Page 233 of 398 FirstFirst ... 133183223231232233234235243283333 ... LastLast
Results 2,321 to 2,330 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #2321
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    4வது படம் - 1962- மாடப்புறா -


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2322
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2323
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2324
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் பெயரால் நமது திரிக்கு புதிதாக வருகை புரிந்திருக்கம் மக்கள் திலகத்தின் ரசிகரை உளமாற வரவேற்கிறோம்.

  6. #2325
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy - Thanks - Mr Raghavan

    இப்பல்லாம் எதை எதையெல்லாமோ கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க ஸார்.
    அசல் கெமிஸ்ட்ரியைப் பாக்கணும்னா இந்தப் பாடலைப் பாருங்க.
    சரோஜா தேவி care free-யாக MGR-உடன் பாடிக்கொண்டே விளையாடுகிறார்,

    பதிலுக்கு MGR முறைப்பும், முறைப்புக்கு நடு நடுவே ரசிப்பும் காட்டுகிறார்.
    இருவர் முகத்தையும் கவனியுங்கள். இருவரும் நிஜமாகவே இதை enjoy பண்ணுகிறார்கள்
    என்பது கண்கூடு. அதுதான் கெமிஸ்ட்ரி.

    இந்த கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகள் மிகை. கட்டிப் பிடித்தலோ தேவையே இல்லை.
    பாடல் முழுவதும் சரோஜா தேவிக்கும் MGR-க்கும் குறைந்த பட்சம் 10-அடி இடைவெளி இருக்கிறது.
    10-அடி தூரத்தில் நின்று இருவரும் கொஞ்சறாங்களே அதுதான் ஸார் கெமிஸ்ட்ரி. இந்த கெமிஸ்ட்ரி பழகி வருவதில்லை, இயல்பாக அமைவது.

    படம்: பாசம்
    பாடல்: உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்

    Last edited by esvee; 16th February 2013 at 09:55 AM.

  7. #2326
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy- dinamalar

    2013ல் ஆண்டு பொன்விழா கொண்டாடும் படங்கள்: ஒரு பார்வை!!

    1963ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. யாரும் அதனை விழா நடத்திக் கொண்டாடப்போவதில்லை. இருந்தாலும் தினமலர் இணையதளம் அந்தப் படங்களை தன் வாசகர்களுக்கு நினைவுகூர்கிறத.


    1963ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தால் அழிக்க முடியாது இன்றைக்கும் தொலைக்காட்சிக்கு வருமானத்தை அள்ளித் தரும் பல படங்கள் 1963ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானது இந்த ஆண்டுதான். அவரின் சினிமா பொன்விழா ஆண்டு இது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கற்பகம் படத்தில் அறிமுகமானதும் இந்த ஆண்டுதான். அந்த வகையில் அவருக்கும் இது பொன்விழா ஆண்டு. 1963ம் ஆண்டு சினிமா ரசிகனுக்கு கொண்டாட்டமான ஆண்டு. காரணம் எம்.ஜி.ஆர் படங்களும், சிவாஜி படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து சகட்டுமேனிக்கு வெற்றியும் பெற்றன. சிவாஜியின் படங்கள் பேமிலி செண்டிமெண்டுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களாக இருந்தது.- இருவருமே தலா 10 படங்களில் நடித்திருந்தனர்.

    எம்.ஜிஆர் நடித்த படங்களின் பட்டியல். (அடைப்புக்குறிக்குள் கதாநாயகி மற்றும் இயக்குனரின் பெயர்கள்)

    பெரிய இடத்து பெண் (சரோஜாதேவி-டி.ஆர்.ராமண்ணா)

    ஆனந்தஜோதி (தேவிகா-ஏ.எஸ்.ஏ.சாமி)
    .தர்மம் தலைகாக்கும் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)
    .கலையரசி (பானுமதி-கே.காசிலிங்கம்)
    .காஞ்சித் தலைவன் (பானுமதி-ஏ.காசிலிங்கம்).
    .நீதிக்கு பின் பாசம் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)
    .பணத்தோட்டம் (சரோஜாதேவி-கே.சங்கர்)
    .பரிசு (சாவித்ரி-டி.யோகானந்த்).
    கொடுத்து வைத்தவள் (ஈ.வி.சரோஜா-பி.நீலகண்டன்)


    சிவாஜி நடித்த படங்கள்

    1.அன்னை இல்லம் (தேவிகா-பி.மாதவன்)
    2.அறிவாளி (பானுமதி-ஏ.டி.கிருஷ்ணமாச்சாரி)
    3.சித்தூர் ராணி பத்மினி (வைஜயந்திமாலா-நராயணமூர்த்தி)
    4.ரத்த திலகம் (சாவித்ரி-தாதாமிராசி)
    5.இருவர் உள்ளம் (தேவிகா-எல்.வி.பிரசாத்)
    6.கள்வனின் காதலி (சரோஜாதேவி-ஏ.கே.வேலன்)
    7.குலமகள் ராதை (சரோஜாதேவி-ஏ.பி.நாகராஜன்)
    8.குங்குமம் (விஜயகுமாரி&கிருஷ்ணன்-பஞ்சு)
    9.பார்மகளே பார் (சவுகார்ஜானகி-ஏ.பீம்சிங்)
    10.நான் வணங்கும் தெய்வம் (அஞ்சலிதேவி-கே.சோமு)

    எம்.ஜி.ஆர், சிவாஜி தவிர ஜெமினி கணேசன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், கைராசி, களத்தூர் கண்ணம்மா, மீண்ட சொர்க்கம், பார்த்திபன் கனவு, புதிய பாதை, வீரக்கனல், யானை பாகன் என 8 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்த ஆண்டு வெளிவந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படமும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படமும் பெரிய வெற்றி பெற்றது.
    இந்த ஆண்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு மொத்தம் 46 படங்கள் வெளிவந்துள்ளது. அவைகள் அனைத்திற்கும், உலக நாயகன் கமல்ஹாசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஆகியோருக்கும் 2013 பொன்விழா ஆண்டு. அவர்களுக்கு தினமலர் இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.
    Last edited by esvee; 16th February 2013 at 10:18 AM.

  8. #2327
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    புரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது

    முதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்

    இதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்

    நானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்

    மக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திட,
    "புரட்சி நடிகர் எம் ஜி ஆர்" என்ற பெயரில் இந்த திரியில் புதிதாக இணைந்துள்ள அன்பு நண்பர் அவர்களை வருக வருக என்று வரவேற்று வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறேன்.





    ================================================== =============================================

    அன்புடன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 16th February 2013 at 10:41 AM.

  9. #2328
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    விகடன் வார இதழில் mgr!


    சமீபத்தில் எம்ஜிஆரின் சிறப்புகளாக 25 விஷயங்களைப் பட்டியல் போட்டிருந்தது ஆனந்த விகடன் வார இதழ். இவற்றில் பல எல்லோருக்கும் தெரிந்த சிறப்புதான். என்றாலும் மனதுக்குப் பிடித்த மக்கள் தலைவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர் வாயால் கேட்டாலும் இனிமைதானே!

    எம்ஜிஆர்-25:

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்… 25 மட்டும் இங்கே!
    எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். ‘உரிமைக் குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!

    எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!

    சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்’ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

    முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத் தார்!
    ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!
    நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!
    எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!
    எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!
    காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

    நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!
    சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!
    எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!
    தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்… ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!’
    ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!
    அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!

    ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே!’ என்றுதான் அழைப்பார்!
    அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!
    எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!
    முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்!
    அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!
    ‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.
    அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!

  10. #2329
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் 15.02.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக - 2.30, 6.30, 9.30 - நடைபெறுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2330
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் திரியில் என்னை உங்களுடன் இணைத்துக்கொண்டு வரவேற்பு நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •