http://oi64.tinypic.com/2uikuhx.jpg
Printable View
கடந்த சில நாட்களாக நமது மய்யம் திரியின் இணைப்புக் கிடைக்கப் பெறாமல் இந்தியாவிலுள்ள நண்பர்கள் பார்வையிடவும் பதிவிடவும் இயலாமல் இருந்தது. இன்று நண்பர் வினோத் அவர்கள் திரு நவ் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர் மூலம் புதிய இணைப்பினைத் தந்துள்ளார். இனி வழக்கம் போல் நாம் பங்கு பெறலாம். இந்த இணைப்பினை நமது வாட்ஸ்அப் குழு மற்றும் முகநூல் பக்கங்களிலும் பகிர்ந்து கொண்டுள்ளேன். அனைவரும் தொடர்ந்து பங்கு பெறலாம். திரு நவ் அவர்களுக்கும் திரு வினோத் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
Joe,Millions of Thanks to you.You are a one man army in Internet and social medias for Sivaji worshippers. Here some people do not realise the value of what we are doing. I am fighting everytime with Oneindia,Sify ,Behindwoods and Tamil Hindu now. Shankar,Sridhar are some of the unethical journalist who are doing this mischief. All our fans should complain to one india Sriram, and Tamil Hindu AShokan. Both are open minded .
Senthilvel,
We are having separate thread for contemporary Tamil films and artistes in the Tamil Film Section and there is already a separate thread for Prabhu under the heading: "Prabhu Ganesan - Charismatic, Affable and Underrated." at the following link. you may please continue this for discussions on Prabhu Ganesan. This thread is exclusively for Nadigar Thilagam only and of course we greet Prabhu Sir on important days in our regular discussions in NT threads. Therefore no separate thread is necessary for Prabhu, I feel. Particularly not in our NT thread.
http://anonymouse.org/cgi-bin/anon-w...beff23eced9a64
Thank you.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f0&oe=5823B0B9
Due to unavoidable reason, the Programme of Tribute to NT-MSV by our NTFANS has been rescheduled to be held on Monday 15th August 2016 at 6.00 p.m. at the same venue.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 15வது ஆண்டு நினைவுநாளையொட்டி நமது தலைவரின் மீது தீவிர பக்தி கொண்ட சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளருமான திரு.ரமேஷ்பாபு அவர்கள் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் சிவாஜி என்றொரு சரித்திரம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அனைத்துப் பத்திரிக்கைகளும் அதனை வெளியிட்டனர், ஆனால் அதை அனுப்பியது யார் என்ற விபரத்தை தெரிவிக்காமல் தாங்கள் எழுதியது போல் வெளியிட்டனர். அதை வெளியிட்டு நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு பெருமை சேர்த்ததே நமக்குப் பெருமை.
அந்தக் கட்டுரை தற்போது சினிமாச்சாரல் ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்துள்ளது. அதுமட்டுமன்றி அதை எழுதி அனுப்பியவர்களின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளனர். கட்டுரையை வெளியிட்ட சினிமாச்சாரல் இதழின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவுக்கும், இக்கட்டுரை வெளிவர முயற்சி மேற்கொண்ட எங்கள் அன்பு நண்பர் அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவர் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்களுக்கும் நன்றி.
http://www.sivajiganesan.in/Images/040816_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/040816_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/040816_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் சுதந்திரதினத்தை முன்னிட்டு மக்கள்தலைவரின் 125வது வெற்றிக்காவியமான உயர்ந்த மனிதன்
திரைப்படம் ஆகஸ்டு 12 முதல் வெளிவருகிறது. ஏற்கெனவே வெளிவந்த வசந்தமாளிகையில் வசூலை இதுவரை எந்தப் படமும் நெருங்கவில்லை, வசந்தமாளிகையில் வசூலை முறியடிக்கும் வண்ணம் உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் வசூல் இருக்கவேண்டும். நமது மக்கள்தலைவரின் பட வசூலை, நமது மக்கள்தலைவரின் படத்தின் வசூலே மிஞ்ச வேண்டும்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, இன்றே தயாராவோம். இந்த ஆண்டு சுதந்திரதின விழா மதுரை சிவாஜி அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையட்டும்.
https://scontent-sit4-1.xx.fbcdn.net...4c&oe=585A04AB
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் மதுரை நகர் தலைவர் திரு.எம்.சோமசுந்தரம் அவர்கள் தனது 50வது பிறந்தநாள் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் ரமேஷ்பாபு அவர்கள், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் துணைத்தலைவர் கா.சுந்தராஜன் அவர்கள், நிர்வாகிகள் தல என்கின்ற பாலகிருஷ்ணன், கிச்சு, சண்முகநம்புராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் கேக் வெட்டி திரு.சோமசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
சோமசுந்தரம் அவர்களும் அவருடைய குடும்பத்தினரும் அய்யன் சிவாஜி அவர்களின் ஆசியுடன் எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/050816_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/050816_7.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/050816_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/050816_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மீது தீராத பாசம் கொண்ட வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். நமது நடிகர்திலகத்தின் உயிரோட்டமான காவியமான வியட்நாம்வீடு, ஞானப்பறவை ஆகிய படங்களை இயக்கியவர். மேலும் நமது தலைவரின் பல வெற்றிப் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சுந்தரம் என்ற பெயர் வியட்நாம் வீடு வெற்றிக்குப் பிறகு வியட்நாம்வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டது. தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியானாலும் கலையுலகில் தன் வளர்ச்சிக்குக் காரணம் நடிகர்திலகம் அவர்கள் தான் என்பதை நினைவுபடுத்துவார்.
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் வியட்நாம் வீடு, ஞான ஒளி, சத்யம், கிரகப்பிரவேசம், ஜஸ்டிஸ் கோபிநாத், அண்ணன் ஒரு கோவில், ஜல்லிக்கட்டு, ராஜமரியாதை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் இளையதிலகம் பிரபு அவர்களின் ஆனந்த் படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.
வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/95.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
அஞ்சலி
வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
[
இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் மறைவிற்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொகிறோம்.
http://i1234.photobucket.com/albums/...pswj44uknz.jpg http://i1234.photobucket.com/albums/...ps8ywrq3zw.jpg
http://i1234.photobucket.com/albums/...pspfik0uvv.jpg
http://i1234.photobucket.com/albums/...psjymxcnwn.jpg
http://i1234.photobucket.com/albums/...psmibwrsoq.jpg
http://i1234.photobucket.com/albums/...psoktbw95k.jpg
http://tamil.oneindia.com/news/tamil...th-259664.html
சிவாஜியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்றே கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு இரங்கல் ..என்னமோ எம்.ஜி.ஆர் பட வசனகர்த்தாவாம் .
இந்த அம்மாவுக்கு சொம்பு தூக்க , சிவாஜி பெயரை சொல்லு ஓட்டு கேட்க இங்கு ஒரு கூட்டம் ..தூ .
நடிகர்திலகத்தின் பிரியத்துக்குரிய ,அவராலேயே வளர்த்தெடுக்க பட்டு,அவர் பால் இறுதி வரை நன்றி பாராட்டிய திரு சுந்தரம் அவர்கள் இயற்கை எய்தியதற்கு, அவர் தான் விரும்பிய நமது நடிப்பு தெய்வத்திடம் சென்று சேர பிரார்த்திப்போமாக.
வியட்நாம் வீடு - 1970
எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.
அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.
இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.
வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?
இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.
இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)
நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)
மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.
சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.
இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)
ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.
இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.
இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.
காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?
Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?
சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )
அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.
இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .
இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).
மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.
கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.
இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.
வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
ஞான ஒளி-1972
நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.
ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
Typical Behaviours of an orphan-
1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
கெளரவம்-1973
கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .
ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?
நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?
தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?
தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?
திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?
ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.
இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.
ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.
ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.
மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.
மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.
நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.
குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.
இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.
கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.
An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.
அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!
நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.
நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.
ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.
ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.
கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.
இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.
ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....
கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?
ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.
நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
சாவித்திரி (19)
பதிவு செய்த நாள்
07 ஆக
2016
00:00
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
ஜெமினி, சாவித்திரியின் வீட்டை விட்டு வெளியேறியதும், சாவித்திரிக்கு அடக்க முடியாத அழுகை வந்தது. 'என் ஜீவனை நானே காயப்படுத்தி விட்டேனே...' என்று அவரது மனது அழுது துடித்தது; ஆனால், ஜெமினியிடம் தூது செல்ல யாருமில்லை.
'சாவித்திரி வீட்டிலிருந்து ஜெமினி விரட்டப்பட்டார்...' என்ற செய்தி, பத்திரிகைகளுக்கு சென்று சேரும்படி, கச்சிதமாக செய்து முடித்தனர், சிலர்.
சில வார இதழ்கள், புலனாய்வு செய்தது போன்று, பிரச்னையை திருப்பி, 'பிராப்தம் பட விவகாரத்தினால் ஜெமினியை விட்டு பிரிந்தார் சாவித்திரி...' என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டன.
சில நாளிதழ்கள்,
'தெய்வீகக் காதலர்கள் பிரிந்தனர்...' என, கண்ணியத்தோடு வெளியிட்டன.
எவ்வளவு இக்கட்டுகள் வந்தாலும், தன் முயற்சியை எப்போதும் கைவிட்டதில்லை சாவித்திரி; அதை, பிராப்தம் பட விவகாரத்திலும் கடைப்பிடித்தார்.
பிராப்தம் திரைப்படம் பல இக்கட்டுகளைத் தாண்டி, ஏப்., 14, 1971ல் வெளியானது.
இதேநாளில், தெலுங்கில், சாவித்திரி இயக்கி தயாரித்த, விந்த சம்சாரம் படம், ஆந்திரா எங்கும் வெளியானது.
சென்னையில் மிட்லண்ட், சரஸ்வதி மற்றும் பிரபாத் ஆகிய திரையரங்குகளில் வெளியாகி, ஏழு வாரங்களைத் தாண்டி ஓடிய, பிராப்தம் படம், தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும், 25 நாட்களை தாண்டி, ஓடியது.
மதுரை சிந்தாமணி திரையரங்கில், அதிகபட்சமாக, 67 நாட்களை தாண்டியது.
இப்படம் தயாரிக்க, செலவழிக்கப்பட்ட தொகை, 6 லட்சத்து,
40 ஆயிரம் ரூபாய்;
படம் வெளியாகி, வசூலித்த தொகை, 15 லட்சம் ரூபாயை தாண்டியது.
சாவித்திரி, தன் நிர்வாக கணக்கு வழக்குகளை, நம்பிக்கையானவர்கள் கைகளில் கொடுத்து இருந்தால், பிராப்தம் படம் மேலும் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருக்கும்.
சாவித்திரியை திட்டமிட்டு ஏமாற்றி, வசூல் கணக்கை பொய்யாகக் காட்டிய கறுப்பு ஆடு ஒருவரால், பிராப்தம் படம், நஷ்ட கணக்கை காட்டியது.
பிராப்தம் படம், சாவித்திரியின் குடும்ப வாழ்க்கையில், பிரிவினையை ஏற்படுத்தியது. 'இப்படம் தயாரிப்பில் இருந்த போது தான், ஜெமினியை பிரிந்தார்...' என்று, இன்று வரை பத்திரிகைகள் சொல்லி வருகின்றன. ஆனால், குழந்தை உள்ளம் படத் தயாரிப்பு காலகட்டத்திலேயே, ஜெமினியோடு அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.
குழந்தை உள்ளம் படத்தில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒல்லியான ஒருவர், பிரபல 'மேக் - அப்' மேனின் தம்பி; கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தான், குழந்தை உள்ளம் படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்தில், சாவித்திரியின் மன ஓட்டங்களை, தவறான பாதைக்கு திருப்பி விட்டவர்.
குழந்தை உள்ளம் பட விளம்பரத்தில் கூட, சாவித்திரியின் பெயருக்கு அடுத்தபடியாக, இந்த ஒளிப்பதிவாளருக்குத் தான் கொடுக்கப்பட்டது. ஜெமினிக்கு இது பிடிக்கவில்லை; இங்கு தான், முதல் பிணக்கு உருவானது. அதன்பின், அந்த ஒளிப்பதிவாளரின் கை, சாவித்திரியின் வீட்டு விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. பிராப்தம் படம் தயாரிப்பில் இருந்த போது, படக் குழுவில் உள்ளவர்களுக்கு பணம் வழங்குவது என, எல்லாமே அவர் தான்.
சாவித்திரியின் வங்கிக் கணக்குகளை எல்லாம் பராமரிக்கும் அளவிற்கு உயர்ந்த அந்நபர், சாவித்திரியின் குடும்ப உறவுகளை, அவரிடமிருந்து பிரிக்கத் துவங்கினார்.
வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் சாவித்திரியை, நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலையை செவ்வனே செய்தார், அந்த ஒளிப்பதிவாளர். பிராப்தம் படம் வெளியான காலகட்டத்தில், சாவித்திரி நடித்த மலையாளப் படம் ஒன்று வெளியானது.
சாவித்திரியை ஏமாற்றி, அந்த ஒளிப்பதிவாளர் நடிக்க வைத்த படம் அது! இப்படத்தில், தம்புராட்டியாக நடித்திருந்த சாவித்திரியை, சில காட்சிகளில், அவருக்கே தெரியாமல், அவரை வேறு கோணத்தில் படம் எடுத்திருந்தனர்.
இப்படம் வெளியான போது எழுந்த விமர்சனத்தை கேள்விப்பட்டு, சாவித்திரியின் மருமகன் கோவிந்தராவ், ஒளிப்பதிவாளரிடம் கடுமையாகச் சண்டை போட்டதாக செய்திகள் உண்டு.
சாவித்திரியின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களின் சாவியை தன் வசம் வைத்திருந்த அந்த ஒளிப்பதிவாளர், சாவித்திரியின் நகைகளோடு கேரளாவிற்கு பறந்து விட்டார்.
நகைகள் எல்லாம் வங்கிப் பெட்டகத்தில் இருக்கிறது என்று நம்பிய சாவித்திரிக்கு, நம்பிக்கை மட்டும் தான் பதிலாக இருந்தது; பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருந்தன!
முற்பிறவியில், காதல் நிறைவேறாமல் போகும் இளைஞன், மறுபிறவியில், கோதாவரி ஆற்றில், படகோட்டி பிழைக்கும் ஏழையாகவும், அவன் காதலியாக இருந்தவள், ஜமீன்தார் வீட்டுப் பெண்ணாகவும் பிறக்கிறாள். அந்த இளைஞனின் படகில் அவள் பயணம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில், படகோட்டியை, 'வாடா... போடா...' என்று அழைத்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, அவனிடம், தன் மனதை பறி கொடுக்கிறாள், கதாநாயகி. இந்த முற்பிறவி காதல் கதை தான்,
பிராப்தம் படமாக வெளியானது.
சாவித்திரி, போராடி, பெறவிருந்த வெற்றி, உறவாடி வந்த ஒரு சிலரால் கிடைக்காமல் போனது.
'என்ன நேர்ந்தாலும் சரி, மனதில் எடுத்த முடிவை நிறைவேற்றியே தீருவேன்...' என, பிடிவாதமாக வாழ்பவர்கள், பல சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த விதிக்கு, சாவித்திரி மட்டும் எப்படி விலக்காக முடியும்!
பிராப்தம் பட விஷயங்களில் ஏற்பட்ட பண இழப்பிற்கு, ஏமாற்றியவர்கள் முழு காரணம்
என்றாலும், படம் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதமும், சாவித்திரி நடிப்பில் இயல்புத் தன்மை இல்லாதததும் மற்றும் படத்திற்காக வாங்கிய வட்டிக் கடனும் உப காரணங்களாக இருந்தன.
'எல்லா நெருக்கடிகளும், தனக்கு எதிராக இருக்கிறது என்பதை அறிந்தும், ஜெமினி, தன்னை கண்டு கொள்ளவில்லையே...' என்ற வருத்தம் தான், சாவித்திரிக்கு அதிகமாக இருந்தது.
ஆரூர்தாசிடம் ஒருமுறை பேசும் போது, இதைக் குறிப்பிட்டு அழுதார், சாவித்திரி.
தோல்விகள், தன் வருங்காலத்தை பாதித்து விடுமோ என்று பயந்த சாவித்திரி, தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கு, 16 வயதிலேயே திருமணத்தை நடத்தி வைத்தார்.
(தினமலர் வாரமலர்)
ஆர் எஸ் கே தாங்கள் முன்னர் பிராப்தம் பட விவகாரம்பற்றி எழுதியது உண்மை என்பது
இதன்மூலம் நிருபணமாகியுள்ளது .
1950களில் நடிகர்திலகத்தின் பாடும் குரலாக இருந்தவர்களில் குறிப்பிட தக்கவர்கள் சிதம்பரம் ஜெயராமன்,சீர்காழி கோவிந்தராஜன் ,ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன். அது தவிர, கண்டசாலா,கிருஷ்ணன், சுந்தரம்,பீ.பீ.ஸ்ரீனிவாஸ் ,சந்திரபாபு,டி.ஏ. மோதி போன்ற பலரும் பாடி வந்தனர். நடிகர்திலகமும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் எல்லோரையும் ஆதரித்து வந்தார்.
ஆனால் 59இல் இருந்து நிலைமை தலை கீழ். டி.எம்.எஸ் குரல் நடிகர்திலகத்தின் அங்கீகரிக்க பட்ட குரலாக மாறி ,வெற்றி கூட்டணி ஆகி விட்ட படியால் ,நடிகர்திலகத்தால் எந்த சோதனைக்கும் இடம் கொடுக்க முடியாமல் போனது.
இரண்டு சுவாரஸ்யங்கள்.
பாலும் பழமும் படத்துக்கு பாடல் பதிவு முடிந்து படப்பிடிப்பு தொடங்க வேண்டிய தருணத்தில் டி.எம்.எஸ் க்கு கடும் ஜலதோஷம். பட குழுவினர் வேறு பாடகரை வைத்து முடிக்கலாம் என்று முடிவெடுத்த போது ,நடிகர்திலகம் சொன்னது. ஜலதோஷம் என்றாலும் டி.எம்.எஸ் பாடட்டும். டி.எம்.எஸ் பாடி கொடுத்தார் மென்மையான nasal tone இல்.(என்னை யாரென்று,நான் பேச ,பாலும் பழமும்) இதை கேட்ட சிவாஜி துள்ளி குதித்து தன் பேசும் குரலை முடிவு செய்து கொண்டார். விஞ்ஞானி மருத்துவருக்கு தூக்கி வாரிய இள நரை முடியுடன் ,மென்மையான மூக்கின் குரலே கதாபாத்திரத்துக்கு அமெரிக்கையான மெருகு அளிக்க முடியும் என்று. குறையே ,கூடுதல் நிறையானது நடிகர்திலகத்தின் மேதைமையால்.
குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ண பறவை பாடல் ,ஹிந்துஸ்தானி பாணியும் ,சுர பிர்காக்களும் நிறைந்த தனித்துவ பாடல். சீர்காழியின் பிர்கா சாரீரமே இதற்கு உகந்தது என்று முடிவு செய்து பாடல் பதிவு செய்தாயிற்று. ஆனால் நடிகர்திலகம் சொன்னது. அபசுரம் பாடினாலும் சௌந்தர்ராஜனே பாடட்டும்.(அந்த பாட்டில் டி.எம்.எஸ் திணறி தண்ணீர் குடித்திருப்பார். ஜானகியும் சுவற்றில் ஆணி போல கீறுவார்) அற்புதமான composition . காலத்தை வென்று நின்றாலும் பாடகர்களின் தேர்வு கேள்விக்குரியதே.கோபமாக இருந்த சீர்காழியை ,அவர் இசை நிகழ்ச்சியொன்றில் நடனமாடி நடிகர்திலகம் குஷி படுத்தி வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.
மறைந்த முன்னாள் கவர்ச்சி புயல் ஜோதிலட்சுமி அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அநுதாபங்கள் .
எங்கள் ஆஸ்தான கவர்ச்சி நடிகைகளான சகுந்தலா,விஜயலலிதாவை விட எங்களுக்கு பிரியமானவர்கள் ஜோதிலட்சுமி, ஆலம் ,விஜயஸ்ரீ,ஜெயக்குமாரி,ஜெயமாலினி ஆகியோரே. இங்கு ஜோதிலக்ஷ்மியை கவுரவிக்கும் வகையில் ஒரு எதிரொலி பாடல்.மற்றோருக்கும் ஒவ்வொரு பாடல் என் பிடித்தம்.
https://www.youtube.com/watch?v=N-YIQUgc0HQ
ஆலம் ,காஞ்சனா.
https://www.youtube.com/watch?v=osl4PNU_-lg
விஜயஸ்ரீ
https://www.youtube.com/watch?v=H8VkUxkMu8c
ஆலம்
https://www.youtube.com/watch?v=HKmHCXrEzlQ
ஜெய்குமாரி
https://www.youtube.com/watch?v=gyd4KUUjE70
ஜெயமாலினி
https://www.youtube.com/watch?v=gUqH2UkZNfc
மறைந்த நடிகை ஜோதிலட்சுமிக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி. அவர் நாட்டியத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தேர்ந்தவர். அவரது மறைவினால் தமிழ்த்திரையுலகத்தின் நடனக் கலைக்கு நிச்சயமாக பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான ஊடகங்கள் கூறுவது போல அவர் 1963ல் அறிமுகமாகவில்லை. அதற்கு முன்பாகவே மக்கள் தலைவரின் மாபெரும் வெற்றிப்படமான காத்தவராயனில் 1958ம் ஆண்டிலேயே திரையுலகில் தடம் பதித்து விட்டார்.
காத்தவராயன் திரைப்படத்தில் அவருடைய பெயர் பேபி ஜோதி என இடம் பெற்றிருக்கும்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a5&oe=58232EF4
காத்தவராயன் திரைப்படத்தில் ஜோதிலட்சுமி இளம் வயது சாவித்திரியாக நடித்திருப்பார். இதோ அந்தத் தோற்றம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2b&oe=58581695
பஞ்சு அருணாச்சலம் , மறைவு நமக்கு அதிர்ச்சி தரும் ஒன்று. இளையராஜா என்ற பொக்கிஷம் நமக்கு கிடைக்க காரணகர்த்தா., 1976இல் அன்னக்கிளி என்ற திருப்பு முனை படம் (16 வயதினிலே படத்திற்கு முன்பே வந்த trend setter )கிராமிய மணத்துடன், வெளிப்புற படப்பிடிப்பு எல்லாவற்றிலும் புதுமை விருந்தானது . மருத்துவச்சி என்ற செல்வராஜ் (முதல் மரியாதை) கதையே அன்னக்கிளி ஆனது.
கண்ணதாசனுக்கு உறவினர். பல்முனை வித்தகர். ரஜினி,கமல் இவர்களை வியாபார ரீதியாக வளர படிக்கல்லாக இருந்தவர்.
நடிகர்திலகத்தின் ரத்த திலகம் தயாரிப்பாளராக இவர் பெயர் இடம் பெற்ற நினைவு. அவன்தான் மனிதன்,கவரிமான் வெற்றிக்கு ஒருவன்,வாழ்க்கை என்ற படங்களுக்கு வசனகர்த்தா.
இவருடைய படங்களில் என்னை பெரிதும் கவர்ந்த படம் "அவர் எனக்கே சொந்தம்". இதில் வரும் ஒரு வீடு இரு உள்ளம் எனக்கு பிடித்த பாடலும் கூட.
பல கதைகளை உரு தெரியாமல் சிதைத்து திரைக்கதை அமைத்தாலும் (மகா கொடுமை காயத்ரி,இது எப்படி இருக்கு ,பிரியா,) வெற்றி பெற வைத்தவர்.
https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c
தங்கை.
நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.
புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.
ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )
கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....
https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ
இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக
காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA
சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)
https://www.youtube.com/watch?v=LR3Rl5P1Zro
நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.
வீடியோ காணோம்.