழங்கியதைக் கண்டதும் திக்குமுக்காடிப் போகின்றனர்.
    சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு மக்கள் திலகம் காரில் ஏறி அமர்ந்து கொள்கிறார்.அவர்கள் சாப்பிட்டு வரும் வரை காத்திருக்கிறார். அதன்பின்புதான் காரின் சக்கரங்கள் சுழல்கின்றன.
    அன்பின் வழியது உயிர்நிலை என்பதற்கு உதாரணம் அவர்தானோ.
    மார்ச் 1988 பொம்மை இதழில் நாகை தருமன் அவர்கள் எழுதிய அவர் ஒரு சரித்திரம் தொடரிலிருந்து.

  10. #3099
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3100
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal thilagam in the movie Rajakumari
    The first movie as Hero.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •