Hey hubbers
did anyone catch RajTV and Onida's new style of advertising during their screening of "Vallarasu" movie? I thought it was way tooo cool for stupid Indian audience immersed in mega serials.
Printable View
Hey hubbers
did anyone catch RajTV and Onida's new style of advertising during their screening of "Vallarasu" movie? I thought it was way tooo cool for stupid Indian audience immersed in mega serials.
பத்துக்கு பத்து
‘பத்துக்கு பத்து’ நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் பாடல்களை வரிசைப் படுத்தி வருகிறது. அத்துடன் சில சுவாரஸ்யமான செய்திகளையும், நிகழ்ச்சி தொகுப்பாளர் வழங்குகிறார். இதன் மூலம் புத்தம் புதிய பாடல்களை சிறிய படம், பெரிய படம் என்று பாரபட்சம் இல்லாமல் தர வரிசைப்படி ரசிக்க முடியும்.
ராஜ் டி.வியில் சனிக் கிழமைதோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, ‘பத்துக்கு பத்து.’
dailythanthi
சூப்பர் டான்சர்ஸ்
ராஜ் டி.வியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி, ‘சூப்பர் டான்சர்ஸ்.’ நடிகை லைலா நடுவராக பங்குபெறும் இந்த நிகழ்ச்சி நடனப் பிரியர்களுக்கான விருந்து.
சென்னை, கோவை, மதுரையில் நடைபெற்ற போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 30 அணிகளில் இருந்து 15 அணிகள் 2–வது கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 2–வது கட்ட போட்டி இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் லைலா தவிர டான்ஸ் இயக்குநர் பாபியும் நடுவராக பங்கேற்கிறார்.
Nandri.DAILY THANTHI.
10 மூவீஸ்
ராஜ் டி.வியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘10 மூவீஸ்’. வாரந்தோறும் வெளிவரும் புதிய திரைப்படங்கள் தரவரிசை அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கிறது.
நேயர்கள் தங்களது ரசனைகளுக்கேற்ப, படங்களின் தரத்தை வரிசைப்படுத்தி, ராஜ் முகவரிக்கு கடிதம் அனுப்புகிறார்கள். அவர்களின் கருத்துக்களையும் தரவரிசையையும் மையப்படுத்தி கடிதங்கள் பிரிக்கப்படும், அவற்றில் நேயர்கள் எந்த படங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்களோ அதற்கேற்ப தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
உறவுகள் சங்கமம்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் தொடர் ‘‘உறவுகள் சங்கமம்.’’ இத்தொடரில் இந்த வாரம் பிரிந்துபோன இரண்டு குழந்தைகள் ஒன்று சேருவதை காணலாம்.
அத்தை மகள் கங்காவுக்காக, தன் தம்பிக்கு பல வகையில் தொல்லை தரும் அண்ணன் அப்சர்., அண்ணனை பல இக்கட்டிலிருந்து காப்பாற்றும் தம்பி நேத்திரன்., இவனை உயிருக்கு உயிராய் காதலிக்கும் கங்கா., இவர்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டங்களே கதைக்களம்.
தன் தம்பிக்காக கல்யாணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையை தியாகம் செய்து அவனுக்கு ஒரு டாக்டர் பெண்ணை தேடிக்கொண்டிருக்கும் அக்கா யுவராணி. அக்காவின் கனவை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் தம்பி ஷியாம் கணேஷ்.
தஞ்சாவூர் பண்ணையார் வின்சென்ட் ராய். தன் மகன் தேவ்க்கு சென்னையில் உள்ள ஜெகநாதனின் மகள் கவிதாவை பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கிறார். இத்திருமணம் தடையில்லாமல் நடந்ததா? தடங்கல் ஏற்பட்டதா?
இனிவரும் எபிசோடுகளில் நடிகை வடிவுக்கரசியின் அதிரடியும் இடம் பிடிக்கிறது. பாரதி அசோசியேட் நிறுவனம் தயாரிக்க, விஜயகுமார் இயக்கியுள்ளார்.