gingerbeehk / Jack -
Am enjoying your selections. Nice to listen to these tunes. Thank you, and continue your good work. I will be listening! :)
gingerbeehk / Jack -
Am enjoying your selections. Nice to listen to these tunes. Thank you, and continue your good work. I will be listening! :)
அன்பின் நண்பர் Naaz,
உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். இங்கே தரவேற்றும் பாடல்களை பற்றிய எண்ணங்களை நண்பர்கள் பகிர்ந்துக்கொண்டால் கொடுப்பவர்க்கு சந்தோசமாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட பாடல்கள் ஏதும் இந்த இழையில் தேவை என்றாலும் தயங்காமல் கேட்கவும். அந்த பாடல்கள் என் சேமிப்பில் இருக்கும்பட்சத்தில், கண்டிப்பாக தரவேற்றுவேன்.
இன்று மற்றுமொரு அருமையான, அரிதான, மறந்தேபோன பாடல் உங்களை மகிழ்விக்க இங்கே..
படம்: அபூர்வ ராகங்கள்
பாடல்: கைகொட்டி சிரிப்பார்கள்
பின்னணி: காயல் A.R.ஷேக் முஹம்மது குழுவினர்
இசை: மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/listen/2e50...rippaargal.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
ரொம்ப காலத்துக்கு அப்புறம் இளவேனிற் காலத்தின் தலை வாசலில் சிலுசிலுவென தூறி உடல் நனைக்கும் கோடை மழை போல இந்தப் பாடல்கள் ..... நன்றி gingerbeehk !!!
உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் கொடுக்கும் பின்னூட்ட எண்ணங்கள் இன்னும் உற்சாகம் கொடுக்கும். மேலும் இன்னிசை வேந்தர்கள் "சங்கர்-கணேஷ்" இழையில் பாடல்கள் கொடுத்து வருகிறேன். அந்த இழைக்கும் சென்று உங்கள் கருத்துக்களை பதியவும்.
http://www.mayyam.com/talk/showthrea...-Ganesh/page26
என்றும் நட்புடன்,
ஜாக்
இனிய இசை நெஞ்சங்களே,
தொடர்ந்து இந்த இழையில் உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
இன்று உங்களை மகிழ்விக்க இங்கே அசத்தலான, கலகலப்பான ஒரு பாடல்.
படம்: டெல்லி டு மெட்ராஸ்
பாடல்: பாலு விக்கிற பத்தும்மா
பின்னணி: மலேசியா வாசுதேவன் & ஸ்வர்ணா
இசை: V.குமார்
http://www.mediafire.com/listen/mjnt...lu_Vikkira.mp3
(குறிப்பு: இந்த பாடல்தான் மலேசியா வாசுதேவன் பாடிய முதல் பாடல் என்று அறிந்தேன். சரியான தகவல்தானா?)
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அன்பின் இசை விரும்பிகளே,
அடுத்து இங்கே உங்களை இசையால் நனைக்கவரும் மறந்தே போன இனிமையான பாடல் ஒன்று. கண்டிப்பாக உங்கள் யாவர்களுக்கும் பிடிக்கும். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
படம்: எடுப்பார் கைப்பிள்ளை
பாடல்: கண்ணப்பெருமான் ஆளப்பிறந்தான்
பின்னணி: P.பானுமதி
இசை: M.B.ஸ்ரீனிவாசன்
http://www.mediafire.com/listen/ibgx...iss_Me_Son.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
கிஸ் மி சன்... ..
ஏறக்குறைய கமலின் சட்டம் என் கையில் படத்தின் கதையில் ஒரு பகுதி போல ( இது மாதிரி கதைகள் எக்கசக்கம் என்று நினைக்கிறேன் ) பழி வாங்குவதற்காக பெரிய வீட்டுப் பையனைக் கடத்தி திருடனாக வளர்க்கும் ஸ்டோரி... இது பிற்கால பானுமதியின் மெச்சூர்ட் வாய்ஸில் அமைந்த பாடல். ஆனாலும் இனிமைக்கு குறைவே இல்லை... இதே போல இன்னொரு பாட்டு "வனவாசம் போயிருந்து திரும்பி வந்தான் என் மகன்.. மீட் மை சன்"..
எம்.பி.சீனிவாசன் இசைக்கு ஒரு தனித் தன்மை உண்டு. என் ஜாயுங்க..
நண்பர் மது,
சூப்பர். படத்தில் ஒன் லைன் கதையை அழகான நடையில் சொல்லி இருந்தீர்கள். நன்றி. இந்த படம் நான் பார்த்த நினைவு இல்லை. உங்கள் தயவால் சிறு தகவல் அறிந்தேன். தொடர்ந்து பாடல் மற்றும் அந்த படத்தின் இது போன்ற தெரியாத விபரங்களை வழங்கினால், நன்றாக இருக்கும்.
அப்புறம், நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு பாடல்..'மீட் மை சன்", அதையும்தான் கேளுங்களேன்...
படம்: எடுப்பார் கைப்பிள்ளை
பாடல்: வனவாசம் போயிருந்து திரும்பி (மீட் மை சன்)
பின்னணி: P.பானுமதி
இசை: M.B.ஸ்ரீனிவாசன்
http://www.mediafire.com/listen/ym8n...RINIVASAN).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
பிரியமிகு இசை நெஞ்சங்களே,
அடுத்து உங்கள் இதயங்களை கொள்ளைக்கொள்ள வரும் ஒரு அரிய பாடல்.
படம்: அந்தரங்கம் ஊமையானது
பாடல்: பஞ்சாரக்கிளி கூடு கட்டுது
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
இசை: K.J.ஜாய்
http://www.mediafire.com/listen/lcaa...Kili_Koodu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அந்தரங்கம் ஊமையானது பாடல்கள் எல்லாமே அருமை.. ஆனால்... படத்தைப் பத்திக் கேட்கப் படாது.. மூச்..
மலர்கள் சொரியும் பூமரங்கள் is my favourite..
( வீடியோ கிடைச்சது.. சும்மா பாத்து வையுங்க )
https://youtu.be/pGbIPrmcIDM