Page 103 of 119 FirstFirst ... 35393101102103104105113 ... LastLast
Results 1,021 to 1,030 of 1189

Thread: The Golden Era of Dr.IR and Dr.SPB - Part 2

  1. #1021
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 34. பாடல் - வா பொன்மயிலே
    திரைப்படம் - பூந்தளிர்
    இசை - இளையராஜா
    பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1979

    வா பொன்மயிலே!
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
    என்றும் நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    கண்மணி!

    வா பொன்மயிலே!
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

    காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே
    கோவிலின் தேரழகோ முன்னழகிலே
    கனியே மனம் மயங்க மயங்க
    வருவாய் சுவை பெருகப் பெருக
    இளமையின் நளினமே
    இனிமையின் உருவம் மலர

    வா பொன்மயிலே!
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
    என்றும் நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    கண்மணி!

    வா பொன்மயிலே!
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

    மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
    பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
    அழகே சுகம் வளர வளர
    நினைவே தினம் பழகப் பழக
    உரிமையில் அழைக்கிறேன்
    உயிரிலே கலந்து மகிழ

    வா பொன்மயிலே!
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
    என்றும் நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    கண்மணி!

    வா பொன்மயிலே!
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1022
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 35. பாடல் - மனதில் என்ன நினைவுகளோ?
    திரைப்படம் - பூந்தளிர்
    இசை - இளையராஜா
    பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1979

    லலலா
    லல லலலா
    லலலா லலலா

    மனதில் என்ன நினைவுகளோ?
    இளமைக் கனவோ?
    அதுவோ? எதுவோ?
    இனிய ரகஸியமோ?

    மனதில் என்ன நினைவுகளோ?
    இளமைக் கனவோ?

    தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
    துணையை விரும்புமே
    லலாலலா
    துணையை விரும்பி இணையும்பொழுது
    அமைதி அரும்புமே
    லலாலலா
    ஒன்றைவிட்டு ஒன்றிருந்தால்
    தாபம் மனதில் வளருமே
    காதலின் பார்வையில் சோகம் விலகும்

    மனதில் என்ன நினைவுகளோ?
    இளமைக் கனவோ?

    நடந்து முடிந்த கதையை மறந்து
    புதிய வழியிலே
    லலாலலா
    புதிய வழியில் புதிய உறவில்
    புதிய உலகிலே
    லலாலலா
    செல்லுங்களே செல்வங்களே
    உலகம் மிகவும் பெரியது
    கருணையின் கைகளில் தாய்மை மலரும்

    மனதில் என்ன நினைவுகளோ?
    இளமைக் கனவோ?
    அதுவோ? எதுவோ?
    இனிய ரகஸியமோ?

    பபபா
    ஆஆஆபபபபபபபா
    பபப்பபபபா பாபபா
    பபபா
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  4. #1023
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 36. பாடல் - மாமேன் ஒரு நாள்
    திரைப்படம் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    இசை - இளையராஜா
    பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1979

    !
    ஏஏஏஏஏஏ!
    ஏஏஏஏ ஏஏஏஏ
    ஆஆஆஆஆஆஆ ஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆ

    மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
    என் மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
    அடியாத்தி! இது எதுக்கு?
    நான் யோசனை பண்ணிப் பாத்தேனம்மா
    அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா

    மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
    என் மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
    அடியாத்தி! இது எதுக்கு?
    நான் யோசனை பண்ணிப் பாத்தேனம்மா
    அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
    என்னத்துக்கோ நான்
    ஏதுக்கோ நான்
    சின்னப்புள்ள நான்
    பச்சப்புள்ள நான்
    வாசத்திலே மதி மறந்து
    வாங்கிக்கிட்டு நான்
    வச்சிக்கிட்டேனாம்
    மல்லியப்பூ வாசம்
    என் மாமன்மேல வீசும்

    மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்

    மாங்காத் தோப்போரம்
    நா மறுநா போனேனா
    தேங்காப் பூவாட்டம்
    நா சிரிச்சிக்கிட்டிருந்தேனா
    அடி ஆத்தாடி! என்னோரமா
    என் மாமேன் வந்தான் அங்கே
    யே!
    என் மாமேன் வந்தான் அங்கே
    ஒரு மாங்கா தந்தான் திங்க
    என்னத்துக்கோ நான்
    ஏதுக்கோ நான்
    சின்னப்பொண்ணு நான்
    பச்சப்பொண்ணு நான்
    ஆசையிலே என்னை மறந்து
    வாங்கிக்கிட்டு நான்
    தின்னுப்புட்டேனாம்
    மாமன் தந்த மாங்கா
    நல்ல மல்கோவாதாங்க

    மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்

    கம்மாக்கரையோரம்
    நான் குளிச்சிக்கிட்டிருந்தேனா
    சேல துணியெல்லாம்
    நான் தொவச்சிக்கிருந்தேனா
    அடியம்மாடி! என்னோரமா
    என் மாமேன்தானே வந்தான்
    புது சேலதானே தந்தான்
    என்னத்துக்கோ நான்
    ஏதுக்கோ நான்
    சின்னப்பொண்ணு நான்
    பச்சப்பொண்ணு நான்
    சேலையிலே என்னை மறந்து
    வாங்கிக்கிட்டு நான்
    கட்டிக்கிட்டேனாம்
    மாமன் தந்த சேல
    அந்த மல்லியப்பூப் போல

    மாமேன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்

    ஒரு நா தனியாத்தான்
    நான் வீட்டில இருந்தேனா
    மெதுவா வந்தானா
    நான் வரவா ன்னானா
    அடி ஆத்தாடி என்னோரமா
    புதுப் பாயப் போட்டான் அங்கே
    புது விதமாப் பாத்தான் இங்கே
    என்னத்துக்கோ நான்
    ஏதுக்கோ நான்
    சின்னப்புள்ள நான்
    பச்சப்புள்ள நான்
    ஒண்ணுமறியா கன்னிப்பொண்ணு நான்
    மதி மயங்கி படுத்துக்கிட்டேன்
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  5. #1024
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 37. பாடல் - உச்சி வகுந்தெடுத்து
    திரைப்படம்
    - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    இசை
    - இளையராஜா
    பாடியவர்
    - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ( சாந்தா அக்கா?/ பூரணி? / இந்திரா? )
    பாடல்வரிகள்
    -
    ஆண்டு
    - 1979

    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி

    பச்சமலப் பக்கத்தில

    மேயுதுன்னு சொன்னாங்க

    மேயுதுன்னு சொன்னதில

    ஞாயமென்ன கண்ணாத்தா
    ?

    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி

    பச்சமலப் பக்கத்தில

    மேயுதுன்னு சொன்னாங்க

    மேயுதுன்னு சொன்னதில

    ஞாயமென்ன கண்ணாத்தா?

    ஏ ஆரீராரோ
    ஆரீராரோ
    ஆரீராரிராரோ ஆரீராரோ
    ஆரீராரோ
    ஆரீராரோ
    ஆரீராரோ ஆரீராரோ


    பட்டியில மாடுகட்டி
    பாலக் கறந்து வச்சா

    பால் திரிஞ்சுப் போனதுன்னு சொன்னாங்க

    சொன்னவங்க வாத்தையிலே சுத்தமில்ல

    அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல


    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி

    பச்சமலப் பக்கத்தில

    மேயுதுன்னு சொன்னாங்க


    வட்டுக் கருப்பட்டிய
    வாசமுள்ள ரோசாவ

    கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க

    கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத

    அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல


    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி

    பச்சமலப் பக்கத்தில

    மேயுதுன்னு சொன்னாங்க


    ஆஆஆஆஆ நனனன நனனனா
    ஏஏஏஏ

    நா நா ஏஏஏஏஏ

    நனனன நனனன நனனனா ஏஏஏ


    பொங்கலுக்குச் செங்கரும்பு
    பூவான பூங்கரும்பு

    செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க

    செங்கரையான் தின்னிருக்க ஞாயமில்ல

    அடி சித்தகத்திப் பூவிழியே
    ! நம்பவில்ல

    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி

    பச்சமலப் பக்கத்தில

    மேயுதுன்னு சொன்னாங்க

    மேயுதுன்னு சொன்னதில

    ஞாயமென்ன கண்ணாத்தா
    ?

    உச்சி வகுந்தெடுத்து
    பிச்சிப்பூ வச்ச கிளி

    பச்சமலப் பக்கத்தில

    மேயுதுன்னு சொன்னாங்க

    மேயுதுன்னு சொன்னதில

    ஞாயமென்ன கண்ணாத்தா
    ?
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  6. #1025
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 38. பாடல் - காட்டிலொரு சிங்கக்குட்டியாம்
    திரைப்படம் - அன்புக்கு நான் அடிமை
    இசை - இளையராஜா
    பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1980

    காட்டிலொரு சிங்கக்குட்டியாம்
    விளையாட்டிலது ரொம்ப சுட்டியாம்
    பெத்த அம்மா அப்பாவை
    அது விட்டுப் பிரிஞ்சு
    அட தன்னந்தனியா
    தத்தித் தாவித் திரிஞ்சு
    அது காடு மலை மேடுகள
    தாண்டி வந்திடுச்சாம்

    காட்டிலொரு சிங்கக்குட்டியாம்

    குள்ள நரி கூட்டத்திலே
    குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
    கூடாத குணத்தை எல்லாம்
    தானும் கத்துக்கிச்சாம்
    குள்ள நரி கூட்டத்திலே
    குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
    கூடாத குணத்தை எல்லாம்
    தானும் கத்துக்கிச்சாம்
    கோண வழி குறுக்கு வழி
    போக எண்ணிக்கிச்சாம்
    பொய் புரட்டு கொலை திருட்டு
    நாலும் பண்ணிடுச்சாம்
    பல வருஷம் போயிடுச்சாம்
    சிங்கம் பெரிசு ஆயிடுச்சாம்
    அத வேடரெல்லாம் தேடறப்போ
    ஓடி வந்துடுச்சாம் ஹோய்

    காட்டிலொரு சிங்கக்குட்டியாம்

    வந்த இடம் நல்ல இடம்
    வண்ண மான் வாழும் இடம்
    மான் தோலைப் போத்திக்கிட்டு
    சிங்கம் வந்திடுச்சாம்
    வந்த இடம் நல்ல இடம்
    வண்ண மான் வாழும் இடம்
    மான் தோலைப் போத்திக்கிட்டு
    சிங்கம் வந்திடுச்சாம்
    அப்பாவி மாங்களெல்லாம் அன்பு பண்ணிடுச்சாம்
    அதக் கண்டு சிங்கத்துக்
    கண்ணீர் வந்திடுச்சாம்
    அதன் கொடுமை போனதடா
    அன்புக்கடிமை ஆனதடா
    அது மாங்களுக்கு ராப்பகலா
    காவல் நின்றதடா ஹோய்

    காட்டிலொரு சிங்கக்குட்டியாம்

    காவல் நின்ற சிங்கத்துக்கு
    காலம் செய்த சோதனைபோல்
    குட்டிமான் கூட ஒரு தாயும் வந்திடுச்சாம்
    காதல்மான் தன்னை இங்கே காண வந்திடுச்சாம்
    அந்த மான் ஜோடியைத்தான்
    சிங்கம் கொன்னுடிச்சாம்
    தப்பை மறைக்க வழியில்லே
    தப்பி நடக்க முடியல்லே
    மன உளைச்சலிலே அலைச்சலிலே
    சிங்கம் உறுமிச்சாம் ஹோய்
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  7. #1026
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 39. பாடல் - காத்தோடு பூ உரச
    திரைப்படம் - அன்புக்கு நான் அடிமை
    இசை - இளையராஜா
    பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்& பி.சுசீலா
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1980

    காத்தோடு பூ உரச
    பூவ வண்டுரச
    உன்னோடு நான்
    என்னோடு நீ
    பூவா காத்தா உரச

    காத்தோடு பூ உரச
    பூவ வண்டுரச
    உன்னோடு நான்
    என்னோடு நீ
    பூவா காத்தா உரச

    ஏத்தம்போட்டு எறைச்சத் தண்ணி ஓடும்
    ஏத்தம்போட்டு எறைச்சத் தண்ணி ஓடும்
    ஏன் அது ஏன்
    அதைத் தேடும் வயலும் வாடும்
    ஆறாதோ தாகம் வந்தா
    ஆசே மோகம் வந்தா
    ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ?

    காத்தோடு பூ உரச
    பூவ வண்டுரச
    உன்னோடு நான்
    ஆஆஆஎன்னோடு நீ
    பூவா காத்தா உரச

    கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
    கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
    யார் அது யார்
    அதக் கேட்டால் தெரியும் சேதி
    நான்தானே சின்னப்பொண்ணு
    பூவும் நானும் ஒண்ணு
    நான் யாரு நீராறு
    நீராட வா!

    காத்தோடு பூ உரச
    பூவ வண்டுரச
    உன்னோடு நான்
    ஆஆஆஎன்னோடு நீ
    பூவா காத்தா உரச
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  8. #1027
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 40. பாடல் - வாடாத ரோசாப்பூ
    திரைப்படம் - கிராமத்து அத்தியாயம்
    இசை - இளையராஜா
    பாடியவர்- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1980

    ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
    ஆஆஆஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்
    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்
    பாடாத சோகத்தோட
    பாட்டும் பாடக் கேட்டேன்

    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்

    காத்தாடி போலாடும்
    பெண்ணோட சிறு நெஞ்சு
    கையோட சேத்தாச்சு
    ஏதோ ஒண்ணு ஆச்சு
    காத்தாடி போலாடும்
    பெண்ணோட சிறு நெஞ்சு
    முடிவேதும் தெரியாம
    மோகம் தப்பிப் போச்சு
    அம்மாடி!
    அம்மாடி ஊரெல்லாம் போலி வேஷம்
    ஆனாலும் பரிதாபம்
    ஏதோ பாவம்

    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்
    பாடாத சோகத்தோட
    பாட்டும் பாடக் கேட்டேன்

    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்

    காத்தோட போயாச்சு
    என்னோட பாரம்
    ஆத்தோட போயாச்சு
    என் காலநேரம்
    காத்தோட போயாச்சு
    என்னோட பாரம்
    காவேரி நீர்மேலே
    கண்ணீர் போட்ட கோலம்
    அம்மாடி!
    அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
    எல்லாமே தப்பாச்சு
    ஏதோ நேரம்

    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்
    பாடாத சோகத்தோட
    பாட்டும் பாடக் கேட்டேன்

    வாடாத ரோசாப்பூ
    நான் ஒண்ணு பாத்தேன்
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  9. #1028
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 41. பாடல் - பேரைச் சொல்லவா
    திரைப்படம் - குரு
    இசை - இளையராஜா
    பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1980


    பேரைச் சொல்லவா?
    அது நியாயமாகுமா?
    நான் பாடும் ஸ்ரீராகம்
    எந்நாளுமே நீ அல்லவா?
    என் கண்ணனே! என் மன்னவா!


    தங்கமாங்கனி
    என் தர்மதேவதை
    தங்கமாங்கனி
    என் தர்மதேவதை
    நான் பாடும் ஸ்ரீராகம்
    எந்நாளுமே நீ அல்லவா?
    என் பூங்கொடி! இதை சொல்லவா?


    பேரைச் சொல்லவா?
    அது நியாயமாகுமா?


    இடை ஒரு கொடி
    இதழ் ஒரு கனி
    இன்பலோகமே உன் கண்கள்தானடி
    மலரெனும் முகம்
    அணைவது சுகம்
    ஒன்று போதுமே
    இனி உங்கள் தேன்மொழி
    நான் தேடினேன்
    பூந்தோட்டமே வந்தது
    நான் கேட்டது
    அருகே நின்றது
    இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்


    பேரைச் சொல்லவா?
    அது நியாயமாகுமா?
    பபபபப
    ப பபபபப


    புது மழை இது
    சுவை தரும் மது
    வைரப் பூச்சரம்
    அது இதழில் வந்தது
    இனி அது இது
    கனிந்தது அது
    இளமை என்பது
    உன் உடலில் உள்ளது
    நீ போட்டது
    என் கண்ணிலே மந்திரம்
    நான் பார்த்தது
    அழகின் ஆலயம்
    இதுதான் உலகத்தை ரஸிக்கின்ற பருவம்


    தங்கமாங்கனி
    என் தர்மதேவதை
    பப்பபபபப்ப
    ப பபப்பப்ப பப


    நவமணி ரதம்
    நடைபெறும் விதம்
    நமது கோவிலில்
    இனி நல்ல உற்ஸவம்
    கவிதைகள் தரும்
    கலை உந்தன் வசம்
    கங்கை ஆறுபோல்
    இனி பொங்கும் மங்கலம்
    ஓராயிரம் தேனாறுகள் வந்தன
    நீராடுவோம் தினமும் நீந்துவோம்
    சரிதான் நடக்கட்டும் இளமையின் ரஸனை


    பேரைச் சொல்லவா?
    அது நியாயமாகுமா?
    தங்கமாங்கனி
    என் தர்மதேவதை
    நான் பாடும் ஸ்ரீராகம்
    லலாலல்லா லலாலல்லா
    லலாலல்லா லலாலல்ல்
    பப்பபபப்ப
    பபபபபப்பப
    Last edited by disk.box; 30th July 2012 at 05:54 PM.
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  10. #1029
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 42. பாடல் - பறந்தாலும் விடமாட்டேன்

    திரைப்படம் - குரு
    இசை - இளையராஜா
    பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1980


    ஹே மை டியர்!
    லுக் ஹியர்
    ஹியர் ஐ ஸே
    ஹா பறந்தாலும் விடமாட்டேன்
    பிறர் கையில் தரமாட்டேன்

    அன்று நான் உன்னிடம் கைதியானேன்
    இன்று நான் உன்னையே கைது செய்தேன்
    எதற்காக வருகின்றேன்
    உனக்காக தொடர்கின்றேன்
    ஸினோரிட்டா!
    ஹவ் டு யு ஃபீல் அபௌட் மி நவ் ஐ ஸே

    பறக்காதே கிடைக்காது
    நினைக்காதே நடக்காது
    கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
    கோதை நான் மானல்ல வலையை வீச
    உனக்காக பிறந்தேனா?
    எதற்காக வருகின்றாய்?
    ஹேய்! லெட் மி ஸீ வாட் யு கேன் டு

    நதியிருக்கு தலைக்குளிக்க
    விதி இருக்கு மணம் முடிக்க
    இணங்கிவிட்டால் சுகம் இருக்கு
    இதயத்திலே இடம் இருக்கு
    தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
    ஹஹ்ஹ
    தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே

    பறக்காதே கிடைக்காது
    ஆஹாங்க்
    நினைக்காதே
    ஹஹாஹ்ஹா
    நடக்காது
    அன்று நான் உன்னிடம் கைதியானேன்
    இன்று நான் உன்னையே கைது செய்தேன்
    உனக்காக பிறந்தேனா?
    எதற்காக வருகின்றாய்?

    விதி வழிதான் கதை நடக்கும்
    அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
    பதுமை அல்ல ஆட்டிவைக்க
    -----அல்ல பூட்டிவைக்க
    காமுகன் மனதிலும் கவிதையா?
    போதை என்ன கொஞ்சம் கொஞ்சமாய்
    ஏறுதோ மீறுதோ?

    பறந்தாலும் விடமாட்டேன்
    பிறர் கையில் தரமாட்டேன்
    கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
    ஆஹ
    கோதை நான் மானல்ல வலையை வீச
    எதற்காக வருகின்றேன்
    உனக்காக தொடர்கின்றேன்
    பேபி ஹே பேபி
    ஹவ் டு யு ஃபீல் அபௌட் மி நௌ?

    பறக்காதே கிடைக்காது
    பறந்தாலும் விடமாட்டேன்
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  11. #1030
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 43. பாடல் - ஆடுங்கள் பாடுங்கள்
    திரைப்படம் - குரு
    இசை - இளையராஜா
    பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1980


    லல்லல்லா லல லல்லல்லா லல லல்லல்லா
    லல லல்லல்லல்லல்லா
    லல்லல்லா லல லல்லல்லா லல லல்லல்லா
    லல லல்லல்லல்லல்லா
    லல்லல்லா லல லல்லல்லா லல லல்லல்லா
    லல லல்லல்லல்லல்லா

    ஆடுங்கள் பாடுங்கள்
    பிள்ளைப் பொன்வண்டுகள்
    லல்லா லாலலா
    ஆடுங்கள் பாடுங்கள்
    பிள்ளைப் பொன்வண்டுகள்
    லல்லா லாலலா
    உலகத்தில் பல உள்ளங்கள்
    என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
    அந்தக் கண்ணன் பிம்பங்களே
    லல்லா லாலலா லல்லா லாலலா

    ஆடுங்கள் பாடுங்கள்
    பிள்ளைப் பொன்வண்டுகள்

    தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
    திருவிழா தெய்வப் பெருவிழா
    கண்ணனை எண்ணும் ஒரு விழா
    தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
    திருவிழா தெய்வப் பெருவிழா
    கண்ணனை எண்ணும் ஒரு விழா
    கோபம்போலே வாணங்கள்
    பாவம்போலே வீசுங்கள்
    பிள்ளைகள் கிள்ளைகள்
    கண்ணன் பிம்பங்களே
    லல்லா லாலலா லல்லா லாலலா

    ஆடுங்கள் பாடுங்கள்
    பிள்ளைப் பொன்வண்டுகள்

    முந்துங்கள் தினம் முந்துங்கள்
    உலகமே உங்கள் கைகளில்
    கலகமே இன்றி வாழுங்கள்
    முந்துங்கள்
    ம்ம்ம்
    தினம் முந்துங்கள்
    உலகமே உங்கள் கைகளில்
    கலகமே இன்றி வாழுங்கள்
    கண்ணே பாப்பா தூங்காதே
    ஹ்ஹஹ்ஹ
    காலம் உண்டு ஏங்காதே
    பிள்ளைகள் கிள்ளைகள்
    கண்ணன் பிம்பங்களே
    லல்லா லாலலா லல்லா லாலலா

    ஆடுங்கள் பாடுங்கள்
    பிள்ளைப் பொன்வண்டுகள்
    லல்லா லாலலா
    உலகத்தில் பல உள்ளங்கள்
    என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
    அந்தக் கண்ணன் பிம்பங்களே
    லல்லா லாலலா லல்லா லாலலா

    ஆடுங்கள் பாடுங்கள்
    பிள்ளைப் பொன்வண்டுகள்
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •