-
நடிகர்திலகத்தின் 125வது படம்.
ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பாக M.முருகன், M. குமரன், M. சரவணன் தயாரித்திருந்தனர்.
1968 ஆம் ஆண்டின் சிறந்த படமென்றும், கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் சிறந்த இயக்குநர்களாகவும், பி.என்.சுந்தரம் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் தமிழக அரசு தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
சினிமா ரசிகர் சங்கம் நடிகர்திலகத்தை அவ்வாண்டின் சிறந்த நடிகராக தேர்வு செய்தது.
" நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா " என்னும் பாடலைப் பாடியதற்காக பி.சுசிலாவுக்கு சிறந்தபாடகிக்கான தேசி...யவிருதினை இந்திய அரசும், தமிழக அரசும் வழங்கி கௌரவித்தன.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 125 படங்களைக் கதாநாயகனாகவே நடித்து முடித்த முதல் நாயகன் நடிகர்திலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
' ஹிருதயமுள்ள மனுஷி ' என்ற பெயரில் தெலுங்கினில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
http://oi65.tinypic.com/308zmm8.jpghttp://oi68.tinypic.com/5f0sn7.jpg
http://oi65.tinypic.com/2nb8rqw.jpg
நன்றி வான்நிலா
-
-
களப்பணியில் இன்று!
இயன்றதைச் செய்தோம் இழந்தவர்க்கே!
வர்தா புயலைவிட ஐந்து மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த மூன்று நாட்களில் இதயவேந்தன் சிவாஜி மன்றம் , குரூப்ஸ் ஆஃப் கர்ணன் மற்றும் சென்னை வாழ் சிவாஜி ரசிகர்களின் முயற்சியால் திரட்டப்பட் நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமம், நெடுவாசல் கிராமம், செல்லப்பா நகர் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள மக்களுக்கு மன்றத் தோழர்கள் பகிர்ந்தளித்த காட்சிகள் உங்கள் பார்வைக்காக..
இதயவேந்தன் சிவாஜி மன்றத்து சிவா, கோவா ராஜேந்திரன், கார்த்திக், ரவி ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி மன்றத்து இதயங்கள் கே.சுப்பிரமணி, லேனாராமன், அப்துல் ரசாக், ரவி, காந்தி, குமார், ராஜசேகர், தீன் மற்றும் களப்பணியாற்றிய நண்பர்கள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!
http://oi64.tinypic.com/fw3be1.jpghttp://oi67.tinypic.com/30wmc7d.jpg
நன்றி வான்நிலா
-
-
-
-
-
-
-