http://i1039.photobucket.com/albums/...pshu7cqmvc.jpg
Printable View
செந்தில்வேல்,
ஆவணங்கள் அருமை. உங்கள் உழைப்புக்கு நன்றி.
அது 'குடும்பம் ஒரு கோவில்' அல்ல. 'நேர்மை'. 'குடும்பம் ஒரு கோவில்' படத்தில் தலைவருக்கு லஷ்மி ஜோடி.('நேர்மை' படத்தின் ஷூட்டிங்ற்கு 'இளைய திலகம்' பிரபு என்னை நிறைய முறை அழைத்துச் சென்றிருக்கிறார். தலைவரின் நடிப்பை 'வாஹினி'யில் நேரிடையாக பலமுறை கண்டு ரசித்தேன். நீங்கள் பதிந்திருக்கும் காட்சி உட்பட).
கண்ணுக்கழகாய்
"காதல் ராணி"யைப்
படங்களாக்கித் தந்த
தந்த கனடா சிவா அவர்களுக்கு
என் இதய நன்றிகள்.
http://i1039.photobucket.com/albums/...psb3xmavdk.jpg
வாசுசார்
தங்களின் சுட்டிக்காட்டலுக்கு நன்றி.
மேற்கண்ட புகைப்படம் மாறி விட்டதே காரணம்.
மாறியதும் ஒரு வகையில் நல்லதுதான்.அதனால்தானே சில விஷயங்களும் அறிந்து கொள்ள முடிகின்றன.
(தங்களது பதிவின் மூலம்)
சிவகாமியின் செல்வன்: விமர்சனம் பதிவு: ஏப்ரல் 05, 2016 17:04
சிவாஜி, வாணிஸ்ரீ, லதா ஆகியோர் நடிப்பில் 1974ம் ஆண்டு வெளியான ‘சிவகாமியின் செல்வன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் முறையில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை காண்போம்....
http://s3.amazonaws.com/img.maalaima...iew_SECVPF.gif
இந்திய விமானப்படை வீரரான சிவாஜி கணேசன், டாக்டரின் மகளான வாணிஸ்ரீயை விரட்டி, விரட்டி காதலிக்கிறார். திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது எதிர்பாராத விதமாக விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விடுகிறார். முன்னதாக, ஒரு மழைநாள் இரவின் தனிமையை சிவாஜியுடன் பகிர்ந்துக்கொண்டதால் கருவுற்றிருக்கும் வாணிஸ்ரீ, ஆஸ்பத்திரிக்கு சென்று சிவாஜியை மரணப் படுக்கையில் சந்திக்கிறார்.
தன்னைப் போலவே வாணிஸ்ரீயின் வயிற்றில் வளரும் குழந்தை மகனாக பிறந்தால் அவனையும் தன்னைப் போலவே விமானப்படை வீரனாக மாற்ற வேண்டும் என்ற வாக்குறுதியை அவரிடம் வாங்கிக்கொண்டு சிவாஜியின் இறுதிமூச்சு பிரிகிறது.
ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து சிவாஜியின் பெற்றோரை சந்திக்கும் வாணிஸ்ரீயும் அவரது தந்தையும் இறந்துப்போன சிவாஜியின் வாரிசு வாணிஸ்ரீயின் வயிற்றில் வளர்வதாக கூறுகின்றனர். ஆனால், விபத்தில் இறந்துப்போன சிவாஜியின் இன்சூரன்ஸ் பணத்தை குறிவைத்து அவர்கள் நாடகமாடுவதாக அங்கிருந்து விரட்டப்படுகின்றனர்.
பின்னர், தனக்கு பிறக்கும் ஆண்குழந்தையை ஆஸ்பத்திரி செவிலியரின் யோசனைப்படி ஒரு அனாதை ஆசிரம தொட்டிலில் கிடத்திவிட்டு, மறுநாளே அதை தத்து எடுத்துக்கொள்ள வாணிஸ்ரீ சம்மதிக்கிறார். ஆனால், அவரது போதாதவேளை குழந்தை ஒரு செல்வந்தரின் தத்துப் பிள்ளையாகி விடுகிறது.
தனது குழந்தையை சுவீகாரம் எடுத்தவரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வாணிஸ்ரீ, தனது மகனுக்கு தாதியாக அந்த வீட்டில் வேலையில் சேருகிறார். தன்னை தாய் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் ஒரு வேலைக்காரியாக மகனை அன்புடனும், அக்கறையுடனும் பராமரித்து வருகிறார்.
அந்த வீட்டு எஜமானியின் தம்பி ஒருநாள் தனிமையில் இருக்கும் வாணிஸ்ரீயை கற்பழிக்க முயற்சிக்கிறான். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவன் தாய்மாமனின் பிடியில் இருந்து வாணிஸ்ரீயை காப்பாற்ற போராடுகிறான். அந்தப் போராட்டம் தோற்றுப்போகுமோ..? என்ற நிலையில் கத்திரிக்கோலால் அந்த காமுகனை குத்திக்கொன்று விடுகிறான்.
தன்னுடைய கற்பைக் காப்பாற்ற முயற்சித்து, பிஞ்சுவயதில் கொலைக்காரனாகி நிற்கும் மகனின் கொலைப்பழியை தன்மீது சுமத்தி ஏற்றுக்கொள்ளும் வாணிஸ்ரீ, ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார். தண்டனை முடிந்து விடுதலையாகி வரும்போது சிறுவனாக இருந்த தனது மகன் அச்சுஅசலாக இறந்துப்போன தனது காதலனான சிவாஜியைப் போலவே இருப்பதைக் கண்டு திகைத்துப் போகிறார்.
உருவத்தில் மட்டுமல்ல, செயல்கள், துறுதுறுப்பு, சில இடங்களில் தந்தை பேசிய வசனங்களையே வாலிப வயதை எட்டிநிற்கும் மகனும் பேசுவதைக் கேட்டு புல்லரித்துப் போகிறார். காதலிலும் அதே துறுதுறுப்புடனும், சுறுசுறுப்புடனும் மகன் சிவாஜி லதாவை விரட்டுகிறார்.
இதற்கிடையே, போர்முனைக்கு செல்ல உத்தரவு வரவே போர்முனைக்கு செல்லும் மகன் சிவாஜியின் விமானம் மாயமாகி விடுகிறது, தாயார் வாணிஸ்ரீயும், காதலி லதாவும் துடித்துப் போகிறார்கள். ஒருவாரத்திற்கு பின்னர் எதிரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் அவரை சகவீரர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
தனது உயிரை பணயம்வைத்து நாட்டைக் காக்க வீரதீர சேவையாற்றிய மகன் சிவாஜிக்கு இந்திய விமானப்படையின் சார்பில் வீரதீர பதக்கம் வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெறுகிறது. விருது அளிக்கும்போது அதைப்பெற்றுக்கொள்ள தனது தாயாரை சிவாஜி அழைக்கிறார்.
இதற்கு முன்னதாக தன்னைப் பெற்ற அன்னை யார்? என்பதை அறிந்துகொண்டு அதை ரகசியமாக மனதில் போட்டு பூட்டிவைத்திருந்த சிவாஜி, விழா மேடைக்கு வாணிஸ்ரீயை அழைத்து கவுரவித்து, அவரது கையாலேயே பதக்கத்தை பெறுகிறார். தன்னைப் பெருமைப்படுத்திய மகனின் பாசத்தையும், அன்பையும் எண்ணி வாணிஸ்ரீ வடிக்கும் ஆனந்தக் கண்ணீருடன் படம் முடிவடைகிறது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான 'சிவகாமியின் செல்வன்' படத்தில் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோரின் பாடல் அக்கால ரசிகர்களின் செவிகளிலும், மனங்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த தாக்கம் ‘டி.ட்டி.எஸ்’ ஒலிக்கலவையின் மாயத்தால் மும்மடங்காக ஒலிக்கிறது.
உள்ளம் இரண்டும், இனியவளே.. என்று பாடி வந்தேன், என் ராஜாவின் ரோஜா முகம், மேளதாளம் கேட்கும் காலம், ஆடிக்குப் பின்னே ஆவணி மாசம் போன்ற டூயட்களும் சிவாஜி பெற்றோரால் கர்ப்பிணி வாணிஸ்ரீ, விரக்தியுடன் மாட்டு வண்டியில் செல்லும்போது, சோகத்தை இழைத்து வார்த்து எம்.எஸ்.விஸ்வநாதனின் குரலில் ஒலிக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே என்ற துயரப் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக, தந்தை பேசிய அதே வசனங்களை மகன் சிவாஜி பேசும்போது வியப்பு மேலிட வாணிஸ்ரீ பார்க்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் மெல்லிசை மன்னரின் ‘ஹம்மிங்’ குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, லதா, எஸ்.வி. ரங்காராவ், ஏ.எம். ராஜன், எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.எஸ். ராகவன், ஸ்ரீகாந்த், ஆர்.எஸ். மனோகர், சோ, எம்.என்.ராஜம் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தங்களது கதாபாத்திரங்களில் மிக கச்சிதமாக பொருந்தியுள்ளனர். துறுதுறுவென இருக்கும் மகன் சிவாஜியுடன் இளமை கொப்பளிக்க லதா தோன்றும் காட்சிகளை ‘எவர்கிரீன்’ காதல் காட்சி எனலாம்.
அகன்ற சினிமாஸ்கோப் திரையில் தற்கால டிஜிட்டல் மெருகூட்டலில் மஸ்தான் ஒளிப்பதிவில் டார்ஜீலிங் பனிமலைப் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்ணுக்கு மட்டுமின்றி, நெஞ்சுக்கும் குளுமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சிவகாமியின் செல்வன் - மீண்டும் வசூலில் சாதிப்பான்!
(மாலைமலர்)