இனிய நண்பர் ஆதிராம் சார்
உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி .எங்கள் தங்கம் - வேட்டைக்காரன் - ஆயிரத்தில் ஒருவன்
படகோட்டி - தெய்வத்தாய் படங்களின் 100 வது நாள் விளம்பரங்கள் விரைவில் கிடைக்கும்
என்று எதிர்பார்க்கிறேன் . கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
Printable View
இனிய நண்பர் ஆதிராம் சார்
உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி .எங்கள் தங்கம் - வேட்டைக்காரன் - ஆயிரத்தில் ஒருவன்
படகோட்டி - தெய்வத்தாய் படங்களின் 100 வது நாள் விளம்பரங்கள் விரைவில் கிடைக்கும்
என்று எதிர்பார்க்கிறேன் . கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
18.7.1964
DEIVATHAI
BANGALORE
MOVIELAND
OPERA
http://i43.tinypic.com/34php1w.jpg
மக்கள் திலகம் நடித்த படங்களில் ஆங்கில புத்தாண்டு அன்று வந்த ஒரே படம்
''அரசிளங்குமரி ''. 1.1.1961 அன்று திரைக்கு வந்தது .
சின்னப்பயலே '' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் . மக்கள் திலகம் - நம்பியார்
மோதும் கத்தி சண்டை காட்சிகள் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட படம் .
http://i39.tinypic.com/mhshuo.jpg
COURTESY - RV- NET
1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன். ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.
படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி – நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.
ஜி. ராமநாதன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அவரது எல்லா படங்களிலும் கர்நாடக சங்கீதம் ஒரு அடி நாதமாக இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் முக்கால்வாசி குத்து, கிராமப்புற மெட்டுக்கள்.
முதலில் நான் இதற்கு முன் கேட்டிராத, என்னை கவர்ந்த பாடல்கள்.
“ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் வழியிலே” – வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. துரதிருஷ்டவசமாக பாட்டு நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. வரிகளை வைத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். பாடிய குரல்களில் டிஎம்எஸ் தவிர மற்ற குரல்கள் தெரியவில்லை. எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
“தூண்டிலிலே மாட்டிக்கிச்சு” – துடிப்பு நிறைந்த பாட்டு. இதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. ஒரு நாடகம் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருந்தது – பார்க்க சுவாரசியமாக இருந்தது.
அடுத்த இரண்டும் நான் முன்னால் கேட்டு, எனக்கு பிடித்த பாட்டுக்கள்
“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.
“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.
மிச்ச பாட்டுக்களை நான் கேட்டதில்லை.
“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது. இரண்டு முறை கேட்டால் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.
இதை தவிர “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது. “அத்தானே ஆசை அத்தானே”
இந்த படத்தின் பாட்டு கிடைக்காது அதிசயம்தான்.
சின்னப் பயலே பாட்டு சமீபத்தில் திருட்டுப் பயலே படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
கதை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்க வசதியாக அசோகன் எம்ஜிஆரின் காவலில் சுலோவை விட்டுவிட்டு போகிறார். அவர்களும் பாட்டு எல்லாம் பாடிக்கொள்கிறார்கள்.
நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!
எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
கவுண்டருக்கு இந்த படம் என்ன இன்ஸ்பிரேஷனா? எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.
எம்ஜிஆரும் சுலோவும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்கிறார்கள். ஆனால் திரும்பி முட்டிக்கொள்ளவில்லை.
டென்ட் கோட்டையில் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது –
அபூர்வமாக எனக்கு நம்பியாரின் நடிப்பு பிடித்திருந்தது. அவருடைய பாத்திரமும் one-dimensionalதான், ஆனால் நம்ப முடியாமல் இல்லை.
அசோகனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
பாட்டுக்களுக்காகவும், சண்டைகளுக்காகவும் பார்க்கலாம்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக நல் வாழ்த்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
http://i41.tinypic.com/flc1zp.jpg
திரு . வினோத் அவர்களுக்கு மிக்க நன்றி . தெய்வத்தின் படங்களின் விளம்பர ஆவணங்கள் பதிவிட்டதற்கு கோடானு கோடி நன்றிகள் .
அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் மகத்தான படங்களின் விளம்பரங்கள் மற்றும் நடிகர் சோ அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் பரிசு வழங்கும் புகைப்படம் அருமை. பிரபா மேடம் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
[attaமக்கள்திலகத்தின் இரசிகர்களுக்கும் பக்தர்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் .ch=config]2848[/attach]
திருவள்ளுவர் என்றால் திருக்குறள்
புத்தர் என்றால் போதனைகள்
எம்ஜீஆர் என்றல் மனிதநேயம் - என்று வரும் தலைமுறைகள் நினைவு கூறுவார்கள்
ADVANCE HAPPY NEW YEAR 2014 TO ALL
http://i43.tinypic.com/1zxp5x3.jpg
அன்னமிட்ட கைகள் - அன்னை தமிழகத்தை
ஆண்டது பத்து ஆண்டுகள்
இரட்டை இலை தான் உன் சின்னம் - யாரும்
ஈடில்லை உங்கள் ஈகை குணத்திற்கு முன்னால்
உயிரோடு கலந்துவிட்ட எங்கள் உணர்வே - சொத்துகளை எல்லாம்
ஊமை பிள்ளைகளுக்கு எழுதிவைத்த பிதாவே
எங்கள் பூஜை அறையில் விற்றிக்கும் இறைவனே
உங்கள் புகழ் வாழ்க கோடி ஆண்டுகள்
மக்கள்திலகம் திரியின் ரததின்ரத்தங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நமது திரியின் கேப்டன் திரு வினோத் சார் அற்புத பதிவுகள் வழங்கும் திரு செல்வகுமார் சார் ,இரவிச்சந்திரன் சார் ,கலியபெருமாள் சார் ,திரு சைலேஷ் பாசு சார்,திரு லோகநாதன் சார்,திரு ரூப் சார் திரு ஜெய்ஷங்கர் ,
,திரு சுகாராம் சார் ,திரு மாசனம் சார் ,திரு தெனாலி ராஜன் சார் ,மற்றும் திரியின் நண்பர்கள் ,மற்றும் ,பார்வையாளர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://i41.tinypic.com/2944fv8.jpg
அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i42.tinypic.com/2vbs9w8.jpg
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் கோடான கோடி ரசிகர்கள், பக்தர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சோ அவர்களின் நாடக விழாவில் மக்கள் திலகத்தின் அபூர்வ படம். நன்றி திரு வினோத் சார்.
2014 ஆம் ஆண்டு நாள்காட்டியை மக்கள் திலகத்தின் வண்ணப்படங்களுடன் தந்த பம்மலார் அவர்களுக்கு நன்றி.
All of the thread hubbers, viewers, followers, administrators,moderators,& everybody happiest 2014 new year greetings...wish you happy prosperous positive new year.....
எல்லா நல்ல இதயங்களுக்கும் மகிழ்ச்சிகரமான இனிய 2014 புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மக்கள் திலகம் அவர்களின் திரு பெயரால் விளங்கி கொண்டிருக்கும் பெருமைமிகு இத்திரியின் சார்பாக கூறி கொள்கிறேன்..."கடமையை செய்... பலனை எதிர்பாராதே" ...என போதித்த கீதா உபதேசத்தின் படி நடப்போம்...
இத்திரியினில் அவ்வபோது வைதெரிச்சல் - வைத்திலிங்கம் என்ற காவல்காரன் - காவியத்தில் கதாபாத்திரம் போல காமெடி செய்பவர்கள் யாரேனும் வருவார்கள் என்று நண்பர் கூறியது சரிதான் ...இன்னும், இன்றும் கூட மக்கள் திலகம் கலை துறை சாதனை, சரித்திரம், சகாப்தம், அறிந்தவர்கள் அல்லது அறியாதவர்கள் போல நடிப்பது - என ஏதேனும் ஒரு இடத்தில கால் வைத்துதான் இருப்பர் போலிருக்கிறது!!! புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்களின் ஆதாரங்களை காட்டிதான் அவர்தம் திறமையை, உழைப்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை...அதற்கு அவசியமும் இல்லை... கலை துறையின் a - z அனைத்து வகை சாதனை சரித்திரங்கள், அரசியல் உலகத்தின் a - z சாதனை சகாப்தங்கள் என எல்லாமும் கண்டு நிரூபனம் செய்தவர் தாம் mgr .,அவர்கள் என்பது அனைத்து உலகமும் அறிந்த ஒன்று... இது புரிந்தவர்களுக்கு சரியாய் புரிந்தால் சரி!!!!!!!!!
திரைப்படங்களின் வசூல் அதாவது பொன்மனச்செம்மல் அவர்கள் திரைத்துறையில் இருந்த வரையில் ...என்ற ரீதியில் பார்த்தோமானால் ... a சென்டர் எனப்படும் மாநகரங்களில் அசகாய வெற்றியை MGR படங்கள் பெற்று விடும்...அதற்கு அடுத்தாற்போல் b சென்டர் எனப்படும் நகரங்களில் இன்னும் பெரிய வெற்றியை காணும்... பிறகு c சென்டர் எனப்படும் சிறிய நகரங்கள், கிராமங்கள், குகிராமங்கள் என்று டூரிங் திரைஅரங்குகள் என எல்லாவற்றிலும் இணையில்லா வெற்றியை மக்கள்திலகம் காவியங்கள் படைத்து விடும் என்ற உண்மை அனைவரும் அறிந்த உண்மை...ஆக எல்லா வகை செய்திகளையும் அனைத்து கோணங்களிலும் கூர்ந்து நோக்கி ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் நல்லது...
http://i42.tinypic.com/9fnqfk.jpg
நமது திரியின் அனைத்து நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ,மக்கள் திலகத்தின் கோடானு கோடி ரசிகர்கள்/பக்தர்கள் ஆகியோருக்கு
2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.[COLOR="#0000CD"]
http://i44.tinypic.com/2dkemj7.jpg
2014 புத்தாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில், அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் "உலகம் சுற்றும் வாலிபன்"
பட சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களுக்காக.
புகைப்படம் உதவி.:மதுரை.திரு.எஸ். குமார்.
ஆர். லோகநாதன்.
2014 - புத்தாண்டில் இனிய துவக்கமாக மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''
பட விளம்பரம் இன்று தினத்தந்தியில் வந்துள்ளது . 49 ஆண்டுகளாக திரை உலகில் பவனி வந்த படம் புதிய பொலிவில் பிரமாண்டங்களின் பிரமாண்டமாக திரைக்கு
வருவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாகும் .
http://i39.tinypic.com/vi0d2a.jpg
1944-2014
70 ஆண்டுகள் தமிழ் திரையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i41.tinypic.com/2ela5vd.jpg
1944
********
மக்கள் திலகம் ''ஹரிச்சந்திரா '' படத்தில் துணை வேடத்தில் நடித்த படம் 14-1-1944
அன்று திரைக்கு வந்தது .
1954
***********************
10 ஆண்டுகள் கடின உழைப்பு - மலைக்கள்ளன் படம் . எம்ஜிஆர் புரட்சி நடிகரானார் .
வசூல் சக்கரவர்த்தி பட்டம் . ஜனாதிபதி விருது பெற்ற படத்தின் நாயகன் .
1964
********************************************
பிரபல முன்னனி நடிகர் - அண்ணாவின் இதயக்கனி - மக்கள் திலகம்- திரை உலகில்
புதுமைகள் - சரித்திர சாதனை சக்கரவர்த்தி என்று தொடர்ந்து முன்னேற்றம் .
1974
************************************************** ******************************
புரட்சி தலைவர் - வெள்ளிவிழா நாயகன் .கலை - அரசியல் வெற்றி வீரர் . மக்கள் இதயங்களில் நிரந்தரமாக குடியேறி ஆட்சி புரிந்தவர் .
1984
************************************************** ************************************************** *
முப்பிறவி கண்டு மும்முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த அமர காவிய தலைவன் .
எம்ஜிஆரின் பிராத்தனை பாடல் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அரங்கிலும்
ஒளிபரப்பான நிகழ்வு . சரித்திர சாதனை . எம்ஜிஆரின் 80 பழைய படங்கள் தமிழகமெங்கும் தொடர்ந்து திரைஅரங்கில் வலம் வந்த இனிய நாட்கள் .
1994
************************************************** ************************************************** *********
மக்கள் திலகத்தின் மக்கள் செல்வாக்கும் - இரட்டை இலை சின்னமும் 1991ல்
உயிர் பெற்ற வரலாறு . அவரின் திரை உலக படங்களின் பயணமும் தொடர்ந்த
சகாப்தம் .
2004
************************************************** ************************************************** **************
மீண்டும் 2001 நடந்த தேர்தலில் மக்கள் திலகத்தின் செல்வாக்கும் - இரட்டை இலை
சின்னமும் அவருடைய பழைய படங்களின் ஊர்வலமும் சாதனை சிற்பி எம்ஜிஆர்
அவர்களின் ஆசிதானே .
2014
************************************************** ************************************************** ****************
புத்தாண்டு துவக்கத்தில் மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''
தொடர்ந்து படகோட்டி- ரிக்ஷாக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் -
மாட்டுக்காரவேலன் காவியங்கள் நமக்கு விருந்து .
2024ல் மக்கள் திலகத்தின் 80 ஆண்டு கலைப்பயணம் தொடரும் .................
உலக வரலாற்றில் இந்த சாதனை நிகழ்த்திய - நிகழ்த்த போகிற நம்முடைய
மக்கள் திலகத்திற்கு அன்பான வணக்கங்களை தெரிவித்து கொள்வோம் .
REALITY OF THE PRESENT GENERATION .
MAKKAL THILAGAM EXPRESS HIS FEELINGS ABOUT IN HIS SUPER HIT SONG IN 1977.
http://youtu.be/Y7BfO07JwP8
திருச்சி அருணாச்சலம் திரை அரங்கில் ரிக்க்ஷாக்காரன்
திரைக்காவியத்தை சென்ற ஞாயிறு அன்று திரை அரங்கு சென்று பார்த்து மகிழ்ந்து
நம்மிடம் தகவல் தெரிவித்தவர் நமது
அன்பு நண்பர் திரு சரவணகுமார், மதுரை.
To all hub members and readers, I wish you a very Happy New Year 2014.
To day
the hindu - tamil paper
2013 tamil cinema article
comments portion
s.vinod
2013- புதிய படங்களின் சினிமா பார்வை - அருமை . அதே நேரத்தில் 2013 எம்ஜிஆரின் பழைய படங்கள் கோவை - மதுரை - சென்னை நகரங்களில் 58 படங்கள் வெளியாகி வசூலில் சாதனை மற்றும் சேலம் நகரில் நாடோடி மன்னன் 25 நாட்கள் ஓடி வசூலில் சாதனை . பெங்களுர் நகரிலும் எம்ஜிஆரின் படங்கள் வெளிவந்து சாதனை . 2013 -இதுவும் சாதனைதானே .
http://i42.tinypic.com/2ds1pae.jpg
மதுரை, திருப்பரங்குன்றம் லக்ஷ்மியில் கடந்த மாதம் வெளியான
மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" பட சுவரொட்டி.
புகைப்படம் உதவி.;மதுரை திரு.எஸ். குமார்.
http://i44.tinypic.com/30ua1rk.jpg
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் திரையிடப்பட்ட புரட்சி நடிகரின் "அலிபாபாவும் 40 திருடர்களும் " பட சுவரொட்டி.
புகைப்படம் உதவி.:மதுரை. திரு.எஸ். குமார்.
ஆர். லோகநாதன்.