எந்திரன் 2.0 The Sequel : Rajinikanth | Shankar | ARR
Shankar Shanmugham (@shankarshanmugh) | Twitter
13 hours ago : 2.0 shoot starts from tomorrow.. Excited!!!
ரஜினி எமியுடன் தொடங்கியது எந்திரன்2
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடம் எந்திரன்2. அதன் தொடக்கவிழா மிகஎளிமையாக டிசம்பர் ஏழாம்தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
தம்முடைய படம் சம்பந்தப்பட்ட விசயங்களை வெளியே சொல்லாமல் மிக ரகசியமாகப் பாதுகாப்பவர் இயக்குநர் ஷங்கர். காலத்தின் கட்டாயம் காரணமாக நாளைமுதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று அவரே டிவிட்டரில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் இரண்டாவதுமகள் சௌந்தர்யாவும் தன்னுடைய டிவிட்டரில் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது என்பதைத் தெரிவித்திருக்கிறார்.
பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி திரைப்படநகரில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்காகக் கடந்த பல வாரங்களாக அங்கே செட்அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன். பொதுவாக புதியபடங்கள் தொடங்கும்போது பாடல்காட்சிகளைப் படமாக்குவது வழக்கம்.
இந்தப்படத்திலும் அதுபோலப் பாடல்காட்சியைப் படமாக்குவதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்பாடலில் ரஜினி மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.