http://oi64.tinypic.com/2116xxx.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
Printable View
http://oi64.tinypic.com/2116xxx.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi66.tinypic.com/2ynhxzd.jpg
நன்றி H O S
வெகுவிமர்சையாக நிகழ்ந்தேறியது இன்றைய அன்னதான நிகழ்ச்சி...
"பலநூல் படித்து நீயறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீவழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!"...
என்று தன் திரைப்படத்திலே பாடி நடித்ததுபோல் வாழ்ந்து தெய்வமாகிவிட்ட கலையுலகத் தந்தை
நடிகர்திலகத்தின் அறுபத்து ஏழாம் திருமண நாளை முன்னிட்டு " குரூப்ஸ் ஆஃப் கர்ணன்" இன்று சிறப்பு அன்னதான நிகழ்ச்சியையும், நம் ரசிகர்களின் குடும்பத்தில் ஒரு இளவலுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியையும் ஒருங்கே சிறப்புற நடத்தியது மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வாகும்.
இன்றைய சிறப்பு அன்னதானத்திற்கு உபயதாரராக இளையதிலகம் பிரபு தலைமை ரசிகர் மன்றமும், விக்ரம்பிரபு தலைமை ரசிகர் மன்றமும் பங்களிப்புச் செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, நடிகர்திலகத்தின் ஆருயிர் நண்பர், நடிகர், தயாரிப்பாளர் அமரர். திரு. M.R. சந்தானம் அவர்களின் கலைவாரிசான இயக்குநரும் நடிகருமான திரு. சந்தானபாரதி அவர்களும்,
நடிகர்திலகத்தின் தவப்புதல்வர் திரு. தளபதிராம்குமார் அவர்களின் வாரிசும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான திரு.துஷ்யந்த் ராம்குமார் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
திரு. சந்தானபாரதி அவர்களுக்கு நடிகர்திலகத்தின் நூல் ஒன்றையும், அன்னதான உபயதாரர் சார்பாக திரு. அண்ணாச்சி A.R..சந்திரசேகர் அவர்களுக்கு நினைவுச் சான்றிதழையும்
வழங்கிச் சிறப்பித்தார் திரு. துஷ்யந்த் ராம்குமார் அவர்கள்.
மேலும், மயிலாப்பூரைச் சேர்ந்த உலக உத்தமன் நடிகர்திலகம் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த திரு. காமராஜ் அவர்களின் புதல்வர் திரு. கே. கோகுல் அவர்களின் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கு உதவித் தொகையாக பத்தாயிரம் ரூபாயினை திரு. துஷ்யந்த் ராம்குமார் மூலமாக குரூப்ஸ் ஆஃப் கர்ணன் வழங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, சென்னை மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான நடிகர்திலத்தின் அன்பிதயங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிழல் வடிவமாக சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக....
நேசத்துடன்...
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi67.tinypic.com/np47kk.jpghttp://oi63.tinypic.com/96m05x.jpghttp://oi64.tinypic.com/k1dmbk.jpghttp://oi68.tinypic.com/hwadch.jpghttp://oi63.tinypic.com/2qvuwc5.jpghttp://oi68.tinypic.com/1054jdg.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்