Page 7 of 8 FirstFirst ... 5678 LastLast
Results 61 to 70 of 71

Thread: SUNTV

  1. #61
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    புனிதாவின் புதிய போராட்டம்



    ராடன் டிவியின் தயாரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது "செந்தூரப்பூவே.'' கடந்த வெள்ளிக்கிழமையுடன் இது 304-வது எபிசோடை கடந்து இருக்கிறது!

    "வரப்போகும் நாட்களில் இத்தொடரில் பரபரப்பான திருப்பங்கள் இடம் பெற இருக்கிறது'' என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

    பெரும் போராட்டத்துக்கு இடையில் தனது தங்கை வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் புனிதா. வளர்மதி வாழ்விலும் பிரச்சினை எழுகிறது. அவள் கிராமத்தில் இளைஞன் ஒருவனிடம் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை தொலைத்து விட்டதை, வளர்மதியின் கணவனிடம் சொல்லிவிடப் போவதாக புனிதாவை மிரட்டுகிறான் உமாபதி என்ற கேடி.

    சூர்யாவிடம் இருந்து புனிதாவைப் பிரித்துவிட துடிக்கும் சுசிலா, அவளது தந்தை துரையுடன் சேர்ந்து உறவாடிக் கெடுக்கத் திட்டமிடுகிறாள். திருந்தி விட்டது போல நடிக்கிறாள். புனிதாவை மாமியார் வீட்டுக்கு குடித்தனம் வர அழைக்கிறாள். சூர்யாவும் தாய் வீடு செல்ல விரும்புகிறான். சூர்யாவுக்காக மாமியார் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட, மீண்டும் தனது தங்கைகளுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ? எனத் தவிக்கிறாள் புனிதா.

    தன்னைப் பழி வாங்கத் துடித்த மாமியார் வீட்டிலேயே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் புனிதா சந்திக்கப்போகும் புதிய போராட்டங்கள் என்ன?

    புனிதாவை குறி வைக்கும் சுசிலா தனது நயவஞ்சக நாடகத்தில் புனிதாவை எப்படியெல்லாம் சிக்க வைத்தாள்?

    இவர்களது சதித்திட்டத்தால் சூர்யா புனிதா வாழ்க்கை என்னவாயிற்று?

    இத்தனை கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

    இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சனி, கிருஷ்ணன், யுவராணி, ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

    திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: அனில்ஹாஸ். இயக்கம்: பரமேஷ்வர்.

    தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.

    புனிதாவின் புதிய போராட்டம்



    ராடன் டிவியின் தயாரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது "செந்தூரப்பூவே.'' கடந்த வெள்ளிக்கிழமையுடன் இது 304-வது எபிசோடை கடந்து இருக்கிறது!

    "வரப்போகும் நாட்களில் இத்தொடரில் பரபரப்பான திருப்பங்கள் இடம் பெற இருக்கிறது'' என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

    பெரும் போராட்டத்துக்கு இடையில் தனது தங்கை வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் புனிதா. வளர்மதி வாழ்விலும் பிரச்சினை எழுகிறது. அவள் கிராமத்தில் இளைஞன் ஒருவனிடம் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை தொலைத்து விட்டதை, வளர்மதியின் கணவனிடம் சொல்லிவிடப் போவதாக புனிதாவை மிரட்டுகிறான் உமாபதி என்ற கேடி.

    சூர்யாவிடம் இருந்து புனிதாவைப் பிரித்துவிட துடிக்கும் சுசிலா, அவளது தந்தை துரையுடன் சேர்ந்து உறவாடிக் கெடுக்கத் திட்டமிடுகிறாள். திருந்தி விட்டது போல நடிக்கிறாள். புனிதாவை மாமியார் வீட்டுக்கு குடித்தனம் வர அழைக்கிறாள். சூர்யாவும் தாய் வீடு செல்ல விரும்புகிறான். சூர்யாவுக்காக மாமியார் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட, மீண்டும் தனது தங்கைகளுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ? எனத் தவிக்கிறாள் புனிதா.

    தன்னைப் பழி வாங்கத் துடித்த மாமியார் வீட்டிலேயே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் புனிதா சந்திக்கப்போகும் புதிய போராட்டங்கள் என்ன?

    புனிதாவை குறி வைக்கும் சுசிலா தனது நயவஞ்சக நாடகத்தில் புனிதாவை எப்படியெல்லாம் சிக்க வைத்தாள்?

    இவர்களது சதித்திட்டத்தால் சூர்யா புனிதா வாழ்க்கை என்னவாயிற்று?

    இத்தனை கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

    இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சனி, கிருஷ்ணன், யுவராணி, ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

    திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: அனில்ஹாஸ். இயக்கம்: பரமேஷ்வர்.

    தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.



    கஹசூஞ் க்க்ஷகூஞ்க்க்ஷ ஸட் த.கஹஞ்குஹ ச்ஙூ ஙச்ஙூ சச்ஞீ 02, 2009 3:15 சிஙு; க்க்ஷகூஞ்க்க்ஷ 1 ஞ்கூஙுக் கூஙூ ஞ்ச்ஞ்ஹஙீ

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ``உறவுகள்-100''



    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் நூறு எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் இந்தக்கதையின் போக்கு, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை தொடருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

    இத்தொடருக்காக புதிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி தொடரின் இயக்குனர் ஹரிபாபுவிடம் கேட்டபோது... "உண்மைதான்... உறவுகள் தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரம் அண்ணாமலை. எந்த சக்தியாலும் தன் கூட்டுக் குடும்பம் உடைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக உறுதியாய் இருப்பவர். இதுவரை வந்த பல சோதனைகளையும் தாண்டி அமைதியாய் தன் கூட்டுக்குடும்பத்தை வழி நடத்தி சென்று கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு தன் குடும்பத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் ஒன்று உருவாகிறது. அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் வசனங்களை மீறி அவர் உணர்வை வெளிப்படுத்த எங்களுக்கு இந்த பாடல் தேவையாய் இருந்தது. இதுவரை திரைப்படங்களில் மட்டும் சோகப் பாடலை பார்த்து நெஞ்சம் நெக்குருகிய ரசிகர்களை இந்த பாடலும் அதன் இசையும் மிகவும் நிச்சயம் உருக்கும். விஜய் ஜேசுதாஸின் குரலில், ரமேஷின் இசையில் பதிவு செய்யப்பட்ட இந்தப்பாடல் ஏற்கனவே நித்யஸ்ரீ பாடி டைட்டில் பாடலாகஅமைந்த பாடலின் இன்னொரு பதிப்பு என்றும் சொல்லலாம். அது கலகலப்பு என்றால் இது சோக மெலடி'' என்கிறார் இயக்குனர்.

    உறவுகள் தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்க்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, சுதா, ஆர்த்தி, கல்பனா, ஜெ.லலிதா, ஜெயந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

    திரைக்கதை - குமரேசன். வசனம்-பாலசூர்யா. ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு.

    தயாரிப்பு: சேன் மீடியா.

  4. #63
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    டைட்டில் பாடலுக்குத்தான் அதிக உழைப்பு!



    சின்னத்திரையில் `ஆளவந்தார் கொலைவழக்கு,' `வசந்தம் காலனி, புனிதபூமி, தர்மயுத்தம், துப்பறியும் சோழன், நிறங்கள், வண்ணவண்ணபூக்கள், காவ்யா, குல விளக்கு, ஜென்மம் எக்ஸ், ஷியாமளா, குடும்பம் ஒரு கோயில் என்று 75-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களுக்கு இசை யமைத்தவர் `கலைமாமணி' அரவிந்த் சித்தார்த்தா. பெரிய
    திரையிலும் காவியத்தலைவன், முற்றுகை, வள்ளிவரப்போறா, ராஜாளி, எங்கிருந்தாலும் வாழ்க, பயம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்போதும் 5 படங் களில் இசையமைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.

    "பெரியதிரை, சின்னத்திரை இசையமைப்பில் என்ன வித்தியாசம்?''

    இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவைக் கேட்டால்...

    "திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோருடன் படத்தின் கதையையும், காட்சிகளின் அமைப்புகளையும் நன்கு கலந்தாலோசிப்பேன்.

    மெகா சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போது முதலில் `டைட்டில் பாடல்' கம்போசிங்கின் போது மண்டையை உடைத்துக் கொள்ளாத குறையாக பலநாட்கள் செயல்படுவேன்.

    ஏகப்பட்ட டிïன்களை கம்போஸ் செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர், பாடலாசிரியர் என்று எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் முடிவாக ஒரு டிïனில் பாட்டை கம்போஸ் செய்து கொடுப்பேன்.

    மெகாசீரியலுக்கு டைட்டில் பாடல் மிக முக்கியமாச்சே. அதன் பிறகு தினமும் சுடச்சுட ஷூட்டிங் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்வேன். இந்த அனுபவம் கொஞ்சம் திரில்லிங்காகவே இருக்கும்.''

    அரசியல் கட்சிகளின் கொள்கைப் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறீர்களே?''

    "தேர்தல் சமயத்தில் முதல்வர் கலைஞர் எழுதிய `தீட்டிய வாளை ஒத்த மீசை கொண்ட திராவிட காளையே புறப்படுக' என்ற பாடலை எடுத்துக் கொண்டு இயக்குனர் அமிர்தம் என்னை சந்தித்தார்.

    தேர்தல் கால அவசரத்தை புரிந்து கொண்டு உடனடியாக புஷ்பவனம் குப்புசாமியை வரவழைத்தேன். காலையில் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு பாடலை கம்போஸ் செய்து முடித்தேன்.

    அப்போது கலைஞரிடமிருந்து போன் வந்தது. பாட்டை கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். அமிர்தம் சாரும், நானும் இரவு ஒரு மணிக்கு கலைஞரிடம் கேசட்டை எடுத்துச் சென்று போட்டுக் காட்டினோம். உற்சாகமாய்க் கேட்டு ரசித்து பாராட்டினார்.

    இரவு ஒரு மணிக்கு தான் எழுதிய பாட்டிற்கு இசையமைப்பும், பாடகரின் வார்த்தை உச்சரிப்புகளும் சரியாக இனிமையாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தூங்கச் சென்ற கலைஞர் அவர்களின் ஆர்வத்தையும், என் இசையமைப்பை அவர் பாராட்டியதையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.''

    பத்தாவது ஆண்டில் `கல்யாண மாலை'



    ஞாயிறுதோறும் சன் டி.வியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கல்யாணமாலை' நிகழ்ச்சியின் 10-வது வருட துவக்கம், கல்யாண மாலை மூலம் நடந்தேறிய 1 லட்சம் சாதனைத்திருமணங்கள் இந்த இரண்டுக்குமான கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

    சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையேற்றார். ஆர்.எம்.கே.வி. நிர்வாக இயக்குநர் சிவகுமார் குத்து விளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார்.

    எம்.சரவணன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜா, சென்னை துணைமேயர் சத்யபாமா வாழ்த்திப் பேசினார்கள். பிரமிட் நடராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியின் இயக்குநர் மீரா நாகராஜன் `கல்யாணமாலை 10 வருடங்கள்' என்ற தலைப்பில் பேசினார். `கல்யாணமாலை' மோகன் நன்றி கூறினார். கல்யாணமாலை மூலம் நிச்சயமான ஒரு லட்சமாவது திருமணஜோடி புனிதா-உதயகுமார். இதற்காக புனிதாவின் பெற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கங்கை அமரன் தலைமையில் மாணிக்க விநாயகம், மாலதி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி நாளை முதல் தொடர்ந்து 7 வாரங்கள் ஞாயிறுதோறும் சன் டிவியில்
    ஒளிபரப்பாக இருக்கிறது.

    http://www.dailythanthi.com/muthucha...1/2009&secid=9

  5. #64
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    டீலா நோ டீலா



    சன் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `டீலா நோ டீலா.'

    மொத்தம் 26 வாரங்கள் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 26 சூட்கேஸ்களை 26 மாடல்கள் வைத்திருப்பர்.அந்த சூட்கேஸ்களில் ரூ.1 தொடங்கி 50 லட்சம் வரை வைக்கப்பட்டிருக்கும். எந்த சூட்கேசில் எவ்வளவு என்பது தெரியாத நிலையில் ,போட்டியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் இந்த 26 சூட்கேஸ்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளருக்குத் தெரியாது. அதனால் போட்டியின் சுவாரசியம் இங்கே ஆரம்பம்.

    முதல் சுற்றில் 6 சூட்கேஸ்கள் திறக்கப்படும். தான் தேர்ந்தெடுத்த சூட்கேசில் எவ்வளவு தொகை இருக்கும் என்பது தெரியாத போட்டியாளர்களிடம் இப்போது நடுவர் தனது பேரத்தை தொடங்குவார். "இந்த சூட்கேசில் உள்ள தொகைக்கு பதிலாக இவ்வளவு தொகையை வாங்கிக்கொண்டு விலகிக் கொள்கிறீர்களா?'' என்று அவர் போட்டியாளரிடம் கேட்பார். ஒருவேளை சூட்கேசில் இருப்பது ஒரு ரூபாயாக இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்கும் போட்டியாளர், நடுவர் தருவதாக சொல்லும் அதிக பட்ச தொகையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். இல்லையேல் ஆட்டத்தை தொடர்வார்.

    கலந்துரையாடல், நாடகம், பஞ்ச் டயலாக் என போட்டியாளர்களின் திறமையை வெளிக்கொணரும் விதத்தில் போட்டிகள் நடக்கும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஆனந்த தாண்டவம் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர்.

  6. #65
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    உணர்வுகளின் சங்கமம் `உறவுகள்'

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `உறவுகள்' தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தொடராகியிருக்கிறது. உணர்வுகளின் சங்கமமாக கூடிக்கலக்கும் குடும்பப் பிரச்சினைகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்திருப்பதுவே இதற்கு காரணம் என்கிறார், இத்தொடரின் இயக்குநர் ஹரிபாபு. கூட்டுக் குடும்பமாய் இருந்த அண்ணாமலை, அழகேசன் குடும்பம் தேவி என்ற பெண்ணின் வரவால் இன்று இரண்டாக பிரிந்து கிடக்கிறது. குடும்பப் பிரிவை தாங்கமுடியாமல் அண்ணாமலை தன் உயிரையே, விட்டுவிட, கிருஷ்ணனின் குடும்பம் அனாதையாய் நிற்கிறது.

    இந்நிலையில் மனம் திருந்தி வந்த கிருஷ்ணனìன் மனைவி காயத்ரியை கிருஷ்ணனின் அம்மா ஏற்க மறுக்கிறாள். கிருஷ்ணனுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசை. இருந்தாலும் அம்மாவிற்காக அமைதியாய் இருக்கிறான். இதை அறிந்த கிருஷ்ணனின் அக்கா ரஞ்சனி தம்பியை அவன் மனைவி காயத்ரிìயுடன் சேர்த்து வைக்க பெரும் முயற்சி எடுக்கிறாள். அதே சமயம் கிருஷ்ணனின் அண்ணன் முகுந்தனின் கள்ளத்தனம் தெரிந்த மனைவி சித்ரா அவனை விட்டுப் பிரிகிறாள். அழகேசன் குடும்பத்தில் அடுக்கடுக்காய் வரும் பிரச்சினைகளால் முகுந்தனும் திருந்துகிறான். தன்னால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர முகுந்தன் முயற்சிக்கிறான்.

    முகுந்தனின் எண்ணப்படி இரண்டு குடும்பங்களும் ரஞ்சனியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் ஒன்று கூடுகிறது. அப்போது நடக்கப் போகும் விஷயம் தான் தொடரின் மிக முக்கியமான அடுத்த திருப்பம்'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார், திரைக்கதையாசிரியர் குமரேசன்.

    குடும்பத்தில் அன்றாடம் நிகழும் பிரச்சினைகளை மையப்படுத்தி காட்சிகள் வருவதால் உறவுகளுக்கு ரசிகர்களிடம் மரியாதை அதிகம் என்கிறார் இவர்.

    தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, கிச்சா, பரத், சுதா, ஆர்த்தி, கல்பனா நடித்து உள்ளனர்.

    திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யன். ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு, தயாரிப்பு: சேன் மீடியா.

    http://dailythanthi.com/muthucharam/...9/2010&secid=9

  7. #66
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    you love it!
    Sun Tv Natchathira Kondattom 15-01-12










    "அன்பே சிவம்.

  8. #67
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சன் டிவியில் இது ரேவதி வாரம்...!!


    lஜனவரி 28 திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 1 வெள்ளிகிழமை வரை தினசரி இரவு 11 மணிக்கு நடிகை ரேவதி நடித்த அருமையான திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்த 80களில் வெளியான திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

  9. #68
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Philippines
    Posts
    0
    Post Thanks / Like
    complained done

  10. #69
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    திருமுருகனின் புதிய தொடர் தேன்நிலவு

    திரு பிக்சர்ஸ் திருமுருகனின் தயாரிப்பு இயக்கத்தில் சன் டி.வி.யில் வரும் திங்கள் இரவு 10 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் ‘தேன்நிலவு’

    வாழ்க்கையில் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. திருமணத்தை தொடர்ந்து வரும் சில மாதங்கள் கணவன் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்களது துணையின் ரசனைகளையும் விருப்பங்களையும் அறிந்து கொள்ளும் காலம். ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தை அடுத்து வருகின்ற சில மாதங்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழும் அனுபவங்களையும், எல்லையற்ற சந்தோஷத்தையும் தருகின்ற ஒரு காலகட்டமாகும். பிரச்சினைகளோ சங்கடங்களோ இன்றி முழுக்க முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியது இந்த தேன் நிலவு காலகட்டம்.

    இப்படிப்பட்ட தேன் நிலவை கொண்டாட மலை வாசஸ்தலமே ஏற்றது என்று அங்கே தங்களது தேன்நிலவைக் கொண்டாட நான்கு ஜோடிகள் கிளம்பி வருகின்றனர். ராம்– ரேவதி, கல்யாண்– மீனா, சுரேஷ்– வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் கிளம்பி வருகின்றனர். அனைவரது மனதிலும் கனவுகளும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன.

    ஆனால் தேன் நிலவு வந்த இடத்தில் நிகழும் சம்பவங்கள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கின்றன. அந்த தம்பதிகள் எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஏற்படுகிற வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை, மர்மம் மற்றும் சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் தொடரே தேன்நிலவு.

    தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லிகணேஷ் நடிக்கிறார்.

    திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.

    Nandri.Daily thanthi

  11. #70
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    மகாபாரதம்

    தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தமிழிலேயே, தமிழ் நடிகர்களைக் கொண்டு, மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புராண காவியமான மகாபாரதம், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது.

    இத்தொடர், ஆதிபர்வத்தில் தொடங்கி, வியத்தகு பல புதிய தகவல்கள் அடங்கிய தொடராக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 25 எபிசோடுகளை தாண்டி தொடரும் இந்த தொடரில், பாண்டவர்கள், கவுரவர்கள், கர்ணன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கூடவே அவர்கள் செய்யும் சாகசப்பகுதியும் ஒளிபரப்பாக உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் சூடும் சுவையுமானவை.

    தொடரை சினிவிஷ்டா நிறுவனம் சார்பில் சுனில்மேத்தா தயாரிக்கிறார். எபிசோட் டைரக்டர்: செங்கோட்டை சி.வி.சசிகுமார், கதை ஆக்கம்: பிரபஞ்சன். திரைக்கதை: கண்ணன். வசனம்: வேட்டை பெருமாள். இசை: தேவா. திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை: சுரேஷ்கிருஷ்ணா.

Page 7 of 8 FirstFirst ... 5678 LastLast

Similar Threads

  1. KASTURI IN SUNTV
    By mokshani in forum TV,TV Serials and Radio
    Replies: 177
    Last Post: 31st August 2012, 10:09 PM
  2. Anandam - serial sunTV
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 127
    Last Post: 31st March 2009, 07:10 PM
  3. SunTV & KTV Live !
    By rathakovn in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 2nd June 2007, 09:37 PM
  4. watch suntv here
    By vidhya in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 2nd March 2007, 09:14 PM
  5. Baked Alaska on SunTV
    By Vk in forum Indian Food
    Replies: 2
    Last Post: 7th February 2006, 05:18 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •