எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்க
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 102 வது இனிய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாப்பட்டது
http://i68.tinypic.com/23tfvqp.jpg
சமூக வலை தளங்கள்
முகநூல்
டுவிட்டர்
வாட்ஸ் ஆப்
எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் பெருமைகளை சாதனைகளை எம்ஜிஆர் ரசிகர்கள் பதிவிட்டு தங்கள் எண்ணங்களை பரிமாறி கொண்டார்கள் .
எம்ஜிஆரின் ஆளுமைகளை பல ஊடகங்கள் ஒளிபரப்பினார்கள் .
எம்ஜிஆரின் சாதனைகளை பல பத்திரிகைகள் பாராட்டி எழுதினார்கள் .
மக்கள் திலகம் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் மத்திய அரசு மூலம் தமிழக அரசு வெளியிட்டார்கள்
சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு திறக்கப்பட்டது .
தமிழகத்தின் பல நகரங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் நடை பெற்று வருகிறது .
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களை பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் சிறப்பாக நடத்தினார்கள் .
அனைத்து இடங்களிலும் அன்னதானமும் ஏழைகளுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது .
உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத மக்கள் செல்வாக்கும் ஆதரவும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே வாழ்ந்த காலத்திலும் கிடைத்தது . மறைந்து 31 ஆண்டுகள் தொடர்ந்து மக்களின் பேராதரவு கிடைத்து வருவது கின்னஸ் சாதனை
திரை உலகில் 1947- 1977 வரை 30 ஆன்டுகள் திரை உலக வசூல் மன்னனாக முதலிடத்தில் கடைசி வரை தக்க வைத்து கொண்டார் . 1977- 1987 வரை முதல்வராக பதவியில் இருந்த நேரத்தில் எம்ஜிஆரின் பழைய படங்கள் மறு வெளியீடாக 90 படங்களுக்கு மேல் வெளிவந்து வசூலை வாரி குவித்தது நாடறிந்த உண்மை .
1987- 2019 இன்று வரை எம்ஜிஆரின் படங்கள் இன்னமும் திரை அரங்கில் வசூலை வாரி குவித்து வருகிறது
எம்ஜிஆரின் ஆளுமைகளை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு சிலர் தங்களின் நிறைவேறாத ஆசைகளை பட்டியலிட்டு பரிதவித்து வருவதை கண்டு பரிதாபம் கொள்கிறோம் .
மக்கள் திலகம் சினிமாவிலும் முதலிடம் .
மக்கள் திலகம் அரசியலிலும் முதலிடம்
மக்கள் திலகம் மனித நேயத்திலும் முதலிடம்
மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றிலும் முதலிடம்
மக்கள் திலகம் புகழ் என்றென்றும் முதலிடம் .
எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் ரசிகர்கள் எப்போதும் கொடுத்து வைத்தவர்கள் .
.
.