Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 17

Thread: தங்கர் பச்சானின் .. அம்மாவின் கை பேசி

  1. #1
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like

    தங்கர் பச்சானின் .. அம்மாவின் கை பேசி

    தங்கர் பச்சான் பெரிய பாச்சா-வாக இல்லாமல் இருக்கலாம் .ஆனா தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் ஒன்றான அம்மாவின் கைபேசி-க்கு ஒரு திரி கூட இல்லாத அளவுக்கு அவ்வளவு மலிந்து போய்விட்டதாக நினைக்கவில்லை.


    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    adhaanae..
    Sach is Life..

  4. #3
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஆரம்பிச்சி வைத்ததற்கு நன்றி!

    நானும் யாராவது படத்தை பார்த்து எப்படி இருந்தது என வரும் விமர்சனங்களை எதிர்பார்த்துக் கொண்டுருக்கிறேன்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #4
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword View Post
    adhaanae..
    +1...

  6. #5
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    i was not aware that this movie was released...
    valakkampOla nenjai urukkum melodrama??
    Sach is Life..

  7. #6
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Just saw a programme in Sun music .. Thangar , Santhanu came and talked about this movie .. Sure it should be a sentiment movie , which may not appeal to the mass audience ..

    Thangarukku konjam vaai neeLam ..but avaru sollurathula sila niyayam illamal illa . He has been tirelessly giving movies on rural plot .. He surely deserves a appreciation ..atleast thosaikketha kaasu .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #7
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Gibraltar
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    Just saw a programme in Sun music .. Thangar , Santhanu came and talked about this movie .. Sure it should be a sentiment movie , which may not appeal to the mass audience ..

    Thangarukku konjam vaai neeLam ..but avaru sollurathula sila niyayam illamal illa . He has been tirelessly giving movies on rural plot .. He surely deserves a appreciation ..atleast thosaikketha kaasu .


    Ya he deserves appreciation. But I dont understand why he is against big star movies. The other day he came in Puthiya Thalaimurai for a chat about "Ammavin Kaipesi". In that he was saying like whatever he was like hoping to happen is happening (This was regarding that all big budget star movies of 2012 had failed at the box office). Comments like these are not in good taste. Release dynamics have changed considerably in the recent years. He could have surely timed his movie a better release date instead of Diwali. Am not sure about how much profits Thuppakki will make. But before Thuppaki,the movie that should have made the most profit this year would mostly be 'Pizza'. People will watch your movie if they like it even if it is low key. No point in blaming them.

  9. #8
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like
    playing in only one cinema in malaysia
    heard that it is nice, but slow moving
    paaththida vEndiyathu thaan
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #9
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    இசை – ரோஹித் குல்கர்னி

    கதை,திரைக்கதை, இயக்கம் – தங்கர் பச்சான்.

    தங்கர் பச்சானின் நாவலாய் இருந்து அவராலேயே சினிமாவாக்கப்பட்ட கிராமத்து அம்மாவைப் பற்றிய இப்படத்தின் இசை ரோஹித் குல்கர்னி என்னும் வட இந்தியர்(?). ஆல்பத்தில் நான்கு பாடல்கள். நான்கு இசைக் கோர்வைகள்.

    ’மும்பையிலிருந்து நாந்தான் கையப்புடிச்சி கூப்பிட்டு வந்தேன்’ என்று தங்கர் பச்சான் புளுகுவது போல் இவர் ஒன்றும் அறிமுகம் அல்ல.

    ரோஹித் குல்கர்னி ஏற்கனவே போர்க்களம் என்கிற தமிழ்ப்படத்துக்கு

    இசையமைத்தவர்.

    மும்பையில் ’சொந்தமாக’ ஹைடெக் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்து அதில் தன் பாடல்களை தானே ரெக்கார்டிங் செய்து, ப்ரொட்யூஸ் செய்து வெளியிடுகிறார். தமிழ் நன்றாகப் பேசுகிறார். ஏற்கனவே சில ஹிந்திப் படங்கள், தெலுங்கு மேலும் தமிழ்ப் படங்கள் என்று பிஸியாகிக் கொண்டிருக்கிறார்.

    ரெகார்டிங் ஸ்டுடியோ சொந்தமாக இருக்கிறதே ஒழிய,டியூன்கள் பல இடங்களிலிருந்து உருவப்பட்டவைகளே.

    இவருடைய இசையமைப்பு கொஞ்சம் ரஹ்மான், கொஞ்சம் ஹாரிஸ், கொஞ்சம் ஜீ.வி.பிரகாஷ், கொஞ்சம் யுவன் (ராஜா இல்லை), கொஞ்சம் ஹிந்தி என்று சமவிகிதத்தில் கலந்து ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி மியூசிக் போட்டு எடுத்தால் என்ன வருமோ அது. அபஸ்வரம் இல்லை. தெளிவான ரெக்கார்டிங். மெல்லிய கருவிகளின் கோர்வை போன்ற விஷயங்கள் இவரது அட்வாண்டேஜ். ஜீவனைத் தொடுமா என்றால்....ம்..ஹூம்..

    1. என்ன செஞ்சி போற - ராஜீவ் சுந்தரேசன்

    நா.முத்துக்குமார்

    காதல் வயப்பட்ட காதலன் காதலி மேல் பாடுவதாக வரும் பாடல். முத்துக்குமார் எழுதியது. வரிகள் பரவாயில்லை. ஹிந்திப் பட குழுப்பாடல்களின் சாயல். தேறிவிடும்.

    2. அம்மாதானே - ஹரிசரண்

    ஏகதேசி

    ஏகதேசியின் வரிகளில் வித்தியாசம் தெரிகிறது. அம்மாவின் அருமை பெருமைகளையும் அவளின் தற்போதைய அவல நிலையையும் பாடும் பாடல். ஹரிசரண் பாடியிருக்கிறார். அழுத்தம் பத்தவில்லை. கேட்கலாம்.

    3.ராஜபாட்டை(போடு தில்லாலே) - புஷ்பவனம் குப்புசாமி, ராகினிஸ்ரீ

    நா.முத்துக்குமார்

    புஷ்பவனம் குப்புச்சாமி பாடும் தெருக்கூத்து வகைப் பாடல் அழகியில் வரும் குருவி கொடைஞ்ச கொய்யா என்கிற பாடலை ஞாபகப் படுத்துகிறது.

    4.நெஞ்சில் ஏனோ இன்று - ஹரிணி

    பாடல் – ஏகதேசி

    காதலி காதலனின் காதலில் இரவில் தனிமையில் பாடும் பாடலையொத்த ஒரு மெலடி. வழக்கம் போலத்தான்.

    5.தலை முதல் பாதம் வரை - இசைக்கோர்வை

    கரகாட்டக்காரனின் ‘மாங்குயிலே பூங்குயிலே’யில் வரும் ஆரம்ப நாதஸ்வர, மேளத்தின் சாயலோடு இந்த இசைக் கோர்வை தொடங்குவது தற்செயலா, காப்பியா அல்லது படத்தில் இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க செய்யப்பட்டதா..?

    இதன் தொடர்ச்சியாக வரும் ‘வடநாட்டு சரக்கு’ டாஸ்மார்க்கில் குடித்தும் போதையேறாத தண்ணீர் கலந்த ஓல்ட் மன்க் போன்று ‘சவசவ’ என்று இருக்கிறது.

    6.நெஞ்சில் ஏனோ இன்று - ஹரிசரண்

    ஏகதேசி

    ஹரிசரண் பாடும் சோகப்பாடல். வரிகள் பரவாயில்லை. பாடல் வழக்கமான 21ம் நூற்றாண்டு சோக இசையில் தமிழ்க் காதலன் பாடும் சோகப் பாட்டு. ஏதோ இருக்கிறது.

    7,8.அம்மாவின் கை பேசி தீம் – 1 மற்றும் தீம் – 2.

    படத்திற்காக இரண்டு வகையில் தீம் மியூசிக் போட்டிருக்கிறார். இதமான முதல் தீம் மியூசிக்கில். ரோஹித் ஜமாய்க்கிறார்.

    இரண்டாவது தீம் மியூசிக் சுமார் தான். சோகம் என்று காட்ட வேண்டுமென்றே வயலினைப் போட்டு இழு இழு என்று இழுத்த மாதிரி இருக்கிறது.

    “தமிழ் சினிமாவில் பிண்ணனி இசையென்பதே என்னவென்று தெரியாமல் இருக்கிறது. என் படத்தின் கணத்தை பல இசையமைப்பாளர்கள் பிண்ணனி இசையால் நிரப்பியே குறைத்துவிட்டார்கள். ரோஹித் குல்கர்னியுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய போது தான் சரியான பிண்ணனி இசையை கண்டுகொண்டேன்..” இது போன்ற அர்த்தம் தொனிக்க இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தங்கர் பேசிய அபத்தமான பேச்சுக்கு இந்த ஆல்பம் உண்மையாக இருக்கிறதா ?

    பாடல்களைப் பார்த்தால் அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஸாரி தங்கர். உங்கள் பழைய படங்களின் வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர்கள் தான் முக்கிய காரணங்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். திடீரென்று எங்கிருந்தோ வந்த ரோஹித் உங்களுக்கு இசை ஞானியாக மாறி விட்டார். (இதற்குக் காரணம்? இசை ஞானியிடம் வழக்கம் போல் நைசாக பணமின்றி இசை அமைத்துத் தர கேட்க முயன்று நீங்கள் நறுக்கென்று மண்டையில் குட்டு வாங்கியதாகச் சொல்கிறார்களே ! உண்மையா ?)

    ரோஹித்தின் பாடல் இசை ஓகே ரகம் தான். ஆனால் தங்கர் புல்லரித்துக் கூறுமளவு ஓஹோ என்று இல்லை. ரஹ்மான் கிராமத்திய இசையமைத்துக் கேட்ட போது (உழவன், கிழக்குச் சீமையிலே) உண்டான அதே அந்நியப்படுத்தப்பட்ட உணர்வு தான் அம்மாவின் கை பேசியைக் கேட்கும் போதும் எழுகிறதேயன்றி கிராமத்து இசையின் யதார்த்த நிலையல்ல.

    கிராமங்களே அழிந்து நகரங்களின் பின்னால் வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கும் போது கிராமமாவது இசையாவது என்கிறீர்களா. அதுவும் சரிதான்.

    ரோஹித் குல்கர்ணியின் பிண்ணனி இசை படம் வந்தால் தான் தெரியும். அப்போது ரோஹித்தின் பிண்ணனி இசை பற்றிய தங்கரின் வரிகளை மீண்டும் நாம் கேட்போம்... பார்ப்போம்.

    http://www.hellotamilcinema.com/inde...rohith&catid=4

  11. #10
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கர்பச்சனின் அம்மாவின் கை பேசி பார்க்க போனேன்.

    இது தான் கதை.

    தங்கர்பச்சன் ஒரு பேக் நிறைய பணம் எடுத்து வருகிறார், எப்படி கிடைத்தது என்பதை விட்டு விட்டு ப்ளாஷ்-பேக்காக சொல்லுகிறார்கள்..

    சாந்தனு வீட்டின் கடைசி பையன், அதனாலே அம்மாவின் செல்லம் அதிகம்.

    ஊரே நீ தான் செல்லம் கொடுத்து தான் அவன கெடுக்குற, என்று சொல்லும் அளவுக்கு தண்டசோறு பையன் சாந்தனு.

    மாமன் மகளான இனியாவை காதலிக்கிறார் சாந்தனு, இந்நேரத்தில் ஒரு திருட்டு பட்டம் கட்டி ஊரை விட்டு விரட்டிகிறார்கள் உடன்பிறப்புகள்.

    இவர்கள் மூஞ்சியில் கறியை பூசும் படி வாழ்ந்து காட்டுயென அம்மாவும் திட்டியபடியே அனுப்பிவைக்கிறார்.

    ஏழு வருடங்கள் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார், இதனாலேயே அவர் செத்து விட்டதாக ஊர் நினைக்க ஆரம்பிக்கிறது.

    இனியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விடுகிறதுயென காட்டும் சீன்னில், ஆடியென்ஸ் கை தட்டி ரசிக்கிறார்கள் "அப்பாடா இனி காதல் காட்சிகள் இல்லை" என்று

    கைபேசி எங்கே என்று கேட்கிறீர்களா?? வரும் ஆன வராது.

    வெளியூர் சென்று கடுமையாக உழைத்து முன்னுக்கு வருகிறார், ஒரே பாட்டுல முன்னேற்ற வில்லை என்பது ஆறுதல்

    அம்மாவுக்கு செல்போன் அனுப்பி வைக்கிறார், பெரிதாக ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. ப்ரீ ஹிட்டில் டிபென்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

    தொழில் போட்டி போன்ற அதர பழைய சமாச்சாரங்களும் நடக்கின்றன..

    இண்டர்வலே இல்லாம படத்தை முடிக்க போறாங்களா என்று நினைக்கும் அளவுக்கு திரைக்கதையில் வேகம் பின்னி பெடல் எடுக்கிறது.

    எதிர்பாராத நேரத்தில் போட்டார்கள் "இளைப்பாறும் நேரம்" என்று - அது மிகவும் தேவைப்பட்டது ஆடியென்ஸ்க்கு

    இடைவேளைக்கு பிறகு தங்கர் சாந்தனுவின் ஊருக்கு வருகிறார் பண பையோடு, சுற்றி திரிகிறார், ப்ளாஷ் - பேக் போகிறார், திரும்பி வருகிறார்

    சாந்தனும் அம்மாவும் இணைந்தார்களா? அவருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது தான் மீடி படம்.

    மீனாள், அழகம் பெருமாள் மற்றும் அம்மா கேரக்டரில் நடித்தவர்கள் (எம்.ஜி.ஆர்யுடன் ஹீரோயினாகவும் நடித்துயிருக்கிறார் என்று சொன்னார்கள்) நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

    சாந்தனு பெரிதாக ஜொலிக்கவில்லை.

    திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ப்ரீ டாக் டைம் கிடைத்து இருக்கும் கைபேசிக்கு.

    படம் முடிந்ததுயென டைட்டில் கார்ட் போடுகையில் தானே புயலும், நீலம் புயலும் ஒன்றாக சேர்ந்து அடித்தது போல் ஒரு சத்தம், மக்கள் விட்ட பெருமூச்சு தான் அது..

    மொத்தத்தில் இந்த தீபாவளிக்கு புஸ்ஸாக போன வெடிகளில் இதுவும் ஒன்று

    http://http://www.sivagnanam.com/201...g-post_13.html

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •