Page 162 of 401 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1611
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    இணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ இணைப்பு)
    மேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா..? ஹாலிவுட்டில், அந்நாளிலிருந்தே மேக்கிங் எனப்படும் ஒரு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்யும் வழக்கம் உண்டு. 70 களின் மத்தியில் தயாரான ஜாக்கி ஜானின் திரைப்படங்களில் இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் செருகப்பட்டு, படத்தின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த உத்தி தமிழ் சினிமாக்களில் ஆரம்பநாளில் காணப்படவில்லை. பின்னாளில்தான் இம்மாதிரி உத்தி பிரபல கதாநாயகர்களின் படங்களில் பயன்படுத்தப்பட்டது.
    அதுநாள்வரை புகைப்படங்களாக, படப்பிடிப்புக் காட்சிகளை பதிவு செய்வதோடு சரி.....ஆனால் ஆச்சர்யமாக தமிழகத்தில் 1968 ல் தயாரான, சிவாஜியின் வெற்றிப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாளின் படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை எடுத்தது அதன் படப்பிடிப்புக் குழு அல்ல. தமிழகத்தில் சினிமா தயாரிப்பு குறித்து பார்வையிடுவதற்காக அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு. லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்டரியில், தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'.
    ஆனந்தவிகடனில் கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டு, அப்போதைய விகடன் வாசகர்களை வாராவாரம் ஆவலோடு எதிர்பார்க்கவைத்து படிக்கப்பட்ட நாவல் அது. கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குனர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூக படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன். உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது.
    ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும். சினிமா அனுமதி தொடர்பாக வாசன், ஏ.பி. என்.னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டார். வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என். ஆனால் அதை மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார். நாவலை நீங்கள் படம் எடுக்கப்போகும் தகவலை சொல்லி, அதற்கான தொகையை கொடுத்துவிட்டு சென்றார்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.
    தன்னிடம் கொடுத்த பணத்தை கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளரிடம் கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது இவ்வளவு பெரிய தொகையை வாங்கிக்கொள்ளாமல், தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் கூறிய சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுபோனார் ஏ.பி. என். இதுதான் அன்றைய பட உலகம். இத்தகைய புகழ்பெற்ற படத்தின் காட்சிகள்தான் வெளிநாட்டு டாக்குமென்டரி குழுவினரால் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்ப்பது நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது. சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம். காட்சிகளிடையே சென்னை சினிமா குறித்த வர்ணனை பின்னணியில் இடம்பெறுகிறது.

    இணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ இணைப்பு)



    சினிமா விகடன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Russellbzy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1612
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    இந்திய வரலற்றில் முதல் முறையாக தமிழில் நாணயம்

    அண்ணாதுரை
    Last edited by sivaa; 10th September 2015 at 07:52 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1613
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஆர்கேஎஸ்,

    நான் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். விதண்டாவாதம் செய்பவர்கள், திரைபடத்தின் வணிகரீதியான சமாசாரங்களை பற்றி தெரியாதவர்கள் இவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று. அதே போல் ஒரு ரசிகர் மன்ற நோட்டிஸை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது.

    அங்கே எழுதப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் ஏற்கனவே தெளிவாக பதில் பலமுறை சொல்லியிருக்கிறோம். இருந்தாலும் அவ்வப்போது இதை எழுதுவார்கள். இப்போது உங்களுக்காக என்று மட்டுமில்லை லாஜிக் தெரிந்த அனைவருக்கும் இந்த பதில்.

    முதல் பாயிண்ட் வசூல் ஒப்பிடு. ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உணர்சிவசப்ப்படும்போது சில உண்மைகள் கூட கண்ணுக்கு தெரியாது. சென்னையில் மிக பெரிய திரையரங்கு குளோப். 70-களில் அலங்கார் என்ற பெயர் மாற்றம் பெற்றது. அந்த நேரம் பிலிமாலயா மாத இதழில் வந்த கேள்வி பதில் ஒன்று கீழே அதே போல் கொடுத்திருக்கிறேன்.

    கேள்வி: சென்னையில் அதிக இருக்கைகளை கொண்ட திரையரங்கம் எது?

    பதில்: மவுண்ட் ரோடு எல்ஐசி கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் அரங்கம். இது "அலங்கார"த்திற்காக சொல்லப்படும் வார்த்தை இல்லை. "சத்யமா"ன உண்மை.

    சித்ரா திரையரங்கை பொறுத்தவரை குளோப் அரங்கை விட சிறியது. குளோப் அரங்கம் கிட்டத்தட்ட 1200 இருக்கைகள் உடையது. சித்ரா அரங்கமோ 1000-த்திற்கும் கீழே. முதல் மூன்று வாரத்தில் குளோப் திரையரங்கில் அனைத்து காட்சிகளுமே ஹவுஸ் புல்லாக ஓடிய சிவந்த மண் [முதல் நாள் முதல் காட்சியிலிருந்து தொடங்கி 125 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல். அதாவது முதல் 40 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் புல்] எப்படி அதை விட சிறிய அரங்கமான சித்ராவில் ஓடிய நம் நாடு படத்தை விட குறைவாக வசூல் பெற்றிருக்க முடியும்? சென்னையை சேர்ந்த நமது ரசிகர்களே கூட இந்த லாஜிக்கை யோசிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

    அனைத்து ஊர்களிலும் சிவந்த மண் முன்னிலை பெற்றது என்பதற்கு ஒரு சோறு பதமாக ஒரு உதாரணம்.

    மதுரை சென்ட்ரல் - சிவந்த மண் -117 நாட்கள் - Rs 3,37, 134.95 p

    மதுரை மீனாட்சி - நம் நாடு - 133 நாட்கள் - Rs 3,06,000/- சொச்சம்

    மதுரை மீனாட்சி- ஒளி விளக்கு -147 நாட்கள்- Rs 3,16,000/- சொச்சம்

    இவை அள்ளி விடப்பட்ட தகவல்கள் அல்ல. உண்மையான நிலவரம். இதற்கு மேலும் விவரங்கள் வேண்டுவோர் அருமை நண்பர் வினோத் சாரை அணுகலாம். காரணம் அண்மையில்தான் சென்னை முதல் குமரி வரை சிவந்த மண்ணின் வசூல் விவரங்களை அவர் கேட்டு தெரிந்துக் கொண்டிருக்கிறார்.

    அடுத்து சிவந்த மண் நஷ்டம் என்று ஸ்ரீதர் சொன்னதாக சொல்லபடுவது. அவர்கள் சொல்லும் பேட்டி(கள்) பத்திரிக்கையில் வந்ததாகவே இருக்கட்டும். அந்த பேட்டியை எப்போது கொடுத்திருக்கிறார்? 1975 அல்லது 1985? இதை ஏன் அவர் 1970-லிலோ 71-லிலோ அல்லது 1972-லிலோ சொலலவில்லை? முந்தைய படம் நஷ்டம் எனும்போது ஏன் அதே நாயகனிடம் சென்று கால்ஷீட் பெற்று ஹீரோ-72 ஆரம்பித்தார்? அது மட்டுமா?

    1974-ல் உரிமைக்குரல் படப்பிடிப்பு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும்போதே. அன்றைக்கு இந்தியாவெங்கும் மகத்தான வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்த பாபி திரைப்படத்தை தமிழில் தயாரிக்க ராஜ்கபூரிடம் பேசி விட்டு ரிஷிகபூர் நடித்த வேடத்தில் தமிழில் நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார் அவர்களை நடிக்க வைக்க ஸ்ரீதர் அன்னை இல்லம் வந்து நடிகர் திலகத்துடனும் அவர் சகோதரர் வி.சி.சண்முகம் அவர்களுடன் இதைப் பற்றி பேசினாரே! அவர்கள் சரி என்று சொல்லும் முன்னரே பத்திரிக்கைகளில் செய்தி கொடுத்தாரே! அப்போது நஷ்ட கணக்கை பற்றி பேட்டி கொடுத்திருக்கலாமே!

    அன்றைக்கு விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு [1972-75] படித்துக் கொண்டிருந்தார் ராம். நடிப்போ இயக்கமோ தயாரிப்போ எதுவாக இருந்தாலும் டிகிரி முடித்த பிறகுதான் என்று விசிஎஸ் உறுதியாக கூறி விட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது அது மட்டுமா? 1975-ல் "ஒ மஞ்சு" படம் தொடங்கும்போது ஸ்ரீதர் இளைய திலகம் பிரபுவை நாயகனாக்க முயற்சி எடுத்தாரே, அப்போது நஷ்டம் பற்றி தெரியவில்லையா?
    .
    இனி 1970-ல் இதே ஸ்ரீதர் இதே சிவந்த மண் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? 1970 மே மாதம் சித்ராலயா வார இதழை ஆரம்பிக்கிறார். அன்றைக்கு ஹிந்தி சினிமாவுகென்றெ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை குழுமம் ஸ்க்ரீன் [Screen] என்ற வார இதழை தினசரி நாளேட்டின் வடிவமைப்பில் நடத்திக் கொண்டிருந்தனர்.

    அதே பாணியில் சித்ராலயாவின் வடிவமைப்பும் அமைந்தது. பத்திரிக்கை ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் ஸ்ரீதர் கேள்வி பதில் பகுதியை ஆரம்பிக்கிறார். அதில் ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார். “சிவந்த மண் உங்களுக்கு நஷ்டமாமே?” என்று அதற்கு ஸ்ரீதர் சொல்கிறார் “வருமான வரி அதிகாரிகளிடம் வந்து சொல்லுங்களேன். லாபத்தை குறைத்து காண்பித்து விட்டேன் என்று குடைகிறார்கள்”

    சிவந்த மண் லாபம் என்று வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார் ஸ்ரீதர். நஷ்டம் வந்திருந்தால் லாபம் என்று காண்பித்திருப்பாரா? அதற்கு வரிதான் கட்டியிருப்பாரா? இந்த சித்ராலயா இதழ்களை சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் பார்வையிடலாம். .

    உண்மையில் ஸ்ரீத்ருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? . தர்த்தி இந்திப்படம் மிக நன்றாக ஓடியும் வட மாநில விநியோகஸ்தர்கள் சரியான கணக்கை ஸ்ரீதரிடம் காண்பிக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர். அவர்களை பெரிதும் நம்பிய ஸ்ரீதர் இறுதியில் கணக்கு பார்த்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றார். இதை சித்ராலயா கோபு அவர்களே ஒரு உரையாடலில் வெளிபடுத்தினார். .

    அவளுகென்று ஓர் மனம் பற்றி அனைவரும் சொன்னார்கள். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் அந்த படத்தையும் ஸ்ரீதர் ஹிந்தியில் எடுத்தார். தமிழில் பிளாப் என்றால் ஹிந்தியில் மெகா பிளாப். மிகப் பெரிய நஷ்டம். அதன் பிறகு விஷ்ணுவர்தனை தமிழில் அறிமுகப்படுத்திய அலைகள் ஏற்படுத்திய நஷ்டம், சித்ராலயா பத்திரிக்கை நடத்திய வகையில் ஏற்பட்ட இழப்பு இவைதான் ஸ்ரீதரின் பொருளாதார பிரச்சனைக்கு காரணமே தவிர நடிகர் திலகமோ அவர் படங்களோ அல்ல.

    இனி சந்திரமௌலி புத்தகத்திற்கு வருவோம். நண்பர் ஒருவர் அந்த புத்தகத்தை வைத்திருக்கிறார். நேற்று அலைபேசியில் அவரிடம் படிக்க சொல்லி கேட்டேன். சிவந்த,மண் படம் சம்மந்தமாக இரண்டு மூன்று பக்கங்கள் வருகின்றது. அதில் ஒரு இடத்தில கூட சிவந்த மண் படத்தினால் நஷ்டம் என்றோ தோல்வி என்றோ அதில் எழுதப்படவில்லை.

    ஒரு வாதத்திற்காக சந்திரமௌலி புத்தகத்தில் அப்படி வந்திருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதில் சிவந்த மண் பற்றி எழுதியிருப்பது உண்மை என்றால் நண்பர் கலைவேந்தன் இங்கே பிரசுரித்த அந்த புத்தகம் பற்றிய மதிப்புரையில் வேறு இரண்டு விஷயங்களைப் பற்றியும் அதில் குறிப்பு காணப்படுகிறது.

    ஒன்று உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார். ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டார். என்று சொல்லியிருக்கிறார். அது உண்மை என்று ஒப்புக் கொள்கிறார்களா?

    இரண்டாவது அண்ணா நீ என் தெய்வம் படமும் மீனவ நண்பன் படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் அண்ணா நீ என் தெய்வம் பட தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. ஆகவே படம் தொடரப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் எம்ஜிஆர் பட தயாரிப்பாளருக்கு பணம் தர யாரும் முன் வர மாட்டார்கள் என்று அர்த்தமா? அதையும் உண்மை என்று ஒப்புக் கொள்வார்களா? .

    இனி மேலாவது நமது ரசிகர்கள் வேறு யாராவது சிவந்த மண் பற்றி இப்படி பேசினால் இந்த பதிலை பார்த்துக் கொள்ளும்படி சொன்னால் போதும்.

    இந்த பதிவே நீண்டு விட்டது. APN சொன்னது பற்றியும் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறோம். இனி அதற்கும் வேண்டுமென்றால் பதில் பிறகு தருகிறேன்.

    இந்த நேரத்தில் நாம்தான் இதை ஆரம்பித்தது போல் வழக்கம் போல் ஒரு சரடு. பாஸ்கர் சொன்னது பழைய காலங்களில் தவறான தகவல்கள் குறிப்பாக நடிகர் திலகம் அவர்களுக்கு எதிரான பிரசாரங்கள் நிறைய நடந்தன. அவற்றில் ஒன்றுதான் சிவந்த மண் தோல்வி என்பது. இதை சொல்லக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கிறது? தேவையில்லாமல் வாதம் செய்துவிட்டு பின் நம் தலையில் பழி.

    முத்தையன் சார் சொன்னது போல் நானும் முன்பே சொன்னது போல் சிவாஜி படங்கள் எதுவும் ஓடவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டோம் என்றால் அவர்களுக்கு சந்தோஷமாக போய் விடும். .

    என்ன செய்வது? உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் இதை தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும்?

    அன்புடன்

  6. #1614
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    One more inf about SIVANTAMANN Tosedays one of my friend by name gopal was the repesentaive for globe on behalf of chitralaya i happened to sit with him all the days and enjoy the movie till interval. just to make the film flop gmobe started matinee shows by sharp 2pm eveni show by6 pm but nothing prevented the crowds and hfull was awesome with lot of return crowds for the first 25-30days.
    pleasant memories.

  7. Likes Russellbzy liked this post
  8. #1615
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Excellent murali sir very very apt reply

  9. Likes Russellbzy liked this post
  10. #1616
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நண்பர்களே,

    http://www.mayyam.com/talk/showthrea...urali-Srinivas

    மேற்காணும் இணைப்பில் உள்ள திரியில் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நாமெல்லாம் வருவதற்கு முன்னரே முரளி சாரால் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அத்திரியானது ஸ்டிக்கி என்ற வகையில் அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை புதிய திரிகள் துவக்க்ப்ப்ட்டாலும் இந்த சாதனைத் திரி அவருடைய சாதனைகளைப் போலவே நிரந்தரமாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனை விட மேலும் நாம் புதியதாக எழுத முடியுமா தெரியவில்லை. எனவே புதிய பரிமாணங்களில் நாம் நமது இதய தெய்வம் மக்கள் தலைவரின் புகழாரம் சூட்டுவோமே.
    ஒரு சிறந்த நாவலை படித்து
    முடித்தாற் போலிருக்கிறது..
    நம் நடிகர் திலகத்தின் சாதனை
    நீள் பட்டியலை வணக்கத்திற்குரிய முரளி சார்
    வழங்கியதைப் படித்த பிறகு.

    திரு.ராகவேந்திரா சார்..
    நீங்கள் சொன்ன மாதிரியே
    நடிகர் திலகத்துள் ஆழ்ந்து
    லயித்து எதையாவது எழுதிக்
    கொண்டிருக்கும் என் போன்றவர்கள்.. இதை விடப்
    பிரமாதமாக என்ன எழுதி விடப்
    போகிறோம்?

    முரளி சார்..
    நீங்கள் சொன்னது உண்மைதான்.

    நான் ஆசை,ஆசையாய் விசாரித்ததில் எத்தனையோ நடிகர் திலகத்தின் பழைய
    படங்கள் தோல்விப் படங்கள்
    என்று சொல்லப்பட்டன.

    அவையெல்லாம் தங்களின்
    வெற்றிப்பட்டியலில் இருக்கின்றன.

    பழகிப் போய்விட்டால் பெருமூச்சு விடுதலே சுவாசிப்பாகி விடும்.

    பொய்கள் பழகிப் போய்விடின்,
    உண்மைகள் நகைச்சுவைத்
    துணுக்குகள் போல் ஆகி விடும்.

    உங்கள் இதய வங்கியில்
    தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் விஷயப் பொக்கிஷங்களை எல்லோருக்குமாய் செலவழித்திருக்கிறீர்கள்.

    நன்றிகள் கோடி.
    என் வணங்குதல்கள்.



    Sent from my GT-S6312 using Tapatalk

  11. Likes Russellmai liked this post
  12. #1617
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Today's Junior vikatan Kazhu pathilgal.

    கலைஞர் ப்ரியா, வேலூர்( நாமக்கல்).

    ஆட்சியில் இருக்கப்போவதோ இன்னும் சில மாதங்கள். அதற்குள் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட முடியாது என்பதை உணர்ந்து தான் ஜெயலலிதா அறிவித்து இருப்பாரா?

    கடற்கரைச் சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை எப்படியாவது எடுத்தாக வேண்டும். அதற்காகத் தான் இப்படி ஓர் அவசர அறிவிப்பு. உண்மையில் மணிமண்டபம் கட்ட வேண்டுமானால், இப்போதே பணிகளைத் தொடங்கி எட்டு மாதங்களில் கட்டி முடிக்க முடியாதா என்ன?

  13. Likes Russellbzy liked this post
  14. #1618
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜா யுவராஜா

    ஆரம்ப இசையே படு உற்சாகத்தை தரும் இந்த பாடல்.பாடலுக்கு முன் துவங்கும் அந்த துள்ளளலான இசைபாடல் முடியும் வரை சரவெடி சரமாய் இருக்கும்.
    நீச்சல் குளத்தில் நடந்து வரும் ஸ்டைல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.வெறி பிடித்த ரசிகர்கூட்டத்திற்கு அந்த நடைக்காட்சி மேலும் ஆரவாரத்தை செய்ய வைப்பதாகவும்,
    கைதட்டல் விசில் மூலம் ரசிக்கும் கூட்டத்திற்கு மேலும் கை வலிக்கும் அளவுக்கு கை தட்டும் உணர்ச்சிகளை தூண்டுவதாகவும்,
    அமைதியாக ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்கூட்டத்தையே "சபாஷ்"என்று வாய்விட்டு சொல்லவைக்கும் .
    திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு புலி வெளிவந்து நடந்தால் எப்படி இருக்கும்?இரை தேடி அலையும் பசித்த புலியின் நடையல்ல.இரை முடித்த ஒரு புலி எதையும் சட்டை செய்யாது.அதற்கு எதுவும் ஒரு பொருட்டல்ல.அது போல எதையும் பொருட்படுத்தாதது போன்றும்,எதைப்பற்றியும் கவலைப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்ததுவதாகவும் அதே சமயம் கம்பீரமாயும் அமைந்திருக்கும் அந்த நடை ரசிகர்களாலால் எப்போதும் ஆரவாரமாய் கொண்டாடப்படும்.
    எதிரில் வரும் பெண்ணை பார்வையால் அளக்கும் பாவனை ஜோர்.உடம்மை மெதுவாக சாய்த்துமோகனப்புன்னகை செய்து கடந்து செல்லும் அந்த ஷாட் பாடலைத்தூக்கி செல்லும் ஆரம்ப முத்திரை.
    ராஜா யுவராஜா என்று இழுப்பதில் ஆரம்பித்துநாள்தோறும் என்பதில் 'ம்ம்ம்ம் 'ஐ தொண்டையில் இருந்து நெஞ்சு வரை காற்றை அடைத்து சப்தமாய் வெளிவிடும் அழகே அழகு.
    உதட்டைச் சுழித்து கண்ணை சிமிட்டி ரோஜாவை முடிப்பது செயலும் பாடலும் அட்சரம் பிசகாதஅழகு.
    நித்தம்ஒரு புத்தம் எனும் போது மெல்ல துள்ளி ஆடும் அந்த சிறப்பு அவரிடம் மட்டுமே காண முடியும் மேனரிசம்.


    அடிக்கடி வலதுகண் துடிக்குது எனத் தொடங்கும் வரிகளின் போது பின்னோக்கி ஆடிக்கொண்டே செல்வது போன்று படம்பிடித்திருப்பது புதுமை.அருமையான டான்ஸ் மூவ்மென்ட் .பாட்டின் ஹைலைட் டான்ஸ் ஸ்டைல்.


    புளு கலர்சபாரி
    கடற்கரை
    கூலிங்கிளாஸ்
    காம்பினேசன் அருமை.
    பாடல் முழுவதும் ஸ்டைல்களாக தூள் பரத்திக்கொண்டு வருபவர் இந்தக் காம்பினேசன் கிடைத்தால் விடுவாரா என்ன?நடந்து வந்து நின்று சிகரெட்டை தூக்கி எறியும்
    ஸ்டைல்அட்டகாசம்.

    நடிப்பிலே எவரையும் மயக்குவேன்.
    கூறவே தேவையில்லை.மேலே தூக்கி விரல்களைசொடக்கும்அந்தக் கையசைவு அசத்தலான அழகு ஸ்டைல்.நடிப்பில் மட்டுமல்ல ஸ்டைல்களிலும் தனிக்காட்டு ராஜா இந்த ராஜா யுவராஜா.

    வான் வெடிகள் வானில் வெடித்து ஒளிச்சிதறல்களாய் பிரிவதைப்போல
    நடிகர்திலகத்தின் ஸ்டைல்கள் சிதறல்களாய் பாடல் முழுவதும் வெளிப்பட்டிருக்கும்.

    ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
    ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

    சரோஜா ரீட்டா கங்கா ரேகா
    சரோஜா ரீட்டா கங்கா ரேகா பாமா

    ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

    நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா
    நேரம் ஒரு ராகம் சுகபாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா

    தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம்
    என் தேவை பெண் பாவை கண் ஜாடை
    ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

    தங்கம் அது தங்கும் உடல் எங்கும் அதை கண்டால் கடத்தும் நினைவு வரும்
    தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்

    அடிக்கடி வலதுகண் துடிக்குது புது புது வரவுகள் இருக்குது
    எந்நாளும் என் மோகம் உன் யோகம்

    ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

    ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்து சுவைத்தவன் நான்
    உன்போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக்கண்டால் மயக்கிப்பிடிப்பவன் நான்

    நடிப்பிலே எவரையும் மயக்குவேன் அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
    என் ராசி பெண் ராசி நீ வா வா

    ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

  15. Thanks J.Radhakrishnan thanked for this post
  16. #1619
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜா யுவராஜா பாட்டு பார்த்து ரசிக்க,
    Thanks Mr. Senthilvel

    Last edited by Barani; 11th September 2015 at 03:33 PM.

  17. Thanks Russellmai thanked for this post
  18. #1620
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே !
    வணக்கம்! சிவந்தமண் ஸ்ரீதர் விவகாரத்தில் எனக்கு ஆதரவு பதிவு வெளியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
    தெளிவான விளக்கமளித்த திரு முரளி சார், மற்றும் உண்மைக்கு எப்போதும் உடனே தோள்கொடுக்கும் திரு ரவிகிரன் சார், திரு ஆதிராம்சார், சிவா சார்
    அனைவருக்கும் நன்றி!
    இந்த பிரச்சனையை ஆரம்பித்தது நானாம்! சரி என் பதிவில் நான் என்ன சொன்னேன்? சிவந்தமண் வெளியானபோது நம்நாடும் வெளியானது. இரண்டுமே
    பெரிய வெற்றி படங்கள் ஆனால் திமுகவினர் தங்கள் நடிகரை உயர்த்தி பேச ஒன்பது திரைகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் படத்தை விட ஆறு திரைகளில்
    100 நாட்கள் ஓடிய நம்நாடு வெற்றி, சிவந்தமண் தோல்வி என்று பொய்பிரச்சாரம் செய்தனர் என்று குறிப்பிட்டேன்! நான் கூறியதில் என்ன குற்றம் இருக்கிறது?
    நம்நாடு படத்தின் வெற்றி குறித்து நான் எதுவுமே சொல்லவில்லையே! சிவந்தமண் தோல்வி என்று பொய் பிரச்சாரம் செய்தனர் என்றுதானே சொன்னேன்!
    அதுவும் எப்படி சொன்னேன்? இவர்களும் அன்று பொய் பிரச்சாரத்தில் சம்பந்தபட்டிருன்டாலும் இவர்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் மொத்த பழியையும் திமுக வினரிடம் தூக்கி போட்டேன்! ஆனாலும் சிவந்தமண் நம்நாடு படத்தை விட அதிக திரைகளில் 100 நாட்கள் ஓடிய உண்மையை சொன்னதை பொறுத்து கொள்ள முடியாத மனிதர்கள் வழக்கம் போல் பொய்யான வசூல் விவரங்கள் கொண்டபிட்நோடிஸ் பதிவை பதிவிட்டனர்! இது வழக்கமான வேலை தான் பரவாயில்லை! ஆனால் ஸ்ரீதர் கல்கியில் சிவந்தமண் வசூலில் தோல்வி, நஷ்டம் என்று எழுதியதாகவும் அந்த தொடரை
    சந்திரமௌலி என்பவர் பின்பு தனி புத்தகமாக போட்டதாகவும் அதிலும் அப்படி குறிபிடபட்டிருப்பதாகவும் பொய்யான பதிவை ஒருவர் பதிவிட்டார்!
    நான் இப்போதும் சொல்கிறேன் கல்கியில் ஸ்ரீதர் எழுதிய தொடரை நான் அந்த தொடர் கல்கியில் வந்தபோதே படித்தவன்! அதில் சிவந்தமண் தமிழில்
    நல்ல வெற்றி! ஆனால் ஹிந்தியில் பெரிதாக போகவில்லை என்றுதான் எழுதினார்! ஆனால் சந்திரமௌலி புத்தகத்தை நான் படித்ததில்லை! ஆனால்
    நேற்று மதுரையிலிருந்து ஒரு நண்பர் என்னிடம் பேசியபோது சந்திரமௌலி புத்தகத்திலும் கல்கியில் ஸ்ரீதர் எழுதிய படிதான் இருந்தது என்றும் அந்த
    நண்பர் அதை படித்திருப்பதாகவும் என்னிடம் உறுதியாக கூறினார்! கூடியவிரைவில் கல்கி அல்லது சந்திரமௌலி புத்தகம் இரண்டில் எது கிடைக்கிறதோ
    அதை நம் திரியில் பதிவிட்டு பொய்யர்களின் முகதிரையை கிழித்து உண்மையை உலகுக்கு நிரூபிக்கிறேன்!

    முரளி சார்! கல்கியில் சிவந்தமண் ஹிந்தியில் பெரிதாக போகவில்லை ஹிந்தி படத்தில் லாபமில்லை என்று படித்ததாக எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!
    ஹிந்தியிலும் நன்றாக ஓடியது என்றுதானே தகவல்! ஸ்ரீதர் ஏன் இப்படி சொல்கிறார் என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கல்கியில் படித்தபோதே
    நினைத்தேன்! தங்கள் விளக்கத்தில் அதற்கான பதிலும் கிடைத்தது! மிக்க நன்றி!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •